Saturday, May 28, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/05/28/large/806067.jpgமதுரை மேயர் முன்னிலையில் பாதுகாப்பு கவசங்கள் இல்லாமல் தூய்மைப் பணியாளர்கள் சுத்தம் செய்ததால் சர்ச்சை

மதுரை: மதுரை மாநகராட்சி மேயர் முன்னிலையில் காலணி, கையுறை உள்ளிட்ட முறையான பாதுகாப்பு எதுவும் இல்லாமல் கழிவுநீர் தொட்டியை தூய்மைப் பணியாளர்கள் சுத்தம் செய்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாநகராட்சியில் வார்டு வாரியாக சிறப்பு மெகா தூய்மைப் பணி நடந்து வருகிறது. இன்று மதுரை மாநகராட்சி 59-வது வார்டுக்கு உட்பட்ட ரயில்வே காலனி பகுதியில் நடந்த மெகா மாஸ் தூய்மைப் பணி நிகழ்ச்சியை மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி தொடங்கி வைத்தார். அப்போது மேயர் முன்னிலையிலே அங்கு சாலையில் நடுவே இருந்த கழிவுநீர் தொட்டியை தூய்மைப் பணியாளர்கள் பாதுகாப்பு கவசங்கள், கையுறை இல்லாமல் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்