Thursday, September 22, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/09/23/large/871797.jpgபுதுச்சேரி | ஜிப்மர் மருத்துவமனையில் மருந்து தட்டுப்பாடு - ஆளுநர் தமிழிசை நேரில் ஆய்வு

புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மருந்து தட்டுப்பாடு உள்ளதாக புகார்கள் எழுந்தன. இந்நிலையில் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஜிப்மர் மருத்துவமனையில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர் சாய் ஜெ. சரவணன்குமார் உள்ளிட்டோர் ஆய்வின்போது உடனிருந்தனர்.

ஜிப்மர் மருத்துவமனையில் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதாக வெளியான செய்தி குறித்தும், ஜிப்மர் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும் வழிமுறைகளையும் அதற்காக ஏற்படுத்தப்பட்டிருக்கும் உள்கட்டமைப்பு வசதிகளை பற்றியும் ஆய்வின்போது தமிழிசை கேட்டறிந்தார். சுமார் 2 மணி நேரம் இந்த கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு பின்னர் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில்:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்