Sunday, September 18, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/09/19/large/869923.jpgநமது இசை தெய்வத்தன்மை கொண்டது: டி.வி.கோபாலகிருஷ்ணன் பிறந்தநாள் விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து

சென்னை: நமது நாட்டின் இசை, தெய்வத்தன்மை கொண்டு விளங்குகிறது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். இந்திய இசை, கலை அகாடமி சார்பில், பிரபல கர்னாடக இசைக் கலைஞர் ‘பத்மபூஷண்’ டி.வி.கோபாலகிருஷ்ணனின் 90-வது பிறந்தநாளை முன்னிட்டு, ‘ஸ்வர்ண நவாதி’ என்ற நிகழ்ச்சி சென்னையில் 2 நாட்கள் கொண்டாடப்பட்டது.

கடந்த 16-ம் தேதி நடந்த முதல்நாள் நிகழ்ச்சியில், டி.வி.கோபாலகிருஷ்ணனின் 42 பாடல்கள் அடங்கிய இசை குறுந்தகடு, அவரது புத்தகம் வெளியிடப்பட்டது. சிறந்த இசைக் கலைஞர்கள் 9 பேருக்கு ‘ஆச்சார்ய நவரத்னா’ விருது, 99 பேருக்கு ‘ஆச்சார்ய ரத்னா’ விருது என 108 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்