
சென்னை: தீபாவளியன்று சென்னையைப் பொருத்தவரை காலை 4 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் காற்று மாசுபாட்டின் அளவு 192-ஆக தரக்குறியீட்டில் பதிவாகியுள்ளதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக களையிழந்து காணப்பட்ட தீபாவளி பண்டிகையை மக்கள் புத்தாடைகள் அணிந்தும், பட்டாசுகள் வெடித்தும் வெகு விமர்சையாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்