Saturday, October 22, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/10/23/large/886670.jpgபேருந்து, ரயில்களில் இடம் கிடைக்காததால் சொந்த ஊருக்கு விமானத்தில் பறக்கும் பொதுமக்கள்: டிக்கெட் கட்டணம் 3 மடங்கு அதிகரிப்பு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பேருந்து, ரயில்களில் கூட்டம் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் பலரும் சொந்த ஊர் செல்ல விமான சேவையை நாடி வருகின்றனர். இதனால், சென்னை விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. அதற்கேற்ப, கட்டணமும் 3 மடங்கு உயர்ந்துள்ளது.

தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மக்கள் தங்கள் சொந்த ஊருக்குச் சென்ற வண்ணம் உள்ளனர். அரசு மற்றும் தனியார் பேருந்துகள், ரயில்களில் இடம் கிடைக்கவில்லை. இது தவிர, கார், வேன் உள்ளிட்ட சொந்த வாகனங்களிலும் பலர் சொந்த ஊருக்கு செல்கின்றனர். டிக்கெட் கிடைக்காத பலரும் தற்போது விமான சேவையை நாடி வருகின்றனர். இதனால் சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்