Sunday, October 30, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/10/31/large/889710.jpgசெங்கல் சிவபார்வதி கோயிலின் 111 அடி உயர சிவலிங்கத்துக்கு உலக சாதனை விருது

நாகர்கோவில்: களியக்காவிளை அருகே கேரள மாநிலம் செங்கல் பகுதியில் மகேஸ்வரன் -சிவபார்வதி கோயில் அமைந்துள்ளது. கேரள மாநில சிற்பக் கலை அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ள இக்கோயில் கருவறையில் சிவன், பார்வதி அருட் காட்சி தருகின்றனர். கருவறையின் அருகில் கணபதி, முருகன் கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கருவறையை சுற்றிலும் 12 சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. மேலும் கோயில் கன்னி மூலையில் கணபதி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் விநாயகரின் 32 பாவனைகளை குறிக்கும் வகையில் 32 கணபதி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்