Sunday, October 30, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/10/31/large/889962.jpgபவானி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 3 மாணவர்களை தேடும் பணி தீவிரம்

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே பவானி ஆற்றில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவர்கள் மூன்று பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். அவர்களை தீயணைப்புத் துறையினர் தேடி வருகின்றனர்.

கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ படித்து வருபவர்கள் சுரேந்திரன், ராஜதுரை, கனீஷ்க். இதில் கனீஷ்க் சென்னையைச் சேர்ந்தவர். மற்ற இருவரும் கோவையை சேர்ந்தவர்கள். இவர்கள் உட்பட 10 மாணவர்கள் நேற்று மேட்டுப்பாளையத்துக்கு வந்தனர். மாம்பட்டி என்ற இடத்துக்குச் சென்ற மாணவர்கள் பவானி ஆற்றில் இறங்கி குளித்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்