Tuesday, December 27, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/12/28/large/921055.jpgஅதிமுக சார்பில் விரைவில் மிகப்பெரிய மாநாடு - மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் முழு விவரம்

சென்னை: ‘‘கூட்டணியை தேர்தலின்போது பார்த்துக் கொள்ளலாம், நாடாளுமன்றத் தேர்தல் பணிகளை முழுவீச்சில் தொடங்குங்கள்’’ என்று அதிமுக மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் கூட்டத்தில் தற்காலிக பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவுறுத்தி உள்ளார். இதுதவிர, நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக சார்பில் விரைவில் பெரிய அளவில் மாநாடு நடத்தவும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சினையில் ஓபிஎஸ், பழனிசாமி அணிகள் தனித்தனியாகப் பிரிந்து செயல்பட்டு வருகின்றன. இதில் ஓபிஎஸ் அணியினரை இணைக்கவே முடியாது என்று பழனிசாமி தரப்பினர்தெரிவித்துவிட்டனர். இந்தச் சூழலில், அதிமுகவின் நிர்வாகரீதியிலான 75மாவட்டங்கள், அணிகள் என 88 மாவட்டச் செயலாளர்கள், தலைமைக்கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலரை ஓபிஎஸ் நியமித்தார். அதோடு, மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தையும் சமீபத்தில் நடத்தினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்