Wednesday, December 28, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/12/28/large/921156.jpgபுதுச்சேரி | டெங்கு காய்ச்சலுக்கு பெண் உயிரிழப்பு - மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம்

புதுச்சேரி: புதுச்சேரி அருகே கிருமாம்பாக்கத்தில் டெங்கு காய்ச்சலுக்கு பெண் உயிரிழந்த நிலையில், முறையான சிச்சை அளிக்கவில்லை என்று கூறி உறவினர்கள், கிராம மக்கள் தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி கிருமாம்பாக்கத்தைச் சேர்ந்தவர் மகேஸ்வரன். கூட்டுறவு வங்கி ஊழியர். இவரது மனைவி செல்வி(36). இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 25-ம் தேதி முதல் செல்வி காய்ச்சலால் அவதிபட்டு வந்துள்ளார். இதையடுத்து அவரை அங்குள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில குடும்பத்தினர் அனுமதித்துள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்