Wednesday, December 28, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/12/28/large/921155.jpgபுதுச்சேரி | அதிகரித்துள்ள ரெஸ்டோ பார் அனுமதி - 'பார்டி' சத்தத்தால் குடியிருப்புவாசிகள் தவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் ரெஸ்டோ பார்களில் இருந்து எழும் அதிக சத்தத்தால் குடியிருப்புவாசிகள் தவிக்கும் நிலையும் அதற்கான போராட்டங்களும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

புதுச்சேரி நகர பகுதியில் திரும்பிய பக்கமெல்லாம், விதவிதமான 400க்கும் மேற்பட்ட மதுக்கடைகள், மது அருந்தும் வசதியுள்ள பார்கள் உள்ளன. தற்போது அடுத்தக்கட்டமாக உணவு சாப்பிடும் ரெஸ்டாரண்டுகள் அனைத்திலும் பார் திறக்க அனுமதி தரப்பட்டுள்ளன. அதன்படி, ரெஸ்டாரண்டுகளில் மது அருந்தும் வசதி கொண்டவையாக பல மாற்றப்பட்டு அவை ரெஸ்டோ பார் என்று அழைக்கப்படுகின்றன. கீழ்தளத்தில் ரெஸ்டாரண்டும் மேல்தளத்தில் பார் வைக்கப்படுகின்றன. அத்துடன் பார்ட்டி கொண்டாடும் வகையில் அதிக சத்ததுடன் இசை ஒலிக்கிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்