Tuesday, January 31, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/02/01/large/936840.jpgவேலூர் மாநகருக்கு முதல்வர் ஸ்டாலின் வருகையால் 3,000 காவலர்கள் உடன் 3 அடுக்கு பாதுகாப்பு

வேலூர்: வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அரசின் திட்டங்கள் செயல்பாடுகள் குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘கள ஆய்வில் முதலமைச்சர்’ என்ற திட்டத்தின் கீழ் ஆய்வு செய்யவுள்ளார்.

இதற்காக, வேலூருக்கு ரயில் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வருகைதரவுள்ளார். வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் காவல்துறை அதிகாரிகள் பங்கேற்கும் சட்டம்- ஒழுங்கு ஆய்வுக் கூட்டம் இன்றிரவு நடைபெறவுள்ளது. அதேபோல், நான்கு மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்கும் ஆய்வுக்கூட்டம் நாளை காலை நடைபெறவுள்ளது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/02/01/large/937127.jpgசென்னை | பாஜக நிர்வாகிகள் 5 பேர் தற்காலிக நீக்கம்

சென்னை: பாஜக நிர்வாகிகள் 5 பேர் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: சென்னை மேற்கு மாவட்டத்தில் கடந்த 29-ம் தேதி மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது மாவட்ட துணைத் தலைவர் சி.பிரகாஷ், நெசவாளர் பிரிவின் மாநில செயலாளர் மிண்ட் ரமேஷ், மாநில பொதுக்குழு உறுப்பினர் எம்.வி.சசிதரன், பொருளாதார பிரிவு மாவட்ட தலைவர் எம்.புருஷோத்தமன், மாநில செயற்குழு உறுப்பினர் சென்னை சிவா உள்ளிட்டோர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி, கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டுள்ளனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/02/01/large/937256.jpgமுன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பேனா நினைவுச்சின்னம் - கருத்துக்கேட்பு கூட்டத்தில் சீமான் கடும் எதிர்ப்பு

சென்னை: பேனா நினைவுச்சின்னம் குறித்த கருத்துக்கேட்பு கூட்டத்தில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசும்போது திமுகவினர் எதி்ர்ப்பு தெரிவித்தனர். இதனால் கோபமடைந்த சீமான், பேனா நினைவுச்சின்னம் அமைத்தால் உடைப்பேன் என்று பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் எழுத்தாற்றலை நினைவுகூரும் வகையில், மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தின் பின்புறம், வங்கக்கடலில் பேனா வடிவ நினைவுச்சின்னம் ரூ.81 கோடியில் அமைக்க தமிழக அரசு முயற்சி எடுத்துள்ளது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/02/01/large/937248.jpgஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் தொடங்கியது

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. முதல் நாளில் சுயேச்சை வேட்பாளர்கள் மட்டும் மனு தாக்கல் செய்தனர்.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவெரா காலமானதை அடுத்து, அத்தொகுதிக்கு வரும் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/02/01/large/937250.jpgமின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க பிப்.15-ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு - இதுவே இறுதி கெடு என அமைச்சர் அறிவிப்பு

சென்னை: மின் இணைப்புடன் ஆதார் எண்ணைஇணைப்பதற்கான அவகாசம் வரும்15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு அவகாசம் வழங்கப்படாது என்று மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்தது. இந்நிலையில், இந்த அவகாசத்தை மேலும் நீட்டிப்பது தொடர்பாக, சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில், மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/01/31/large/936835.jpgதெலங்கானா விவகாரத்தில் ஆளுநர் மாளிகையின் சட்டப் போராட்டம் வெற்றி - புதுச்சேரி ராஜ்நிவாஸ் விளக்கம்

புதுச்சேரி: தெலங்கானா அரசுக்கும் ஆளுநர் தமிழிசைக்கும் இடையிலான விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்புகளின் மூலமாக ஆளுநர் மாளிகையின் சட்டப்போராட்டம் வெற்றி பெற்றிருக்கிறது என்று புதுச்சேரி ராஜ்நிவாஸ் தெரிவித்துள்ளது.

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/01/31/large/936832.jpgகிராம உதவியாளர் பணியிட நியமனம்: மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு கோரி மதுரையில் ஆர்ப்பாட்டம்

மதுரை: மதுரையில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் மதுரை மாவட்டத்தில் கிராம உதவியாளர் காலிப்பணியிட நியமனத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்தக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், மதுரையில் கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு நியமனம் செய்யப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும், 2016 பிரிவு 34ன்படி மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்தி பணி நியமன ஆணை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Monday, January 30, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/01/31/large/936648.jpgமக்கள் நலனுக்காக பழநிக்கு பாதயாத்திரை: வானதி சீனிவாசன் தகவல்

கோவை: நாட்டு மக்கள் நலனுக்காக தைப்பூச திருவிழாவுக்கு பாதயாத்திரை மேற்கொண்டுள்ளதாக கோவை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், பாஜக தேசிய மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, கோவையில் இருந்து பழநிக்கு வானதி சீனிவாசன் நேற்று பாதயாத்திரை புறப்பட்டார். ஈச்சனாரி விநாயகர் கோயிலில் இருந்து பாத யாத்திரை புறப்பட்ட அவரை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வழியனுப்பிவைத்தார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/01/31/large/936698.jpgமகாத்மா காந்தியின் 76-வது நினைவு நாள்: ஆளுநர், முதல்வர் மலர் தூவி அஞ்சலி

சென்னை: மகாத்மா காந்தியின் 76-வது நினைவு நாளை முன்னிட்டு, அவரது சிலைக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினர். மேலும், தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

சென்னை கிண்டி ராஜ்பவனில் உள்ள காந்தி சிலைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, அவரது தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில், ஆளுநர் மாளிகை அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/01/31/large/936733.jpgஜெயலலிதா கட்சியையே சிலர் ஏலம் விட்டுக்கொண்டு இருக்கிறார்கள் - ‘உங்களில் ஒருவன்’ தொடரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில்

சென்னை: ஜெயலலிதாவின் கட்சியையே சிலர் ஏலம் விட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று ‘உங்களில் ஒருவன்’ தொடரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.

திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் ‘உங்களில் ஒருவன்’ தொடர் மூலம் சமூக வலைதளங்களில் மக்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார். இந்த தொடரில் முதல்வர் அளித்துள்ள பதில்கள் வருமாறு:

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/01/31/large/936726.jpg‘இரட்டை இலை’ சின்னம் கோரும் இபிஎஸ்ஸின் இடைக்கால மனு: தேர்தல் ஆணையம், ஓபிஎஸ் பதில் தர உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ‘இரட்டை இலை’ சின்னம் கோரி இபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இடைக்கால மனுவுக்கு இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் ஓபிஎஸ் தரப்பில் 3 நாட்களுக்குள் பதில் அளிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2022 ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், இடைக்கால பொதுச் செயலாளராக பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த பொதுக்குழு கூட்டம் செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளரான வைரமுத்து ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/01/30/large/936313.jpgபணி நியமன முறைகேடு | சேலம் பெரியார் பல்கலை.யில் அரசு நியமித்த குழு விசாரணை

சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் நியமனம், முறைகேடாக பணியில் சேர்ந்தது குறித்து தமிழ்நாடு அரசு நியமித்த விசாரணை குழுவினர் நேற்று முதல்கட்டமாக ஆவணங்களை ஆய்வு செய்தனர்.

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் நியமனம் மற்றும் ஊழியர்கள் முறைகேடாக பணியில் சேர்ந்தது குறித்து புகார் எழுந்தது. இதில், உடற்கல்வி இயக்குனர் நியமனத்தில் பல்கலைக்கழக மானியக்குழு வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படாதது, பல்கலைக்கழக நூலகர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் இட ஒதுக்கீடு ஆணைப்படி நியமிக்காதது, தமிழ் துறை தலைவர் பெரியசாமி நியமனத்தில் நடைபெற்ற முறைகேடுகள், பெரியசாமி கொடுத்த போலிச் சான்று, தகுதியின்மை குறித்து புகார் எழுந்தது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Sunday, January 29, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/01/30/large/936188.jpgஅமைச்சர் தலைமையில் இன்று கூட்டம்: 10, 11, 12-ம் வகுப்புதேர்வு குறித்து ஆலோசனை - கல்வித் துறை அதிகாரிகள் பங்கேற்பு

சென்னை: தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஸ் தலைமையில் இன்று (ஜன.30) ஆலோசனை நடைபெற உள்ளது.

தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள், மார்ச் 13 முதல் ஏப்.20-ம் தேதி வரை நடைபெற உள்ளன. மொத்தம் 25 லட்சத்து 77,332 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதவுள்ளனர். 11, 12-ம் வகுப்புக்கான செய்முறைத் தேர்வு அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இதற்கான தேர்வு மையங்களைக் கண்டறிதல், பெயர்ப் பட்டியல், ஹால்டிக்கெட் தயாரிப்பு உள்ளிட்ட முன்னேற்பாடுகளை தேர்வுத்துறை மேற்கொண்டு வருகிறது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/01/30/large/936051.jpgமின் கட்டணம் செலுத்தும்போது போலி ரசீதை தடுக்க ஒரே மாதிரியான ரசீது வழங்கும் முறை அறிமுகம்

சென்னை: இணையதளம் மூலமாக மின்கட்டணம் செலுத்தும்போது போலி ரசீது வழங்கப்படுவதைத் தடுக்கஒரே மாதிரியான ரசீது வழங்கும் முறையை மின்வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது.

மின் நுகர்வோர் தங்களது மின்கட்டணத்தை மின்வாரிய பிரிவு அலுவலகங்கள், அரசு இ-சேவை மையங்கள், தபால் நிலையங்கள் மற்றும் சில வங்கிகளின் கிளைகளில் செலுத்தலாம்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/01/30/large/936222.jpgபிப்.1-ல் மகா கும்பாபிஷேகம் காணும் கோவை ஸ்ரீநாகசாயி மந்திர்

கோவை: கோடிக்கணக்கான மக்களுக்கு கண்கண்ட மகானாகவும், தெய்வமாகவும் அருள்பாலிப்பவர் ஷீரடி சாயிபாபா. அவரது பெருமைகளை பட்டிதொட்டி எங்கும் பறைசாற்றும் வகையில், கோவை மேட்டுப்பாளையம் சாலையில், சாயிபாபா காலனியில் அமைந்துள்ளது ‘ஸ்ரீநாகசாயி மந்திர்’ எனும் சாயிபாபா கோயில்.

ஆலயத்துக்குள் நுழைந்ததுமே, மனதில் உள்ள இறுக்கம் நம்மிடமிருந்து விலகிச் சென்றுவிடுகிறது. பரவசத்துடன், பக்தி லயத்தில் பாபாவின் பாதங்களை சரணடைந்து பக்தியில் திளைக்கத் தொடங்குகிறோம். அதன் உச்சமாக, முழு உருவ பளிங்கு சிலையில் காட்சி தரும் பாபாவை கண்டவுடன், நம் மனம் எல்லையில்லாத மகிழ்ச்சியில் திளைப்பதையும் உணர முடிகிறது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/01/30/large/936211.jpgஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடக்கம்

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்.27-ம் தேதி நடக்க உள்ள நிலையில், இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது. காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பிப்.3-ம் தேதி மனு தாக்கல் செய்கிறார். தேமுதிக, அமமுக வேட்பாளர்கள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில், நாம் தமிழர் கட்சியும் வேட்பாளரை அறிவித்துள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா கடந்த 4-ம் தேதி காலமானதை அடுத்து, அந்த தொகுதிக்கு பிப்.27-ம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை (31-ம் தேதி) தொடங்கி, பிப்.7-ம் தேதி வரை நடைபெறுகிறது. 8-ம் தேதி மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். மனுக்களை திரும்ப பெற பிப்.10-ம் தேதி கடைசி நாள் ஆகும்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/01/29/large/935803.jpgஒடிசா அமைச்சர் மரணம்: தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

சென்னை: காவல் துறை உதவி ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டதில் பாதிக்கப்பட்ட ஒடிசா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் நபா கிஷோர் தாஸ் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

“ஒடிசா மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் நபா தாஸ் அவர்களின் மறைவால் கடும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் ஆகியோருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://ift.tt/D9qcS03 கிராம உதவியாளர்கள் பணிக்கு தகுதியானவர்களே நியமனம்: சிபாரிசுக்கு இடம்கொடுக்காத மதுரை ஆட்சியருக்கு குவியும் பாராட்டு

மதுரை: மதுரை மாவட்ட வருவாய் துறையில் தலையாரிகள் (கிராம உதவியாளர்கள்) பணி நியமனம் தேர்வில் ஆளும்கட்சி சிபாரிசுகள், தலையீடுகளுக்கு இடம் கொடுக்காமல் ஆட்சியர் அனீஸ் சேகர், நேர்மையாக தேர்வு நடத்தி, பணியாளர்களை தேர்வு செய்த பட்டியல் வெளியாகி உள்ளது.

அவரின் இந்த நேர்மையான நடவடிக்கையை கண்டு எந்த சிபாரிசுக்கும் போகாத, நேர்மையாக தேர்வில் கலந்து கொண்டு தேர்வானவர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Saturday, January 28, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/01/29/large/935694.jpgதிருப்பூர் | தமிழக தொழிலாளியை வடமாநிலத்தவர் தாக்கியதாக தவறான செய்தி - வலைதளத்தில் பதிவிட்டவர்கள் குறித்து விசாரிக்க தனிப்படை

திருப்பூர்: திருப்பூரில் தமிழக தொழிலாளியை வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கியதாக, சமூக வலைதளங்களில் தவறான செய்தி பகிரப்பட்டது குறித்து விசாரிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக மாநகர காவல் ஆணையர் பிரவீன்குமார் அபிநபு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது:

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/01/29/large/935746.jpg‘ஏ’ சான்றளிக்கப்படும் படங்களை சிறுவர்கள் பார்க்க அனுமதி மறுப்பு - மத்திய அரசு, தணிக்கை வாரியம் முடிவெடுக்க உத்தரவு

சென்னை: வயது வந்தவர்களுக்கு மட்டும் என ஏ சான்று பெறும் திரைப்படங்களை சிறுவர்கள் பார்க்க அனுமதிப்பதை தடுக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக மத்திய அரசு மற்றும் தணிக்கை வாரியம்பரிசீலித்து முடிவெடுக்க உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை பாலவாக்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரஷ்னேவ் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், “பல திரையரங்குகளில் ஏ சான்று பெற்ற படங்களுக்குசிறுவர்களையும் வயது வித்தியாசமின்றி அனுமதிக்கின்றனர். இவ்வாறு சிறுவர்களை ஏ படங்களுக்கு அனுமதிக்கக்கூடாது என ஏற்கெனவே மத்திய தணிக்கை வாரியம் எச்சரித்துள்ளபோதும் திரையரங்கு நிர்வாகத்தினர் வசூலைக் கருத்தில் கொண்டு சிறுவர்களை அனுமதிக்கின்றனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/01/29/large/935747.jpg75-வது சுதந்திர ஆண்டையொட்டி தமிழகத்தில் 60 கைதிகள் முன்கூட்டியே விடுதலை

சென்னை: இந்திய சுதந்திரத்தின் 75-வது ஆண்டை கொண்டாடும் விதமாகநாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் இருக்கும் கைதிகளுக்கு விடுதலை வழங்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. அதன் அடிப்படையில், அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் இதுதொடர்பாக ஒரு ஆலோசனையை வழங்கி, நன்னடத்தையோடு இருக்கும் கைதிகளை விடுவிக்க அறிவுறுத்தி இருந்தது.

அதைத்தொடர்ந்து, தமிழக சிறைச்சாலைகளில் 66 சதவீத சிறைத்தண்டனை அனுபவித்து நன்னடத்தையோடு இருந்த 60 பேர் நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/01/29/large/935748.jpgரயில்களில் விநியோகிக்கப்படும் உணவு பொருட்களின் விலை திடீர் உயர்வு

சென்னை: ரயில்களில் விநியோகிக்கும் உணவு பொருட்களின் விலை திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், பயணிகள் அதிருப்திஅடைந்துள்ளனர்.

இந்திய ரயில்வேயில் தினசரி 14,000-க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் நாள்தோறும் 2.50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்து வருகின்றனர். ரயில் பயணிகளுக்கான உணவு தயாரிப்பு மற்றும் விநியோகப் பணியை இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான, ஐஆர்சிடிசி மேற்கொண்டு வருகிறது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/01/29/large/935738.jpgவங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி - தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/01/29/large/935740.jpgதமிழக அரசு சார்பில் புதிதாக ‘கள ஆய்வில் முதல்வர்’ திட்டம் அறிமுகம்

சென்னை: ‘கள ஆய்வில் முதல்வர்’ என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின், இத்திட்டத்தின்படி, முதல்கட்டமாக பிப். 1, 2-ம் தேதிகளில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களில் ஆய்வுப் பயணம் மேற்கொள்கிறார்.

‘‘அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகளை நாடிவரும் மக்கள் மனநிறைவுடன் திரும்பிச் செல்லும் வகையில் பணியாற்ற வேண்டியது அரசு ஊழியர்களின் கடமை. அதை உறுதிப்படுத்த ஆய்வு மேற்கொள்வேன்’’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். மேலும், கள ஆய்வுகளின் முக்கியத்துவத்தை பல்வேறு கூட்டங்களிலும் வலியுறுத்தினார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/01/28/large/935304.jpgசிவகாசி மாநகராட்சி கருத்து கேட்பு கூட்டத்தில் வாக்குவாதம் - திமுக கவுன்சிலர் மீது மதிமுக கவுன்சிலர் கொலை மிரட்டல் புகார்

சிவகாசி: சிவகாசி மாநகராட்சி கவுன்சிலர்கள் கருத்துகேட்பு கூட்டம் பழைய நகராட்சி கட்டித்தில் நடைபெற்றது. மேயர் சங்கீதா தலைமை வகித்தார். துணை மேயர் விக்னேஷ்பிரியா முன்னிலை வகித்தார்.

சிவகாசி மாநகராட்சியில் நடைபெறும் மாதாந்திர கவுன்சில் கூட்டத்தில் கவுன்சிலர்கள் பல்வேறு பிரச்சினைகளை கிளப்பி வாக்குவாதத்தில் ஈடுபடுவது வாடிக்கையாக உள்ளது. கடந்த கவுன்சில் கூட்டத்தில் திமுக கவுன்சிலர் அதிகாரிகள் மீது லஞ்ச புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில் இந்த மாத கவுன்சில் கூட்டம் ஜனவரி 31-ம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு, சர்ச்சைகளை தவிர்க்கும் வகையில் கவுன்சிலர்கள் உடனான கருத்துக் கேட்பு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Friday, January 27, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/01/28/large/935210.jpgஇடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் கோரி இபிஎஸ் தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு: 30-ம் தேதி மனுவாக தாக்கல் செய்ய நீதிபதிகள் அறிவுறுத்தல்

புதுடெல்லி: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு வழங்கக் கோரி இபிஎஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று முறையீடு செய்யப்பட்டது. இதுதொடர்பாக 30-ம் தேதி மனுவாக தாக்கல் செய்ய நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பாக எழுந்த பிரச்சினையில் ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு, தற்போது தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு, கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/01/28/large/935152.jpgசென்னை எத்திராஜ் கல்லூரியில் தமிழர் பெருமையை போற்றும் ‘மண்ணும் மரபும்’ கண்காட்சி தொடக்கம்

சென்னை: தமிழர் பெருமைகளைப் போற்றும் ‘மண்ணும் மரபும்’ கண்காட்சி சென்னை எத்திராஜ் கல்லூரியில் கோலாகலமாகத் தொடங்கியது. காந்தி உலக மையம் என்ற சமூகநல அமைப்பு சார்பில், தமிழர் பாரம்பரியத்தை இளைய தலைமுறைக்கு கொண்டு செல்லவும், கிராமப்புற பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவும் ‘மண்ணும் மரபும்’ என்ற கண்காட்சி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

நடப்பாண்டுக்கான ‘மண்ணும் மரபும்’ கண்காட்சி சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரி வளாகத்தில் நேற்று தொடங்கியது. தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட எத்திராஜ் கல்லூரித் தலைவர் வி.எம்.முரளிதரன் பேசியதாவது:

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/01/28/large/935240.jpgஎழுத்தாளர் கல்கியின் நினைவு நாளை முன்னிட்டு 'கல்கி தீபாவளி மலர்க் கதைகள்' நூல் வெளியீடு

சென்னை: எழுத்தாளர் கல்கியின் நினைவு நாள் நிகழ்ச்சி சென்னை மைலாப்பூர் ராகசுதா ஹாலில் வியாழக்கிழமை நடந்தது. கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சியில் எழுத்தாளர் கல்கி, ஆனந்த விகடன் மற்றும் கல்கி தீபாவளி மலர்களில் எழுதிய கதைகளின் தொகுப்பு, புத்தகமாக வெளியிடப்பட்டது.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வெளியிட்டு, கல்கியின் சாதனைகளை நினைவு கூர்ந்தார். புத்தகத்தின் முதல் பிரதியை ஹரிகதை கலைஞர் சிந்துஜா பெற்றுக் கொண்டார். தொடர்ந்து, சிந்துஜா, ‘நந்தனார் சரித்திரம்’ ஹரிகதையை வழங்கினார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/01/28/large/934895.jpgபுதுச்சேரியில் வரும் மார்ச்சில் பட்ஜெட் - திட்டக்குழு கூட்டத்தில் ரூ.11,500 கோடி நிர்ணயம்

புதுச்சேரி: புதுச்சேரியில் வரும் மார்ச்சில் முழு பட்ஜெட் தாக்கலாகவுள்ளது. இதையொட்டி ஆளுநர் தமிழிசை தலைமையில் மாநில திட்டக்குழு கூட்டத்தில் ரூ. 11,500 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புதுவை சட்டப்பேரவையில் கடந்த காலங்களில் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.
ஆனால், கடந்த 12 ஆண்டுகளாக மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. அதற்கு பதிலாக மார்ச் மாதம் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டு வந்தது. மாறாக ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டன. புதுவை பட்ஜெட்டுக்கு மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும். பிரதமர் மோடி தலைமையில் பாஜக அரசு மத்தியில் அமைந்தபிறகு பிப்ரவரி முதல் வாரத்திலேயே மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கின்றனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/01/27/large/934894.jpgவிருத்தாசலம் | இரும்புக் கடையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இலவச சைக்கிள் - சார் ஆட்சியர் விசாரணை

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விலையில்லா சைக்கிள்கள் பழைய இரும்புக் கடையில் இருந்ததால் அவற்றை சார் ஆட்சியர் பறிமுதல் செய்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்காக ரூ.323 கோடி செலவில், விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அந்த வகையில் விருத்தாசலம் ஆலடி சாலையில் தனியார் இரும்புக் கடையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இலவச சைக்கிள்கள், புத்தம் புதிதாக, ஸ்டிக்கர் கூட பிரிக்காமல், பத்துக்கும் மேற்பட்ட சைக்கிள்கள் குவிந்து இருந்துள்ளது. இதைக் கண்ட சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/01/27/large/934893.jpgசேது சமுத்திரத் திட்டத்தால் தென் தமிழகத்தின் பொருளாதாரம் வளர்ச்சி பெறும் - கே.எஸ். அழகிரி நம்பிக்கை

மதுரை: திராவிடர் கழகம் சார்பில், நடந்த சேது சமுத்திர திட்டம் குறித்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்க தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி மதுரை வந்தார்.

விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சேதுசமுத்திரத் திட்டம் என்பது தமிழக வளர்ச்சிக்கான ஒரு திட்டம். சோனியா காந்தி பொறுப்பேற்றபோது, கருணாநிதி முதல்வராக இருந்தார். அப்போது, இத்திட்டம் அறிவிக்கப்பட்டது. தமிழக அரசியல் கட்சிகள் தலைவர்கள், இத்திட்டம் அவசியம் தேவை என, கருத்து கூறுகின்றனர். ரூ.2,500 கோடியிலான திட்டத்தில் 600 கோடி வரை செலவானது. பிறகு, திட்டம் நிறுத்தப்பட்டது. இதற்காக சொல்லப்பட்ட காரணம் சரியானது அல்ல. உலகிலுள்ள நீர் வழிப்பாதைகள் அப்பகுதிகளின் வளர்ச்சிக்கு உதவுகின்றனர். இதன்படி, சூயஸ், பனாமா கால்வால்கள் அப்பகுதியை வளர்ச்சி அடைய செய்துள்ளன.

சேது சமுத்திரத் திட்டத்தால் தென் தமிழகத்தின் பொருளாதாரம் வளர்ச்சி பெறும். தமிழக மக்கள் சார்பில், மீண்டும் குரல் கொடுக்க வந்துள்ளோம். கமல் உடம்பில் ரத்த அணுக்கள் தான் ஓடவேண்டும். காங்கிரஸ் ரத்தம் கூடாது என சீமான் கூறியுள்ளார். அப்படி எதுவுமில்லை. ஒவ்வொருவரின் உடலிலும் ரத்த அணுக்கள் மட்டுமே ஓடும். அது அவருக்கு புரியவேண்டும். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவோம். முதல்வர், ராகுல் காந்தி ஆகியோர் நல்ல திட்டங்களை சொல்லி நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளனர். இதன் எடுத்துக்காட்டாகவே கமலஹாசன் எங்களுக்கு ஆதரவளித்துள்ளார். ஆளுநர் தேநீர் விருந்தில் அரசியலமைப்பு சட்டத்தின்படி முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அவரது செயலை பாராட்டுகிறேன்" இவ்வாறு அவர் கூறினார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Thursday, January 26, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/01/27/large/934669.jpgவேங்கைவயல் சம்பவம் குறித்து எதிர்க்கட்சியினர் பேசாதது ஏன்? - விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கேள்வி

சென்னை: வேங்கைவயல் சம்பவத்தைப் பற்றி எதிர்க்கட்சியினர் பேசவில்லை, யாருக்கு அச்சப்படுகிறார்கள் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

குடியரசு தினத்தையொட்டி சென்னை அசோக் நகரில் உள்ளவிசிக தலைமையகத்தில் அம்பேத்கர் சிலைக்கு திருமாவளவன் நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அரசியலமைப்பு சட்ட பாதுகாப்பு உறுதிமொழியும் ஏற்றுக் கொண்டார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/01/27/large/934673.jpgகல்வியை மாநில பட்டியலில் கொண்டுவர வேண்டும்: குடியரசு தின கருத்தரங்கில் கனிமொழி வலியுறுத்தல்

சென்னை: கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும் என்று குடியரசு தினவிழா கருத்தரங்கத்தில் திமுக எம்பி கனிமொழி வலியுறுத்தினார்.

குடியரசு தினத்தை முன்னிட்டு பொதுப் பள்ளிக்கான மாநில மேடை சார்பில் ‘அரசமைப்புச் சட்டத்தையும் நாடாளுமன்ற ஜனநாயகத்தையும் காத்திடுவோம்: தமிழ்நாடு மருத்துவ மாணவர் சேர்க்கைமசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கிட வலியுறுத்துவோம்’ என்ற தலைப்பில் சென்னையில் நேற்று கருத்தரங்கம் நடந்தது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/01/27/large/934536.jpgமார்ச் மாதத்துக்குள் மதுரை கோட்டத்தில் 90 சதவீத ரயில் பாதைகள் மின்மயம் - மேலாளர் தகவல்

மதுரை: மதுரை ரயில்வே கோட்டம் சார்பில், ரயில்வே காலனி செம்மண் திடலில் நடந்த விழாவில் ரயில்வே கோட்ட மேலாளர் பத்மநாபன் அனந்த் ராணுவ உடையில் மூவர்ண தேசியக் கொடியை ஏற்றினார்.

பின்னர் பேசியவர், "இக்கோட்டம் 9 மாதங்களில் ரூ. 800 கோடி வருமானம் ஈட்டியுள்ளது. கடந்தாண்டைவிட 57 சதவீதம் அதிகம். ரயில்வே வாரியம் நிர்ணயித்த வருமான இலக்கைவிட 20 சதவீதம் கூடுதல். இது ஏப்ரல் முதல் டிசம்பர் வரை. இக்கோட்டத்தில் ரயில்கள் மூலம் 25 மில்லியன் பயணிகள் பயணித்துள்ளனர். இதன்மூலம் ரூ. 502.05 கோடியை எட்டியுள்ளது. இது கடந்த ஆண்டு வருவாயைவிட 79 சதவீதம் அதிகம்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/01/27/large/934537.jpgகரூர் | குடியரசு தின விழாவில் டாஸ்மாக் பணியாளர்களுக்கு கேடயம் - வருவாய் ஈட்டும் பணியை சிறப்பாக செய்ததாக பாராட்டு

கரூர்: குடியரசு தின விழாவில் டாஸ்மாக் டிஎம் உள்ளிட்ட 4 பேருக்கு பாராட்டு சான்றிதழ், கேடயம் வழங்கியது சர்ச்சையையும், சமூக வலைத்தளங்களில் விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

நாட்டின் 74வது குடியரசு தின விழா கரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் பங்கேற்று தேசியக் கொடியை ஏற்றிவைத்து காவல்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளில சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள், பணியாளர்களுக்கு கேடயமும், பாராட்டு சான்றிதழும் வழங்கினார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/01/27/large/934535.jpgதமிழக தொழிலாளரை விரட்டி அடிக்கும் வடமாநிலத் தொழிலாளர்கள் - வைரல் வீடியோ குறித்து திருப்பூர் போலீஸார் விசாரணை

திருப்பூர்: திருப்பூர் மாநகர் வேலம்பாளையம் திலகர் நகரில் தமிழக பின்னலாடை தொழிலாளரை வடமாநிலத் தொழிலாளர்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டவர்கள் துரத்தி தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

திருப்பூர் மாநகரத்துக்கு உட்பட்ட அனுப்பர்பாளையம், ஆத்துப்பளையம், திருமுருகன்பூண்டி, வேலம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 2000-த்துக்கும் மேற்பட்ட பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த பனியன் நிறுவனங்களில் ஒடிசா, ஜார்கண்ட், பீகார், உத்தரபிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள், பணி செய்து வருகின்றனர். தமிழர்களை விட, வடமாநிலத் தொழிலாளர்கள் அதிகம் பேர் பனியன் நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/01/26/large/934530.jpgஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வேட்பாளர் விரைவில் அறிவிப்பு - குலதெய்வ தரிசனம் செய்த ஓபிஎஸ்

ஸ்ரீவில்லிபுத்தூர்: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தனது குலதெய்வ கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று சாமி தரிசனம் செய்தார். பின் ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள தனது குல தெய்வம் கோயிலான செண்பகத்தோப்பு வனப்பேச்சியம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Wednesday, January 25, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/01/26/large/934407.jpgகுடியரசு தினத்தையொட்டி ஆளுநர் வழங்கும் தேநீர் விருந்து புறக்கணிப்பு: காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக, தவாக அறிவிப்பு

சென்னை: குடியரசு தினத்தன்று ஆளுநர் வழங்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் அறி வித்துள்ளன.

குடியரசு தினத்தையொட்டி, ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெறும் தேநீர் விருந்து நிகழ்ச்சியைப் புறக்கணிப்பதாக திமுக கூட்டணிக் கட்சிகள் அறிவித்துள்ளன. இதுதொடர்பாக அக்கட்சிகளின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கைகளில் கூறியிருப்பதாவது:

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/01/26/large/934434.jpgதமிழகத்தில் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருள் மீதான தடை ரத்து

சென்னை: உணவு பாதுகாப்பு மற்றும் தரச்சட்டத்தின் கீழ் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு தடை விதித்து தமிழக உணவு பாதுகாப்பு ஆணையர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2006-ம் ஆண்டு இயற்றப்பட்ட உணவு பாதுகாப்பு, தரச்சட்டத்தின் கீழ் தமிழகத்தில், குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு தடை விதித்து உணவு பாதுகாப்பு துறை ஆணையர் கடந்த 2018-ம் ஆண்டு உத்தரவிட்டார். புகையிலை பொருட்களுக்கு தடை விதித்து ஆண்டுதோறும் அறிவிப்பாணையும் வெளியிடப்பட்டு வருகிறது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/01/26/large/934067.jpgஈரோடு கிழக்குத் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் தான் உண்மையான வேட்பாளர் - ஈவிகேஎஸ் இளங்கோவன் பேச்சு

ஈரோடு: ‘ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்பாளராக நான் அறிவிக்கப்பட்டு இருந்தாலும், முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் உண்மையான வேட்பாளர்’ என ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்தார்.

ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா மறைவையடுத்து, பிப்ரவரி 27-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. இத்தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். கடந்த 21-ம் தேதி அமாவாசை நாளன்று திமுக அமைச்சர்கள் கே.என்.நேரு, சு.முத்துசாமி ஆகியோர், ஈரோடு கிழக்குத் தொகுதியில் வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டு பிரச்சாரத்தை தொடங்கினர். இந்நிலையில், திமுக கூட்டணியின் தேர்தல் பணிமனை திறப்பு விழா ஈரோட்டில் நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியில், வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அமைச்சர்கள் முத்துசாமி, எ.வ. வேலு, செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/01/25/large/934064.jpgரூ.100 கோடி வரி பாக்கி வைத்துள்ள நிறுவனங்களுக்கு ‘சீல்’ - மதுரை மாநகராட்சி கூட்டத்தில் மேயர் இந்திராணி எச்சரிக்கை

மதுரை: ரூ.100 கோடி வரி பாக்கியை வசூல் செய்ய இலக்கு நிர்ணயித்து மண்டலம் வாரியாக வரி பாக்கி வைத்துள்ள டாப்-10 நிறுவனங்களுக்கு ‘சீல்’ வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாநகராட்சி கூட்டத்தில் மேயர் இந்திராணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மதுரை மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் இந்திராணி தலைமையில் இன்று நடந்தது. ஆணையாளர் சிம்ரன் ஜித் சிங், துணை மெயர் நாகராஜன் முன்னிலை வகித்தனர். மேயர் இந்திராணி பேசுகையில், ‘‘சிறப்பு நிதி, பொதுநிதியை கொண்டு தார்சாலைகள், பேவர் பிளாக் சாலைகள் போடுவதற்கு ரூ.55 கோடிக்கு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது. கவுன்சிலர்கள் கோரிக்கையை ஏற்று பாதாளசாக்கடை, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ள ரூ.15 கோடிக்கு ஒப்பந்தங்கள் போடப்படுகிறது. மாநகராட்சியில் உள்ள கடைகள், மார்க்கெட், சைக்கிள் மற்றும் கார் பார்க்கிங் உள்ளிட்ட அனைத்து வருவாய் இனங்களும் ஏலம்விடப்பட உள்ளன. மாநகராட்சிக்கு வருவாயை அதிகரிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சி வருவாயை பெருக்க மண்டலம் வாரியாக டாப்-10 வரி பாக்கி வைத்துள்ள நிறுவனங்கள்மீது நடவடிக்கை எடுத்து அவர்களிடம் ரூ.100 கோடி வசூல் செய்வதற்கு இலக்கு நிர்ணயித்துள்ளது. மதுரையை அழகாக்கவும், மக்கள் வாழ்வாதாரத்தை பெருக்கவும் மாநகராட்சி பல்வேறு திட்டங்களை திட்டமிட்டுள்ளது’’ என்றார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/01/25/large/934063.jpgபத்ம விருதுகள்: தமிழகத்தில் யார் யாருக்கு விருது?

புதுடெல்லி: பிரபல பின்னணி பாடகர் வாணி ஜெயராம் உட்பட தமிழகத்தைச் சேர்ந்த ஐவருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கலை, சமூகப்பணி, பொது விவகாரங்கள், அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, குடிமைப்பணி போன்ற பல்வேறு பிரிவுகள் மற்றும் துறைகளில் சிறப்பாக பணியாற்றுவோருக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. குடியரசு தினத்தை முன்னிட்டு 2023-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் மொத்தம் 128 பேருக்கு புதன்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில் 3 பேருக்கு பத்ம விபூஷண், 9 பேருக்கு பத்ம பூஷண் மற்றும் 91 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Tuesday, January 24, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/01/24/large/933498.jpgநடிகர் சித்தார்த் விவகாரம் | தமிழக விமான நிலைய பாதுகாப்பு பணிக்கு தமிழ் தெரிந்தவர்களை நியமிக்க கோரி வழக்கு

மதுரை: தென் தமிழக விமான நிலையங்களில் பாதுகாப்பு பணிக்கு தமிழ் தெரிந்த மத்திய பாதுகாப்பு படை வீரர்களை நியமிக்கக் கோரிய வழக்கில் கூடுதல் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் மோர்பண்ணையைச் சேர்ந்த வழக்கறிஞர் தீரன் திருமுருகன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/01/24/large/933493.jpgமெட்ரோ ரயில் கட்டுமானப் பணி | அயனாவரம் ஆண்டர்சன் சாலையில் நாளை முதல் போக்குவரத்துக்கு தடை

சென்னை: மெட்ரோ ரயில் கட்டுமான அலுவல் மேற்கொள்வதற்காக ஆண்டர்சன் சாலை நாளை (ஜன.25) முதல் மூடப்பட்டு வாகன போக்குவரத்து தடைசெய்யப்பட உள்ளது என்று சென்னைப் பெருநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னைப் பெருநகர போக்குவரத்துக் காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி: அயனாவரம் ஆண்டர்சன் சாலையில் மெட்ரோ ரயில் கட்டுமான அலுவல் மேற்கொள்வதற்காக 25.01.2023 புதன் கிழமை முதல் 7 நாட்களுக்கு சோதனை அடிப்படையில் பின்வருமாறு போக்குவரத்து மாற்றங்களைச் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. எனவே கீழ்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகிறது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Monday, January 23, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/01/24/large/933369.jpgதமிழகத்துக்கு முழு அளவு நிலக்கரியை வழங்கியது மத்திய அரசு

சென்னை: மின்வாரியத்தின் கோரிக்கையை ஏற்று ஒடிசாவில் இருந்து தினமும் 7 கோடி கிலோ நிலக்கரியை மத்திய அரசு வழங்கி வருவதால், தமிழக அனல்மின் நிலையங்களில் தேவையான நிலக்கரி கையிருப்பில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழ்நாடு மின்வாரியத்துக்கு 4,320 மெகாவாட் திறனில் 5 அனல்மின் நிலையங்கள் உள்ளன. இவற்றில் தினசரி மின்சார உற்பத்திக்கு 7.20 கோடி கிலோ நிலக்கரி தேவை. ஒடிசா மாநிலத்தில் உள்ள தால்சார், ஐபி வேலி ஆகிய சுரங்கங்களில் இருந்து இந்த நிலக்கரி பெறப்படுகிறது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/01/24/large/933228.jpgகேரள மாநிலம் வைக்கம் பகுதியில் உள்ள பெரியார் நினைவிடத்தில் அமைச்சர்கள் ஆய்வு: தற்போதைய நிலையை முதல்வரிடம் தெரிவிப்பதாக தகவல்

சென்னை: கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், வைக்கம் பகுதியில் தந்தை பெரியார் அறப்போராட்டத்தில் ஈடுபட்டு, வெற்றி கண்டதன் நினைவாக, தமிழக அரசு சார்பில் 70 சென்ட் பரப்பில் நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது.

இதில், அருங்காட்சியகம், நூலகம், சிறுவர் விளையாட்டுப் பூங்கா உள்ளிட்டவை அமைந்துள்ளன. மேலும், அமர்ந்த நிலையில் பெரியார் சிலை நிறுவப்பட்டுள்ளது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/01/24/large/933245.jpgநேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள்: ஆளுநர், அரசியல் தலைவர்கள் மரியாதை

சென்னை: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாளை ஒட்டி தமிழக ஆளுநர் மற்றும் அரசியல் தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள நேதாஜி சிலைக்கு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, சட்டப்பேரவை உறுப்பினர்கள் இ.பரந்தாமன், த.வேலு, துணை மேயர் மு.மகேஷ்குமார், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் ஆர்.செல்வராஜ் ஆகியோர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/01/24/large/933406.jpgகாற்றுவேக மாறுபாடு - தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையஇயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசை காற்றில் வேகமாறுபாடு நிலவுகிறது. இதன்காரணமாக, 24-ம் தேதி (இன்று)தென் தமிழக மாவட்டங்கள்,தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதை ஒட்டிய மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும்.

24-ம் தேதி (இன்று) தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 40-45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/01/23/large/932951.jpgமதுரை ஒபுளாபடித்துறை மேம்பாலம் கட்டுமானப் பணி மந்தம் - சித்திரைத் திருவிழாவிற்குள் முடியுமா?

மதுரை: ரூ.20 கோடியில் வைகை ஆறு குறுக்கே கட்டப்படும் ஒபுளாபடித்துறை மேம்பாலம் கட்டுமானப் பணி, மந்தகதியில் நடக்கிறது. சித்திரைத் திருவிழாவிற்குள் இந்த பாலம் பயன்பாட்டிற்கு வராவிட்டால் கடந்த ஆண்டை போல் வைகை ஆறு கரையில் திருவிழாவில் நெரிசல் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

மதுரை வடகரை, தென்கரை பகுதி மக்கள், வாகன ஒட்டிகள் எளிதாக வைகை ஆற்றை கடந்து இரு நகரப்பகுதிகளுக்கு சென்று வருவதற்காக ஆரம்ப காலத்தில் ஏவி மேம்பாலம், யானைக்கல் மேம்பாலம் மற்றும் தரைப்பாலங்கள் இருந்தன. தற்போது தரைப்பாலங்களை இடித்துவிட்டு அந்த இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. அந்த அடிப்படையில் ஒபுளாபடித்துறை அருகே வைகை ஆற்றின் வடகரை மற்றும் தென்கரை பகுதிகளை இணைத்த தரைப்பாலத்தை இடித்துவிட்டு தற்போது நகர்புற மேம்பாட்டு திட்டத்தில் மாநகராட்சி ரூ.20 கோடியில் மேம்பாலம் கட்டுகிறது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Sunday, January 22, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/01/23/large/932797.jpgகோவை | அனுமதியின்றி சிறப்புக் காட்சிகள்: 8 திரையரங்குகளுக்கு கோவை ஆட்சியர் நோட்டீஸ்

கோவை: அனுமதியின்றி சிறப்புக் காட்சிகள் திரையிடப்பட்ட விவகாரம் தொடர்பாக 8 திரையரங்குகளுக்கு கோவை மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

பொங்கல் பண்டிகையையொட்டி துணிவு, வாரிசு ஆகிய திரைப்படங்கள் கடந்த 11-ம் தேதி தமிழகம் முழுவதும் திரையிடப்பட்டன. கோவையில் பல திரையரங்குகளில் நள்ளிரவு 1 மணி, அதிகாலை 4 மணிக்கு ரசிகர்களுக்காக சிறப்புக் காட்சிகள் திரையிடப்பட்டன.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்