Sunday, March 26, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/03/27/large/966625.jpgதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி இளங்கோவனுக்கு தொடர் சிகிச்சை

சென்னை: தீவிர சிகிச்சை பிரிவில் அனு மதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு மருத்துவ குழுவினர் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் எம்எல்ஏ, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, டெல்லி சென்றுவிட்டு கடந்த 15-ம் தேதி சென்னை திரும்பினார்.

அன்று இரவு அவருக்கு திடீரென நெஞ்சுவலி, மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார். சிகிச்சைக்கு பிறகு, அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதால், தீவிர சிகிச்சை பிரி வில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்