Sunday, March 26, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/03/27/large/966467.jpgஇரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் | 3 வழித்தடங்களில் நீட்டிப்பு தொடர்பான சாத்தியக்கூறுகள்: ஆய்வு செய்ய நிறுவனங்கள் தேர்வு

சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில்திட்டத்தில் 3, 4, 5 ஆகிய வழித்தடங்களில் நீட்டிப்பு தொடர்பாக சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய மூன்று நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் ரூ.63,246 கோடி மதிப்பில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகின்றன. மாதவரம்-சிறுசேரி வரை (45.8 கி.மீ.) 3-வது வழித்தடத்திலும், கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி வரை (26.1 கி.மீ. ) 4-வது வழித்தடத்திலும், மாதவரம்-சோழிங்கநல்லூர் வரை (47 கி.மீ) 5-வது வழித்தடத்திலும் என118.9 கி.மீ. தொலைவில் பணிகள் நடைபெறுகின்றன. இதுதவிர, இந்த வழித்தடங்களை நீட்டிக்கவும் ஆலோசனை நடைபெற்று வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்