Monday, May 1, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/05/02/large/984507.jpgஇளம் தம்பதியர் எதிர்பார்ப்பதுபோல ‘இன்ஸ்டன்ட்’ விவாகரத்து சாத்தியமா? - உயர் நீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் விளக்கம்

சென்னை: நவீன யுகத்தில், உணவு தயாரிப்பு முதல் உடல் எடையை குறைப்பது வரை எல்லாம் துரிதமாக நடந்துவிட வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். விவாகரத்தையும்தான். இளம் தம்பதியர் தங்களுக்குள் சின்னச் சின்ன சண்டை ஏற்பட்டால் கூட, பரஸ்பர புரிதலுக்கான முயற்சியில் இறங்காமல், எடுத்த மாத்திரத்திலேயே விவாகரத்து கோரி நீதிமன்ற படியேறி விடுகின்றனர்.

அதற்கான வசதிகள், கட்டமைப்புக்கும் பஞ்சமில்லை. 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட நகரங்களில் குடும்ப நல நீதிமன்றங்கள் நிறுவப்பட வேண்டும் என சட்டம் சொல்கிறது. அதன்படி, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்கள் உட்பட நாடு முழுவதும் 763 குடும்ப நல நீதிமன்றங்கள் உள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்