Monday, May 1, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/05/02/large/984469.jpgகட்சி அலுவலகங்களில் மே தின கொண்டாட்டம்

சென்னை: மே தினத்தை முன்னிட்டு சென்னையில் அரசியல் கட்சித் தலைமை அலுவலகங்களில் கட்சி மற்றும் தொழிற்சங்க கொடியேற்றி மே தினம் உற்சாகமாக கொண் டாடப்பட்டது.

சென்னை தி.நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு அலுவலகத்தில் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கொடியேற்றினார். இந்நிகழ்வில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன், மாநிலக் குழு உறுப்பினர்கள் வெ.ராஜசேகரன், ஆர்.பத்ரி, இரா.சிந்தன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்