Saturday, June 17, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/06/17/large/1017336.jpgகரள கடக பகதகளல அறவட மடவதல தமழகததல இஞச வல கடம உயரவ

தருமபுரி: கேரளா, குடகு பகுதிகளில் இஞ்சி அறுவடை முடிவை எட்டியிருப்பதால் தமிழகத்தில் இஞ்சி விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

சைவ, அசைவ உணவுகள் தயாரிப்பில் இஞ்சி முக்கிய இடம் வகிக்கிறது. அதேபோல, தேநீர் கடைகளில் தினந்தோறும் விற்பனையாகும் சமோசா, பப்ஸ் போன்ற நொறுக்குத் தீனிகள் தயாரிப்பிலும் இஞ்சி முக்கிய இடம் பெறுகிறது. மேலும், சில கடைகளில் இஞ்சி டீ தயாரிப்பின்போதும் இஞ்சி பயன்படுத்தப்படுகிறது. இதுதவிர, கரும்புச் சாறு விற்பனை செய்யும் கடைகளில் இயந்திரத்தில் கரும்பை அரைத்து சாறு பிழியும்போது கரும்புடன் எலுமிச்சை, இஞ்சி ஆகியவற்றையும் சேர்த்தே அரைத்து சாறெடுக்கின்றனர். கரும்புச் சாறின் சுவையை மேலும் கூட்டும் வகையில் இவ்வாறு இஞ்சி பயன்படுத்தப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்