Friday, June 16, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/06/17/large/1016169.jpgகரககட நகரடச பளளயல பதய கடடட வசத இலலமல இடநரககட - சரகக நறததததல ஏமறறம

காரைக்குடி: காரைக்குடி ராமநாதன் செட்டியார் நகராட்சி பள்ளியில் போதிய கட்டிட வசதி இல்லாததால் மாணவர்கள் இடநெருக்கடியில் தவித்து வருகின்றனர். மேலும் 6-ம் வகுப்புக்கான புதிய சேர்க்கையும் நிறுத்தப்பட்டதால் பெற்றோர் ஏமாற்றமடைந்தனர்.

காரைக்குடி ராமநாதன் செட்டியார் நகராட்சி பள்ளி 2013-ம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. தற்போது 55 ஆசிரியர்களுடன் 1,600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். ஆனால் இப்பள்ளியில் போதிய கட்டிட வசதி இல்லை. இதனால் இடநெருக்கடியாக அமர்ந்து மாணவர்கள் படிக்கும்நிலை உள்ளது. அதேபோல் மாணவர்களுக்கு ஒரு கழிப்பறையும், மாணவிகளுக்கு 2 கழிப்பறைகள் மட்டுமே உள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்