
சென்னை: ராமகிருஷ்ண மடத்தின் 125-வது ஆண்டையொட்டி ராமகிருஷ்ண மடத்தின் கொள்கை, நோக்கங்கள் குறித்த தேசிய அளவிலான கருத்தரங்க நடைபெற்றது. இந்த கருத்தரங்கத்தில் மடத்தின் துணைத் தலைவர் கவுதமானந்தாஜி பங்கேற்றார்.
ராமகிருஷ்ண மடத்தின் 125-வது ஆண்டையொட்டி ராமகிருஷ்ண இயக்கத்தின் கொள்கைகள் மற்றும் சேவைகள் குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கம் நேற்று மயிலாப்பூரில் நடைபெற்றது. இந்த கருத்தரங்கத்தில் ராமகிருஷ்ண மடத்தின் துணைத் தலைவர் கவுதமானந்தாஜி, செயலாளர் அத்மாஷ்ரதானந்தா, மேலாளர் தர்மிஷ்டானந்தர், மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்