Sunday, July 16, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/07/17/large/1054887.jpgதமிழகத்தில் பசுமைப் பரப்பை அதிகரிப்பதில் சிறப்பு கவனம்: மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ் உறுதி

சென்னை: சென்னையை அடுத்த கோவளம் கடற்கரை கழிமுக உவர் நிலங்களில் அலையாத்திக் காடுகளை உருவாக்கும் திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் நேற்று முன்தினம் சென்னை வந்திருந்தார்.

அவர் 'இந்து தமிழ் திசை' செய்தியாளரிடம் கூறியதாவது: தமிழகத்தில் உள்ளூர் சூழ்நிலைகளின் அடிப்படையில், பசுமையைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பான மாநில அரசின் முயற்சிகளுக்குத் தேவையான வழிகாட்டுதல்கள், கொள்கைகளை வகுப்பது மத்திய அரசின் முதன்மை பணியாகும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்