Friday, November 17, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/11/18/large/1155240.jpgசொகுசு வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்தலாம்: போக்குவரத்து ஆணையர் உத்தரவு

சென்னை: சொகுசு வாகனங்களை வாடகைக்குப் பயன்படுத்த அனுமதித்தும், மேக்ஸி கேப் வாகனங்களுக்கு ஆயுள் வரி செலுத்த 4 ஆண்டுகள் அவகாசம் வழங்கியும்போக்குவரத்து ஆணையர் ஏ.சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் கூறியதாவது: சொந்த பயன்பாட்டுக்கான வாகனங்களின் ஆயுள் வரியை 15, 20 ஆண்டுகளுக்கும் சேர்த்து ஒருமுறை செலுத்தினால் போதுமானது. அதுவே வணிகரீதியாக பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு காலாண்டு அல்லதுஆண்டுதோறும் வரி செலுத்த வேண்டும். இந்நிலையில், அண்மையில் மோட்டார் வாகன வரிகளை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்