Saturday, December 2, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/12/03/large/1162602.jpg‘மிக்ஜாம்’ புயலால் இன்றும் நாளையும் கனமழை: மீட்புக் குழுக்கள், நிவாரண முகாம்களுடன் முன்னேற்பாடுகள் தயார்

சென்னை: வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுப்பெறும். இதனால் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, பொதுமக்கள் ஒருசில நாட்களுக்கு தேவையான உணவு, நீர் மற்றும் மருந்துகளை கையிருப்பில் வைத்துக் கொள்ளுமாறு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

புயல் நிலவரம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, சென்னைக்கு தென்கிழக்கே 450 கி.மீ. தொலைவிலும், ஆந்திர மாநிலம் நெல்லூருக்கு தென்கிழக்கே 580 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது, இன்று (டிச.3) தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறக்கூடும். தொடர்ந்து, வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை காலை தெற்கு ஆந்திரா மற்றும் வடதமிழக கடலோரப் பகுதிகளில் நிலவக்கூடும். பின்னர் கடலோரப் பகுதிகளையொட்டி வடக்கு திசையில் நகர்ந்து, வரும் 5-ம் தேதி காலை தெற்கு ஆந்திர கடற்கரையில் நெல்லூர்-மசூலிப்பட்டினத்துக்கு இடையே புயலாக கரையை கடக்கக்கூடும். அப்போது மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்