Sunday, December 3, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/12/03/large/1162688.jpg“அண்ணன் விஜயகாந்த் நலம் பெறப் பிரார்த்திக்கும் கோடி இதயங்களில் நானும் ஒருவன்” - நடிகர் சூர்யா

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த், சென்னை - மியாட் மருத்துவமனையில் உடல்நல பாதிப்பால் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் வீடு திரும்புவார் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்திருந்தார். இந்நிலையில், அண்ணன் விஜயகாந்த் நலம் பெறப் பிரார்த்திக்கும் கோடி இதயங்களில் நானும் ஒருவன் என நடிகர் சூரயார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது. “அண்ணன் விஜயகாந்த் அவர்கள் நலம் பெறப் பிரார்த்திக்கும் கோடான கோடி இதயங்களில் நானும் ஒருவனாகப் பங்கேற்கிறேன். கோடானகோடி மனிதர்களின் வேண்டுதல்கள் நிச்சயம் பலிக்கும்.! அவரை பூரண குணமாக்கி, நலம் பெற வைக்கும்.!!” என எக்ஸ் தளத்தில் சூர்யா ட்வீட் செய்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்