
சென்னை: சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் 72 குண்டுகள் முழங்க, முழு அரசு மரியாதையுடன் விஜயகாந்த் உடல் அடக்கம் செய்யப்பட்டது. ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்வர் ஸ்டாலின், தமிழக அமைச்சர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். லட்சக்கணக்கான தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் திரண்டு, கண்ணீர் மல்க விஜயகாந்துக்கு பிரியாவிடை கொடுத்தனர்.
தேமுதிக நிறுவனத் தலைவரும், நடிகருமான விஜயகாந்த் (71), உடல்நலக் குறைவால் சென்னை அடுத்த மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் காலை 6.10 மணிக்கு காலமானார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்