Wednesday, August 31, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/09/01/large/859043.jpgஅதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட ஆணையங்களின் அறிக்கைகள் சட்டமன்றத்தில் விவாதிக்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்

கோவை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் மற்றும் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரணை ஆணையத்தின் அறிக்கைகள் சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

கோவையில் நடந்த திமுக முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி இல்ல விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில்:" எப்போதும் மக்கள் மனுக்களை கொடுக்கும்போது, ஏக்கத்தோடும், வருத்தத்தோடும் கொடுப்பதைத்தான் பார்த்திருக்கிறேன். ஆனால், அதே மக்கள் என்னிடத்தில் மனுக்களை கொடுக்கும்போது, மகிழ்ச்சியோடு பூரிப்போடு, நம்பிக்கையோடு கொடுத்தவிட்டு நன்றி கூறுகின்றனர். இன்று மனுகொடுத்த பின்னர் மக்களிடத்தில் நம்பிக்கை வந்திருக்கிறது என்றால், அதுதான் நம்முடைய திராவிட மாடல் ஆட்சி.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://ift.tt/ZMI7enl ஆண்டுகளாக அதிகரிக்கப்படாத க்ரீமி லேயர் வரம்பு: ரூ.15 லட்சமாக உயர்த்த ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: க்ரீமி லேயர் வரம்பை ரூ.15 லட்சம் ஆக உயர்த்தி பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் சமூக நீதியை மத்திய அரசு காக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "தேசிய அளவில் மத்திய அரசு கல்வி நிறுவனங்களின் மாணவர் சேர்க்கை விரைவில் தொடங்கவுள்ள நிலையில், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பு இட ஒதுக்கீட்டை பெறுவதற்கான கிரீமிலேயர் வருமான வரம்பு இன்று வரை உயர்த்தப்படவில்லை.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/09/01/large/859039.jpgவிருதுநகரில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் விபத்து: சப்பரத்தில் மின்சாரம் பாய்ந்ததில் 2 பேர் பலி

ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சொக்கநாதன் புத்தூரில் நேற்று இரவு (ஆக்.31) நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் மின் கடத்தி மீது சப்பரம் மோதியதில் 2 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.

நாடு முழுவதும் நேற்று விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இந்நிலையில், சொக்கநாதன்ம் புத்தூர் பகுதியில் பேருந்து நிலையம் அருகே குலாலர் தெருவில் விநாயகர் சதுர்த்தி சப்பர ஊர்வலம் நேற்று இரவு நடைபெற்றது. ஊர்வலத்தில் சிறியவர்கள், பெரியவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/09/01/large/859037.jpgகனமழை எதிரொலி: தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

சென்னை: கனமழை காரணமாக தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் இதற்கான உத்தரவைப் பிறப்பித்தனர்.

தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று ஆகஸ்ட் 1-ஆம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/09/01/large/859033.jpg“தமிழ்ச் சமூகத்தின் சாபக்கேடு... காலனிகளுக்கு கூட நிகரில்லை” - பிடிஆர் vs அண்ணாமலை ட்விட்டரில் மோதல்

சென்னை: தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகிய இருவரும் ட்விட்டரில் சொற்போரில் ஈடுபட்டுள்ளனர். மதுரை விமான நிலையத்தில் தமிழக நிதியமைச்சர் கார் மீது காலணி வீசிய சம்பவத்தின் தொடர்ச்சியாக இந்த மோதல் வெடித்தது.

மதுரை உசிலம்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் லெட்சுமணன், காஷ்மீரில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தார். அவரது உடல் மதுரை விமான நிலையத்துக்கு கொண்டு வரப்பட்ட போது அரசு சார்பில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அஞ்சலி செலுத்தினார். பின்னர் விமான நிலையத்தை விட்டு அமைச்சர் புறப்பட்ட போது அவரின் காரை தடுத்து நிறுத்தி பாஜகவினர் காலணியை வீசினர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/08/31/large/858959.jpgரிஷிவந்தியம் | நில அபகரிப்பு புகாரளித்த பெண்ணிடம் திமுக கவுன்சிலர் அத்துமீறியதாக குற்றச்சாட்டு

ரிஷிவந்தியம்: நில அபகரிப்பு, பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்தாக ரிஷிவந்தியம் திமுக ஒன்றிய கவுன்சிலர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள சுத்தமலை கிராமத்தைச் சேர்ந்தவர் ஆண்ட்ரூ வின்சென்ட். இவர் பெங்களூரில் தங்கி வேலை பார்த்து வரும் நிலையில், இவரது சொந்த ஊரான சுத்தமலை கிராமத்தில் உள்ள வீட்டில் அவரின் மனைவி மற்றும் இரண்டு மகள்கள் மற்றும் அவரின் தம்பி மனைவி ஆகியோர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு சொந்தமான 5 ஏக்கர் விவசாய நிலத்தில் கரும்பு நடவு செய்து பராமரித்து வந்தனர். இந்த நிலையில் இவர்களுடைய நிலத்தை ரிஷிவந்தியம் ஒன்றிய திமுக கவுன்சிலரான ஏசுராஜ் என்பவர் அபகரிக்க முயன்றதாகவும், விளைநிலத்தில் பயிரிட்டிருந்த கரும்பு பயிர்களை அடியாட்கள் துணையுடன் தனது பெயரில் மூங்கில்துறைப்பட்டு கரும்பு ஆலைக்கு அனுப்பி ரூ.5 லட்சம் மோசடி செய்ததாகவும் ஆண்ட்ரூ வின்சென்ட் குடும்பத்தினர் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Tuesday, August 30, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/08/31/large/858854.jpgமறைந்த எழுத்தாளரின் உடல், கண்கள் தானம்

ஸ்ரீ வில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பைச் சேர்ந்தவர் சுந்தரமகாலிங்கம்(82). இவரது மனைவி அமர்ஜோதி கடந்த ஆண்டு மறைந்தார். இவர்களுக்கு திலீபன்(53), கோபிநாத்(52, கவுதமன்(47) ஆகிய 3 மகன்கள் உள்ளனர்.

ஓய்வுபெற்ற ஆசிரியரான சுந்தர மகாலிங்கம் நாளிதழ்கள் மற்றும் வார இதழ்களில் தொடர்கள் மற்றும் புத்தகங்களை எழுதி உள்ளார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/08/31/large/858902.jpgசாதாரண நெல் குவிண்டாலுக்கு ரூ.2,115; சன்னரகம் ரூ.2,160 - நாளை முதல் கொள்முதல் செய்ய முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் நாளை (செப்.1) முதல் கொள்முதல் நிலையங்களில் சாதாரண ரக நெல் குவிண்டாலுக்கு ரூ.2,115, சன்னரக நெல் குவிண்டாலுக்கு ரூ.2,160 என்ற வீதத்தில் கொள்முதல் செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/08/31/large/858901.jpgஅனைவரது வாழ்விலும் ஆரோக்கியத்தையும், அமைதியையும் அளிக்கட்டும் - ஆளுநர், தலைவர்கள் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து

சென்னை: விநாயகர் சதுர்த்தியையொட்டி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/08/31/large/858743.jpgசென்னையின் 2-வது விமான நிலையம் அமையவுள்ள பரந்தூர் சுற்றுப்புற பகுதிகளில் போலீஸ் குவிப்பு: அரசியல் கட்சியினரின் வருகை அதிகரிப்பால் நடவடிக்கை

காஞ்சிபுரம்: சென்னையின் 2-வது விமான நிலையம் அமைய உள்ள பந்தூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் அரசியல் கட்சிகள் கள ஆய்வு செய்து வருவதால் போராட்டம் ஏதும் நடைபெறாமல் தடுக்கும்வகையில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் பரந்தூர் பகுதியில்2-வது சர்வதேச விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. இந்தவிமான நிலையத்துக்காக சுமார்4,500 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அரசு புறம்போக்கு நிலங்கள் போக2 ஆயிரம் ஏக்கர் அளவுக்கு விவசாய நிலங்களும் 2000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளும் கையகப்படுத்தப்பட உள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/08/31/large/858749.jpgஇபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 64 பேருக்கு நிபந்தனை முன்ஜாமீன்

சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பான வழக்கில் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், 64 பேரும் தலா ரூ. 20 ஆயிரத்தை அடையார் புற்றுநோய் மருத்துவமனைக்கு செலுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் கடந்த ஜூலை 11 அன்று இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆ தரவாளர்கள் மத்தியில் தகராறு ஏற்பட்டது. அதையடுத்து அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://ift.tt/ZbOzgKi சமுதாய நல மையங்களில் ரத்த சுத்திகரிப்பு நிலையங்கள்; சாலை பள்ளங்களை மூட ரூ.3 கோடி ஒதுக்கீடு: சென்னை மாமன்ற கூட்டத்தில் தீர்மானம்

சென்னை: பருவமழை தொடங்கவுள்ள நிலையில் சாலைகளில் உள்ள பள்ளங்களை ரூ.3 கோடி செலவில் சரிசெய்வது உள்ளிட்ட 61 தீர்மானங்கள் நேற்றுநடைபெற்ற சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

சென்னை மாநகராட்சி மாமன்றகூட்டம் ரிப்பன் மளிகையில் நேற்றுநடைபெற்றது. மேயர் ஆர்.பிரியாதலைமை தாங்கினார்.துணை மேயர் மு.மகேஷ்குமார், ஆணையர்ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/08/31/large/858894.jpg‘கரீப் ரத்’ ரயில்களுக்கு புதிய எகானமி வகுப்பு பெட்டிகள் ஐசிஎஃப்.பில் தயாரிப்பு

சென்னை: ‘ஏழைகள் ரதம்’ என்னும் ‘கரீப் ரத்’ ரயில்களுக்காக, புதிய எகானமி 3ஏசி பெட்டிகள் தயாரிப்பு சென்னை ஐ.சி.எஃப்-ல் தொடங்கி உள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் 723 பெட்டிகளைத் தயாரித்து வழங்க ஐ.சி.எஃப் இலக்கு நிர்ணயித்துள்ளது.

நாட்டில் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட மக்களின் ரயில் போக்குவரத்து வசதிக்காக, ‘கரீப் ரத்’ என்னும் ‘ஏழைகள் ரதம்’ ரயில் 2006-ம்ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. பல்வேறு வழித்தடங்களில் 48 ரயில்கள் இயக்கப்பட்ட நிலையில், சில காரணங்களால் இந்த ரயில்கள் எண்ணிக்கை 2 ஆண்டுக்கு முன்பு குறைக்கப்பட்டன. தற்போது, நாடு முழுவதும் 26 ஜோடி ரயில்கள் இயக்கப்படுகின்றன.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/08/31/large/858893.jpgசென்னையில் இருந்து விமானம் மூலம் அக்.9-ம் தேதி கேதார்நாத், கங்கோத்ரிக்கு ‘சார்தாம் யாத்திரை’

சென்னை: சென்னையில் இருந்து கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி உள்ளிட்ட தலங்களை காணும் விதமாக, ‘சார்தாம் யாத்திரை’ என்ற விமான சுற்றுலாவுக்கு ஐஆர்சிடிசி ஏற்பாடு செய்துள்ளது.

இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி) சார்பில், சென்னையில் இருந்து கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி, ஹரித்வார் ஆகிய புனித தலங்களை காணும் விதமாக,‘சார்தாம் யாத்திரை’க்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சுற்றுலா சென்னையில் இருந்து அக்டோபர் 9-ம் தேதி தொடங்குகிறது. 13 நாட்கள் விமான சுற்றுலாவுக்கு ஒருவருக்கு ரூ.55 ஆயிரம் கட்டணம்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/08/31/large/858884.jpgதுணைவேந்தர் நியமனம் மாநில அரசின் உரிமை - சென்னையில் நடந்த மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டம்

சென்னை: மாநில அரசின் கொள்கை முடிவுகளுக்கு கட்டுப்பட்டு பல்கலைக்கழகங்கள், துணைவேந்தர்கள் செயல்பட வேண்டும். துணைவேந்தர் நியமனம் என்பது மாநில அரசின் உரிமை என்று துணைவேந்தர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்தார்.

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்தது. இதில் முதல்வர் பேசியதாவது:

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Monday, August 29, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/08/30/large/857998.jpgநீலகிரியில் பரவலாக கனமழை: கல்லட்டி மலைப் பாதையில் 10 இடங்களில் மண் சரிவு

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையால், கல்லட்டி மலைப்பாதையில் 10 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது.

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்திருப்பதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக, இந்தாண்டு தென்மேற்கு பருவமழை 100 சதவீதத்தையும் தாண்டி அதிகமாக பெய்து வருகிறது. இதனால், நீலகிரி மாவட்ட அணைகள் நிரம்பி வருவதோடு, ஆறுகள் மற்றும் அருவிகளிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/08/30/large/857591.jpgகள்ளக்குறிச்சி | உயிரிழந்த மாணவி பாலியல் துன்புறுத்தலோ, கொலையோ செய்யப்படவில்லை - உயர் நீதிமன்றம்

சென்னை: மருத்துவ அறிக்கையின்படி கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி பாலியல் துன்புறுத்தலோ, கொலையோ செய்யப்படவில்லை. அவர் தற்கொலைதான் செய்துள்ளார் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் கைதான பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான வழக்கில் கைதான பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேருக்கும் உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன் நிபந்தனை ஜாமீன் வழங்கி ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், ஜாமீன் நிபந்தனை தொடர்பாக நீதிபதி ஜி.கே.இளந்திரையன் நேற்று பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/08/30/large/857596.jpgதமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

30-ம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, கரூர், தருமபுரி, ஈரோடு, நாமக்கல், திருச்சி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, தென்காசி, குமரி, நெல்லை, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/08/30/large/857595.jpgதமிழகத்தில் பிரசித்தி பெற்ற 18 கோயில்களில் ரூ.105 கோடியில் புதிய திட்டப் பணிகள் தொடக்கம் - முதல்வர் தொடங்கி வைத்தார்

சென்னை: தமிழகத்தின் பிரசித்தி பெற்ற 18 கோயில்களில் அறநிலையத் துறை சார்பில் ரூ.105 கோடியில் மேற்கொள்ளப்படும் 25 புதிய திட்டப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/08/30/large/857587.jpgஆன்லைன் ரம்மியை தடை செய்ய அவசர சட்டம் - முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

சென்னை: ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்கான அவசர சட்டம் பிறப்பிக்க, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கைகளை சட்டப்பேரவையில் வைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழக அமைச்சரவை கூட்டம், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது. இக்கூட்டத்தில் துரைமுருகன், கே.என்.நேரு உள்ளிட்ட அமைச்சர்கள், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, நிதித்துறை செயலர் நா.முருகானந்தம், உள்துறை செயலர் க.பணீந்திர ரெட்டி, பொதுத்துறை செயலர் டி.ஜெகந்நாதன், முதல்வரின் செயலர்கள் டி.உதயசந்திரன், உமாநாத், அனுஜார்ஜ் ஆகியோர் பங்கேற்றனர். மாலை 5.55 மணிக்கு தொடங்கிய கூட்டம் இரவு 7.10 மணி வரை நீடித்தது. இக்கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Sunday, August 28, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/08/29/large/857505.jpgபோக்குவரத்து கழகங்களில் காலி பணியிடம் குறித்த கணக்கீடு: அமைச்சர் சிவசங்கர் தகவல்

சென்னை: போக்குவரத்து கழகங்களில் காலி பணியிடங்கள் குறித்த கணக்கீடு நடைபெறுவதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: நிதி நெருக்கடி காரணமாகவே போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 4 ஆண்டுக்கு ஒருமுறை ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஓய்வுபெற்ற ஊழியர்களின் பிரச்சினைகள் குறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/08/29/large/857311.jpgவடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள கோயில்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்: அறநிலையத் துறை அறிவுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர் கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் உள்ளாட்சி அமைப்புகள், மாவட்ட நிர்வாகங்கள், பல்வேறு அரசு துறைகளும் ஈடுபட்டுவருகின்றன.

இந்நிலையில், பருவமழையின்போது கோயில்களில் தண்ணீர்தேங்காத வகைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு இந்து சமய அறநிலையத் துறை அறிவுறுத்தியுள்ளது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/08/29/large/857506.jpgஇந்திய கடலோர காவல் படையின் கப்பல்கள், ஹெலிகாப்டர்கள் மூலம் சென்னை அருகே வங்கக்கடலில் தேடுதல், மீட்பு ஒத்திகை

சென்னை: இந்திய கடலோர காவல் படை சார்பில் அதிநவீன கப்பல்கள், ஹெலிகாப்டர்கள் மூலம் வங்கக்கடலில் தேடுதல், மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. இதில் தானியங்கி படகு உள்ளிட்ட புதியதொழில்நுட்பங்களை முதல்முறையாக பயன்படுத்தி வீரர்கள் சாகசங்களை நிகழ்த்தினர்.

கடல் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், இந்திய கடலோர காவல் படை சார்பில் 10-வது கடல்சார் தேடுதல், மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி சென்னையை ஒட்டி வங்கக்கடலில் நேற்று நடந்தது. இதில் தேசிய கடல்சார் தேடுதல், மீட்பு பயிற்சி வாரியத்தின் தலைவரும், இந்திய கடலோர காவல் படை இயக்குநருமான வி.எஸ்.பதானியா, கிழக்கு பிராந்திய ஐ.ஜி. படோலா, டிஐஜி சின்மோய் மொஹாபத்ரா உள்ளிட்ட உயர் அதிகாரிகள், கப்பல், விமானப் போக்குவரத்து மற்றும் மீன்வளஅமைச்சகத்தின் உயர் அதிகாரிகள், 16 நட்பு நாடுகளை சேர்ந்த 24 பார்வையாளர்கள், தமிழக கடலோர காவல் படை அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/08/29/large/857509.jpgதமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு. தமிழகப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் ஆக. 29, 30, 31, செப்.1ஆகிய நாட்களில் தமிழகம், புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/08/29/large/856956.jpgமுதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது: ஆறுமுகசாமி அறிக்கை குறித்து ஆலோசனை

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில், ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்கான அவசரச் சட்டம், ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை உள்ளிட்டவை குறித்து விவாதித்து முடிவு எடுக்கப்படுகிறது.

தமிழக அமைச்சரவைக் கூட்டம், இன்று மாலை 6 மணிக்கு தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. இதில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்து முடிவெடுக்கப்படுகிறது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Saturday, August 27, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/08/28/large/855415.jpgநெல்லை - தாம்பரம் சிறப்பு ரயில் நேரம் மாற்றம்

சென்னை: திருநெல்வேலி - தாம்பரம் இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயிலின் நேரம் குறிப்பிட்ட நிறுத்தங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இரவு 7.20 மணிக்கு புறப்படும்

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/08/28/large/855416.jpgசாலையோரம் தள்ளுவண்டி கடை நடத்த மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை - அரசாணை வெளியீடு

சென்னை: சாலையோரங்களில் தள்ளுவண்டி கடை நடத்த மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, தமிழக அரசு வெளியிட்ட அரசாணை:

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/08/28/large/854996.jpgதமிழகம் மீது சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது - தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் விரைவில் வானிலை செயலி

சென்னை: தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் வானிலை செயலி உருவாக்கப்படும் என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் ஜெனரல் எம்.மொஹாபாத்ரா தெரிவித்துள்ளார்.

சென்னை துறைமுக அலுவலக வளாகத்தில், சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் நவீன ரேடார்கடந்த 2012-ம் ஆண்டு நிறுவப்பட்டது. 2018-ம் ஆண்டு ரேடாரில் பழுது ஏற்பட்டது. தற்போது பழுது நீக்கப்பட்டுள்ளது. புனரமைக்கப்பட்ட ரேடார் சேவை தொடக்க விழா சென்னை துறைமுகத்தில் நேற்று நடைபெற்றது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/08/28/large/854997.jpgநாடு முழுவதும் கரோனா தடுப்பூசி செயல்பாடுகளில் தமிழகம் 7-ம் இடம் - பூஸ்டர் தவணை செலுத்துவதில் பின்தங்கியது

சென்னை: இந்தியாவில் கரோனா தடுப்பூசி செலுத்துவதில் தமிழகம் 7-ம் இடம்பிடித்துள்ளது. இருப்பினும் பூஸ்டர் தவணை தடுப்பூசி செலுத்துவதில் பின்தங்கியுள்ளது.

இந்தியாவில் 12 வயது முதல் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. சுகாதாரம், முன்களப் பணியாளர்கள் மற்றும் 2 தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதங்கள் நிறைவடைந்த 60 வயதைக் கடந்தவர்களுக்கு பூஸ்டர் தவணை தடுப்பூசி அரசு மையங்களில் இலவசமாக போடப்படுகிறது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/08/28/large/854987.jpgஆறுமுகசாமி ஆணைய அறிக்கை சமர்ப்பிப்பு - நாளை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் அறிக்கையை முன்வைக்க முதல்வர் உத்தரவு

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான 608 பக்கங்கள் கொண்ட விசாரணை அறிக்கையை, முதல்வர் ஸ்டாலினிடம் விசாரணை ஆணைய நீதிபதி ஆறுமுகசாமி சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று சமர்ப்பித்தார். நாளை (ஆக. 29) நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில், அந்த அறிக்கையை முன்வைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2016 டிசம்பர் 5-ம் தேதி அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா உயிரிழந்தார். பின்னர், சசிகலா, பழனிசாமி ஆகியோருக்கு எதிராகக் குரல் கொடுத்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், இது தொடர்பாக விசாரணை நடத்த ஆணையம் அமைக்க வேண்டும் என்றும் 2017-ல் வலியுறுத்தினார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Friday, August 26, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/08/27/large/854103.jpgதமிழக அமைச்சரவை கூட்டம் - ஆக.29-ம் தேதிக்கு மாற்றம்

சென்னை: ஆக.30-ம் தேதி நடைபெறுவதாக இருந்த தமிழக அமைச்சரவைக் கூட்டம், ஒருநாள் முன்னதாக 29-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

தமிழகத்துக்கு புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை தொழில்துறை மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறைகள் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், பல்வேறு நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்காக அரசிடம் விண்ணப்பித்துள்ளன. இந்த நிறுவனங்களுக்கு அனுமதியும் சலுகைகளும் வழங்குவது குறித்து முடிவு எடுப்பதற்காக தமிழக அமைச்சரவைக் கூட்டம், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆக. 30-ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/08/27/large/854107.jpgதமிழகத்தில் அடுத்த 4 நாட்கள் பரவலான மழை வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகப் பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, 27, 28, 29, 30 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக் கூடும்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/08/27/large/853679.jpgபரந்தூர் புதிய விமான நிலையம் | கையகப்படுத்தும் நிலத்துக்கு சந்தை மதிப்பில் 3.5 மடங்கு அதிக தொகை - அமைச்சர்கள் தகவல்

சென்னை: பரந்தூரில் புதிய விமான நிலையத்துக்காக கையகப்படுத்தப்படும் நிலத்துக்கு சந்தை மதிப்பில் 3.5 மடங்கு அதிக தொகை வழங்கப்படும் என்று அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பரசன் ஆகியோர் தெரிவித்துள்ளனர். மேலும், சுற்றுவட்டாரப் பகுதியில் இலவச நிலம், அதில் வீடு கட்ட பணம், குடும்பத்தில் தகுதியானவருக்கு அரசு சார்பில் வேலை வழங்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் சென்னையின் 2-வது விமான நிலையம் அமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், புதிய விமான நிலையத்துக்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் குறித்து, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் நேற்று விளக்கினர். அப்போது அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது:

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/08/26/large/853278.jpgதருமபுரி ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி.

தருமபுரி: தருமபுரியில் இன்று (வெள்ளி) நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தின்போது, ‘என் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கவில்லை என்றால் மாவட்ட ஆட்சியர் மீதுதான் நடவடிக்கை எடுப்பேன்’ என்று கூறி பாமர விவசாயி ஒருவர் அனைவரையும் சிரிப்பில் ஆழ்த்தினார்.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கட்டிட கூட்டரங்கில் இன்று (வெள்ளி) மாவட்ட விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீர் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தலைமை வகித்தார். கூட்டத்தில், விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள், அரசின் பல்வேறு துறை அதிகாரிகள், அலுவலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கியதும் விவசாயிகள் பலரும் பல்வேறு கோரிக்கைகளை ஆட்சியரின் கவனத்துக்கு தெரிவித்தனர். கோரிக்கைகளின் தன்மைக்கு ஏற்ப ஆட்சியர் பதிலளித்து வந்தார். சில கோரிக்கைகள் குறித்து பதில் தெரிவிக்குமாறு தொடர்புடைய துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/08/26/large/853277.jpg‘‘முழுமையான பார்வை பெற்ற நாடாக இந்தியா உருவாக வேண்டும்’’ - ஆளுநர் தமிழிசை

புதுச்சேரி: 37வது கண் தான வழிப்புணர்வு விழாவையொட்டி புதுச்சேரி தவளக்குப்பத்தில் உள்ள கண் மருத்துவமணையில் கண் தான விழிப்புணர்வு முகாம் இன்று மாலை நடைபெற்றது. துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் முகாமை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் கண்தானம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்கள், தன்னார்வலர்கள், தன்னார்வ அமைப்புகள் ஆகியோருக்கு நினைவுப் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. கண் தானம் குறித்த குறும்படமும் திரையிடப்பட்டது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/08/26/large/853276.jpg‘‘எனக்கு துரோகம் செய்தால் நான் பொறுத்துக் கொள்ள வேண்டுமா?’’ - வைரல் ஆடியோவில் ஆறுக்குட்டி

கோவை: துரோகம் செய்துவிட்டதாக திமுகவில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ ஆறுக்குட்டியிடம் அதிமுக உறுப்பினர் வாக்குவாதம் செய்த ஆடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.

கோவை விளாங்குறிச்சியைச் சேர்ந்தவர் ஆறுக்குட்டி. 2011-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை அதிமுக எம்.எல்.ஏவாக இருந்தார். சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு தரப்படவில்லை. இந்நிலையில் கட்சி நடவடிக்கைகளில் ஈடுபடாமல் சில காலம் அமைதியாக இருந்த முன்னாள் எம்.எல்.ஏ ஆறுக்குட்டி கடந்த 24-ம் தேதி பொள்ளாச்சியில் நடந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இந்நிலையில் முன்னாள் எம்.எல்.ஏ ஆறுக்குட்டியுடன் அதிமுக உறுப்பினர் ஒருவர் செல்போனில் பேசிய ஆடியோ இன்று (ஆக.26) மாலை வெளியானது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Thursday, August 25, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/08/26/large/852192.jpgதமிழகத்தில் 15 மாதங்களில் 3 லட்சம் வேலைவாய்ப்பு உருவாக்க நடவடிக்கை - திருப்பூர் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

திருப்பூர்: திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற 15 மாதங்களில் ரூ.2.20 லட்சம் கோடிக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது. 3 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

திருப்பூர் திருமுருகன்பூண்டியில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் ‘தோள் கொடுப்போம் தொழில்களுக்கு’ என்ற தலைப்பிலான மண்டல மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், ரூ.167.58 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டங்களை தொடங்கி வைத்து, சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான மானியம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் முதல்வர் பேசியதாவது:

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/08/26/large/852191.jpgஅதிமுக அலுவலக மோதல் விவகாரம் - ஓபிஎஸ் மீது 7 பிரிவுகளின்கீழ் வழக்கு

சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த மோதலின்போது ஆவணங்களை எடுத்துச் சென்றதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அளித்த புகாரின்பேரில், ஓ.பன்னீர்செல்வம், அவரது ஆதரவாளர்கள் மீது 7 பிரிவுகளின்கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அதிமுகவில் ஒற்றைத் தலைமையை ஏற்படுத்தும் நோக்கில் அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம், கடந்த மாதம் 11-ம் தேதி வானகரத்தில் நடைபெற்றது. அந்த நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வந்தனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/08/26/large/852190.jpgதமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக 26-ம் தேதி (இன்று) நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தென்காசி, திருப்பத்தூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 27-ம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், அரியலூர், பெரம்பலூர், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/08/25/large/851709.jpgமதுரை | மாணவி வங்கி கணக்கில் ரூ.6 ஆயிரம் மாயம் - ரூ.26 ஆயிரமாக வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை: மதுரை மாணவி வங்கி கணக்கில் பணம் எடுக்காமலேயே ரூ.6 ஆயிரம் மாயமான நிலையில் மாணவிக்கு ரூ.26 ஆயிரம் வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை ஹார்விப்பட்டியைச் சேர்ந்தவர் இந்துமதி. இவர் 2012-ல் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார். இவர் வைத்திருந்து ஏடிஎம் கார்டு சரியாக செயல்படாததால், பணம் எடுக்க 22.5.2012-ல் வங்கிக்கு சென்றார். பணம் எடுத்து விட்டு வங்கி கணக்கு புத்தகத்தில் பதிவு செய்தார். அப்போது 2.2.2012-ல் ஏடிஎம் மூலமாக ரூ.6000 பணம் எடுத்ததாக பதிவு செய்யப்பட்டது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/08/25/large/851706.jpgகல்லூரி மாணவர்கள் இடையே ஆயுத கலாசாரத்தை அனுமதிக்க முடியாது: ரயில்வே காவல்துறை கூடுதல் டிஜிபி வனிதா

மதுரை: கல்லூரி மாணவர்கள் இடையே ஆயுதக் கலாசாரத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என டிஜிபி வனிதா எச்சரித்துள்ளார்.

மதுரை ரயில்வே காவல் உட்கோட்டத்தில் வேலை பளு காரணமாக காவலர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை போக்குதல், பொதுமக்களை எவ்வாறு அணுகுவது உள்ளிட்ட உளவியல் சார்ந்த ஆலோசனை வழங்கும் கலந்துரையாடல் மதுரை ரயில்வே கோட்ட அலுவலக பகுதியில் வியாழக்கிழமை நடந்தது. ரயில்வே இருப்புப் பாதை காவல்துறை கூடுதல் இயக்குநர் வனிதா தலைமை வகித்தார். ரயில்வே காவலர்களுக்கு மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். மதுரை உட்கோட்டத்தைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட காவலர்கள், ரயில்வே பாதுகாப்பு படையினர் இதில் பங்கேற்றனர். உளவியல் மருத்துவர் ஸ்ரீதேவி கண்ணன், ரயில்வே ஆய்வாளர் குருசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Wednesday, August 24, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/08/25/large/850526.jpgவிஜயகாந்தின் விருப்பத்தை நிறைவேற்றவே நிகழ்ச்சிகளுக்கு அவரை அழைத்து வருகிறோம் - தேமுதிக பொருளாளர் பிரேமலதா விளக்கம்

சென்னை: மக்களை சந்திக்க வேண்டும் என்ற விஜயகாந்தின் விருப்பத்தை நிறைவேற்றவே, அவரை கட்சி நிகழ்ச்சிகளுக்கு அழைத்து வருகிறோம் என அவரது மனைவியும், தேமுதிக பொருளாளருமான பிரேமலதா விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவில், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ரத்த தானம் செய்தனர். எம்.ஜி.ஆர். காதுகேளாதோர் பள்ளிக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவியை பிரேமலதா வழங்கினார். அதேபோல 70 ஆட்டோ ஓட்டுநர்கள், 70 மூத்த மன்ற நிர்வாகிகளுக்கு நிதி உதவி வழங்கப்பட்டது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/08/25/large/850527.jpgதமிழகம் முழுவதும் 1.25 லட்சம் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை - இந்து முன்னணி அமைப்பு தகவல்

சென்னை: விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் 1.25 லட்சம் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து, வழிபாடு நடத்தப்படும் என்று இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர் நா.முருகானந்தம் கூறினார்.

சென்னையில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வரும் 31-ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாகக் கொண்டாட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதையொட்டி, தமிழகம் முழுவதும் 1.25 லட்சம் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து, வழிபாடு நடத்த உள்ளோம். சென்னை நகரில் மட்டும் 5,501 விநாயகர் சிலைகள் வைக்கப்படும்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/08/25/large/850516.jpgதொழிற்சங்கங்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு - பஸ் ஊழியருக்கு 5% ஊதிய உயர்வு; ஒப்பந்த காலம் 4 ஆண்டுகளாக மாற்றம்

சென்னை: அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான 14-வது ஊதிய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அதன்படி, ஊழியர்களுக்கு 5 சதவீத ஊதிய உயர்வு அளிக்கப்படும் என்றும், ஒப்பந்த காலம் 4 ஆண்டுகளாக மாற்றப்படுவதாகவும் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழகங்களில் சுமார் 1.20 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தம், 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை போடப்பட்டு வந்தது. 13-வது ஊதிய ஒப்பந்தம், கடந்த 2019-ம் ஆண்டு ஆக.31-ம் தேதியுடன் காலாவதியானது. பல்வேறு காரணங்களால் 14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தாமதமாகி வந்தது. அதன்பின் தொழிற்சங்கங்களுடன் அவ்வப்போது பேச்சுவார்த்தை நடந்து வந்தது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/08/25/large/849990.jpgகோவை வெள்ளலூர் பேருந்து நிலையத்தை இடமாற்ற முற்பட்டால் தொடர் உண்ணாவிரதம் - எடப்பாடி பழனிசாமி

கோவை: கோவை வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை இடம் மாற்ற செய்ய முற்பட்டால் கோவை மாநகராட்சியில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று எதிர்கட்சித் தலைவர் கே.பழனிசாமி தமிழக அரசை எச்சரித்துள்ளார்.

கோவையில் அதிமுக பிரமுகரின் இல்ல நிகழ்வில் கலந்துகொண்ட எதிர்கட்சித் தலைவர் கே.பழனிசாமி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், "கோவை மாநகர மக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று கடந்த ஆட்சியில் வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்துக்கான பணிகள் தொடங்கின. இந்நிலையில், திமுக குடும்பத்துக்கு நெருக்கமான ரியல் எஸ்டேட் அதிபர், எல் அண்ட் டி பைபாஸ் சாலையில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலத்தை வாங்கி குவித்துள்ளார். ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை அந்த பகுதிக்கு மாற்றினால், நிலத்தின் மதிப்பு உயரும் என்பதால் பேருந்து நிலையத்தை இடம்மாற்ற முடிவு செய்துள்ளனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/08/25/large/849989.jpgமுல்லைப்பெரியாறு லோயர் கேம்ப் பகுதியிலிருந்து மதுரைக்கு குடிநீர் கொண்டு வரும் திட்டத்தை ரத்து செய்யக்கோரிய மனு தள்ளுபடி

மதுரை: லோயர் கேம்ப் பகுதியிலிருந்து மதுரைக்கு குடிநீர் கொண்டு வரும் திட்டத்தை ரத்து செய்யக்கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்த சதீஷ்பாபு என்பவர் லோயர் கேம்ப் பகுதியிலிருந்து மதுரைக்கு குடிநீர் கொண்டு வரும் திட்டத்தை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், "முல்லைப்பெரியாறு லோயர் கேம்ப் பகுதியிலிருந்து பெரிய குழாய்கள் மூலம் மதுரைக்கு குடிநீர் கொண்டு வரும் திட்டம் ரூ.1,020 கோடியில் செயல்படுத்தப்படுகிறது. இது தொடர்பாக 2018-ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த திட்டத்தை செயல்படுத்தினால் தேனி மாவட்ட விவசாயிகள் பாதிக்கப்படுவர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/08/24/large/849984.jpgமதுரையில் நடக்கும் தேசிய நாட்டின நாய் கண்காட்சியில் சமூக நாய்களையும் சேர்க்க தமிழக அரசுக்கு ஆர்வலர்கள் கோரிக்கை 

மதுரை: மதுரையில் சனிக்கிழமை நடக்க இருக்கும் தேசிய நாட்டின நாய் கண்காட்சியில் சமூக நாய்களையும் இடம்பெற செய்ய கால்நடை பராமரிப்பு துறைக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து சமூக நாய்கள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் க.ப.மாரிகுமார் கூறியதாவது: மதுரை ஆயுதப்படை மைதானத்தில் வரும் 27-ம் தேதி சனிக்கிழமை தேசிய அளவிலான நாட்டின நாய் வளர்ப்பு கருத்தரங்கம் மற்றும் நாட்டின நாய்கள் கண்காட்சி நடக்கவிருக்கிறது. தேனியில் அமைந்துள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், இந்த கண்காட்சியை ஒருங்கிணைத்து இருக்கிறது. அந்நிய நாட்டு நாய்கள் மோகம் நம் மக்களிடம் அதிகரித்துக்கொண்டிருக்கும் இக்காலக்கட்டத்தில், நாட்டின நாய்களுக்கென்று பிரத்யேகமாக கருத்தரங்கமும், கண்காட்சியும் ஒருங்கிணைக்கப்படுவது வரவேற்கத்தக்கது மற்றும் பாராட்டுதலுக்குரியது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Tuesday, August 23, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/08/24/large/848836.jpgகாலணி, தோல் பொருட்களுக்கு புதிய கொள்கை வெளியீடு - ரூ.2,250 கோடி முதலீட்டு திட்டங்களுக்கு ஒப்பந்தம்

சென்னை: சென்னையில் நேற்று காலணி, தோல் பொருட்களுக்கான புதிய கொள்கையை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், காலணித் தொழிலுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று உறுதியளித்தார்.

தமிழக தொழில் துறை சார்பில் காலணிகள் மற்றும் தோல் துறை மாநாடு சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில், முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.2,250 கோடி முதலீட்டில் 5 முதலீட்டுத் திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/08/24/large/848835.jpgபரிதா, கே.எச். குழுமத்துக்குச் சொந்தமான தோல் தொழிற்சாலை உள்ளிட்ட 62 இடங்களில் வருமான வரித் துறை சோதனை

சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த பரிதா மற்றும் கே.எச். குழும தோல் தொழிற்சாலைகளில் வருமான வரித் துறையினர் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பஜார் நாகேஸ்வரன் கோயில் பகுதியில் மக்கா ரபீக் அகமது என்பவருக்குச் சொந்தமான, பரிதா குழும தோல் பதனிடும் தொழிற்சாலைகள், தோல் பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் உள்ளன.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/08/24/large/848834.jpgஅதிமுக பொதுக்குழு விவகாரம் - இபிஎஸ் மேல்முறையீட்டு மனு நாளை இறுதி விசாரணை

சென்னை: அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து முன்னாள் முதல்வர் பழனிசாமி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கின் இறுதி விசாரணையை நாளை (ஆக. 25) தள்ளிவைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னையில் கடந்த ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லாது என்று அறிவிக்கக் கோரி, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் அம்மன் பி.வைரமுத்து ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்குகளைத் தொடர்ந்தனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்