Friday, December 31, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/01/01/large/753040.jpgநீட் தேர்வு விவகாரத்தில் மக்களை ஏமாற்றுகின்றனர்; திமுகவின் தொண்டர் படையாக காவல் துறை மாறிவிட்டது: ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் அதிமுக புகார்

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான காவல் துறை திமுகவின்தொண்டர் படையாக மாறிவிட்டதாக ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் அதிமுக சட்டக்குழு புகார் அளித்துள்ளது.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை, அதிமுக சட்டப்பிரிவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், தளவாய் சுந்தரம், மனோஜ் பாண்டியன், முன்னாள் எம்எல்ஏக்கள் இன்பதுரை, பாபு முருகவேல் உள்ளிட்டோர் சந்தித்து தமிழக சட்டம் ஒழுங்கு பிரச்சினை மற்றும் அதிமுகவினர் மீதான வழக்குகள் குறித்து மனு அளித்தனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/01/01/large/752936.jpg19-வது சர்வதேச திரைப்பட விழா தொடக்கம்: 53 நாடுகளின் 100 படங்கள் திரையிடப்படுகின்றன

சென்னையில் 19-வது சர்வதேச திரைப்பட விழா தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவை 19 ஆண்டுகளாக ஒருங்கிணைத்து வரும் இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் (Indo Cine Appreciation Foundation) திரைப்படச் சங்கத்தின் பொதுச் செயலாளரும் திரைப்பட விழா இயக்குநருமான இ.தங்கராஜ் கூறியதாவது:

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/01/01/large/752955.jpgசென்னையில் அடுத்த மழை காலத்துக்குள் பில்லர் பெட்டிகள் ஒரு மீட்டர் உயர்த்தப்படும்: மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

அடுத்த மழைக்காலத்துக்குள், சென்னை மாநகராட்சியில் உள்ள பில்லர் பெட்டிகள் ஒரு மீட்டர் உயர்த்தப்படும் என்று மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

சென்னையில் நேற்று முன்தினம் கனமழை பெய்தபோது, மின் தடைபுகார்கள், அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து,மின்வாரிய தலைமை அலுவலகத்தில் செயல்படும் மின்னகம் என்ற நுகர்வோர் சேவை மையத்தில், மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு செய்தார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/01/01/large/753065.jpgதமிழக சுற்றுலாத் தலங்களை விவரிக்கும் கண்கவர் காலண்டர்: பொதுமக்களுக்கும் விற்பனை செய்ய கோரிக்கை

தமிழகத்தின் பிரசித்திப் பெற்ற சுற்றுலாத் தலங்களைவிவரிக்கும் விதமாகக் கண்கவர் புகைப்படங்களுடன் புதிய காலண்டரை சுற்றுலாத் துறை வெளியிட்டுள்ளது.

உலகின் பழமையான கலாச்சாரம், பாரம்பரியம், நினைவுச் சின்னங்கள், சிறப்பான கோயில் கட்டிடக்கலை, நிலப்பரப்புகளும், வனங்களும் கொண்டுள்ளது தமிழகம். ஆனாலும், தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்பதமிழக சுற்றுலாத் துறையின் செயல்பாடுகள் பொதுமக்களிடம் முறையாகச் சென்றடையவில்லை என்ற குற்றச்சாட்டு நீண்டநாட்களாகவே இருந்து வருகிறது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/01/01/large/753053.jpgசென்னை, புறநகர், டெல்டா உட்பட 10 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, டெல்டா மாவட்டங்கள் உட்பட 10 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/01/01/large/753051.jpgதமிழகத்தில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளை தொடங்கி வைக்கிறார்: பிரதமர் மோடி ஜன.12-ல் மதுரை வருகை- பாஜக நடத்தும் பொங்கல் விழாவில் பங்கேற்கிறார்

ஜனவரி 12-ம் தேதி தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி, மதுரையில் பாஜக நடத்தும் பொங்கல் விழாவில் பங்கேற்க இருப்பதாக தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Thursday, December 30, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/12/31/large/752690.jpgசென்னை திடீர் மழையை முன்கூட்டியே கணிக்காதது ஏன்?- வானிலை ஆய்வு மைய இயக்குநர் விளக்கம்

சென்னை: சென்னையில் கடந்த ஒரு மாதமாக மழை ஓய்ந்திருந்த நிலையில் நேற்று (டிச.30) எதிர்பாராத வகையில் பெய்த திடீர் கனமழையால் மாநகரின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் இது குறித்து எவ்வித முன்னறிவிப்பும் வெளியிடாதது மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/12/31/large/752643.jpgஅரசின் நேரடி நெல் கொள்முதல் நிலைய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

கொள்முதல் நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதியம் உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வரவேற்றார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/12/31/large/752649.jpgஜிஎஸ்டி நிலுவை, திட்ட நிதி, உள்ளாட்சி மானியம் உட்பட தமிழகத்துக்கு மத்திய அரசு ரூ.40,803 கோடி விடுவிக்க வேண்டும்: டெல்லியில் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்த கூட்டத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வேண்டுகோள்

தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவை, இதரதிட்டங்களுக்கான நிலுவை, உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானியம்உள்ளிட்ட ரூ.40,803 கோடியை விரைவில் விடுவிக்க வேண்டும். ஜிஎஸ்டி இழப்பீட்டை வரும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்று டெல்லியில் நடந்த கூட்டத்தில் மத்திய அரசுக்கு தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கோரிக்கை விடுத்தார்.

மத்திய அரசின் 2022-23 ஆண்டுக்கான பட்ஜெட் வரும் பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதையொட்டி, பட்ஜெட்டுக்கு முந்தைய மாநில அரசுகளின் நிதியமைச்சர்கள் உடனான ஆலோசனைக் கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் டெல்லியில் நேற்று நடந்தது. இதில், தமிழகம் சார்பில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், நிதித் துறை செயலர் நா.முருகானந்தம் பங்கேற்றனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/12/31/large/752688.jpgசென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

சென்னை: சென்னையில் கடந்த ஒரு மாதமாக மழை ஓய்ந்திருந்த நிலையில் நேற்று எதிர்பாராத வகையில் பெய்த திடீர் கனமழையால் மாநகரின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மவட்டங்களில் இன்று கல்வி நிறுவனங்கள், அத்தியாவசியப் பணிகள் தவிர்த்த அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://ift.tt/3pH2BCf ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் தலைமைச் செயலராக அந்தஸ்து வழங்கி உத்தரவு

தமிழக நிதித்துறை செயலர் என்.முருகானந்தம் உள்ளிட்ட 1991-ம்ஆண்டு பிரிவை சேர்ந்த 7 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் தலைமைச் செயலர் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

தமிழக அரசில் பணியாற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அவர்களது பணிமூப்பு, தகுதி மற்றும் காலியிட அடிப்படையில் செயலர் நிலையில் இருந்து முதன்மை செயலர், அடுத்ததாக கூடுதல் தலைமைச் செயலர் என அந்தஸ்து உயர்த்தப்படுகிறது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/12/31/large/752556.jpgசென்னை சுதர்சன மையத்தில் 200-வது அசித்ர பாராயணம்

சென்னை தியாகராய நகர், ஹபிபுல்லா சாலையில் உள்ள சுதர்சன மையத்தில், 200-வது அசித்ர பாராயணம் நேற்று நடைபெற்றது.

சென்னை தியாகராய நகர்,ஹபிபுல்லா சாலையில் உள்ள சுதர்சன மையத்தில், வேத வித்வான் மான் குறிச்சி, கிடாம்பி, ஆத்ரேயலட்சுமி நரசிம்மன் சுவாமியின் சீரிய முயற்சியால், வேத வித்யார்த்திகள் உருவாகி வருகின்றனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/12/31/large/752559.jpgவடசென்னை அனல் மின் நிலைய சாம்பல் கழிவுகளால் திருவொற்றியூர், பொன்னேரியில் நீர், நிலம், காற்று மாசுபட்டுள்ளது: தேசிய பசுமை தீர்ப்பாய வல்லுநர் குழுவிடம் பொதுமக்கள் குமுறல்

வடசென்னை அனல் மின் நிலையசாம்பல் கழிவுகளால் திருவொற்றியூர், பொன்னேரி வட்டப்பகுதிகளில் நீர், நிலம், காற்று மாசுபட்டுள்ளது என்று தேசிய பசுமை தீர்ப்பாய வல்லுநர் குழுவினரிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர்அருகே அத்திப்பட்டு புதுநகரில் உள்ள வடசென்னை அனல் மின்நிலையத்தின் சாம்பல் கழிவுகளால் பக்கிங்ஹாம் கால்வாய், கொசஸ்தலை ஆறு உள்ளடக்கிய கழிமுகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/12/31/large/752567.jpgமாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள்?

கரோனா பரவலால் மூடப்பட்டிருந்த பள்ளிகள், நவம்பர் 1-ம் தேதி திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

தற்போது மாணவர்களுக்கு அரையாண்டு விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும்போது முழுநேர வகுப்புகள் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/12/31/large/752574.jpgசென்னையில் இன்று நள்ளிரவு 12 முதல் காலை 5 மணி வரை வாகனப் போக்குவரத்துக்கு அனுமதி இல்லை

சென்னையில் ஆங்கிலப் புத்தாண்டைக் கொண்டாட காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். இது தொடர்பான அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

இன்று (டிசம்பர் 31) இரவு சென்னையில் வெளியிடங்களில் பொதுமக்கள் ஒன்றுகூடக் கூடாது. ரிசார்ட்டுகள், பண்ணை வீடுகள், மாநாட்டு அரங்குகள், கிளப்புகள் போன்றவற்றில் வர்த்தக ரீதியான நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது. ஹோட்டல்கள் மற்றும் தங்கும் வசதியுடைய உணவகங்கள் இரவு 11.00 மணி வரை செயல்படலாம். அதேசமயம், ஹோட்டல், கேளிக்கை விடுதி, பண்ணை வீடு உள்ளிட்ட இடங்களில் கேளிக்கை, நடனம், இசை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி இல்லை.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/12/31/large/752568.jpgஐஐடி மாணவி தற்கொலை விவகாரம்: சட்ட ரீதியாக தொடர்ந்து போராடுவோம் என தந்தை உறுதி

சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கில், சட்ட ரீதியாக தொடர்ந்து போராடுவோம் என மாணவியின் தந்தை கூறினார்.

கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்தவர் பாத்திமா லத்தீப் (20). சென்னை கிண்டி ஐஐடி வளாகத்தில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி, ஐஐடி-ல் படித்து வந்தார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://ift.tt/3ECkvKl விரைவு ரயில்கள் சேவையில் மாற்றம்

தண்டவாள பராமரிப்புப் பணி நடைபெற உள்ளதால், வைகை உட்பட 5 விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை எழும்பூர்-விழுப்புரம் தடத்திலும், சென்னை சென்ட்ரல்-கூடூர் தடத்திலும் தண்டவாள பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதனால், சில விரைவு ரயில்கள் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/12/31/large/752569.jpgநந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் ஜன. 6 முதல் 45-வது சென்னை புத்தகக் காட்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார்

சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறும் 45-வது சென்னை புத்தகக் காட்சியை, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜனவரி 6-ம் தேதி தொடங்கிவைக்கிறார்.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) நடத்தும் 45-வது சென்னை புத்தகக் காட்சி ஜனவரி 6 முதல் 23-ம் தேதி வரை நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் நடைபெற உள்ளது. இதை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜனவரி 6-ம் தேதி தொடங்கிவைக்கிறார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/12/31/large/752571.jpgசென்னை, செங்கை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் கரோனாவை தடுக்க கடும் கட்டுப்பாடுகள்: தமிழக அரசுக்கு மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தல்

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கரோனா பரவலைத் தடுக்க கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை, தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.

சென்னையில் கடந்த ஒரு வாரமாக கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கரோனாவைக் கட்டுப்படுத்த வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ரிப்பன் மாளிகையில் நேற்று நடைபெற்றது. இதில், சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், மாநகராட்சி துணை ஆணையர்கள் எஸ்.மனிஷ், விஷுமகாஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/12/31/large/752669.jpgஆங்கில புத்தாண்டையொட்டி இன்று நள்ளிரவு 12 மணி வரை கோயில்கள் திறந்திருக்க அனுமதி

ஆங்கில புத்தாண்டையொட்டி இன்று நள்ளிரவு 12 மணிவரை கோயில்களை திறந்து வைக்க அரசு அனுமதி அளித்துள்ளது என்று அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.

காஞ்சிபுரத்தில் உள்ள காமாட்சி அம்மன், ஏகாம்பரநாதர், உலகளந்த பெருமாள், குமரகோட்டம் சுப்பிரமணியர் ஆகிய கோயில்களில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று ஆய்வு மேற்கொண்டார். பஞ்சுப்பேட்டையில் உள்ள ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான யாத்ரி நிவாஸ் தங்கும் விடுதியையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Wednesday, December 29, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/12/30/large/752243.jpgகடலூரில் பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட தடை: எல்லை மீறும் இளைஞர்களுக்கு எச்சரிக்கை

கடலூர் மாவட்டத்தில் பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். சக்திகணேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/12/30/large/752239.jpgமது பாட்டில்களில் ஒட்டப்பட்டிருப்பது உண்மையான ஹேலோகிராமா? - புதுச்சேரியில் கலால் துறையினர் ஆய்வு

உண்மையான ஹேலோகிராம் மதுபாட்டில்களில் ஒட்டப்பட்டுள்ளதா என்று புதுச்சேரி மதுபான கிடங்குகள், மதுபான ஆலைகள், மதுபான கடைகளில் கலால் துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

புதுச்சேரியில் 350க்கும் மேற்பட்ட சில்லரை மற்றும் மொத்த விற்பனை மதுபான கடைகள் உள்ளன.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/12/30/large/752237.jpgமனைகள், வீடுகளுக்கு துல்லிய நில வரைபடம் தயாரிக்க ஆளில்லா விமானம் மூலம் புதுச்சேரியில் டிஜிட்டல் சர்வே

மத்திய அரசின் ‘சமித்துவா’ திட்டத்தின் கீழ், ஆளில்லா விமானம் மூலம் டிஜிட்டல் சர்வே முறையில் மனைகள், வீடுகளுக்கு துல்லிய நில வரைப்படம் தயாரிக்கும் பணி புதுச்சேரியில் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சொத்து அடையாள அட்டை தரும் ஆயத்த பணிகளும் தொடங்கப்பட உள்ளது.

மத்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் ‘சமித்துவா’ என்கிற திட்டத்தை அமல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் கிராமப்புற பகுதிகள் வான்வழியே சர்வே செய்யப்பட்டு மனைகள், வீடுகளுக்கு துல்லியமான வரைப்படம் பெறப்பட உள்ளது. இதுமட்டுமின்றி சொத்து அடையாள அட்டையும் வழங்கப்பட உள்ளது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/12/30/large/752092.jpgஅய்யம்பாளையத்தில் 6 சமணர் படுக்கைகள் கண்டெடுப்பு

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே உள்ள அய்யம்பாளையம் கிராமத்தில் 6 சமணர் படுக்கைகள் கண்டெடுக் கப்பட்டுள்ளதாக சம்புவராயர் ஆய்வுமைய அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அறக்கட்டளை செயலாளர் முனைவர் அ. அமுல் ராஜ், வரலாற்று ஆய்வாளர் ஆர். விஜயன் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பெரிய அய்யம்பாளையம் கிராமத்தில் மலை மீது ஊமைக்கு வாய் கொடுத்த உத்தமராயர் கோயிலுக்கு தெற்கு திசையில் இரு பாறைகளுக்கு நடுவே குகை உள்ளது என, அந்த கிராமத்தைச் சேர்ந்தவரும் சென்னை, பெரும்பாக்கம் அரசு கல்லூரி தமிழ்த்துறை தலைவரான கவிஞர் இரா.பச்சையப்பன் தெரிவித்தார். மேலும் அவர், அக்குகையை சாமியார் குகை என அழைக்கப் படுவதாகவும், அதன் உள்ளே சென்றால் கோடையிலும் குளிர்ச்சியாக இருக்கும் என தெரிவித்தார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/12/30/large/752089.jpgவந்தவாசி அருகே நம்பேடு ஊராட்சியில் கடந்த 2012 முதல் 2020 வரை 100 நாள் வேலை திட்டத்தில் ரூ.31 லட்சம் முறைகேடு: ஊராட்சி செயலாளர்கள், தலைவர் உட்பட 11 பேர் மீது வழக்கு

வந்தவாசி அருகே நம்பேடு கிராம ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் பணிகள் வழங்கியதில் ரூ.31 லட்சம் அளவுக்கு நடைபெற்றுள்ள முறைகேடு புகாரில் ஊராட்சி செயலாளர்கள், ஊராட்சி மன்றத் தலைவர் உட்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் துறை யினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகேயுள்ள நம்பேடு கிராம ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் செய் துள்ளதாக அதே கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார். அவர் அளித்த புகாரின்பேரில், திருவண்ணாமலை மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல்துறையினர் கடந்த 2012 முதல் 2020 வரை நடைபெற்ற பணிகள், சம்பளம் வழங்கியது மற்றும் பயனாளிகள் குறித்த விவரங்களை ஆய்வு செய்தனர். இதில், அரசின் நிதியை ரூ.31 லட்சத்து 21 ஆயிரத்து 207 அளவுக்கு முறைகேடுகள் செய்திருப்பது உறுதி செய்யப் பட்டுள்ளது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/12/30/large/752258.jpgதிருவொற்றியூரில் கட்டிட இடிபாடுகளை அகற்றும் பணி தீவிரம்- அனைத்து வீடுகளையும் இடிக்க கோரிக்கை: இடத்தின் உறுதி தன்மையை ஆராயும் அண்ணா பல்கலைக்கழக வல்லுநர்கள்

திருவொற்றியூரில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு பகுதியில் இடிந்த வீடுகளை அகற்றும் பணி நேற்று தொடங்கியது. அனைத்து குடியிருப்புகளையும் இடித்துவிட்டு, அனைவருக்கும் புதிய வீடுகள் ஒதுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவொற்றியூர் கிராமத் தெரு பகுதியில் 336 வீடுகள் இடம்பெற்ற நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு வளாகம் உள்ளது. இதில் ஒரு குடியிருப்பில் இருந்த 28 வீடுகள் கடந்த 27-ம் தேதி திடீரென இடிந்தன. முன்கூட்டியே பொதுமக்கள் வெளியேற்றப்பட்டதால் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/12/30/large/752259.jpgகொளத்தூரில் வீடு, வீடாகச் சென்று திமுக உறுப்பினர் சேர்க்கும் பணியில் ஈடுபட்ட முதல்வர்

கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் வீடு, வீடாகச் சென்று, திமுக உறுப்பினர் சேர்க்கும் பணியில் ஈடுபட்டார்.

கொளத்தூர் எம்எல்ஏ-வான முதல்வர் ஸ்டாலின் நேற்று தனது தொகுதிக்கு உட்பட்ட திரு.வி.க. நகரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/12/30/large/752255.jpgகதைகள் திரைப்படங்களாகும்போது அதிக கவனம் பெறுகின்றன: நூல் வெளியீட்டு விழாவில் ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு கருத்து

கதைகளும், நாவல்களும் திரைப்படங்களாக எடுக்கப்படும்போது அதிக கவனம் பெறுகின்றன என்று நூல் வெளியீட்டு விழாவில் ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு கூறியுள்ளார்.

மறைந்த எழுத்தாளர் தோப்பில் முகமது மீரானின் சிறுகதைகளை ‘மீரான்ஸ் ஸ்டோரீஸ்’ என்ற தலைப்பில் ஓய்வுபெற்ற நீதிபதி பிரபா ஸ்ரீதேவனும் கல்கியின் ‘பார்த்திபன் கனவு’ நாவலை ‘பார்த்திபன்ஸ் ட்ரீம்’ என்ற தலைப்பில் நந்தினி விஜயராகவனும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/12/30/large/752346.jpgநீட் விலக்கு மசோதா ஆளுநரின் பரிசீலனையில் உள்ளது: தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தகவல்

நீட் விலக்கு மசோதா தமிழக ஆளுநரின் பரிசீலனையில் இருப்பதாக, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, கடந்த மே மாதம் திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்தது. இதையடுத்து, நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/12/30/large/752345.jpgபெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவரும் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற விடாமல் தடுப்பது எது?- முதல்வர் ஸ்டாலினுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கேள்வி

பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவரும் திமுகவின் தேர்தல் அறிக்கையை நிறைவேற்றவிடாமல் தடுப்பது எது என்று எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Tuesday, December 28, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/12/29/large/751981.jpgஒமைக்ரான் பரவல், மருத்துவ கட்டமைப்பு குறித்து சென்னையில் மத்திய குழு 2-வது நாளாக ஆய்வு

ஒமைக்ரான் தொற்று பரவல் மற்றும் மருத்துவ கட்டமைப்பு குறித்து சென்னையில் 2-வது நாளாக மத்திய குழுவினர் ஆய்வு நடத்தினர்.

தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் கரோனா வைரஸ் தொற்று பல்வேறு நாடுகளில் பரவியுள்ளது. தமிழகத்தில் 45 பேர் உட்படநாடு முழுவதும் 650-க்கும் மேற்பட்டோர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒமைக்ரான் தொற்று பரவலை தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/12/29/large/751977.jpgகோரிக்கைகளை வலியுறுத்தி ஆளுநர் மாளிகை நோக்கி அமைப்புசாரா தொழிலாளர்கள் பேரணி

சென்னையில் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி செல்ல முயன்ற அமைப்பு சாரா தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

கட்டிடம், மண்பாண்டம், ஓட்டுநர், சலவைத் தொழிலாளர், முடிதிருத்துவோர் மீன் வியாபாரிகள், கைவினை பொருட்கள் விற்பனை செய்வோர். வீட்டுவேலை. கைத்தறி, விசைத்தறி, சிறு கடை வியாபாரிகள், இருளர், நரிக்குறவர், பிற அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு எதிரான சட்டங்களை இயற்றி வரும்மத்திய அரசை கண்டித்தும், நரிக்குறவர்களை பழங்குடியினராக அறிவிக்க வேண்டும், மீனவர் விரோத மசோதாவை திரும்ப பெற வேண்டும், பிரதமர் வீடுகட்டும் திட்டத்தில் நிதி உதவியைரூ.7 லட்சமாக உயர்த்தி தரவேண்டும், நல வாரியங்கள் மூலம் இஎஸ்ஐ மருத்துவ வசதியை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் சென்னை சின்னமலை ராஜீவ் காந்தி சிலை அருகே இருந்துஆளுநர் மாளிகை நோக்கிஅமைப்புசாரா தொழிலாளர்கள் பேரணியாக செல்ல முயன்றனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/12/29/large/751972.jpgதிருச்சியில் ரூ.1,084 கோடியில் நலத்திட்டங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்

திருச்சியில் நாளை (டிச.30) நடைபெறும் விழாவில் பங்கேற்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், ரூ.1,084.69 கோடி மதிப்பில் பல்வேறு பணிகளை தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டி, நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.

திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையிலுள்ள பஞ்சப்பூரில் ரூ.832 கோடி செலவில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம், கனரக சரக்கு முனையம் உள்ளிட்டவை அமைக்கப்பட உள்ளது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/12/29/large/751971.jpgதமிழகத்தில் 60 இடங்களில் பழுதடைந்த குடியிருப்புகளை இடிக்கும் பணி தீவிரம்: ஈரோட்டில் வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி தகவல்

சென்னை திருவொற்றியூரில் வீடுகள் இடிந்து விழுந்த சம்பவத்தையடுத்து, மாநிலம் முழுவதும் பழுதடைந்த வீடுகள் குறித்த ஆய்வு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 60 இடங்களில் பழுதடைந்த நிலையில் உள்ள வீட்டுவசதி வாரியக் குடியிருப்புகளை இடிக்கும் பணி நடந்து வருவதாக வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி நேற்று ஈரோட்டில் தெரிவித்தார்.

சென்னை திருவொற்றியூரில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கட்டப்பட்ட வீடுகளில், பழுதடைந்த நிலையில் இருந்த 28 வீடுகள் நேற்று முன்தினம் இடிந்து விழுந்தன. இந்த சம்பவத்தையடுத்து குடிசைமாற்று வாரியம், வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் கட்டப்பட்ட வீடுகளின் உறுதித் தன்மை குறித்த ஆய்வினை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/12/29/large/751973.jpgமுன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியுடன் தொடர்பில் இருந்ததாக திருப்பத்தூரில் அதிமுக நிர்வாகிகள் 2 பேர் கைது: தனிப்படை போலீஸார் நடவடிக்கை

முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியுடன் தொடர்பில் இருந்ததாக திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 2 அதிமுக நிர்வாகிகளை தனிப்படை போலீஸார் நேற்று கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

அதிமுக ஆட்சி காலத்தில் பால்வளத் துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி, ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி பல பேரிடம் சுமார் ரூ.3 கோடி வரை பண மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில், ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவரை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/12/29/large/752016.jpgஐடி படிவம் தாக்கல் செய்ய டிசம்பர் 31 கடைசி- இதுவரை 4.67 கோடி பேர் ரிட்டன் தாக்கல்

வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் (ஐடிஆர்) செய்வதற்கான கால அவகாசம் நாளை மறுநாளோடு (டிசம்பர் 31) முடிகிறது.

இந்நிலையில் டிசம்பர் 27-ம் தேதிமட்டுமே 15.49 லட்சம் எண்ணிக்கையில் வருமான வரி ரிட்டர்ன் விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மொத்தமாக இதுவரையில் 4.67 கோடிக்கு மேற்பட்ட அளவில் வருமான வரி ரிட்டன் விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/12/29/large/752005.jpgகாவலர்கள் நலனில் கவனம் செலுத்தும் டிஜிபி சைலேந்திரபாபு; கோரிக்கைகள் மீது உடனடி நடவடிக்கை; பலருக்கு மீண்டும் பணி: லஞ்சம் பெறப்படுவதைத் தடுக்க உத்தரவுகள் வாட்ஸ்அப்-பில் அனுப்பிவைப்பு

தமிழக காவல் துறையின் சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபு, பொது மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதோடு காவலரின் நலனிலும் கூடுதல் அக்கறை செலுத்தி வருகிறார். இதற்கு காவலர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.

காவல்துறையினருக்கு வாரத்தில் ஒருநாள் ஓய்வு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக நீடித்து வந்தது. இதைப்பரிசீலித்த டிஜிபி சைலேந்திரபாபு,ஓய்வு அளிக்கும் திட்டத்தை அண்மையில் நடைமுறைப்படுத்தினார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/12/29/large/752007.jpgமீனவர்களின் வாரிசுகளுக்கு 3 மாதம் வழிகாட்டுதல் பயிற்சி: கடலோர பாதுகாப்பு குழுமம் நடத்துகிறது

தமிழக மீனவர்களின் வாரிசுகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், அவர்கள் இந்திய கடலோரக் காவல் படை மற்றும் இந்திய கப்பற்படையில் நவிக் (பொது) மற்றும்மாலுமி பணிகளிலும், இதர தேசியபாதுகாப்பு பணிகளிலும் சேருவதற்கு ஏதுவாக (வழிகாட்டுதல்) இலவச சிறப்புப் பயிற்சி வகுப்புகள், தமிழக கடலோர பாதுகாப்பு குழுமத்தின் மூலம் நடத்தப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படி, கடலோர பாதுகாப்பு குழுமத்தால் நடத்தப்படவுள்ள 90 நாட்கள் இலவச பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள தகுதியுள்ள மீனவர்களின் வாரிசுகளிடம் இருந்துவிண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்ப படிவங்களை சம்பந்தப்பட்ட கடலோர மாவட்ட மீன்வளத்துறை அலுவலகங்களில் இருந்தும், கடலோர பாதுகாப்பு குழும அலுவலகங்களில் இருந்தும், மீனவ கிராம கூட்டுறவு சங்கங்கள், நியாயவிலைக் கடைகள்ஆகிய இடங்களில் இருந்தும் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். மேலும், https://drive.google.com/drive/folders/ என்ற இணையதள முகவரியில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/12/29/large/752006.jpgதமிழகத்தின் கிராமப்புறங்களில் கண்புரை, விழித்திரை பாதிப்பு அதிகரிப்பு: சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

கிராமப்புறங்களில் கண்புரை, விழித்திரை பாதிப்பு அதிகமாக உள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணி யன் தெரிவித்தார்.

சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் சேலம்,ராமநாதபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கான பல்நோக்கு நடமாடும் கண் மருத்துவ பிரிவினை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் நேற்று தொடங்கி வைத் தனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/12/29/large/752003.jpgஆக்கிரமிக்கப்பட்ட கோயில் நிலங்களை மீட்க ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்: அரசு துறைகளுக்கு உயர் நீதின்றம் உத்தரவு

ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து கோயில் நிலத்தைக் கண்டறிந்து மீட்பதற்கு அரசு துறைகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

இதுதொடர்பாக திருத்தொண்டர்கள் சபைத் தலைவரான சேலம் ஏ.ராதாகிருஷ்ணன், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘சென்னை போரூர் அருகேநந்தம்பாக்கத்தில் உள்ள கோதண்டராமர் கோயிலுக்கு சொந்தமான 150 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்களை போலி ஆவணங்கள் மூலம் தங்களது பெயருக்கு மாற்றம் செய்து பலர் ஆக்கிரமித்து உள்ளனர். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய் நிர்வாகஆணையருக்கு புகார் அளித்தும்எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே அந்த நிலத்தைமீட்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்’’ என கோரியிருந்தார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/12/29/large/752004.jpgஆங்கில புத்தாண்டு சிறப்பு கொண்டாட்டத்துடன் பஞ்சவடியில் அனுமன் ஜெயந்தி மஹோத்சவ விழா: இன்று மாலை சிறப்பு பூஜைகளுடன் தொடக்கம்

பஞ்சவடி கோயிலில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்துடன், அனுமன் ஜெயந்தி மஹோத்சவ விழா ஜன.1-ம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இதற்கான சிறப்பு பூஜைகள் இன்று தொடங்குகின்றன.

புதுச்சேரியில் இருந்து 10 கி.மீதொலைவில் திண்டிவனம் சாலையில் பாப்பாஞ்சாவடி என்ற ஊரில்பஞ்சவடி ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. இங்கு 36 அடி உயரத்தில் பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்தக் கோயில் வளாகத்தில் ஸ்ரீ மஹா கணபதிக்கும், பட்டாபிஷேக கோலத்தில் ராமருக்கும் தனித்தனி சந்நிதிகள்உள்ளன. கோயில் வளாகத்தில்திருப்பதி திருமலை தேவஸ்தானம் சார்பில் 7.5 அடி உயரத்தில், 2 டன்எடையில் செய்யப்பட்ட வெங்கடாசலபதிக்கு தனி சந்நிதி எழுப்பப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/12/28/large/751740.jpgவகுப்பறையை சுத்தம் செய்யும் போது கால் விரல் இழந்த மாணவனுக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு

பள்ளி வகுப்பறையை சுத்தம் செய்யும் பணியில் மேஜை விழுந்து கால் விரல் துண்டான மாணவனுக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை கீழ உறப்பனூரைச் சேர்ந்தவர் பி.ஆதிசிவன், மாநில மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த மனு:

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Monday, December 27, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/12/28/large/751668.jpgகடலோர மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழக கடலோர மாவட்டங்களில் இன்றும் நாளையும் மழை பெய்யவாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் 28, 29-ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசானஅல்லது மிதமான மழை பெய்யவாய்ப்புள்ளது. பிற இடங்களில் வறண்ட வானிலை காணப்படும்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/12/28/large/751670.jpgஎம்பிசி வகுப்பினருக்கு பழைய இடஒதுக்கீட்டு முறை; எம்இ, எம்டெக்., மருத்துவ படிப்புகளுக்கு விரைவில் கலந்தாய்வு: உச்ச நீதிமன்ற உத்தரவைப் பின்பற்ற தமிழக அரசு முடிவு

சென்னை: எம்பிசி வகுப்பினருக்கு பழைய இடஒதுக்கீட்டு முறையில் எம்இ, எம்டெக், எம்ஆர்க் மற்றும் மருத்துவம், கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வை விரைவில் நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதன்படி, நடப்பு கல்வி ஆண்டில் பொறியியல் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது. இதனிடையே, வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள்ஒதுக்கீட்டை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள்தொடரப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், 10.5 சதவீத இடஒதுக்கீட்டுக்கான அரசாணையை ரத்து செய்தது. உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்துதமிழக அரசும் பாமகவும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளன. அவற்றை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், இதுதொடர்பாக உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. தற்போது இவ்வழக்கு நிலுவையில் உள்ளது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/12/28/large/751665.jpgஆம்னி பேருந்து இயங்காத காலத்துக்கு சாலை வரி விலக்கு மறுப்பு: பொங்கலுக்கு 400 பேருந்துகள் சேவை முடங்கும்

சென்னை: ஆம்னி பேருந்துகள் இயங்காத காலத்துக்கு சாலை வரி விலக்கு அளிக்க போக்குவரத்துத் துறை திடீரென மறுத்துள்ளதால், பொங்கலுக்கு 400 பேருந்துகள் இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கூறியதாவது: கரோனா பாதிப்புக்கு பிறகுநீண்ட நாட்களாக ஆம்னி பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டதால், வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. சிலர் வேறு தொழிலுக்கு மாறிவிட்டனர். மேலும் சிலர் அரசிடம் தங்களது உரிமங்களை சரண்டர் செய்துவருகின்றனர். 300 உரிமங்கள் இதுவரை சரண்டர் செய்யப்பட்டுள்ளன.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/12/28/large/751666.jpgகல்வியாண்டின் மத்தியில் பணிநிறைவு பெறும் ஆசிரியர்கள் மறுநியமனம் கோர எவ்வித உரிமையும் கிடையாது: மேல்முறையீட்டு வழக்கில் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கல்வியாண்டின் மத்தியில் பணிநிறைவு பெறும் ஆசிரியர்கள் மறுநியமனம் கோர உரிமை கிடையாது எனக் கூறியுள்ள உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்துள்ளது.

அரசுப் பள்ளிகளில் பணியாற்றி,கல்வியாண்டின் மத்தியில் பணி நிறைவு பெற்ற ஆசிரியர்கள், தங்களை கல்வியாண்டு முடியும்வரை மறு நியமனம் செய்யக் கோரி அளித்த விண்ணப்பத்தை நிராகரித்து தமிழக அரசு உத்தரவிட்டது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/12/28/large/751669.jpgசென்னையில் மத்திய குழுவினர் ஆய்வு ஒமைக்ரான் கரோனா வைரஸ் சமூக தொற்றாக மாறி வருகிறது: தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: தமிழகத்தில் ஒமைக்ரான் பரவல் குறித்து மத்திய குழுவினர் ஆய்வை தொடங்கியுள்ளனர். வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு மட்டும் ஒமைக்ரான் தொற்று இருந்த நிலை மாறி, சமூகத் தொற்றாக மாறி வருகிறது என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி, தொற்று பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களுக்கு மத்திய குழுக்களை அனுப்ப உள்ளதாக தெரிவித்தார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/12/28/large/751660.jpgதிருவொற்றியூர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் 28 வீடுகள் திடீரென இடிந்து விழுந்தன: பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம்

சென்னை: திருவொற்றியூரில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் (குடிசை மாற்று வாரியம்) சார்பில் கட்டப்பட்டிருந்த பழமையான குடியிருப்பில் 28 வீடுகள் திடீரென இடிந்து விழுந்தன. அங்கு வசித்தவர்கள் முன்னெச்சரிக்கையாக வெளியேற்றப்பட்டதால் அதிஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் அறிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை அடுத்த திருவொற்றியூர் கிராமத் தெருவில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கடந்த 1993-ம் ஆண்டு 360 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணி தொடங்கியது. செம்மொழி பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் குடிசைகளில் வசித்து வந்தவர்களுக்கு இந்த குடியிருப்பில் 1998-ம் ஆண்டு வாக்கில் வீடுகள் ஒதுக்கப்பட்டன.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Sunday, December 26, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/12/27/large/751346.jpgகடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் 27-ம் தேதி (இன்று) பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும். உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் நிலவும். 28, 29-ம் தேதிகளில் கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மற்ற மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.

30-ம் தேதி கடலோர மாவட்டங்கள், அதை ஒட்டிய உள் மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில்லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய விஞ்ஞானி பா.கீதா வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/12/27/large/751343.jpgமின் கட்டணத்து­க்கு ஜிஎஸ்டி வசூலிப்பதை முதல்வர் ரத்து செய்ய வேண்டும்: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

சென்னை: மின் கட்டணங்களுக்கான ஜிஎஸ்டி வசூலிப்பை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: எதிர்க்கட்சித் தலைவராக ஸ்டாலின் இருந்தபோது, சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) குறித்து பல்வேறு விமர்சனங்களை தெரிவித்துவிட்டு, முதல்வரான பிறகு அதிமுக ஆட்சியில் ஜிஎஸ்டி வசூலிக்காதவற்றுக்கு எல்லாம் வரி வசூலிக்க உத்தரவிட்டு வருவதுதிமுகவின் இரட்டை நிலைப்பாட்டுக்கு உதாரணமாக உள்ளது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்