Tuesday, May 31, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/06/01/large/808181.jpgஉயர்கல்வி பயில்வோர் தமிழகத்தில் அதிகம்: பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் பொன்முடி பெருமிதம்

சென்னை: இந்தியாவில் உயர்கல்வி பயிலச் செல்வோரின் எண்ணிக்கை தமிழகத்தில்தான் அதிகம் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பொன்முடி கூறினார்.

சென்னை நந்தனம் அரசு ஆண்கள் கலைக் கல்லூரியின் (தன்னாட்சி) 46-வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் 1,868 பேர் இளங்கலைப் பட்டம், 547 பேர் முதுகலைப் பட்டம் பெற்றனர். சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள் வழங்கி உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி பேசியதாவது:

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/06/01/large/808260.jpgஓய்வூதியர்களின் வீட்டுக்கே சென்று வாழ்நாள் சான்றிதழ் பெறும் சேவை: தமிழக அரசு - அஞ்சல் துறை இடையே ஒப்பந்தம்

சென்னை: அஞ்சல்துறை மூலம் ஓய்வூதியர்கள் இருப்பிடத்துக்கே சென்று வாழ்நாள் சான்றிதழை பெறுவதற்கான சேவை தொடர்பாக தமிழக அரசு மற்றும் இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதுகுறித்து தமிழக அரசின் நிதித்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/06/01/large/808261.jpgகலாமின் கொள்கைகளையும் நாம் கடைபிடிக்க வேண்டும் - அப்துல் கலாமுடன் இணைந்து பணியாற்றிய விண்வெளி விஞ்ஞானிகள் கருத்து

சென்னை: ‘‘அப்துல் கலாமை கொண்டாடுவதோடு அவரது கொள்கைகளையும் நாம் கடைபிடிக்க வேண்டும்’’ என்று ‘கலாமை கொண்டாடுவோம்’ ஆன்லைன் கலந்துரையாடல் நிகழ்வில் விண்வெளி விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நினைவைப் போற்றும் வகையில், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் சார்பில் ‘கலாமை கொண்டாடுவோம்’ எனும் ஆன்லைன் சிறப்பு கலந்துரையாடல் நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் மூத்த விஞ்ஞானியும் சத்தீஸ்கர் அமிட்டி பல்கலைக்கழக வேந்தருமான டாக்டர் வி.செல்வமூர்த்தி, ராணுவ விஞ்ஞானியும் அறிவியல் எழுத்தாளருமான டாக்டர் வி.டில்லிபாபு ஆகியோர் பங்கேற்று கலந்துரையாடினர். அப்போது அவர்கள் பேசியதாவது:

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/05/31/large/807959.jpgகப்பற்படை அதிகாரி ஆன நீலகிரியைச் சேர்ந்த படுகர் சமூகப் பெண்

உதகை: நீலகிரி மாவட்டம் உதகமண்டலம் அருகே உள்ள கேத்தி கிராமத்திலுள்ள படுகர் சமுதாயத்தைச் சேர்ந்த மீரா என்பவர் கப்பல் படையில் அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நீலகிரி மாவட்டம், உதகை அருகே கேத்தி கிராமத்தில் உள்ள அச்சனக்கல் பகுதியைச் சேர்ந்தவர் ரவீந்திரநாத். இவரது மனைவி மாலதி. இவர்களது மகள் மீரா (23). ராணுவ மருத்துவமனையில் தொழில்நுட்ப நிபுணராக இருந்த ரவீந்திரநாத், வெலிங்டன் மருத்துவமனை மட்டுமின்றி நாட்டின் பல்வேறு ராணுவ மருத்துவமனைகளில் பணியாற்றியுள்ளார். இதன் காரணமாக பணி மாறுதலாகி செல்லும் ஊர்களுக்கு எல்லாம் மகள் மீராவை அழைத்துச் சென்று அங்குள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் படிக்க வைத்துள்ளார். இவர் கோவையில் பணிபுரிந்த போது மகள் மீராவை அங்குள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படிக்க வைத்தார். இந்நிலையில், மீராவுக்கு இந்திய ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்று ஆர்வம் ஏற்பட்டது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/05/31/large/807957.jpgதிருப்பத்தூர் அருகே 13-ம் நூற்றாண்டு வீரனின் நடுகல் கண்டெடுப்பு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே 13ம் நுாற்றாண்டு வீரனின் ‘நடுகல்’ கண்டுடெடுக்கப்பட்டுள்ளது. இந்த நடுகல்லை மாவட்ட நிர்வாகம் ஆவணப்படுத்தி, பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

திருப்பத்துார் துாய நெஞ்சக் கல்லுாரி தமிழ்த்துறைப் பேராசிரியர் பிரபு, மற்றும் ஆய்வு மாணவர்கள் தரணிதரன், சரவணன் ஆகியோர் திருப்பத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், திருப்பத்தூர் அடுத்த சந்திரபுரம் பகுதியில் களஆய்வு மேற்கொண்ட போது பழமை வாய்ந்த நடுகல்லை ஒன்றை அவர்கள் கண்டறிந்தனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/05/31/large/807961.jpgமதுரை, ராமேஸ்வரம் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணிகளை கவனித்து வரும் பொறியாளர் தம்பதியர்

மதுரை: மதுரை மற்றும் ராமேஸ்வரம் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணிகளை தலைமை தாங்கி கவனித்து வருகின்றனர் பொறியாளர் தம்பதியர். தம்பதியர்களில் கணவர் மதுரை ரயில் நிலைய பணிகளையும், மனைவி ராமேஸ்வரம் ரயில் நிலைய பணிகளையும் கவனித்து வருகின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 26-ஆம் தேதி நடைபெற்ற விழாவில் எழும்பூர், ராமேஸ்வரம், மதுரை, காட்பாடி, கன்னியாகுமரி ஆகிய ரயில் நிலையங்களை சுமார் 1800 கோடி ரூபாய் மதிப்பில் மறுசீரமைப்பு செய்வதற்கான பணிகளை துவக்கி வைத்தார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Monday, May 30, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/05/31/large/807771.jpgயாரும் கவனிக்கவில்லை என சாலை விதியை மீற வேண்டாம் விதிமீறல்கள் பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும்: போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் எச்சரிக்கை

சென்னை: யாரும் கவனிக்கவில்லை என வாகன ஓட்டிகள் சாலை விதிகளை மீற வேண்டாம். விதிமீறல் வாகனங்களை நவீன கேமராக்கள் மூலம் கண்காணித்து, அபராதம் விதிக்கப்படுகிறது. எனவே, வாகன ஓட்டிகள் சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டும் என போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் வலியுறுத்தியுள்ளார்.

சென்னையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்கவும், விபத்துகளை குறைக்கவும் போக்குவரத்து போலீஸார் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தவறான வழியில், எதிர் திசையில் வாகனங்களை ஓட்டுவது, மற்ற வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து விளைவிப்பது மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படுகிறது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/05/31/large/807775.jpgதிறன்மிக்க மாணவர்களை உருவாக்கவே ‘நான் முதல்வன்’ திட்டம் நிறைவேற்றம்: எஸ்ஐஇடி கல்லூரி விழாவில் முதல்வர் ஸ்டாலின் கருத்து

சென்னை: திறன்மிக்க கல்லூரி மாணவ, மாணவிகளை உருவாக்கவே ‘நான் முதல்வன்’ திட்டத்தை அறிவித்துள்ளேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நீதிபதி பஷீர் அகமது சையது மகளிர் கல்லூரி (எஸ்ஐஇடி), தேசிய தர நிர்ணயக் குழுவின் ‘A ’ தகுதி பெற்றுள்ளது. இதற்கான பாராட்டு விழா, கல்லூரி வளாகத்தில் நேற்று நடந்தது. இதில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசியதாவது:

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/05/31/large/807866.jpgகல்விக் கொள்கையின் நல்ல அம்சங்களை நடைமுறைப்படுத்தலாம் - ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தல்

சென்னை: புதிய கல்விக் கொள்கையில் உள்ள நல்ல அம்சங்களை நடைமுறைப்படுத்தலாம் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் 13-வது பட்டமளிப்பு விழா சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பல்கலைக்கழக கலையரங்கில் நேற்று நடைபெற்றது. தமிழக ஆளுநரும், பல்கலை.வேந்தருமான ஆர்.என்.ரவி தலைமை வகித்தார். உயர்கல்வித் துறை அமைச்சரும், பல்கலை. இணைவேந்தருமான பொன்முடி முன்னிலை வகித்தார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/05/31/large/807863.jpgதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவை வெளிப்படுத்த டிஜிட்டல் திண்ணை பிரச்சாரம் - ஜெயலலிதா பேரவை தீர்மானம்

சென்னை: தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைவு உள்ளிட்ட திமுக அரசின் உண்மை நிலையை அம்பலப்படுத்த கிராமம்தோறும் டிஜிட்டல் திண்ணை பிரச்சாரம் நடத்த வேண்டும் என்று ஜெயலலிதா பேரவை பயிற்சி முகாமில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதா பேரவையின் மாவட்டச் செயலாளர்களுக்கான 2 நாள் செயல்திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நேற்று தொடங்கியது. ஜெயலலிதா பேரவையின் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் ஏற்பாட்டில் நடந்த இந்தபயிற்சி முகாமை, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர். முகாமில் அவர்கள் பேசியதாவது:

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/05/31/large/807865.jpgபிரதமரின் உஜ்வாலா திட்டத்தில் தமிழகத்தில் 35 லட்சம் பேருக்கு சிலிண்டருக்கு ரூ.200 மானியம் - அதிகாரிகள் தகவல்

சென்னை: பிரதமரின் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ், தமிழகத்தில் 35 லட்சம் பேருக்கு ஒரு சிலிண்டருக்கு ரூ.200 மானியம் வழங்கப்படும் என்று எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாடு முழுவதும் ஏழை மக்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் ‘பிரதமரின் உஜ்வாலா யோஜனா’ திட்டத்தை பிரதமர் மோடி கடந்த 2016 மே 1-ம் தேதி தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ், சிலிண்டர் பெறுவதற்கான வைப்புத் தொகை உட்பட ரூ.1,600-ஐ மத்திய அரசு வழங்குகிறது. இந்த திட்டத்தின் பயனாளிகளுக்கு காஸ் அடுப்பும், முதலாவது சிலிண்டரும் இலவசமாக வழங்கப்படும்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/05/31/large/807864.jpgதமிழகம், புதுச்சேரியில் 4 நாள் மழைக்கு வாய்ப்பு - 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்

சென்னை: தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக மே 31-ம் தேதி (இன்று) தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.

ஜூன் 1, 2, 3-ம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைபெய்யக்கூடும். சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசானமழை பெய்யக்கூடும்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/05/30/large/807576.jpgமதுரை கலெக்டர் ஆபீஸை சூழ்ந்த சாக்கடை கழிவுநீர் -  மனு அளிக்க வந்த மக்கள் அதிருப்தி

மதுரை: தூய்மைப்பணியாளர்கள் போராட்டத்தால் இன்று சாக்கடை உடைந்து மதுரை ஆட்சியர் அலுவலகத்தை கழிவுநீர் சூழ்ந்து தேங்கியது. அதனால், மனு அளிக்க வந்த மக்கள் சாக்கடை நீரை கடந்து செல்ல முடியாமல் அவதியடைந்தனர்.

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில் பணியாற்றும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள், பொறியியல் பணியாளர்கள் இன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால், மதுரை மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் தூய்மைப்பணிகள் பாதிக்கப்பட்டன. இந்நிலையில் இன்று ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்த கழிவுநீர் கால்வாய் உடைந்து ஆட்சியர் அலுவலகத்தை கழிவு நீர் சூழ்ந்தது. நேற்று முன்தினம் மழை பெய்து அந்த தண்ணீரும் கழிவு நீருடன் சேர்ந்தால் குளம்போல் தேங்கி நின்றது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Sunday, May 29, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/05/30/large/807451.jpgஅனைவருக்கும் சமவாய்ப்பை நீட் வழங்கியுள்ளது: அண்ணாமலை கருத்து

நாமக்கல்: நாடு முழுவதும் அனைவருக்குமான சம வாய்ப்பை மத்திய அரசு நீட் தேர்வு மூலம் வழங்கியுள்ளது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

நாமக்கல்லில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இலவச நீட் பயிற்சி வகுப்பு தொடக்க விழா தனியார் பள்ளி சார்பில் நடைபெற்றது. பாஜக மாநில துணைத் தலைவர்கள் கே.பி.ராமலிங்கம், வி.பி.துரைசாமி, தேசிய செயற்குழு உறுப்பினர் மனோகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/05/30/large/807452.jpgகரோனா கரை ஒதுங்கும் நேரத்தில் கவனக்குறைவு வேண்டாம்: ஜெ.ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை

திருச்சி: தமிழகத்தில் கரோனா கரை ஒதுங்கும் நேரத்தில் மக்கள் கவனக்குறைவாக இருக்கக் கூடாது என பொதுமக்களை மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்த அவர், புதிதாக அமைக்கப்பட்டு வரும் உயர்தர தீவிர சிகிச்சைப் பிரிவை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/05/30/large/807450.jpgமாநிலங்களவை காங்கிரஸ் வேட்பாளர் ப.சிதம்பரம் ஸ்டாலினை சந்தித்து ஆதரவு கோரினார்

சென்னை: தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்படும் காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆதரவு கோரினார். இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக எம்பிக்கள் டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் மற்றும் அதிமுக எம்பிக்களான நவநீதகிருஷ்ணன், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், ஏ.விஜயகுமார் ஆகியோரின் பதவிக் காலம் அடுத்த மாதம் நிறைவடைகிறது. அதனால் தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் உள்ளிட்ட நாடு முழுவதும் காலியாகும் 57 எம்பிக்கள் இடங்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24-ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/05/30/large/807459.jpgமதுரை, கோவை, ஆவடி உள்ளிட்ட 6 மாநகராட்சி ஆணையர்கள் மாற்றம்: தலைமைச் செயலர் இறையன்பு உத்தரவு

சென்னை: மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, நாகர்கோவில், ஆவடிஆகிய 6 மாநகராட்சிகளின் ஆணையர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக தலைமைச்செயலர் வெ.இறையன்பு நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/05/30/large/807390.jpgசென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் ரயில்களில் விதிமீறி பயணித்த 2,219 பேர் மீது வழக்கு பதிவு: ரூ.8.81 லட்சம் அபராதம் வசூல்

சென்னை: சென்னை ரயில்வே கோட்டத்தில், ரயில் படிக்கட்டில் தொங்கியபடி பயணித்தது தொடர்பாக கடந்த 3 ஆண்டுகளில் 2,219 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, ரூ.8.81 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு, வேளச்சேரி மற்றும் சென்ட்ரலில் இருந்து அரக்கோணம், கும்மிடிப்பூண்டி ஆகிய வழித் தடங்களில் தினமும் 700-க்கும் மேற்பட்ட மின்சார ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பயணிக்கின்றனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/05/30/large/807395.jpgதமிழ்நாடு திறந்தநிலை பல்கலை. பட்டமளிப்பு விழா: ஆளுநர் தலைமையில் இன்று நடைபெறும்

சென்னை: தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் 13-வது பட்டமளிப்பு விழா ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் சென்னையில் இன்று (திங்கள்கிழமை) நடைபெறுகிறது.

தமிழக அரசு பல்கலைக்கழகமான தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் 13-வது பட்டமளிப்பு விழா சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பல்கலைக்கழகத்தின் கூட்டரங்கில் இன்று (திங்கள்கிழமை) காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது. விழாவுக்கு பல்கலைக்கழக வேந்தரும் தமிழக ஆளுநருமான ஆர்.என்.ரவி தலைமை தாங்குகிறார். உயர்கல்வித் துறை அமைச்சரும், பல்கலைக்கழக இணைவேந்தருமான பொன்முடி முன்னிலை வகிக்கிறார். சென்னை ஐஐடி இயக்குநர் வீ.காமகோடி பட்டமளிப்பு விழா உரையாற்றுகிறார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/05/30/large/807387.jpgஇன்று சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம்: சொத்துவரி உயர்வு தொடர்பாக தீர்மானம் நிறைவேற்ற வாய்ப்பு

சென்னை: சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் சொத்து வரி உயர்வு தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.

தமிழகத்தில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான சொத்து வரியை அரசு உயர்த்தியுள்ளது. அதன்படி சொத்து உரிமையாளர்களை 600 சதுரஅடி பரப்பளவு வரை, 601 முதல் 1,200 சதுரஅடி வரை, 1,201 முதல் 1,800 சதுரஅடி வரை, 1,800 சதுரஅடிக்கு மேல் என 4 வகையாகப் பிரித்து, அவற்றில் குடியிருப்பு, குடியிருப்பு அல்லாத கட்டிடங்கள், பிரதான சென்னையில் உள்ள கட்டிடங்கள், விரிவாக்கப்பட்ட சென்னையில் உள்ள கட்டிடங்கள் என வகைப்படுத்தி 25 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை சொத்து வரி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/05/30/large/807461.jpgமாநிலங்களவையில் சிதம்பரத்தின் வாதங்களை எதிர்கொள்ள முடியாததால் குறிவைக்கின்றனர்: சிபிஐ சோதனை குறித்து கார்த்தி சிதம்பரம் கருத்து

சென்னை: டெல்லியிலிருந்து நேற்று சென்னை வந்த கார்த்தி சிதம்பரம், விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சோதனை என்பது எனக்குப் புதிதல்ல. 6 முறை சோதனை நடத்தி, எதைக் கண்டுபிடித்தார்கள். இந்தியாவில் இதுவரை யாரையும் 6 முறை சோதனை செய்ததில்லை.

என் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் உண்மை எதுவுமில்லை. புலன் விசாரணை என்ற பெயரில், எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் முயற்சிதான்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Saturday, May 28, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/05/28/large/806074.jpgவைகை கரை சாலையில் சைக்கிள் டிராக்: மதுரை மாநகராட்சியின் சிறப்பு ஏற்பாடு

மதுரை: சைக்கிளிங் செல்வோர் வசதிக்காக வைகைக் கரை சாலையில் மதுரை மாநகராட்சி சார்பில் ‘சைக்கிள் டிராக்’ அமைக்க ஏற்பாடு செய்யப்படுகிறது

பெட்ரோல் விலை உயர்வால் பொதுமக்களால் தற்போது கார், இருசக்கர வாகனங்களை முன்போல் தாராளமாக பயன்படுத்த முடியவில்லை. முன்போல் தற்போது ஒரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு வேலைக்கு செல்வதற்கு பொதுபோக்குவரத்தை பயன்படுத்த முடியவில்லை. ஆட்டோக்கள் கட்டணமும் பல மடங்கு உயர்ந்துவிட்டது. பொதுபோக்குவரத்து வாகனங்கள் சரியான நேரத்திற்கு வருவதில்லை. அதனால், வேலைக்கு செல்ல வேண்டிய இடங்களுக்கு சரியான நேரத்தில் செல்ல முடியவில்லை. அதனால், பெட்ரோல் செலவு குறைக்க, சுற்றுச்சூழல் காக்க, உடல்நலமாக சைக்கிள் உதவும் என்பதால் மதுரை மக்கள் பலர் தற்போது சைக்கிளில் செல்கின்றனர்.

தபால்காரர்கள், சிறு வியாபாரிகள், மாணவர்கள், பெண்கள், முதியவர்கள் மதுரையில் நிரந்தரமாக சைக்கிளில் செல்கிறார்கள். கரோனா காலத்திற்கு பிறகு இளைஞர்களும் தற்போது உடல் ஆரோக்கியதற்திற்காக தங்கள் வேலை செய்யும் இடங்களுக்கு செல்வதற்கும் அருகில் செல்வதற்கும் தற்போது சைக்கிகளை பயன்படுத்துவது ஒரு பழக்க வழக்கமாக மாற்றியுள்ளனர். அந்த வகையில் தற்போது மதுரை மாநகரில் ஏராளமான சைக்கிள் கிளப்புகள் உள்ளன. அவற்றில் 50க்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/05/28/large/806067.jpgமதுரை மேயர் முன்னிலையில் பாதுகாப்பு கவசங்கள் இல்லாமல் தூய்மைப் பணியாளர்கள் சுத்தம் செய்ததால் சர்ச்சை

மதுரை: மதுரை மாநகராட்சி மேயர் முன்னிலையில் காலணி, கையுறை உள்ளிட்ட முறையான பாதுகாப்பு எதுவும் இல்லாமல் கழிவுநீர் தொட்டியை தூய்மைப் பணியாளர்கள் சுத்தம் செய்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாநகராட்சியில் வார்டு வாரியாக சிறப்பு மெகா தூய்மைப் பணி நடந்து வருகிறது. இன்று மதுரை மாநகராட்சி 59-வது வார்டுக்கு உட்பட்ட ரயில்வே காலனி பகுதியில் நடந்த மெகா மாஸ் தூய்மைப் பணி நிகழ்ச்சியை மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி தொடங்கி வைத்தார். அப்போது மேயர் முன்னிலையிலே அங்கு சாலையில் நடுவே இருந்த கழிவுநீர் தொட்டியை தூய்மைப் பணியாளர்கள் பாதுகாப்பு கவசங்கள், கையுறை இல்லாமல் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/05/28/large/806066.jpgநீண்ட காலமாக சொத்து வரி செலுத்தாவிடில் ஜப்தி: சென்னையில் 15 நாட்களில் அதிரடியாக ரூ.40 கோடி வசூலிப்பு

சென்னை: நீண்ட நாட்களாக சொத்து வரி செலுத்தாத வணிக நிறுவனங்கள், ஹோட்டல்கள் மீது ஜப்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்தது. இதன் காரணமாக கடந்த 15 நாட்களில் ரூ.40 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியின் வரி வருவாயில் சொத்து வரி முக்கிய வருவாய் ஆக உள்ளது. இந்நிலையில், அதிக வரி பாக்கி உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்தது. இதன்படி, சமீப காலமாக அதிக சொத்து வரி நிலுவையில் கட்டிடங்களுக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதை மேலும் தொடர ரூ.10 லட்சத்திற்கு அதிகமாக சொத்து வரி பாக்கி உள்ளவர்களின் பட்டியலை சென்னை மாநகராட்சி தயார் செய்தது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/05/28/large/806065.jpg“நமது குப்பை... நமது பொறுப்பு...” - தரம் பிரிக்க சென்னை மாநகராட்சி விழிப்புணர்வு

சென்னை: "நமது குப்பை: நமது பொறுப்பு" என்ற பெயரில் குப்பைகளைத் தரம் பிரிப்பது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/05/28/large/806072.jpg“நட்புக்குரிய வெங்கய்ய நாயுடு... பாசமிகு ரஜினிகாந்த்...” - கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ஸ்டாலின் நெகிழ்ச்சி

சென்னை: "தந்தை பெரியாரின் ஈரோட்டுப் பள்ளியிலே படித்தவன், பேரறிஞரின் காஞ்சிக் கல்லூரியிலே பயின்றவன் என்று தன்னைப் பற்றி குறிப்பிட்டுக் காட்டியிருக்கும் தலைவர் கருணாநிதியின் சிலை இன்று பெரியாருக்கும், அண்ணாவுக்கும் இடையில் அமைந்திருக்கிறது" என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

சென்னை - ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில், பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையின் முன்புறம் அண்ணா சாலை ஓரத்தில் 12 அடி உயர பீடத்தில், 16 அடி உயரத்தில் ரூ.1.7 கோடி மதிப்பில் நிறுவப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முழு உருவ வெண்கலச் சிலையை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு இன்று (சனிக்கிழமை) திறந்து வைத்தார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Friday, May 27, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/05/28/large/805994.jpgவள்ளுவர் சிலைபோல் உயர்ந்து நிற்கும் கருணாநிதியின் புகழ் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: கன்னியாகுமரியில் வானுயர்ந்து நிற்கும் வள்ளுவர் சிலை போல், கருணாநிதியின் ஆட்சித்திறனும் அவரின் புகழும் உயர்ந்து நிற்கின்றன என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை இன்று திறக்கப்படுகிறது. இதையொட்டி திமுக தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள மடல்:

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/05/28/large/805989.jpgகடலூர் மாவட்டத்தில் சூறைக் காற்றுடன் கனமழை - 500 ஏக்கரில் 2.50 லட்சம் வாழை மரங்கள் சேதம்

விருத்தாசலம்: கடலூர் மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால், 500 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த சுமார் 2.50 லட்சம் வாழை மரங்கள் சேதமடைந்தன.

கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில், வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 26-ம் தேதி இரவு பலத்த இடி, மின்னலுடன் பரவலாக மழை பெய்யத் தொடங்கியது. கடலூர் கேப்பர் மலைப் பகுதியில் சூறைக் காற்றும் வீசியது. இதில், ராமாபுரம், வழிசோதனைப்பாளையம், வி.காட்டுப்பாளையம், எம்.புதூர், வெள்ளக்கரை, பத்திரக்கோட்டை, சாத்தங்குப்பம், ஓதியடிக்குப்பம் உள்ளிட்ட 20 கிராமங்களில் சுமார் 500 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் சேதமடைந்தன. குலை தள்ளிய நிலையில் இருந்த வாழை மரங்கள் முறிந்து விழுந்தன.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/05/28/large/805988.jpgபொறியியல் கல்விக் கட்டணம் உயர்த்தப்படாது - உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி உறுதி

சென்னை: தமிழகத்தில் பொறியியல் படிப்புக் கான கல்விக் கட்டணம் உயர்த்தப்படாது என்று உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி தெரிவித்தார்.

தமிழகத்தில் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின்கீழ் 51 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், 4 இணைப்புக் கல்லூரிகள் செயல்படுகின்றன. இவற்றில் பட்டயப் படிப்புகளுக்கு (டிப்ளமோ) 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. நடப்பாண்டு பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு அட்டவணையை சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் பொன்முடி நேற்று வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது:

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/05/28/large/805987.jpgகருணாநிதி சிலை இன்று திறப்பு - குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு திறந்து வைக்கிறார்

சென்னை: சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முழுஉருவ வெண்கலச் சிலையை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு இன்று திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

தென்னிந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவரான திமுக தலைவர் கருணாநிதி, தமிழகத்தில் 5 முறை முதல்வராக இருந்தவர். 60 ஆண்டுகள் தமிழக சட்டப்பேரவை உறுப்பினராக இருந்துள்ளார். பன்முகத் திறமை பெற்றிருந்த கருணாநிதி, கடந்த 2018 ஆகஸ்ட் 7-ம் தேதி மறைந்தார். சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடம் அருகே அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அங்கு அவருக்கு நினைவிடம் அமைக்கப்பட்டு வருகிறது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/05/28/large/805573.jpgமதுரையில் புதுப்பொலிவு பெறுகிறது காந்தி நினைவு அருங்காட்சியகம் - ரூ.2.12 கோடி மதிப்பிலான ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு

மதுரை: மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம், பழமை மாறால் ரூ.2.12 கோடியில் புதுப்பொலிவுப்படுத்தப்படும் வகையில் புனரமைக்க ஒப்பந்தப்புள்ளி அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்னிந்தியாவின் புகழ்பெற்ற சுற்றுலாத்தமான மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம் 6 கோடி ரூபாய் மதிப்பில் புதுப்பிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். அனை தொடர்ந்து 300 ஆண்டுகள் பழமையான ராணி மங்கம்மாள் அரண்மனையில் அமைந்துள்ள அருங்காட்சியகம் பழமை மாறாமல் புதுப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Thursday, May 26, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/05/27/large/805190.jpg'வழக்கமான வாரிசு அதிகாரம்' - மோடி நிகழ்ச்சியின் ஸ்டாலின் பேச்சுக்கு அண்ணாமலை ஆவேசம்

சென்னை: சென்னையில் நடந்த விழாவில் பிரதமர் மோடி முன்னிலையில் முதல்வர் ஸ்டாலின் பேசிய பேச்சை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும்போது ஒன்றிய அரசு என்பதை அழுத்தத்துடன் பதிவு செய்ததுடன் நீட், ஜிஎஸ்டி, தமிழ் அலுவல் மொழி மற்றும் கச்சத்தீவு போன்ற கோரிக்கைகளை முன்வைத்து பேசினார். பிரதமர் முன்னிலையில் பேசிய முதல்வர் ஸ்டாலினின் இந்த பேச்சுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/05/26/large/805178.jpg‘பாரத் மாதா கி ஜே’, ‘கலைஞர் வாழ்க’... - பிரதமர் மோடியின் சென்னை வருகையில் கவனிக்க வைத்த நிகழ்வுகள்

சென்னை: தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு பிரதமர் நரேந்திர மோடி முதல்முறையாக அரசு முறை பயணமாக இன்று சென்னை வந்தார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த விழாவில் மத்திய, மாநில அரசுத் துறைகளின் சார்பில் ரூ.31,400 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டங்களை மக்களுக்கு அர்ப்பணித்தார். இந்த விழாவில் கவனிக்க வேண்டிய முக்கிய நிகழ்வுகள்:

> சென்னையில் அரசு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஹைதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையத்திற்கு இன்று (மே 26) மாலை 4.50 மணிக்கு வந்தார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/05/26/large/805186.jpgராமேசுவரம் ரயில் நிலையத்தில் ரூ.120 கோடியில் சீராமைப்பு பணிகள்: சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

ராமேசுவரம்: ராமேசுவரம் ரயில் நிலையத்தில் ரூ.120 கோடி மதிப்பிலான சீராமைப்பு பணிகளை பிரதமர் மோடி இன்று மாலை காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று (வியாழக்கிழமை) மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, காணொலி காட்சி மூலம் ராமேசுவரம் ரயில் நிலையத்தில் ரூ.120 கோடி மதிப்பிலான சீராமைப்பு பணிகளுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இதற்காக ராமேசுவரம் ரயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம், ராமேசுவரம் நகராட்சித் தலைவர் நாசர்கான், மதுரை கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் தண்ணீரு ரமேஷ் பாபு, சென்னை கட்டுமான பிரிவு முதன்மை பொறியாளர் வி.தவமணி பாண்டி, கட்டுமான பிரிவு இணை முதன்மை பொறியாளர் ரதி, மதுரை கோட்ட பொறியாளர் ஹிருதயேஷ் குமார், சென்னை கோட்ட வர்த்தக மேலாளர் மோகனப்பிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Wednesday, May 25, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/05/26/large/805083.jpgதமிழ்நாடு முதல்வரின் சிறப்பு புத்தாக்க திட்டம் - இளம் வல்லுநர் பதவிக்கு விண்ணப்பிக்க தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு முதல்வரின் சிறப்பு புத்தாக்கத் திட்டத்தில் இளம் வல்லுநராகப் பணியாற்ற விரும்பும் தகுதியான இளைஞர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசின் சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையின் முதன்மைச் செயலர் வெளியிட்ட அறிவிப்பு:

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/05/26/large/805081.jpgஅரசு ஊழியர்களின் கணக்கு அறிக்கை: ஒரு வாரத்தில் ஆன்லைனில் பதிவேற்றம்

சென்னை: தமிழக அரசு ஊழியர்களின் 2021-22 ஆண்டுக்கான கணக்கு அறிக்கை, தமிழ்நாடு மாநில கணக்காயர் அலுவலக இணையதளத்தில் இம்மாத இறுதியில் பதிவேற்றம் செய்யப்படும் என அறிவிக்கப்பட் டுள்ளது.

தமிழக அரசு பணிநிலை சார்ந்த அனைத்து இந்திய அரசு சேவை அதிகாரிகள், தமிழக அரசு ஊழியர்கள், தமிழ்நாடு ஊராட்சி ஒன்றியம், நகராட்சி தொடக்க, நடுநிலை, உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், சென்னை மற்றும் மதுரை மாநகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் ஊழியர்களின் 2021-22 நிதியாண்டுக்கான கணக்கு அறிக்கை (அக்கவுண்ட்ஸ் சிலிப்), தமிழ்நாடு மாநில கணக்காயர் அலுவலகத்தின் www.agae.tn.nic.in என்ற இணையதளத்தில் இம்மாத இறுதியில் பதிவேற்றம் செய்யப்படும்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/05/26/large/805084.jpgவேலூர், கோவை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/05/25/large/804658.jpgமுன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் போட்டி - மாநிலங்களவை தேர்தல் அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

சென்னை: மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் 6 எம்.பி.க்கள் உட்பட 15 மாநிலங்களில் 57 மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவிக் காலம் வரும் ஜூன் முதல் ஆகஸ்ட் மாதங்களில் முடிவடைகிறது. தமிழகத்தில் திமுகவின் டிகேஎஸ் இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, கேஆர்என் ராஜேஷ்குமார், அதிமுகவின் நவநீதகிருஷ்ணன், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், ஏ.விஜயகுமார் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் வரும் ஜூன் 29-ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. விரைவில் குடியரசுத் தலைவர் தேர்தல் நடக்க உள்ளதால், இந்த 57 இடங்களையும் நிரப்புவதற்கான தேர்தல் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஜூன் 10-ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. வரும் 31-ம் தேதியுடன் மனு தாக்கல் முடிவடைகிறது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Tuesday, May 24, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/05/25/large/804348.jpgமனஇறுக்கத்திலும் மனம் தளரவில்லை..! - உயிரிழந்த தந்தையின் உடலை வணங்கி விட்டு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவி

கடலூர்: கடலூரில் உயிரிழந்த தந்தையின் உடலை வணங்கி விட்டு, மாணவி ஒருவர் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை பள்ளிக்குச் சென்று எழுதினார்.

கடலூர் அருகே உள்ள சாவடி, ஞானாம்பாள் நகரை சேர்ந்தவர் சிவக்குமார். இவர் போட்டோ ஸ்டுடியோ வைத்து நடத்தி வந்தார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/05/25/large/804367.jpgடிரைவரின் அருகே அமர்ந்து ஆட்டோவில் பயணித்த அமைச்சர் மஸ்தான்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், அனந்தபுரம் அருகே புதுப்பேட்டை பகுதியில் திமுகநிர்வாகி வெங்கடேசன் உடல்நலக்குறை வால் பாதிக்கப்பட்டி ருந்தார். அவர், தனது இல்லத்தில் இருந்தபடி சிகிச்சை பெற்று வருகிறார். இதை அறிந்த சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மஸ்தான் அந்த நிர்வாகியை பார்க்க நேற்று காரில் சென்றார். அனந்தபுரம் வரை காரில் சென்ற அமைச்சர், அங்கிருந்து குறிப்பிட்ட இடத்திற்கு செல்லும சாலை குறுகலாக இருப்பதால் காரில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், அமைச்சர் செல்லும் வகையில் ஆட்டோ ஒன்று வரவழைக்கப்பட்டது.

ஆட்டோவில் ஏறிய அமைச்சர், டிரைவருக்கு அருகே அமர்ந்து கொள்ள, பின் இருக்கையில் அவருடன் வந்த திமுகவினர் மற்றும் பாதுகாவலர் அமர்ந்து வந்தனர். அமைச்சர் மஸ்தான் ஆட்டோவில் வரும் படம் சமூக வலைதளங்களில் பரவியது. ஒரு சிலர், அமைச்சரின் எளிமைய வரவேற்று பதிவிட்டாலும், பலர் டிரைவர் இருக்கையில் அமர்ந்து இப்படிச் செல்வது மோட்டார் வாகன சட்டப்படி தவறானது என்பதை சுட்டிக் காட்டி விமர்சித்திருந்தனர். இதுகுறித்து அமைச்சரிடம் கேட்டதற்கு, ‘வருங்காலங்களில் இதுபோல் நடக்காமல் பார்த்து கொள்கிறேன்’ என்றார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/05/25/large/804567.jpgமாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது - முதல் நாளில் பத்மராஜன் உட்பட 3 பேர் மனு

சென்னை: மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. முதல் நாளில் பத்மராஜன் உட்பட 3 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

தமிழகத்தில் 6 பேர் உட்பட 15 மாநிலங்களில் 57 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் முடிவடைகிறது. தமிழகத்தில் திமுகவின் டிகேஎஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், அதிமுகவை சேர்ந்த நவநீதகிருஷ்ணன், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், ஏ.விஜயகுமார் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் வரும் ஜூன் 29-ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/05/25/large/804562.jpgபிரதமர் நாளை தமிழகம் வருகை - பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்

சென்னை: தமிழகத்தில் ரூ.12,413 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலை திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும், ரயில்வே உள்ளிட்ட பல்வேறு துறைகளின் முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைக்கவும் பிரதமர் நரேந்திர மோடி நாளை சென்னை வருகிறார்.

ஹைதராபாத்தில் இருந்து விமானப் படை விமானம் மூலம் சென்னை விமான நிலையத்துக்கு நாளை மாலை 5.10 மணிக்கு வரும் பிரதமர் மோடியை ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் வரவேற்கின்றனர். பின்னர், அங்கிருந்து 5.15 மணிக்கு புறப்படும் பிரதமர், நிகழ்ச்சி நடைபெறும் நேரு உள்விளையாட்டு அரங்கத்துக்கு சாலை மார்க்கமாக 5.45 மணிக்கு வந்து சேர்கிறார். அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்று, ரூ.12,413 கோடி மதிப்பிலான பல்வேறு நெடுஞ்சாலைத் துறை திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/05/25/large/804566.jpgவேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் உட்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை வாய்ப்பு

சென்னை: வேலூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் நேற்று வெளியிட்ட அறிக்கை:

வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் லேசான மழை பெய்யும். 26-ம்தேதி (நாளை) திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Monday, May 23, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/05/24/large/803985.jpgபேரறிவாளனை ஆரத் தழுவி வாழ்த்திய முதல்வர்: ராஜீவ் காந்தியுடன் இறந்த 14 தமிழரின் குடும்பத்துக்கு என்ன பதில்?- மூத்த பத்திரிகையாளர் சுமந்த் சி.ராமன் கேள்வி

சென்னை: பேரறிவாளனை ஆரத்தழுவி பொன்னாடை போர்த்தி முதல்வர் ஸ்டாலின் வாழ்த்தியதன் மூலம் ராஜீவ் காந்தியுடன் இறந்த 14 தமிழர்களின் குடும்பத்துக்கு நாம் என்ன பதில் சொல்லப் போகிறோம் என சுமந்த் சி. ராமன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக மூத்த பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகருமான மருத்துவர் சுமந்த் சி.ராமன் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்கு அளித்துள்ள சிறப்பு பேட்டியில் கூறியிருப்பதாவது:

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/05/24/large/803991.jpgமத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளை கண்டித்து நாளை முதல் ஒரு வாரம் போராட்டம்: கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் அறிவிப்பு

சென்னை: மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் வரும் 25 முதல் 31-ம் தேதி வரை ஆர்ப்பாட்டம், சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தப்படும் என்று கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் அறிவித்துள்ளன.

இதுதொடர்பாக சென்னையில் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் இரா.முத்தரசன், விசிக தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் (எம்.எல்.) லிபரேசன் மாநிலக் குழு உறுப்பினர் வரதராஜன்ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/05/24/large/804008.jpgவரும் 26-ம் தமிழகத்தில் புதிய திட்டங்களை தொடங்கி வைக்கிறார் பிரதமர் - பாதுகாப்பு பணியில் 10 ஆயிரம் போலீஸார்

சென்னை: சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை உலகத் தரத்தில் சீரமைத்தல், தாம்பரம் - செங்கல்பட்டு 3-வது ரயில்பாதை, மதுரை- தேனி அகல ரயில்பாதை மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறையின் புதிய திட்டங்கள் உள்ளிட்டவற்றை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி 26-ம் தேதி சென்னை வருகிறார்.

அவர் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். மேலும் 10,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிப்பதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருகின்றன.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/05/24/large/803989.jpgமே 28-ல் திமுக மாவட்டச் செயலர்கள் கூட்டம்

சென்னை: சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் வரும் 28-ம் தேதி காலை 10.30 மணிக்கு திமுக மாவட்டச் செயலர்கள் கூட்டம், திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது.

இதுதொடர்பாக பொதுச் செயலர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக மாவட்டச் செயலர்கள், பொறுப்பாளர்கள் கூட்டம் வரும் 28-ம் தேதி அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் நடைபெறுகிறது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/05/24/large/803913.jpgசென்னை மடிப்பாக்கத்தில் பாதாள சாக்கடைத் திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும்: குடிநீர் வாரியத்துக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை: சென்னை மடிப்பாக்கம் பகுதியில் பாதாள சாக்கடை அமைக்கும் திட்டத்தை விரைவாகத் தொடங்கி, குறுகிய காலத்துக்குள் முடிக்க வேண்டும் என்று சென்னை குடிநீர் வாரியத்துக்கு, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை புழுதிவாக்கம் சித்தேரி ஏரியில் கழிவுநீர் கலப்பதால், அந்த ஏரியின் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுவதாக கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் செய்தி வெளியானது. அதனடிப்படையில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வு தாமாக முன்வந்து, வழக்காகப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கு அமர்வின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி கே.ராமகிருஷ்ணன், தொழில்நுட்ப உறுப்பினர் கே.சத்யகோபால் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/05/24/large/804013.jpgதமிழகத்தில் மீண்டும் அதிகரிக்க தொடங்கிய வெயில்: சென்னை விமான நிலையத்தில் 104 டிகிரி பதிவு

சென்னை: தமிழகத்தில் இந்த ஆண்டு கோடைகாலம் தொடங்கியதில் இருந்து கடும் வெயில் வாட்டி வந்தது. கடந்த4-ம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கிய நிலையில், இதன் தாக்கம் மேலும் கடுமையாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அசானி புயல் உருவானதைத் தொடர்ந்து, அதன் தாக்கத்தால் தமிழகத்தில் சென்னை உட்பட பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இதனால், கடந்த சில நாட்களாக குளுமையான சூழல் நிலவியது.

இந்நிலையில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று 10 நகரங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பநிலை பதிவானது. அதிகபட்சமாக சென்னை விமான நிலையத்தில் 104 டிகிரி பதிவானது. மேலும் கடலூரில் 103 டிகிரி, சென்னை நுங்கம்பாக்கம், வேலூர், பரங்கிப்பேட்டை, மதுரை விமான நிலையம் ஆகிய இடங்களில் 102 டிகிரி, கரூர் பரமத்தி, புதுச்சேரி, திருத்தணியில் தலா 101 டிகிரி, திருச்சியில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/05/24/large/803915.jpgசென்னையில் ஹெல்மெட் அணியாத 3,926 பேர் மீது வழக்கு பதிவு: பின்னால் அமர்ந்து பயணித்தவர்களுக்கும் ரூ.100 அபராதம் விதித்த போலீஸார்

சென்னை: சென்னையில் நேற்று 312 இடங்களில் சிறப்பு வாகன தணிக்கை மேற்கொண்டு, ஹெல்மெட் அணியாத 3,926 பேருக்கு அபராதம் விதித்தனர்

சென்னையில் கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் மே 15-ம் தேதி வரை நேரிட்ட இருசக்கர வாகன விபத்துக்களில் 98 பேர் உயிரிழந்தனர். மேலும், 841 பேர் காயமடைந்தனர். இருசக்கர வாகனத்தில் ஓட்டுநரின் பின்னால் அமர்ந்து வந்தவர்களும் உயிரிழந்தனர். பலர் காயமடைந்துள்ளனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்