Friday, March 31, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/04/01/large/969053.jpgமானாமதுரை மண்பாண்ட பொருட்களுக்கு புவிசார் குறியீடு: தொழிலாளர்கள், வியாபாரிகள் வரவேற்பு

மானாமதுரை | சிவகங்கை மாவட்டம், மானாமதுரை மண்பாண்டப் பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளதற்கு மண்பாண்டத் தொழிலாளர்கள், வியாபாரிகள் வரவேற்றுள்ளனர்.

மானாமதுரையில் தயாராகும் மண்பாண்டப் பொருட்களுக்கு தமிழகம் மட்டுமின்றி மற்ற மாநிலங்களிலும் வரவேற்பு உள்ளது. மண்பாண்டத் தொழிலில் மானாமதுரை குலாலர் தெருவைச் சேர்ந்த 325 தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் மண் பானை, அக்னிச் சட்டி, அகல் விளக்கு, கலைப்பொருட்கள், அடுப்புகள், சுவாமி சிலைகள், சமையல் சட்டிகள், கூஜாக்கள், ஜாடிகள், இசைக்கருவியான கடம் போன்ற 50-க்கும் மேற்பட்ட பொருட்களை தயாரித்து வருகின்றனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/04/01/large/969171.jpgகலாஷேத்ரா மாணவிகள் போராட்டம் | தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை: பேரவையில் முதல்வர் ஸ்டாலின் உறுதி

சென்னை: கலாஷேத்ரா அறக்கட்டளை விவகாரத்தில் குற்றச்சாட்டு உறுதியானால், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதியளித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று நேரமில்லா நேரத்தில் கலாஷேத்ரா கல்லூரி மாணவிகள் போராட்டம் தொடர்பாக உறுப்பினர்கள் கு.செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்), அருள் (பாமக), எஸ்.எஸ்.பாலாஜி (விசிக), டி.ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்), தி.வேல் முருகன்(தவாக) ஆகியோர் சிறப்பு கவனஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்து பேசினர். இதுகுறித்து விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். இதற்கு பதில் அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/04/01/large/969265.jpgபாடத்துக்கு ஒருவர் வீதம் அரசு நடுநிலை பள்ளிகளில் 5 ஆசிரியர்கள் நியமனம்: பேரவையில் அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்

சென்னை: அரசு நடுநிலைப் பள்ளிகளில் பாடத்துக்கு ஒருவர் வீதம் 5 பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்படுவார்கள் என்று சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடந்தது. இதில், உறுப்பினர்களின் கோரிக்கைகள், கேள்விகளுக்கு துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பதில் அளித்து பேசியதாவது: பள்ளிக்கல்வி மேம்பாட்டுக்காக அதிக அளவில் நிதி ஒதுக்கப்பட்டு, இல்லம் தேடி கல்வி, எண்ணும்எழுத்தும் உட்பட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளி வளாகங்களில் உள்ள இடிந்த, பழுதடைந்த கட்டிடங்களை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணி ஓராண்டுக்குள் முடிக்கப்படும்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/04/01/large/969191.jpgசென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் 2 நகரும் படிக்கட்டுகள் கூடுதலாக திறப்பு: விம்கோ நகரில் ரயில்களை சுத்தம் செய்யும் ஆலை

சென்னை: சென்னை மெட்ரோ ரயில்களில் தினமும் சராசரியாக 2.45 லட்சம்பேர் பயணம் செய்கின்றனர். அதிகரித்து வரும் பயணிகளின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், மெட்ரோ ரயில் நிலையங்களில் 41 நகரும் படிக்கட்டுகளைக் கூடுதலாக நிறுவும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி, சென்ட்ரல் மெட்ரோரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக கூடுதலாக 2 நகரும்படிக்கட்டுகள் பொதுத்தளத்திலிருந்து நடைமேடை 1 மற்றும் 2-க்கு சென்றுவர நேற்று திறக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளன.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/04/01/large/969284.jpgமாநில அந்தஸ்து வழங்கக் கோரி புதுச்சேரி பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்

புதுச்சேரி: புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கக் கோரி சட்டப்பேரவையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சிவா, திமுக எம்எல்ஏக்கள் நாஜிம், அனிபால் கென்னடி, செந்தில்குமார், நேரு (ரங்கசாமி ஆதரவு சுயேச்சை) ஆகியோர் நேற்று தீர்மானம் கொண்டுவந்தனர்.

சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் சிவா பேசும்போது, “கடந்த 36 ஆண்டுகளில், 13 முறை மாநில அந்தஸ்து கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டும், மத்திய அரசு நிராகரித்து வந்துள்ளது. மக்கள் பிரதிநிதிகளான முதல்வர், அமைச்சர்கள் முடிவு எடுக்காமல், தலைமைச் செயலர், ஆளுநர் ஆகியோர் முடிவு எடுக்கும் நிலை உள்ளது. பெரும்பாலான கோப்புகள் ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்படுவதால், அரசின் அதிகாரம் குறைந்துள்ளது. எனவே, மாநில அந்தஸ்தை அரசு தீர்மானமாக கொண்டுவர வேண்டும்” என்றார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Thursday, March 30, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/03/31/large/968753.jpgசுயஉதவி குழு விற்பனை பரிவர்த்தனை மின்னணுமயம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: மகளிர் சுயஉதவிக் குழுக்களின் விற்பனை பரிவர்த்தனை மின்னணுமயமாக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் ஊரக வளர்ச்சித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடைபெற்றது.

பின்னர் அத்துறையின் கீழ் வரும் வறுமை ஒழிப்புத் திட்டங்கள் மற்றும் ஊரகக் கடன்கள் தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்து பேசியதாவது: மகளிர் உரிமைத் தொகை, இல்லம் தேடி கல்வி, மக்களைத் தேடி மருத்துவம்,காலை சிற்றுண்டி திட்டம் என இந்தியாவே திரும்பிப் பார்க்கும் பல்வேறு முன்னோடிதிட்டங்களை முதல்வர் ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். அவற்றை வெற்றிகரமாக செயல்படுத்துவதில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் ஆற்றலாகவும், என்ஜினாகவும் செயல்படுகின்றனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/03/31/large/968663.jpgபோக்குவரத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்: இன்றும் தமிழகம் முழுவதும் நடக்கிறது

சென்னை: போக்குவரத்துத் துறை மானியக் கோரிக்கையில் எதிர்பார்த்த அறிவிப்புகள் இடம்பெறாததை கண்டித்து, சிஐடியுதொழிற்சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான ஊதிய ஒப்பந்த நிலுவைத் தொகை, கரோனா காலத்தில் பணிபுரிந்தவர்களுக்கு ஊக்கத் தொகை, ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, மருத்துவ காப்பீடு உள்ளிட்ட போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில், போக்குவரத்துத் துறை மானியக் கோரிக்கையின்போது அறிவிப்புகள் வெளியிடப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://ift.tt/QJPeZ3z மாநகராட்சிகள், 3 நகராட்சிகளில் 24 மணி நேரமும் குடிநீர் விநியோகிக்க திட்டம்: அமைச்சர் கே.என்.நேரு அறிவிப்பு

சென்னை: தாம்பரம், திருச்சி, திருநெல்வேலி உள்ளிட்ட 9 மாநகராட்சிகள் மற்றும் காரைக்குடி உள்ளிட்ட 3 நகராட்சிகளில் ரூ.420 கோடியில் 24 மணி நேரமும் குடிநீர் விநியோகிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. இதில் அமைச்சர் நேரு வெளியிட்ட அறிவிப்பு:

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/03/31/large/968327.jpgபெரியார் நினைவை போற்றும் வகையில் வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழா ஓராண்டு கொண்டாடப்படும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மார்ச் 30-ம் தேதி தொடங்கி ஓராண்டு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். பிற மாநிலங்களில் ஒடுக்கப்பட்டோர் நலனுக்காக பாடுபட்டு, குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் ஆளுமைகள் அல்லது நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் ‘வைக்கம் விருது’ வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழா குறித்து, சட்டப்பேரவையில் 110 விதியின்கீழ் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: கேரளாவின் கோட்டயம் மாவட்டம் வைக்கத்தில் உள்ள மகாதேவர் கோயிலை சுற்றி அமைந்துள்ள தெருக்களில், ஒடுக்கப்பட்டவர்கள் நடப்பதற்கு இருந்த தடைகளை நீக்கக் கோரி நடந்ததுதான் வைக்கம் போராட்டம். 1924 மார்ச் 30-ம் தேதி கேரள தலைவர் டி.கே.மாதவனால் தொடங்கப்பட்டது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/03/31/large/968326.jpgதமிழகத்தில் கரோனா பரவல் மீண்டும் அதிகரிப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: தமிழகத்தில் தினசரி கரோனா பாதிப்பு 100-ஐ கடந்துள்ளது. எனவே, கரோனா விதிமுறைகளை பொதுமக்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ‘மருத்துவத்தில் செயற்கை நுண்ணறிவு’ குறித்த கருத்தரங்கை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்து பேசியதாவது:

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Wednesday, March 29, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/03/30/large/968072.jpgஅரசு விரைவு பேருந்துகளில் ஒரு மாதத்தில் 5 முறைக்குமேல் பயணித்தால் 50% கட்டண சலுகை: அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் போக்குவரத்து மானிய கோரிக்கைமீதான விவாதம் நேற்று நடைபெற்றது.விவாதத்துக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் சிவசங்கர் வெளியிட்ட அறிவிப்புகள்: அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் வழக்கமாக பயணிக்கும் பயணிகளுக்கு, மாதத்தில் 5 முறைக்கு மேல் பயணித்தால் 6-வது பயணம் முதல் 50 சதவீதம் கட்டணச் சலுகை வழங்கப்படும். போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்காக மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்.

‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ திட்டத்தின் கீழ் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் நகரில் ரூ.3.55 கோடியில் புதிய பேருந்து பணிமனை அமைக்கப்படும், திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மற்றும் பாடியநல்லூரில் உள்ள பேருந்து பணிமனை மற்றும் பேருந்துநிலையங்கள் முறையே ரூ.10.76 கோடி, ரூ.5.43 கோடியில் மேம்படுத்தப்படும்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/03/30/large/968105.jpgமுந்தைய அரசின் திட்டங்களை திமுக அரசு கிடப்பில் போடவில்லை: ஆர்.பி.உதயகுமாருக்கு அமைச்சர் துரைமுருகன் பதில்

சென்னை: முந்தைய அரசு கொண்டுவந்த திட்டங்களை திமுக அரசு கிடப்பில் போடவில்லை என்று ஆர்.பி.உதயகுமாருக்கு நீர்வளத் துறைஅமைச்சர் துரைமுருகன் பதில் அளித்தார். சட்டப்பேரவையில், நீர்வளம் மற்றும் தொழிலாளர் நலத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம்நேற்று தொடங்கியது.

விவாதத்தை, அதிமுக உறுப்பினர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்துப் பேசியதாவது: நீர்வளத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில், மறைந்தமுன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட மழைநீர் சேகரிப்பு திட்டம் குறித்த தகவல்கள் இல்லை.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/03/30/large/967786.jpgநிலத்தடி நீர் வளத்தை ஒழுங்குபடுத்த விரைவில் தமிழ்நாடு நீர்வள ஆணைய சட்டம்

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/03/30/large/967781.jpgபோக்குவரத்து ஊழியர்களின் ஓய்வு வயது 58 ஆகிறது: பேரவையில் அமைச்சர் தகவல்

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/03/30/large/967779.jpgசொத்து வரி செலுத்துவோரை பாடாய் படுத்தும் ‘இணையதள சர்வர்’: ஆன்லைன் வரி வசூலுக்கு மாநகராட்சி முக்கியத்துவம் கொடுக்குமா?

மதுரை: மாநகராட்சி சொத்து வரி உள்ளிட்ட பல்வேறு வரிகளை ஆன்லைன் முறையில் செலுத்த முடியாமல் மக்கள் மிகுந்த சிரமப்படுகிறார்கள். வரி வசூலை எளிமைப்படுத்த ஆன்லைன் பணவரித்தனைக்கு மாநகராட்சி முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகளில் 20 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். வார்டுகள் 5 மண்டலங்களாக பிரித்து மண்டலம் வாரியாக சொத்துவரி, குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை உள்ளிட்ட பல்வேறு வரிகள் வசூல் செய்யப்படுகிறது. இதில், பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் வீடு மற்றும் சொத்துகளுக்கு செலுத்தும் சொத்து வரி வசூல் மூலம் மட்டுமே ஆண்டிற்கு ரூ.200 கோடிக்கு மேல் வருவாய் கிடைக்கிறது. இந்த வருவாய் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகளுக்கு உதவிகரமாக உள்ளது. மாநகராட்சி சொத்து வரியை ஆன்லைன்
(https://ift.tt/ZkTP6An) மூலமாகவும், நேரடியாகவும் செலுத்தும் வசதிகள் உள்ளன. நேரடியாக செலுத்துவதற்கு வார்டுகளில் வரி செலுத்தும் மையங்கள் உள்ளன. ‘கரோனா’ பெருந்தொற்று காலத்தில் தமிழக அரசு, ஆன்லைனில் கட்டணம் செலுத்துவதையே ஊக்குவித்தது. மக்களும் ஆர்வமாக ஆன்லைன் மூலமே சொத்து வரி செலுத்தினர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Tuesday, March 28, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/03/29/large/967640.jpgஇலங்கையில் இருந்து 8 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வருகை

ராமேசுவரம்: இலங்கையிலிருந்து அகதிகளாக தனுஷ்கோடி வந்த இலங்கை தமிழர்கள் 8 பேர், மெரைன் போலீஸாரின் விசாரணைக்குப் பின் மண்டபம் முகாமில் ஒப்படைக்கப்பட்டனர்.

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் கடந்த ஆண்டு மார்ச் முதல் இதுவரை இலங்கை தமிழர்கள் 225 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வந்துள்ளனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/03/29/large/967648.jpgரூ.26,353 கோடிக்கு இறுதி துணை மதிப்பீடுகள்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்

சென்னை: சட்டப்பேரவையில் இந்த நிதிஆண்டுக்கு ரூ.26,353 கோடிக்கான இறுதி துணை மதிப்பீடுகளை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.

சட்டப்பேரவையில், இந்த 2022-23-ம் நிதி ஆண்டுக்கான இறுதி துணை மதிப்பீடுகளை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தாக்கல் செய்து பேசியதாவது:

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/03/29/large/967695.jpgமது பழக்கம் இல்லாதவரிடம் குடித்து விட்டு வாகனம் ஓட்டியதாக அபராதம் - வீடியோ வைரலானதால் விசாரணை நடத்த உத்தரவு

சென்னை: விபத்துகள், விபத்து உயிரிழப்புகளை குறைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக உயர்த்தப்பட்ட அபராதத் தொகை தமிழகத்தில் வசூலிக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக ஹெல்மெட் அணியாத இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ரூ.1,000, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம் என அபராதம் வசூலிக்கப்படுகிறது. போக்குவரத்து போலீஸார் மட்டுமின்றி அந்தந்த பகுதி காவல்நிலைய போலீஸாரும் இந்த சோதனையில் ஈடுபடுகின்றனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/03/29/large/967694.jpgகிளைச் செயலாளர் முதல் பொதுச்செயலாளர் வரை..

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, 1954-ம் ஆண்டு சேலம் அருகே சிலுவம்பாளையம் கிராமத்தில் பிறந்தார். சாதாரண விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த அவர், ஆரம்ப காலத்தில் வெல்லம் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தார்.

தனது 18-வது வயதில் எம்ஜிஆர் மீது கொண்ட பற்றால் 1972-ம் ஆண்டு அதிமுகவில் தொண்டராக இணைந்தார். அயராது ஆற்றிய பணியால் 1973-ல் அவருக்கு சிலுவம்பாளையம் கிளைச் செயலாளர் பதவி கிடைத்தது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/03/29/large/967693.jpgபொதுச்செயலாளராக பழனிசாமி தேர்வு - அதிமுக தொண்டர்கள் கொண்டாட்டம்

சென்னை: அதிமுக பொதுச்செயலாளராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் தொண்டர்கள், நிர்வாகிகள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை வானகரத்தில் கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் எனவும், அதிமுக பொதுச்
செயலாளர் தேர்தல் முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீக்கியும் சென்னை உயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/03/29/large/967255.jpgஓபிஎஸ் மேல்முறையீட்டு மனு இன்று விசாரணை

சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கில் ஓபிஎஸ் மற்றும் ஆதரவாளர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுக்களை தனி நீதிபதி குமரேஷ்பாபு நேற்று நிராகரித்து தீர்ப்பளித்தார்.

காலை 10.30மணிக்கு அவர் தீர்ப்பளித்து முடிந்ததும், உடனே இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும், இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் மகாதேவன், முகமது ஷபீக் அமர்வில் ஓபிஎஸ் தரப்பு மூத்த வழக்கறிஞர் மணிசங்கர் முறையீடு செய்தார். அதை ஏற்ற நீதிபதிகள், மேல்முறையீட்டு மனுவை இன்று விசாரிப்பதாக தெரிவித்துள்ளனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/03/29/large/967253.jpgபொதுச் செயலாளராக இபிஎஸ் பதவியேற்பு - அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரி ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்தது. இதையடுத்து, அதிமுக பொதுச் செயலாளராக பழனிசாமி பதவியேற்றுக் கொண்டார்.

பழனிசாமி தரப்பினரின் ஏற்பாட்டில் அதிமுக பொதுக்குழு கடந்த 2022 ஜூலை 11-ம் தேதி கூட்டப்பட்டது. இதில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை கலைத்துவிட்டு, மீண்டும் பொதுச்செயலாளர் பதவியை உருவாக்குவது, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்குவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Monday, March 27, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/03/28/large/967108.jpgகோவை தொழில் நிறுவனங்களில் கரோனா தடுப்பு பணிகள் தீவிரம்

கோவை: கோவை மாவட்டத்தில் உற்பத்தித்துறையின் கீழ் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட பதிவு செய்த தொழில் நிறுவனங்கள், குறுந்தொழில்கள் மற்றும் அமைப்புசாரா பிரிவின் கீழ் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் என ஏராளமான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.

தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 8 லட்சம் தொழிலாளர்கள் இங்கு வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இந்நிலையில், மீண்டும் கரோனா பரவத் தொடங்கியுள்ளது தொழில்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் அவர்கள் ஈடுபடத் தொடங்கிவிட்டனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/03/28/large/967120.jpgஅதிமுக பொதுக்குழு, பொதுச்செயலாளர் தேர்தல்: ஓபிஎஸ் தரப்பு வழக்கில் இன்று தீர்ப்பு

சென்னை: அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் இன்று காலை தீர்ப்பளிக்கவுள்ளது.

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ்மற்றும் அவரது ஆதரவாளர்களான மனோஜ்பாண்டியன், வைத்திலிங்கம் மற்றும் ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்குகளை தொடர்ந்திருந்தனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/03/28/large/967117.jpgஅனைத்து ஆய்வகங்களும் கரோனா பரிசோதனை விவரங்களை ஐசிஎம்ஆர் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும்: மத்திய அரசு அறிவுறுத்தல்

சென்னை: தமிழகம், குஜராத், மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கரோனாதொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் நேற்று காணொலி மூலமாக கரோனா தொற்று பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களுடன் ஆலோசனை நடத்தினார். தமிழக அரசு சார்பில் சுகாதாரத்துறை செயலாளர் ப.செந்தில்குமார், பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/03/28/large/967166.jpgகருப்பு சட்டையில் வந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் - கண்டன பேச்சை நீக்கியதால் வெளிநடப்பு

சென்னை: ராகுல் காந்தி மீதான தகுதி இழப்பு நடவடிக்கையை கண்டித்து தமிழக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவரும் கருப்பு சட்டையில் சட்டப்பேரவைக்கு வந்தனர். இதுதொடர்பாக சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை பேசியது, அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதால் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு குஜராத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்ததை அடுத்து, மக்களவை எம்.பி. பதவியை அவர் இழந்துள்ளார். இதை கண்டித்து, நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தமிழக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவரும் நேற்று கருப்பு உடை அணிந்தும், ராகுல் காந்தி மீதான தகுதி இழப்பு நடவடிக்கைக்கு எதிரான வாசகங்கள் கொண்ட பதாகைகளை ஏந்தியும் சட்டப்பேரவைக்கு வந்தனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/03/28/large/966707.jpgஒரு கோடி குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000: சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்

சென்னை: மகளிர் உரிமைத் தொகை திட்டம் மூலம், நடைபாதையில் வணிகம் செய்பவர்கள், மீனவ பெண்கள், கட்டுமான தொழிலில் ஈடுபட்டுள்ளோர், வீடுகளில் வேலை செய்பவர்கள் உட்பட 1 கோடி குடும்பத் தலைவிகள் பயன்பெறுவார்கள். மாதம் ரூ.1,000 உதவித் தொகை அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகையாக மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என்பது, திமுக தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்களில் ஒன்றாகும். இத்திட்டத்தை அண்ணா பிறந்தநாளான செப்.15-ல் முதல்வர் தொடங்கி வைப்பார் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Sunday, March 26, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/03/27/large/966467.jpgஇரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் | 3 வழித்தடங்களில் நீட்டிப்பு தொடர்பான சாத்தியக்கூறுகள்: ஆய்வு செய்ய நிறுவனங்கள் தேர்வு

சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில்திட்டத்தில் 3, 4, 5 ஆகிய வழித்தடங்களில் நீட்டிப்பு தொடர்பாக சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய மூன்று நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் ரூ.63,246 கோடி மதிப்பில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகின்றன. மாதவரம்-சிறுசேரி வரை (45.8 கி.மீ.) 3-வது வழித்தடத்திலும், கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி வரை (26.1 கி.மீ. ) 4-வது வழித்தடத்திலும், மாதவரம்-சோழிங்கநல்லூர் வரை (47 கி.மீ) 5-வது வழித்தடத்திலும் என118.9 கி.மீ. தொலைவில் பணிகள் நடைபெறுகின்றன. இதுதவிர, இந்த வழித்தடங்களை நீட்டிக்கவும் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/03/27/large/966625.jpgதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி இளங்கோவனுக்கு தொடர் சிகிச்சை

சென்னை: தீவிர சிகிச்சை பிரிவில் அனு மதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு மருத்துவ குழுவினர் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் எம்எல்ஏ, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, டெல்லி சென்றுவிட்டு கடந்த 15-ம் தேதி சென்னை திரும்பினார்.

அன்று இரவு அவருக்கு திடீரென நெஞ்சுவலி, மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார். சிகிச்சைக்கு பிறகு, அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதால், தீவிர சிகிச்சை பிரி வில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/03/27/large/966488.jpgகோரிக்கைகளை வலியுறுத்தி பதிவுத் துறை பணியாளர்கள் உண்ணாவிரத போராட்டம்

சென்னை: பணிப் பாதுகாப்பை உறுதி செய்தல், பதிவுத்துறையில் ஏற்கெனவேதனியார் மூலம் செயல்படுத்தும் ஒப்பந்த, வெளிமுகமை வேலைகளை ரத்து செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பதிவுத்துறை பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சென்னையில் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. கூட்டமைப்பின் தலைவர் மு.மகேஸ் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

ரியல் எஸ்டேட் சட்டத்தின்படி, புரமோட்டர் அல்லாத ஏழை மக்கள் மனைகளை பதிவதில் உள்ள குளறுபடிகளை நீக்க வேண்டும். பணிமாறுதலுக்கான பொது கலந்தாய்வை ஆண்டுதோறும் ஏப்ரலில் நடத்த வேண்டும், தற்போது 100 சார்-பதிவாளர் அலுவலகங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் சனிக்கிழமை வேலை நாளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/03/27/large/966484.jpgசென்னை மாநகராட்சி பட்ஜெட் இன்று தாக்கல்

சென்னை: சென்னை மாநகராட்சியில் 15 மண்டலங்கள், 200 வார்டுகள் உள்ளன. கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் குறிப்பிடும்படியான மக்கள் நலத் திட்டங்கள் ஏதுமில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில், நடப்பாண்டு பட்ஜெட் தொடர்பாக மேயர் ஆர்.பிரியா தலைமையில் ஆலோசிக்கப்பட்டு, மக்களின் தேவைகள், சாத்தியமுள்ள திட்டங்கள் குறித்து ஆய்வு நடத்தி,பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/03/27/large/966595.jpgகரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரிப்பு - தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுடன் மத்திய அரசு இன்று ஆலோசனை

சென்னை: கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால், மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுடன் மத்திய அரசு இன்று ஆலோசனை நடத்துகிறது. தமிழகத்தில் தற்போது கரோனா தொற்றால் அச்சப்பட வேண்டிய சூழல் இல்லை என்று தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் ஒற்றை இலக்கத்தில் பதிவாகி வந்த தினசரி கரோனா தொற்று, கடந்த ஒரு மாதமாக இரட்டை இலக்கத்தில் பதிவாகி 100-ஐ நெருங்கியுள்ளது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Saturday, March 25, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/03/26/large/966002.jpgகிருஷ்ணகிரி, தருமபுரியில் இடி, மின்னலால் பண்ணையில் தீ - 5,000 கோழிகள் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி / ஓசூர் / தருமபுரி / அரூர்: கிருஷ்ணகிரி , தருமபுரி மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. அரூர் அருகே இடி, மின்னலுக்கு கோழிப்பண்ணையில் தீ விபத்து ஏற்பட்டு பண்ணையில் இருந்த 5 ஆயிரம் கோழிகள் உயிரிழந்தன.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த மாதம் இறுதியில் இருந்தே வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களாகப் பகலில் வெயில் அதிகரித்த நிலையில், இரவில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் கிருஷ்ணகிரி, பாரூர், சூளகிரி, ஊத்தங்கரை, மத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மிதமானது முதல் கனமழை வரை பெய்தது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/03/26/large/966094.jpgஆன்லைன் சூதாட்டத்தில் கடனாளியானதால் மத்திய அரசு ஊழியர் திருச்சியில் தற்கொலை

திருச்சி: திருச்சியில் ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்து கடனாளியானதால் மத்திய அரசு ஊழியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி நவல்பட்டு பகுதியில் உள்ள மத்திய அரசுக்குச் சொந்தமான துப்பாக்கி தொழிற்சாலையின் மருத்துவமனையில், மருத்துவ உதவியாளராக பணிபுரிந்தவர் இசக்கிமுத்து மகன் ரவி சங்கர்(37). தூத்துக்குடியைச் சேர்ந்த இவர், கடந்த சில ஆண்டுகளாக மனைவி, 6 வயது மகனுடன் திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை பணியாளர்கள் குடியிருப்பில் வசித்து வந்தார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/03/26/large/966105.jpgபட்டியலின மக்கள் உரிமை மறுக்கப்படும்போது மட்டுமே தேசிய எஸ்.சி, எஸ்.டி ஆணையம் தலையிட வேண்டும் - சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை: பட்டியலின மக்களுக்கான உரிமைகள் மறுக்கப்படும்போது மட்டுமே,தேசிய எஸ்.சி., எஸ்.டி. ஆணையம் தலையிட்டு, தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று சென்னைஉயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் வி.மாதேபள்ளியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ஜெயராமன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு: வி.மாதேபள்ளியில் உள்ள சக்கியம்மன் கோயிலுக்குச் சொந்தமான 3.75 ஏக்கர் நிலத்தை சீனிவாசன் என்பவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி அறநிலையத் துறை, சீனிவாசனுக்கு நோட்டீஸ் பிறப்பித்தது. அதையடுத்து, பட்டியலின வகுப்பைச் சேர்ந்த தனக்குச் சொந்தமான நிலத்தை, அறநிலையத் துறை சட்டவிரோதமாக எடுக்க முயற்சிப்பதாக சீனிவாசன் தேசிய எஸ்.சி.,எஸ்.டி. ஆணையத்தில் புகார் அளித்தார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/03/26/large/965711.jpgபுவிசார் குறியீடு பெற அரசு நடவடிக்கையால் கிருஷ்ணகிரி பன்னீர் ரோஜா சாகுபடி அதிகரிக்கும்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பன்னீர் ரோஜாவுக்கு புவிசார் குறியீடுபெறும் அரசின் நடவடிக்கையால் சாகுபடி பரப்பளவை அதிகரிக்க வாய்ப்புள்ளது என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், தேன்கனிக்கோட்டை, பேரிகை, சூளகிரி, கெலமங்கலம், தளி உள்ளிட்ட பகுதிகளில் நிலவும் குளிர்ந்த சீதோஷ்ண நிலை காரணமாக 475 ஹெக்டேர் பரப்பளவில் பசுமைக் குடில் அமைத்து விவசாயிகள் ரோஜா மலர் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/03/26/large/965707.jpgராகுல் காந்தி மீதான வழக்கு மோடியின் திட்டமிட்ட சதி - நாராயணசாமி குற்றச்சாட்டு

புதுச்சேரி: புதுச்சேரி காங்கிரஸ் கட்சியினர் ராஜ்பவன் தொகுதியில் நேற்று கையோடு கை கோர்ப்போம் நடைபயணம் மேற்கொண்டனர். வட்டார காங்கிரஸ் தலைவர்கள் ஜெரால்டு, ராஜ்மோகன் தலைமை தாங்கினர். இதில் மாநிலத் தலைவர் ஏ.வி. சுப்பிரமணியன், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்எல்ஏ மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மிஷன் வீதியில் புறப்பட்ட நடைபயணம் கடற்கரை சாலை அருகே நிறைவுபெற்றது. பின்னர் நாராயணசாமி செய்தியாளரிடம் கூறியதாவது: "குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் பாஜகவை சேர்ந்த ஒருவர் தாக்கல் செய்த அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு காலம் தண்டனை வழங்கப்பட்டது. அதற்கு மறுநாளே எம்பி பதவியில் இருந்து தகுதி இழப்பு செய்திருக்கிறார்கள்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Friday, March 24, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/03/25/large/965588.jpgகாலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை; 1,021 மருத்துவர்கள் விரைவில் தேர்வு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: தமிழகத்தில் 1,021 மருத்துவர்களை தேர்வு செய்து விரைவில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றுசுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளும் அதற்கு அமைச்சர்கள் அளித்த பதில்களும் வருமாறு: மரகதம் குமரவேல் (அதிமுக): மதுராந்தகத்தில் இருந்து திருக்கழுக்குன்றம் செல்லும் சாலையில்பாலாற்றின் குறுக்கில் அமைக்கப்பட்டுள்ள பாலம் மிகவும் மோசமானநிலையில் உள்ளது. மழைக்காலத்தில் பாலம் அடித்துச் செல்லப்பட்டு, அதன்பின் தற்காலிக பாலம் அமைக் கப்படுகிறது. இப்பாலத்தை கட்டிக் கொடுக்க வேண்டும்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/03/25/large/965534.jpgவிவேகானந்தரின் வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிகளில் பாடங்களாக வைக்க வேண்டும்: பொன்னம்பல அடிகளார் பேச்சு

சென்னை: ராமகிருஷ்ண மடத்தால் 1921-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் பத்திரிகையின் நூற்றாண்டு நிறைவு விழா சென்னை மயிலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ண மடத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த விழாவில் கொல்கத்தா ராமகிருஷ்ண மடம் மற்றும் ராமகிருஷ்ண மிஷன், பேலூர் மடத்தின் துணைத் தலைவர் ஸ்ரீமத் சுவாமி கவுதமானந்தஜி மகராஜ், குன்றக்குடி ஆதீனம் பொன்னம்பல அடிகளார், ராமகிருஷ்ண விஜயம் ஆசிரியர் சுவாமி அபவர்கானந்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://ift.tt/o7ilbSO காலி பணியிடங்களை நிரப்புவதற்கான டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முடிவு வெளியீடு

சென்னை: அரசுப் பணிகளில் கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட 10,117 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின.

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலி பணியிடங்கள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும்போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்பப்படுகின்றன. அதன்படி, கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் காலியாக உள்ள 7,301 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு மாநிலம் முழுவதும் 7,689 மையங்களில் கடந்த ஆண்டு ஜூலை 24-ம் தேதி நடைபெற்றது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/03/25/large/965627.jpgபொதுச்செயலர் தேர்தலை எதிர்த்த வழக்கு - ஓபிஎஸ் தரப்பில் எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல்

சென்னை: அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ஓபிஎஸ் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வ வாதங்கள் நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களான மனோஜ்பாண்டியன், வைத்திலிங்கம் மற்றும் ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/03/24/large/965245.jpgராகுல் தகுதி நீக்கம் | பாஜகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது: திருமாவளவன்

சென்னை: "பாஜகவின் இந்த நடவடிக்கை ராகுல் காந்தியைப் பார்த்து பிரதமரும் அவரது கூட்டாளிகளும் பயப்படுகிறார்கள் என்பதையே காட்டுகிறது. தேர்தலுக்கு ஓராண்டு இருப்பதற்கு முன்பே பாஜகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது என்பதன் அடையாளம் தான் இது" என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் மக்களவை உறுப்பினர் பதவியை அவசர அவசரமாக பாஜக அரசு பறித்திருப்பது ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்டுள்ள மிகப்பெரிய தாக்குதலாகும். இந்தியாவில் தேர்தல் ஜனநாயகத்தையே முற்றாக ஒழித்துக் கட்டுவதற்கான ஒத்திகையாகவே இதைப் பார்க்க வேண்டியுள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இந்த எதேச்சதிகாரப் போக்கை மிக வன்மையாகக் கண்டிக்கிறோம். மக்களவைத் தலைவர் இந்த தகுதி நீக்க ஆணையைத் திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்துகிறோம்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Thursday, March 23, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/03/24/large/965141.jpgஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீண்டும் நிறைவேற்றம்: அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு

சென்னை: ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் சட்டமசோதாவை சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மீண்டும் தாக்கல் செய்தார். அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் மசோதா நிறைவேற்றப்பட்டது.

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. நான்கு மாதங்களுக்குப் பிறகு இந்த மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பினார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/03/23/large/964746.jpgஇந்திய அணிக்கு தேர்வாகியுள்ள மாற்றுத்திறனாளி மாணவி - நிதியுதவி கோரி மதுரை ஆட்சியரிடம் மனு

மதுரை: கஜகஸ்தானில் ஜூலை மாதம் நடைபெறும் ‘பாரா சிட்டிங் வாலிபால்’ விளையாட்டுப்போட்டியில் பங்கேற்க இந்திய அணிக்கு தேர்வாகியுள்ள மதுரை அரசு சட்டக்கல்லூரி மாணவி மாற்றுத்திறனாளி அ.சங்கீதா, ரூ.2.15 லட்சம் நுழைவுக்கட்டணம் செலுத்த வழியில்லாததால் நிதி உதவி செய்யுமாறு மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தார்.

மதுரை அரசு முத்துப்பட்டியைச் சேர்ந்த அ.சங்கீதா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தார். அம்மனுவில், "அரசுப்பள்ளிகளில் ஆரம்பக்கல்வி, மேல்நிலைக்கல்வி படித்து தற்போது மதுரை அரசு சட்டக்கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறேன். எனது தந்தை மாற்றுத்திறனாளி. பெற்றோர் இருவரும் தையல் தொழிலாளிகள். என் குடும்பச்சூழலால் உதவிபெற்று படித்து வருகிறேன்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/03/23/large/964687.jpgமணிக்கு 1000 கி.மீ வேகம், 25 நிமிடத்தில் சென்னை - பெங்களுரூ: ஹைப்பர் லூப் ரயில் திட்ட சாத்தியக் கூறு ஆய்வு   

சென்னை: இந்தியாவில் ஹைப்பர் லூப் (Hyperloop) ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறு ஆய்வை ரயில்வே வாரியம் மேற்கொள்ளவுள்ளது. இதற்கான ஆலோசர்களை தேர்வு செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளது.

உலகில் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது குறித்து தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவில் வந்தே பாரத் ரயில், புல்லட் ரயில் உள்ளிட்ட அதி வேக போக்குவரத்து வசதிகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் அடுத்த கட்டமாக ஹைப்பர் லூப் போக்குவரத்தும் வரவுள்ளது. இதற்கான சாத்தியக் கூறு ஆய்வுகளை இந்திய ரயில்வே வாரியம் மேற்கொள்ளவுள்ளது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/03/23/large/964507.jpgசென்னை மாநகராட்சி பொது இடங்களில் கழிவு கொட்டியவர்களுக்கு அபராதம்

சென்னை: சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை பெருநகர மாநகராட்சியை தூய்மையாகவும், அழகுடனும் பராமரிக்க பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், பொது மற்றும் தனியார் இடங்களில் குப்பை மற்றும் கட்டுமான கழிவு கொட்டுவோருக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

இதன்படி, கடந்த மார்ச் 3 முதல் 16-ம் தேதி வரை பொதுஇடங்களில் குப்பை கொட்டியவர்களுக்கு ரூ.10.78 லட்சம் அபராதம்,கட்டுமானக் கழிவு கொட்டியவர்களுக்கு ரூ.8.80 லட்சம், அரசு, மாநகராட்சி கட்டிடங்கள், பொது இடங்களில் விதிகளை மீறி சுவரொட்டி ஒட்டிய 805 பேருக்கு ரூ.1.62 லட்சம் என மொத்தம் மொத்தம் ரூ.21 லட்சத்து 19 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு்ளது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/03/23/large/964653.jpgரமலான் நோன்பு நாளை முதல் தொடக்கம்: அரசு தலைமை காஜி அறிவிப்பு

சென்னை: ஆண்டுதோறும் ரமலான் பிறைதொடங்கிய நாளில் இருந்து இஸ்லாமியர்கள் நோன்பு நோற்பார்கள். ரமலான் மாத இறுதி நாளில் ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

தமிழகத்தில் இதற்கான பிறை தெரியும் நாளில், நோன்புதொடங்குவதற் கான அறிவிப்பை அரசு தலைமை காஜி வெளியிடுவார். இந்நிலையில், நாளை மார்ச் 24-ம் தேதி முதல் ரமலான் நோன்பு தொடங்கும் என்று அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் அறிவித்துள்ளார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/03/23/large/964621.jpgநாமக்கல் | தொழிலாளர் குடிசைகளுக்கு தீ வைப்பு: முன்னாள் ஊராட்சி தலைவர் வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே ஜேடர்பாளையம் சரளைமேட்டைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் துரைசாமி (57). இவர் அப்பகுதியில் வெல்லம் தயாரிப்பு ஆலை நடத்தி வருகிறார். ஆலையின் ஒரு பகுதியில் வெளிமாநில தொழிலாளர்கள் உள்ளிட்டோர் தங்கும் குடிசைகள் உள்ளன.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 12 மணியளவில் மர்ம நபர்கள் தொழிலாளர் குடிசைகளுக்கு தீ வைத்தனர். தகவல் அறிந்து அங்கு சென்ற கரூர் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலைய வீரர்கள் தீ மேலும் பரவாமல் தடுத்தனர். இதில், 5 குடிசைகள் மற்றும் 3 டிராக்டர்கள் சேதம் அடைந்தன.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Wednesday, March 22, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/03/22/large/964243.jpgதமிழக பாம்பு பிடி வீரர்களுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்த குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு

புதுடெல்லி: தமிழக பாம்பு பிடி வீரர்களான வடிவேல் கோபால்- மாசி சடையன் ஆகியோருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பத்மஸ்ரீவிருது வழங்கி கவுரவித்தார்.

குடியரசு தினத்தை முன்னிட்டு கடந்த ஜனவரி 25-ம் தேதி 2023-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் 106 பேருக்கு அறிவிக்கப்பட்டன. இந்தப் பட்டியலில் 6 பேருக்கு பத்ம விபூஷண், 9 பேருக்கு பத்ம பூஷண் மற்றும் 91 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல திரைப்பட பின்னணி பாடகரும், கர்நாடக இசைக்கலைஞருமான வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷண் அறிவிக்கப்பட்டது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Tuesday, March 21, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/03/22/large/964115.jpgஉகாதி பண்டிகை இன்று கொண்டாட்டம்: ஆளுநர், முதல்வர், தலைவர்கள் வாழ்த்து

சென்னை: உகாதி திருநாளை முன்னிட்டு, தமிழகத்தில் வசிக்கும் தெலுங்கு மற்றும் கன்னட மக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் வெளி யிட்ட வாழ்த்துச் செய்திகள்:

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்