Sunday, December 31, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/01/01/large/1176793.jpgபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை: திருச்சி விமான நிலைய புதிய முனையத்தை தொடங்கி வைக்கிறார்

திருச்சி: விமான நிலைய புதிய முனையம் உட்பட ரூ.19,850 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களின் தொடக்க விழா, பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா ஆகியவற்றில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை (ஜன.2) திருச்சி வருகிறார். விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

திருச்சியில் ரூ.1,112 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள விமான நிலைய புதிய முனையத்தின் திறப்பு விழா, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38-வது பட்டமளிப்பு விழா ஆகியவற்றில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை திருச்சி வருகிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Saturday, December 30, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/12/31/large/1176267.jpgநிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரம்: ஆளுநருடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு

சென்னை: நீண்டகாலமாக நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரம் தொடர்பாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சந்தித்துப் பேசினார்.

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் ரவி நிலுவையில் வைத்துள்ளதாகவும், அவற்றுக்கு ஒப்புதல் அளிக்க காலவரம்பு நிர்ணயம் செய்யக் கோரியும் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த விவகாரம் தொடர்பாக ஆளுநர் ரவி, முதல்வர் ஸ்டாலினை நேரில் அழைத்துப் பேசுமாறு அறிவுறுத்தினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Friday, December 29, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/12/30/large/1175789.jpgசென்னை தீவுத்திடலில் லட்சக்கணக்கில் திரண்ட மக்கள்: ஆளுநர், அமைச்சர்கள் விஜயகாந்துக்கு அஞ்சலி

சென்னை: சென்னை தீவுத்திடலில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு ஆளுநர், மத்திய, மாநில அமைச்சர்கள், தலைவர்கள், ரசிகர்கள், தொண்டர்கள், மக்கள் என லட்சக்கணக்கானோர் நேற்று இறுதி அஞ்சலி செலுத்தினர்.

தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த்(71). உடல்நலக் குறைவால், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நேற்று முன்தினம் காலை 6.10 மணிக்கு இயற்கை எய்தினார். பின்னர் விஜயகாந்த் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சாலிகிராமம் வீடு மற்றும் கோயம்பேடு கட்சி தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/12/30/large/1175811.jpgமக்கள் சிரமமின்றி அஞ்சலி செலுத்துவதற்கு துரிதமாக ஏற்பாடு செய்த முதல்வர் ஸ்டாலின்

சென்னை: தேமுதிக தலைவரான விஜயகாந்த் மறைவையொட்டி அவரது உடல் கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. ஆனால் அங்கு கூட்டம் அளவுக்கு அதிகமாக கூடியதால் அஞ்சலி செலுத்த வந்தவர்கள் மிகவும் சிரமப்பட்டனர். இதற்கிடையே விஜயகாந்தின் உடலுக்கு திரையுலகினர், பொதுமக்கள், ரசிகர்கள், தொண்டர்கள், சிரமமின்றி அஞ்சலி செலுத்த இடம் ஒதுக்கி கொடுக்கும்படி முதல்வர் ஸ்டாலினிடம் பிரேமலதா கோரிக்கை விடுத்தார்.

அதையடுத்து தீவுத்திடலில் அனைத்து ஏற்பாடுகளும் உடனடியாக செய்யப்பட்டு 6 மணி நேரத்தில் இரவோடு இரவாக விஜயகாந்தின் உடல் தீவுத்திடலுக்கு கொண்டுவரப்பட்டது. சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், மாநகர காவல் ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசித்து தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் முன்நின்று செய்து கொடுத்தார். இதனால் அஞ்சலி செலுத்த வந்தவர்கள் வரிசையில் நின்று எந்த சிரமுமின்றி தங்களது கண்ணீரை காணி்க்கையாக்கினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/12/30/large/1175810.jpgகோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலக வளாகத்தில் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் விஜயகாந்த் உடல் அடக்கம்

சென்னை: சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் 72 குண்டுகள் முழங்க, முழு அரசு மரியாதையுடன் விஜயகாந்த் உடல் அடக்கம் செய்யப்பட்டது. ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்வர் ஸ்டாலின், தமிழக அமைச்சர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். லட்சக்கணக்கான தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் திரண்டு, கண்ணீர் மல்க விஜயகாந்துக்கு பிரியாவிடை கொடுத்தனர்.

தேமுதிக நிறுவனத் தலைவரும், நடிகருமான விஜயகாந்த் (71), உடல்நலக் குறைவால் சென்னை அடுத்த மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் காலை 6.10 மணிக்கு காலமானார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Thursday, December 28, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/12/29/large/1175093.jpgதேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். அவருக்கு வயது 71. அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். விஜயகாந்த் உடலுக்கு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்வர் ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் (71), உடல்நலக் குறைவால் சில ஆண்டுகளாக கட்சி மற்றும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் வீட்டிலேயே ஓய்வில் இருந்து வந்தார். கடந்த சட்டப்பேரவை தேர்தலில்கூட அவர் போட்டியிடவில்லை. அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்ததால், அவ்வப்போது பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்று வந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/12/29/large/1175092.jpg“கேப்டன் விஜயகாந்த் தங்கமான மனுஷன்” - விருத்தாசலம் பெண்ணின் கவனம் ஈர்த்த ஃபேஸ்புக் பதிவு

சென்னை: தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் வியாழக்கிழமை காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், ரசிகர்கள், தொண்டர்கள் மற்றும் மக்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இத்தகைய சூழலில் விருத்தாசலம் பெண் ஒருவரின் ஃபேஸ்புக் பதிவு கவனம் ஈர்த்துள்ளது. அந்த பதிவு குறித்து பார்ப்போம்.

“எங்க ஊர் விருத்தாசலம்ல தான் முதன்முறையா எம்.எல்.ஏ ஆனார். அப்போ கம்ப்யூட்டர் கிளாஸ் பத்தி எல்லாம் யோசிச்சுக்கூட பார்க்க முடியாத எங்கள போல எத்தனையோ மிடில் கிளாஸ் பெண்களுக்கு இது எவ்வளவு பெரிய வாய்ப்பு. இது மட்டும் இல்லாம இலவச தையல் பயிற்சி வகுப்பும் இருந்துச்சு. சினிமால கேப்டனா அவர ரொம்ப பிடிச்சாலும் எங்க ஊர் எம்.எல்.ஏ-வா அவர பாத்து பேசினது இன்னும் அவர் மேல் பாசமும் பிரமிப்பும் அதிகமாச்சு. தங்கமான மனுஷன். மிஸ் யூ சார்” என அந்த பதிவில் அப்பெண்மணி குறிப்பிட்டுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/12/29/large/1175091.jpgநள்ளிரவு கடந்தும் விஜயகாந்துக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தும் மக்கள்

சென்னை: தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் வியாழக்கிழமை காலை காலமானார். அவரது உடல் தேமுதிக தலைமை அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் நள்ளிரவு கடந்தும் கண்ணீர் மல்க பொது மக்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி, பிரியாவிடை கொடுத்து வருகின்றனர்.

நீண்ட வரிசையில் காத்திருந்து மக்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது மறைவு செய்தி தேமுதிக தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் மட்டுமல்லாது மக்களையும் கலங்க செய்துள்ளது. அதனால் அவரது உடலுக்கு பெருந்திரளான மக்கள் அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர். அவரது உடல் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 6 முதல் மதியம் 1 மணி வரையில் தீவுத்திடலில் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. அதை தொடர்ந்து மாலை தேமுதிக அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/12/28/large/1175088.jpgவிஜயகாந்த் உடலுக்கு நடிகர் விஜய் அஞ்சலி

சென்னை: வியாழக்கிழமை காலை காலமான தேமுதிக நிறுவனத் தலைவரும், நடிகருமான விஜயகாந்தின் உடலுக்கு நடிகர் விஜய் அஞ்சலி செலுத்தினார். தேமுதிக தலைமை அலுவலகத்தில் வைக்கபட்டுள்ள விஜயகாந்த் உடலை பார்த்து அவர் கலங்கி நின்றார்.

நடிகர் விஜயகாந்த் உடன் சில படங்களில் விஜய் நடித்துள்ளார். அதில் ‘செந்தூரப்பாண்டி’ படத்தை குறிப்பிட்டு சொல்லலாம். அதன் பிறகு அவரது திரை வாழ்க்கை சக்சஸ் பெற்றது. இதனை அவரே வீடியோ பேட்டி ஒன்றில் சொல்லியுள்ளார். அதேபோல விஜய்யின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய முக்கிய திரைப்படங்களில் விஜயகாந்த் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகர் விஜய், விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Wednesday, December 27, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/12/28/large/1174981.jpgசென்னை எண்ணூரில் உர தொழிற்சாலையில் வாயு கசிவு: மூச்சு திணறல், தொண்டை எரிச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை

சென்னை: சென்னை எண்ணூரில் உள்ள தனியார் உரத் தொழிற்சாலையில் திடீரென அமோனியா வாயு கசிவு ஏற்பட்டதால், நூற்றுக்கணக்கான மக்கள் மூச்சு திணறல், தொண்டை எரிச்சலால் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆலையை மூடுமாறு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், உற்பத்தியை நிறுத்தி வைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை எண்ணூர் பெரியகுப்பம் பகுதியில் கோரமண்டல் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் உரத் தொழிற்சாலை உள்ளது. இந்த ஆலைக்கு அமோனியா வாயுதான் முக்கிய மூலப்பொருள் ஆகும். சரக்கு கப்பல்களில் திரவ வடிவில் கொண்டு வரப்படும் அமோனியா வாயு, எண்ணூர் பகுதியில் கடலில் பதிக்கப்பட்டுள்ள குழாய் வழியாக ஆலைக்கு கொண்டு வரப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/12/28/large/1174982.jpgசென்னை வர்த்தக மையத்தில் இன்று வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா: மு.க.ஸ்டாலின், பினராயி விஜயன் பங்கேற்பு

சென்னை: கேரள மாநிலம் வைக்கத்தில் நடைபெற்ற போராட்டத்தின் நூற்றாண்டு விழா சென்னை வர்த்தக மையத்தில் இன்று நடைபெறுகிறது. இதில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நூற்றாண்டு விழா மலரையும், கேரள முதல்வர் பினராயி விஜயன், ‘பெரியாரும் வைக்கம் போராட்டமும்’ என்ற நூலையும் வெளியிடுகின்றனர்.

கேரள மாநிலம் வைக்கம் மகாதேவர் கோயிலை சுற்றியுள்ள தெருக்களில் தாழ்த்தப்பட்டவர்கள் நடந்து செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதை எதிர்த்து கடந்த 1924-ம் ஆண்டு அங்கு மாபெரும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டதை அடுத்து, போராட்டத்தை தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Tuesday, December 26, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/12/27/large/1174506.jpgநிறுவனம் நடத்தி முறைகேடு: சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கைது

சேலம்: பெரியார் பல்கலைக்கழகத்தின் பல்வேறு பணிகளை மேற்கொள்வதற்காக சொந்தமாக நிறுவனம் தொடங்கி, அதன் மூலம் அரசு பணத்தை தவறாக பயன்படுத்தியதாக எழுந்த புகாரின் பேரில், பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் கைது செய்யப்பட்டார்.

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருப்பவர் ஜெகநாதன். இவர், பல்கலைக்கழகத்தின் பல்வேறு பணிகளை மேற்கொள்வதற்காக, விதிகளை மீறி சொந்தமாக ஒரு நிறுவனம் தொடங்கி, அதன் மூலம் அரசு பணத்தை தவறாக பயன்படுத்தியதாக பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கத்தின் சட்ட ஆலோசகராக இருந்த இளங்கோவன் என்பவர், கருப்பூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/12/27/large/1174505.jpgதூத்துக்குடியில் நிர்மலா சீதாராமன் ஆய்வு: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் மழை, வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17, 18-ம் தேதிகளில் பெய்த அதி கனமழையால், பெரும்பாலான பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும். பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.2 ஆயிரம் கோடியை அவசர நிவாரண தூத்து நிதியாக வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம், முதல்வர் ஸ்டாலின், டெல்லி சென்றபோது நேரில் வலியுறுத்தினார். இதையடுத்து. வெள்ள பாதிப்புகளை மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/12/26/large/1174091.jpg“ரஜினிகாந்த் அரசியலுக்கு வராதது வருத்தம்தான்” - லதா ரஜினிகாந்த்

சென்னை: இந்தியா சினிமாவின் உச்ச நடிகரும், தனது கணவருமான நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வராதது தனக்கு வருத்தம் அளித்ததாக லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் அரசியலுக்கு வராதது குறித்து உங்கள் பார்வை என்ன என்ற கேள்வி அவரிடம் முன்வைக்கப்பட்டது. “அவர் அரசியலுக்கு வராதது வருத்தம்தான். ஏனெனில், அவரை நான் ஒரு தலைவராக பார்த்தேன். அவர் சிறந்த தலைவர். அதனால் அது வருத்தமே. இருந்தாலும் அதற்கான காரணமும் ஏற்றுக்கொள்ள கூடிய வகையில் இருந்தது. அதற்கு நாம் மதிப்பு கொடுக்க வேண்டும்” என லதா ரஜினிகாந்த் தெரிவித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Monday, December 25, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/12/26/large/1173987.jpgகுடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 ரொக்கம், பொருட்களுடன் ஜனவரி 2-வது வாரத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு: தமிழக அரசு ஆலோசனை

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 ரொக்கத்துடன், பச்சரிசி, சர்க்கரை, முழுகரும்பு அடங்கிய பரிசு தொகுப்பை ஜனவரி 2-வது வாரம் முதல் வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரொக்கப் பணத்துடன், பச்சரிசி, கரும்பு, வெல்லம் அல்லது சர்க்கரை ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. அதேபோல, வரும் 2024 பொங்கல் பண்டிகைக்கும் பரிசு தொகுப்பு குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Sunday, December 24, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/12/25/large/1173493.jpgதூத்துக்குடியில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிர்மலா சீதாராமன் நாளை ஆய்வு

சென்னை: பிரதமர் மோடி உத்தரவின்பேரில், நாளை தூத்துக்குடிக்கு வரும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெள்ள சேதங்களை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்.

வங்கக்கடலில் மிக்ஜாம் புயல்காரணமாக கடந்த 3, 4-ம் தேதிகளில் பெய்த கனமழையால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த 7-ம் தேதி வந்து, வெள்ள சேதத்தை பார்வையிட்டார். தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, தேவையான உதவிகளை மத்திய அரசு வழங்கும் என்று தெரிவித்தார். அப்போது, இடைக்கால நிவாரணமாக ரூ.5,060 கோடி வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்ததுடன், பிரதமருக்கு கடிதமும் எழுதினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/12/25/large/1172954.jpgஉலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் கோலாகலம்: தமிழக தேவாலயங்களில் சிறப்பு கூட்டுப் பிரார்த்தனை!

சென்னை: உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள வேளாங்கண்ணி, தூத்துக்குடி, சென்னை - சாந்தோம், திருச்சி, மதுரை, நெல்லை, கோவை, கொடைக்கானல், புதுச்சேரி உட்பட பல்வேறு இடங்களில் அமைந்துள்ள தேவாலயங்களில் சிறப்பு கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது.

இயேசு கிறிஸ்து பிறப்பை முன்னிட்டு இந்த தேவாலயங்கள் அனைத்தும் வண்ண மயமாக காட்சி அளித்தது. இங்கு அமைக்கப்பட்டு உள்ள குடில்களில் குழந்தை இயேசுவின் சொரூபம் திறக்கப்பட்டு, வழிபாட்டுக்காக வைக்கப்பட்டது. இதன்போது சிறப்பு திருப்பலியும் நடைபெற்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Saturday, December 23, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/12/24/large/1172868.jpgபொன்முடியுடன் மு.க.அழகிரி சந்திப்பு

சென்னை: திமுக துணைப் பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான க.பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இருவரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்த நீதிமன்றம், இருவருக்கும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.50 லட்சம் அபராதம் விதித்தது. இந்த தீர்ப்பை தொடர்ந்து, பொன்முடி அமைச்சர் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை இழந்தார்.

இந்த தீர்ப்பை தொடர்ந்து, நேற்று முன்தினம்சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் முதல்வர் ஸ்டாலின் இல்லத்துக்கு சென்ற பொன்முடி, உச்சநீதிமன்றத்தின் மேல்முறையீடு செய்வது குறித்து முதல்வருடன் சுமார் 15 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினார். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பொன்முடியின் இல்லத்துக்கு தொடர்ந்து செல்லும், சக அமைச்சர்களும், திமுக முக்கிய நிர்வாகிகளும் அவரை சந்தித்து வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/12/24/large/1172866.jpgவிரைவு பேருந்துகளில் முன்பதிவு இருக்கைகள் நிரம்பின: ஆம்னி பேருந்துகளில் கட்டண உயர்வால் பயணிகள் அவதி

சென்னை: சென்னை, கோவை, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் கல்வி, பணி, தொழில் காரணமாக வசிக்கும் பலரும்பண்டிகை, தொடர் விடுமுறை நாட்களில் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம்.அந்த வகையில், கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறையும் நேற்று முதல் விடப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருப்பவர்களும் நேற்று சொந்த ஊருக்கு புறப்பட்டனர்.

குறிப்பாக, சென்னையில் இருந்து சொந்த வாகனங்களில் செல்வோர் நேற்று காலை முதலே பயணத்தை தொடங்கியதால் புறநகர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/12/24/large/1172906.jpgஆடு, மாடு, கோழி, மீன் வளர்ப்பு; விவசாயிகளுக்கு ரூ.1,500 கோடிக்கு வட்டியில்லா கடன் வழங்க முடிவு: அமைச்சர் பெரியகருப்பன் தகவல்

சென்னை: தமிழகத்தில் ஆடு, மாடு, கோழி, மீன் ஆகியவற்றை வளர்க்கும் விவசாயிகளுக்கு வட்டியில்லா கூட்டுறவுக் கடன் ரூ.1,500 கோடி வழங்கப்படவுள்ளது என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசின் கூட்டுறவுத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் உள்ள கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் பொதுமக்களுக்கு பல்வேறு வகையான கடன்களை வழங்கி வருகின்றன. வேளாண் கடன் அட்டை திட்டத்தின் கீழ் கால்நடை வளர்ப்பு (ஆடு, மாடு கோழி) மீன் வளர்ப்பு மற்றும் அவை சார்ந்த தொழில்களில் ஈடுபடும் விவசாயிகளுக்கு வட்டியில்லா கூட்டுறவு கடனாக ரூ.1,500 கோடி அளவில் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார். அதன்படி, 2023-24 வேளாண் மற்றும் உழவர் நலத்துறை மானியக் கோரிக்கையின்போது வேளாண் மற்றும் உழவர்நலத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் அறிவிப்பு வெளியிட்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Friday, December 22, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/12/23/large/1172366.jpgநெல்லை, தூத்துக்குடியில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 55 ஆக உயர்வு: முழு வீச்சில் மீட்பு, நிவாரண நடவடிக்கைகள்

தூத்துக்குடி/ திருநெல்வேலி: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தில் 42 பேரும், திருநெல்வேலி மாவட்டத்தில் 13 பேரும் என மொத்தம் 55 பேர் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. இதற்கிடையில், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளதாக தமிழக அரசின் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 17 மற்றும் 18-ம் தேதிகளில் பெய்த அதிகனமழையும், அதைத்தொடர்ந்து தாமிரபரணி உள்ளிட்ட ஆறுகளில் பெருக்கெடுத்த வெள்ளமும் மக்களின் வாழ்க்கையை புரட்டிப் போட்டுள்ளது. தற்போது மழை வெள்ளம் வடிய, வடிய பாதிப்புகளின் உக்கிரம் வெளியே தெரியத் தொடங்கியிருக்கிறது. வாழ்நாளில் சிறுகச்சிறுக சேமித்து வாங்கிய ஏராளமான வீட்டு உபயோகப் பொருட்களை வெள்ளம் விழுங்கிக் கொண்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/12/23/large/1172365.jpgசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 5 லட்சம் விண்ணப்பங்களை பரிசீலித்து நிவாரணம்: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 98 சதவீதம் நிவாரணம் சென்றுள்ளது. மேலும் 5 லட்சம் பேர் நிவாரணம் வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். அவர்களது விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்பட்டு, உரிய வகையில் நிவாரணம் வழங்கப்படும். தென் மாவட்ட மக்களுக்கும் விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என்றுமுதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது. நம் இந்திய நாடு என்பது பல்வேறு மதத்தை பின்பற்றும் மக்களும் ஒற்றுமையாக வாழும் நாடு.நாம் ஒற்றுமையாக சகோதரர்களாக உள்ளோம். இந்த ஒற்றுமைஉருவாவதை சிலரால் சகித்துக்கொள்ள முடியவில்லை. திராவிட மாடல் ஆட்சியில் எல்லா பிரிவு மக்களும் அமைதியாக வாழ்கின்றனர். இதை தடுக்கஒரு கூட்டம் தவியாய் தவிக்கிறது. ஆனால், இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அந்த கூட்டத்தால் இந்த மண்ணில் வெற்றி பெற முடியாது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/12/23/large/1172364.jpgபுதிய வகை கரோனா தொற்று: முகக் கவசம் அணிய மக்களுக்கு அறிவுறுத்தல்

சென்னை: அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம், காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

நாடு முழுவதும் பரவலாக ஜே.என்.1 வகை கரோனா தொற்று பரவிவருகிறது. தமிழகத்தில் தினமும் 20-க்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சென்னை, செங்கல்பட்டு, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்பு அதிகம் உள்ளது. அதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இணைநோயாளிகள், கர்ப்பிணிகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் முகக் கவசம் அணிய வேண்டும் என்று கடந்த வாரம் சுகாதாரத் துறை அறிவுறுத்தியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/12/23/large/1172363.jpgமழை, வெள்ளத்தால் தென்மாவட்டங்கள் பாதிக்கப்பட்டபோது ‘இண்டியா’ கூட்டத்தில் முதல்வர் பங்கேற்பதா? - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டு

புதுடெல்லி: மழை, வெள்ளத்தால் தமிழகத்தின் தென் மாவட்டங்கள் பாதிக்கப்பட்டபோது முதல்வர் ஸ்டாலின், டெல்லியில் இண்டியா கூட்டணி கூட்டத்தில் இருந்தார். ‘வெள்ளம் காரணமாக என்னால் கூட்டத்துக்கு வரமுடியாது. என் மண், மக்கள் எனக்கு முக்கியம்’ என்று, அந்த கூட்டத்தை தள்ளிவிட்டு அவர் தமிழகத்தில் இருந்திருக்க வேண்டும். ஆனால், மத்திய அரசு அவருக்கும் முன்பாகவே உதவிக்கரம் நீட்டிவிட்டது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக டெல்லியில் தமிழக செய்தியாளர்களிடம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று பேசினார். அவர்களது கேள்விகளுக்கும் பதில் அளித்தார். அவர் கூறியதாவது: திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசியில் 50 செ.மீ. அளவுக்கு மழை பெய்வது குறித்த தகவல் எங்களுக்கு 18-ம் தேதி காலையில் கிடைத்தது. இதுபற்றி உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் உடனே தெரிவித்தேன். விரைந்து மீட்பு பணிகளை மேற்கொள்ளுமாறு தேசிய பேரிடர் மீட்பு படை (என்டிஆர்எஃப்), ராணுவம் உள்ளிட்ட துறைகளுக்கு அவர் என் முன்னிலையிலேயே உத்தரவிட்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Thursday, December 21, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/12/22/large/1171805.jpgநெல்லை, தூத்துக்குடியில் அதிகம் பாதிக்கப்பட்ட தாலுகாக்களில் குடும்ப அட்டைக்கு ரூ.6,000 நிவாரணம் அறிவித்தார் முதல்வர்: குமரி, தென்காசிக்கு ரூ.1,000 நிவாரணம்

திருநெல்வேலி: திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் மழை,வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட தாலுகாக்களில் உள்ள மக்களுக்கு குடும்ப அட்டை அடிப்படையில் நிவாரண தொகையாக ரூ.6,000 வழங்கப்படும். இந்த 2 மாவட்டங்களின் இதர தாலுகாக்கள் மற்றும் கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் ரூ.1,000 வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களிலும் கடந்த 16-ம்தேதி இரவு முதல் 18-ம் தேதி மதியம் வரை இடைவிடாமல் கனமழை கொட்டியது. இதில் கடுமையாகபாதிக்கப்பட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் வெள்ள சேதத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று பார்வையிட்டார். தூத்துக்குடி குறிஞ்சிநகர்போல்பேட்டை பகுதியிலும், பின்னர் திருநெல்வேலிசந்திப்பிலும் வெள்ள பாதிப்புகளை ஆய்வுசெய்த முதல்வர், மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/12/21/large/1171380.jpgதென்மாவட்ட வெள்ளம் காரணமாக ‘வெல்லும் ஜனநாயகம் மாநாடு’ ஒத்திவைப்பு: திருமாவளவன்

சென்னை: தென் மாவட்ட வெள்ளம் காரணமாக 29-ம் தேதி திருச்சியில் நடைபெற இருந்த விசிக மாநாடு தள்ளிவைக்கப்படுவதாக அக்கட்சித் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் டிச. 23-ம் தேதி அன்று திருச்சிராப்பள்ளியில் ‘வெல்லும் ஜனநாயகம் மாநாடு’ நடைபெறுவதாக அறிவித்திருந்தோம். ஆனால், எதிர்பாராத வகையில் கடந்த டிச. 4-ம் தேதி அன்று சுழன்றடித்த கடும் புயல் மற்றும் கனமழையால், பெருக்கெடுத்தோடிய பெருவெள்ளத்தால், சென்னை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட வட மாவட்டங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டன. அங்கே இயல்பு வாழ்க்கை திரும்புவதற்கே பல நாட்கள் தேவைபட்டன. இன்னும் பல இடங்களில் மக்கள் இயல்பு வாழ்வுக்குத் திரும்ப இயலாத நிலையே நீடிக்கிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Wednesday, December 20, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/12/21/large/1171299.jpgதூத்துக்குடி மாவட்டத்தில் மழை, வெள்ள பாதிப்புகளை மத்திய குழுவினர் பார்வையிட்டனர்: ரூ.5,000 கோடி அளவுக்கு சேதம்

தூத்துக்குடி/ திருநெல்வேலி: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தில் மத்திய குழுவினர் நேற்று ஆய்வை தொடங்கினர். ரூ.5 ஆயிரம் கோடி அளவுக்கு சேதாரம் ஏற்பட்டிருப்பதாக தமிழகவருவாய் நிர்வாக கூடுதல் ஆணையர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

குமரிக்கடலில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் கடந்த 16-ம் தேதி இரவு முதல் 18-ம் தேதி பகல் வரை இடைவிடாத மழை பெய்தது. தாமிரபரணி உள்ளிட்ட ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. ஆறுகளின் கரையோரம் இருக்கும் அனைத்து ஊர்களையும் வெள்ளம் சூழ்ந்தது. உயிர்ச்சேதம், சொத்துகள் சேதம், பொருட்சேதம், பயிர்ச்சேதம், கால்நடைகள் சேதம்என பல வகைகளிலும் இந்த 2மாவட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/12/20/large/1170901.jpgஎண்ணூர் கிரீக் பகுதியில் எண்ணெய் கழிவுகள் முழுமையாக அகற்றம்: சுற்றுச்சூழல் துறை செயலாளர்

சென்னை: எண்ணூர் கிரீக் பகுதியில் எண்ணெய் கழிவுகள் முழுமையாக அகற்றப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் துறையின் செயலாளர் சுப்ரியா சாகு தெரிவித்துள்ளார். கழிவுகளை அகற்றும் பணி நிறைவு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிக்ஜாம் புயல், கனமழை காரணமாக தலைநகர் சென்னையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் மணலியில் உள்ள சிபிசிஎல் நிறுவனத்தில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டது. இதனால், எண்ணூர் கடல் முகத்துவாரத்தில் எண்ணெய் படலம் படர்ந்து மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, எண்ணெய் படலத்தை அகற்றும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பணியில் நான்கு ஏஜென்சிகள் ஈடுபட்டன. மீனவ மக்களும் இந்த பணியில் இணைந்து செயல்பட்டனர். இந்நிலையில், தற்போது எண்ணூர் கிரீக் பகுதியில் எண்ணெய் கழிவுகள் முழுமையாக அகற்றப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் துறையின் செயலாளர் சுப்ரியா சாகு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியாகி உள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Tuesday, December 19, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/12/20/large/1170798.jpgவருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்கு: அமைச்சர் பொன்முடி குற்றவாளி என தீர்ப்பு

சென்னை: வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.72 கோடி அளவுக்கு சொத்து குவித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகிய இருவரையும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், தண்டனை விவரங்களை நாளைஅறிவிக்கிறது.

தமிழகத்தின் தற்போதைய உயர்கல்வி துறை அமைச்சர் க.பொன்முடி கடந்த 2006-11 திமுக ஆட்சி காலத்தில் உயர்கல்வி, கனிமவளத் துறை அமைச்சராக இருந்தார். அப்போது, வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.72 கோடி அளவுக்கு சொத்து குவித்ததாக பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு எதிராக அதிமுக ஆட்சி காலத்தில் விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் கடந்த 2011-ம் ஆண்டுஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/12/20/large/1170797.jpgடெல்லியில் பிரதமர் மோடியுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு: வெள்ள நிவாரணம் விரைந்து வழங்க கோரினார்

சென்னை: டெல்லியில் பிரதமர் மோடியை நேற்று இரவு சந்தித்த முதல்வர் ஸ்டாலின், வெள்ள நிவாரண நிதியை உடனே வழங்க வலியுறுத்தி மனு அளித்தார்.

மிக்ஜாம் புயல், வட தமிழக கடலோர பகுதிகளை நெருங்கி வந்ததால், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் கடந்த 3, 4-ம் தேதிகளில் கனமழை பெய்தது. கடந்த 7-ம் தேதி வெள்ள சேதத்தை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பார்வையிட்டார். இடைக்கால நிவாரணமாக ரூ.5,060 கோடி வழங்குமாறு பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதினார். இதைத் தொடர்ந்து, மத்திய குழுவினர் 3 நாட்கள் ஆய்வு செய்தனர். இந்த சூழலில், குமரிக்கடலில் உருவான காற்று கீழடுக்கு சுழற்சியால் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 தென் மாவட்டங்களில் கடந்த 17, 18-ம் தேதிகளில் அதிகனமழை பெய்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/12/19/large/1170385.jpgதென்மாவட்டங்களில் கனமழை | தூத்துக்குடியில் முதல்வர் ஸ்டாலின் வியாழக்கிழமை ஆய்வு

சென்னை: தென்மாவட்டங்களில் கனமழை பதிவான நிலையில் தூத்துக்குடியில் வியாழக்கிழமை அன்று முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். இது குறித்து வெளியாகி உள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையின் காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்கொள்ளவும் மக்களுக்குத் தேவையான மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அமைச்சர்கள் மற்றும் ஆட்சிப்பணி அலுவலர்களும் உடனடியாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அனுப்பிவைக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Monday, December 18, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/12/19/large/1170310.jpgநியோ மேக்ஸ் நிறுவனத்தின் ரூ.207 கோடி சொத்து முடக்கம்

சென்னை: மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட நியோ மேக்ஸ் என்ற நிதி நிறுவனம் நூறு கோடி ரூபாய்க்கு மோசடியில் ஈடுபட்டதாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடந்ததாக வந்த புகாரின் பேரில் அமலாக்கத்துறையும் விசாரிக்கிறது. அந்த வகையில், தற்போது நியோ மேக்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.207 கோடி மதிப்பிலான அசையா சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. இதுகுறித்து அமலாக்கத்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/12/19/large/1170304.jpgதிருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் வரலாறு காணாத அதிகனமழை கொட்டியது: மீட்பு பணியில் பேரிடர் மீட்பு படை, ராணுவம்

திருநெல்வேலி/ நாகர்கோவில்/ தென்காசி/ தூத்துக்குடி/ சென்னை: விடிய விடிய கொட்டித் தீர்த்த அதிகனமழையால் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. பல பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் கடந்த சனிக்கிழமை இரவு தொடங்கி கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு முழுவதும் விடிய விடிய இந்த கனமழை தொடர்ந்தது. நேற்று காலை 10 மணி வரை கனமழை பெய்து கொண்டே இருந்தது.

தாமிரபரணியில் 1 லட்சம் கனஅடி: திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகள் நிரம்பியதை அடுத்து அணைகளுக்கு வரும் தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் நேற்று அதிகாலை முதல் திறந்துவிடப்பட்டுள்ளது. அணைகளில் இருந்து வரும் தண்ணீர் மற்றும் காட்டாற்று வெள்ளமாக வந்து சேரும் தண்ணீர் என்று தாமிரபரணியில் 1 லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் பாய்ந்தோடுகிறது. இதனால், ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரையைத் தாண்டி தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. தாமிரபரணி உற்பத்தியாகும் பாபநாசம் தொடங்கி, கடலில் சேரும் திருச்செந்தூர் அருகே புன்னக்காயல் வரையிலும் ஆற்றின் இருபுறமும் உள்ள நகரங்கள், கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/12/19/large/1169990.jpgதென்மாவட்டங்களில் கனமழை: வானிலை முன்னறிவிப்பில் ஏமாற்றம் - அமைச்சர் மனோ தங்கராஜ்

சென்னை: தென்மாவட்டங்களில் கனமழை காரணமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் குமரி மாவட்டங்களில் மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மழை குறித்த வானிலை முன்னறிவிப்பு ஏமாற்றம் தருவதாக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் ட்வீட் செய்துள்ளார். அதில் அவர் இதனை தெரிவித்துள்ளார். “தமிழகத்தில் பேரழிவை ஏற்படுத்திய மழை வெள்ளத்துக்கு பிறகு நமது வானிலை ஆய்வுத் துறையின் செயல்பாடுகள் மற்றும் இதுபோன்ற இயற்கை பேரழிவு நேரங்களில் நமது ஒருங்கிணைந்த இயக்கம் என இரண்டையும் குறித்து சிந்தித்துப் பார்க்க வேண்டியது முக்கியம். வானிலை முன்னறிவிப்பில் துல்லியமான கணிப்பு என்பது ஏமாற்றம் தரும் வகையில் அமைந்துள்ளது. மழையின் வீரியம் குறித்து சரியாக கணிக்கப்படவில்லை. மழை எச்சரிக்கை போதுமான அவகாசம் அளிக்கும் வகையில் இல்லை” என அவர் தெரிவித்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/12/19/large/1169989.jpgதென்மாவட்டங்களில் கனமழை: சேலத்தில் 24-ம் தேதி நடைபெறவிருந்த திமுக இளைஞரணி மாநாடு ஒத்திவைப்பு

சென்னை: தமிழகத்தின் தென்மாவட்டங்களில் கனமழை பதிவான நிலையில் சேலத்தில் வரும் டிச. 24-ம் தேதி நடைபெறவிருந்த திமுக இளைஞரணி மாநில மாநாடு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:

தென் மாவட்டங்களில் பெய்து வரும் அதி கனமழை காரணமாக, வரும் டிச. 24, 2023 அன்று சேலத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த திமுக இளைஞர் அணி இரண்டாவது மாநில மாநாடு ஒத்திவைக்கப்படுகிறது. இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Sunday, December 17, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/12/18/large/1169896.jpgரூ.720 கோடி செலவில் காற்றாலை, சூரியசக்தியால் 4,000 மெகாவாட் மின்உற்பத்தி: தமிழக மின்வாரியம் திட்டம்

சென்னை: காற்றாலை, சூரியசக்தி மூலம் ரூ.720 கோடி செலவில் 4 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய மின்வாரியம் திட்டமிட்டுள்ளது.

காற்றாலை மற்றும் சூரியசக்தி மின்சாரத்தை கூடுதலாக எடுத்துச் செல்வதற்காக பசுமைவழித் தடத்தின் (கிரீன் காரிடார்) 2-ம் கட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின்கீழ் திருநெல்வேலி மாவட்டம் சமூக ரங்கபுரத்தில் 400 கிலோ வோல்ட் திறன், கன்னியாகுமரி மாவட்டம் முப்பந்தல், திருப்பூர் மாவட்டம் பூலவாடியில் தலா 230 கிலோ வோல்ட்திறனில் துணைமின் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/12/18/large/1169889.jpgதென் மாவட்டங்களில் கனமழையால் வெள்ளப்பெருக்கு: குடியிருப்புகளில் மழைநீர் புகுந்தது

திருநெல்வேலி: திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவுதொடங்கி, நேற்று இரவு வரை பலமணி நேரம் இடைவிடாமல் பெய்த மழையால் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தது. ஆறுகள், அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தென் இலங்கை கடற்கரையை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு தொடங்கிய மழை, நேற்று இரவு வரை இடைவிடாது பெய்து கொண்டே இருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Saturday, December 16, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/12/17/large/1169339.jpg‘காசி தமிழ் சங்கமம்’ பெயரில் சென்னை வழியாக புதிய வாராந்திர ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: ‘காசி தமிழ் சங்கமம்’ என்ற பெயரில், கன்னியாகுமரியில் இருந்து சென்னை பெரம்பூர் வழியாக பனாரஸுக்கு புதிய வாராந்திர விரைவு ரயில் டிச.28-ம் தேதி முதல் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கலாச்சார மையங்களாக திகழும் வாராணசிக்கும், தமிழகத்துக்கும் இடையேயான பிணைப்பைப் புதுப்பிக்கும் வகையில், காசி தமிழ் சங்கமத்தின் முதல்கட்ட நிகழ்வு கடந்த ஆண்டு தொடங்கியது. இது தமிழக மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், ‘காசி தமிழ் சங்கமம்’ பெயரில் கன்னியாகுமரியில் இருந்து மதுரை, திருச்சி, விழுப்புரம், சென்னை பெரம்பூர் வழியாக பனாரஸுக்கு புதிய வாராந்திர ரயில் டிச.28-ம் தேதி முதல் இயக்கப்பட உள்ளது. இதை முன்னிட்டு, சிறப்பு ரயிலாக இன்று (டிச.17) கன்னியாகுமரியில் இருந்து மாலை 5:30 மணிக்கு புறப்பட்டு, 3-வது நாள் இரவு 11:35 மணிக்கு பனாரஸ் செல்கிறது. இந்த ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைப்பார் என கூறப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Friday, December 15, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/12/16/large/1168881.jpgமாவட்ட செயலாளர்களுடன் 18-ல் ஓபிஎஸ் ஆலோசனை

சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மாவட்ட செயலாளர்களுடன் சென்னையில் வரும் 18-ம் தேதி ஆலோசனை நடத்துகிறார். இதில் கோவை மாநாடு நடத்துவது தொடர்பாக ஆலோசிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் தொடர் சட்டப் போராட்டம் நடத்தி வரும் நிலையில் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறார். தற்போது கட்சி பெயர், கொடியை பயன்படுத்தக் கூடாது எனவும் உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதை எதிர்த்து பன்னீர்செல்வம் மேல்முறையீடும் செய்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/12/16/large/1168876.jpgசென்னை வேளச்சேரியில் வெள்ள நிவாரணம் ரூ.6,000: முதல்வர் நாளை வழங்குகிறார்

சென்னை: மிக்ஜாம் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.6,000 நிவாரணம் வழங்கும் பணியை, சென்னை வேளச்சேரியில் முதல்வர் ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்.

மிக்ஜாம் புயல், கனமழை, வெள்ளத்தால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதைஅடுத்து, இடைக்கால நிவாரணமாக ரூ.5,060 கோடி வழங்க வேண்டும் என்று பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். மத்திய குழுவினர் வந்து பார்வையிட்ட நிலையில், தற்காலிக நிவாரணமாக ரூ. 7,033 கோடியும், நிரந்தர நிவாரணமாக ரூ.12,659 கோடியும் வழங்க வேண்டும் என்று முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/12/15/large/1168474.jpgகாசி தமிழ் சங்கமம் 2.0 | சென்னையிலிருந்து முதல் குழுவின் பயணத்தை தொடங்கி வைத்த ஆளுநர்

சென்னை: இரண்டாம் கட்ட காசி தமிழ் சங்கமம் வரும் டிசம்பர் 17 முதல் 30 வரை காசியில் நடைபெறுகிறது. இதற்காக 216 பேர் அடங்கிய முதல் குழுவின் பயணத்தை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

காசி தமிழ் சங்கமத்தின் இரண்டாம் கட்டம், வரும் டிசம்பர் 17 முதல் 30 வரை காசியில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க கங்கை நதியின் பெயரில் அமைந்த முதல் குழுவில் இடம்பெற்றுள்ள சென்னை மாணவர்கள் அடங்கிய 216 கொண்ட குழுவினர் இன்று (டிச.15) சென்னையில் இருந்து புறப்பட்டனர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, கொடியசைத்து அனுப்பி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஆற்காடு நவாப், ராமகிருஷ்ணா மடத்தைச் சேர்ந்த துறவிகள் மற்றும் பிற பிரமுகர்கள் பங்கேற்றனர். அந்தக் குழு புறப்படுவதற்கு முன்பு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Thursday, December 14, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/12/15/large/1168342.jpgசேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் அருகே கருணாநிதி சிலை அமைக்க இடம் கொடுக்க விரும்பவில்லை: நில உரிமையாளர் தகவல்

சேலம்: சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவுவாயில் பகுதியில் சிறு அருங்காட்சியகத்தை அமைக்க விரும்புவதாக வர்மா கன்ஸ்ட்ரக்சன் நிர்வாக இயக்குநர் விஜயவர்மன் கூறினார்.

சேலம்-ஏற்காடு சாலையில் 1935-ல்டி.ஆர்.சுந்தரத்தால் தொடங்கப்பட்ட மாடர்ன் தியேட்டர்ஸ் ஸ்டுடியோவில் முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, எம்ஜிஆர், ஜானகி உள்ளிட்டோர் பணிபுரிந்துள்ளனர். 1982 வரை மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் சினிமா தயாரிப்பில் ஈடுபட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/12/15/large/1168390.jpgஎண்ணூர் எண்ணெய் கழிவுகளை சிபிசிஎல் டிச.17-ம் தேதிக்குள் அகற்ற வேண்டும்: தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை: எண்ணூர் முகத்துவாரப் பகுதியில் தேங்கியுள்ள எண்ணெய் கழிவுகளை டிசம்பர் 17-ம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என்று சிபிசிஎல் நிறுவனத்துக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.18-ம் தேதி நடைபெறும் விசாரணையின்போது, அதுதொடர்பான அறிக்கையை சிபிசிஎல், தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

வடசென்னையில் பக்கிங்ஹாம் கால்வாய் வழியாக வெளியேறிய பெட்ரோலிய எண்ணெய்க் கழிவு, கொசஸ்தலை ஆற்றில் கலந்து கடலில் பரவியுள்ளது. இதனால் மீனவர்களின் படகுகள் மற்றும் மீன்பிடி வலைகள் பாழாகி தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். குடியிருப்பு பகுதியில் புகுந்த வெள்ளத்தில் கலந்து, வீடுகளுக்குள்ளும் எண்ணெய் கழிவுகள் படிந்து, பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Wednesday, December 13, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/12/14/large/1167901.jpgசென்னையில் அனைத்து ரேஷன் அட்டைக்கும் நிவாரண தொகை ரூ.6,000 கிடைக்குமா? - புதிய வழிகாட்டுதல்களுடன் அரசாணை வெளியீடு

சென்னை: ‘மிக்ஜாம்’ புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அறிவிக்கப்பட்ட ரூ.6,000 வெள்ள நிவாரணம் யாருக்கெல்லாம் கிடைக்கும் என்பது குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. வருமானவரி செலுத்துவோர், மத்திய, மாநில அரசு பணியாளர்கள் பாதிப்பைக் குறிப்பிட்டு நியாயவிலைக் கடைகள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வருவாய்த் துறை செயலர் வே.ராஜாராமன் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:

‘மிக்ஜாம்’ புயல் வெள்ளம் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவித்தொகையாக ரூ.6,000 ரொக்கமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 9-ம் தேதி அறிவித்தார். இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி வழங்குவது தொடர்பாக, வருவாய் நிர்வாக ஆணையர் உரிய முன்மொழிவுகளை அனுப்பினார். அதில், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, வெள்ள நிவாரணத் தொகையை சம்பந்தப்பட்ட நியாயவிலைக் கடைகள் மூலம் ரொக்கமாக வழங்கலாம். கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் டோக்கன்களை முன்னதாகவே கூட்டுறவுத் துறை மூலம் வழங்கலாம் என்று தெரிவித்திருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/12/13/large/1167464.jpgஎண்ணூர் எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணியில் 75 படகுகள், 300 பணியாட்கள் தீவிரம்

சென்னை: சென்னை பக்கிங்ஹாம் கால்வாய், எண்ணூர் கழிமுக பகுதி உட்பட எண்ணெய் கசிவு ஏற்பட்ட இடங்களை கண்டறிந்து உடனடியாக அவற்றை நீக்குமாறு சிபிசிஎல் நிறுவனத்துக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த பணியில் 75 படகுகள், 300 பணியாட்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து செய்தி மக்கள் தொடர்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

மாநில எண்ணெய் நெருக்கடி மேலாண்மை குழு கூட்டம் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் இன்று நடைபெற்றது. தமிழ்நாடு அரசின் உயர் அதிகாரிகளும், சென்னை பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனத்தின்(CPCL) அதிகாரிகளும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். எண்ணூர் கிரீக் பகுதியில் நடைபெற்று வரும் நிவாரணப் பணிகளையும், பாதிக்கப்பட்ட கிராமங்களையும் இந்தக் குழு ஆய்வு செய்தது. தற்போது, அப்பகுதியில் நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. எண்ணெய் பரவுவதைக் தடுப்பதற்காக பூமர்கள் (Boomers) வைக்கப்பட்டுள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/12/13/large/1167463.jpgநியோமேக்ஸ் மோசடி வழக்கில் போலீஸ் நடவடிக்கை போதுமானது அல்ல: உயர் நீதிமன்றம் அதிருப்தி

மதுரை: ‘நியோமேக்ஸ் மோசடி வழக்கில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாரின் தற்போதைய நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை’ என உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

தஞ்சாவூரைச் சேர்ந்த கவுதமி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: “மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட நியோமேக்ஸ் நிதி நிறுவனம் தமிழகம் முழுவதும் பல ஆயிரம் பேரிடம் கூடுதல் வட்டி மற்றும் வீட்டடி மனை தருவதாக கூறி பல ஆயிரம் கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்தது. இந்த மோசடி குறித்து மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து, நியோமேக்ஸ் இயக்குனர்கள், முகவர்கள் என பலரை கைது செய்தனர். இவர்களில் சிலர் ஜாமீனில் வெளிவந்துள்ளனர்.
நியோமேக்ஸ் நிதி நிறுவனத்தில் நான் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு ரூ.1 கோடி முதலீடு செய்தேன். வட்டியும் தரவில்லை. வீட்டடி மனையும் வழங்கவில்லை. முதலீட்டாளர்களின் பணத்தை நிதி நிறுவன இயக்குனர்கள் வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/12/13/large/1167462.jpgஇந்தியாவிலேயே முதல் முறையாக பிரமாண்ட ஜல்லிக்கட்டு மைதானம்: இறுதிகட்டத்தில் பணிகள் @ அலங்காநல்லூர்

மதுரை: இந்தியாவிலேயே முதல் முறையாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அலங்காநல்லூர் அருகே ரூ.44 கோடியில் பிரமாண்டமாக கட்டப்பட்டு வரும் மைதானத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடக்க உள்ளது. இந்த மைதான கட்டுமானப்பணியை டிசம்பரில் முடிக்க, இறுதிக்கட்டப் பணிகள் மிக தீவிரமாக நடக்கிறது.

வீர விளையாட்டு என்று அதன் பெயரில் மட்டுமல்லாமல், உயிரை கொடுத்து வீரத்தை நிரூபிக்கும் விளையாட்டாக ஜல்லிக்கட்டு பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், இந்த விளையாட்டில் பலர் உயிரிழந்தாலும் இந்த விளையாட்டின் ஆர்வமும், விறுவிறுப்பும் குறையாமல் பல தடைகளை தாண்டி நடக்கிறது. நூற்றாண்டுகளை கடந்து நடக்கும் இந்த விளையாட்டு, தமிழர்களின் பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் விளையாட்டாக கருதப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Tuesday, December 12, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/12/13/large/1167373.jpgஎண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிபிசிஎல் நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டும்: தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு

சென்னை: சென்னை பக்கிங்ஹாம் கால்வாய், எண்ணூர் கழிமுக பகுதி உட்பட எண்ணெய் கசிவு ஏற்பட்டஇடங்களை கண்டறிந்து உடனடியாக அவற்றை நீக்குமாறு சிபிசிஎல் நிறுவனத்துக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது. வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/12/13/large/1167375.jpgபுயலால் பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மத்திய குழுவினர் நேரில் ஆய்வு

சென்னை: சென்னை வந்த மத்திய குழுவினர் இரண்டு குழுக்களாக பிரிந்து சென்று, புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தனர். செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூரில் இன்று ஆய்வு செய்யும் அவர்கள், முதல்வர் ஸ்டாலினை நாளை சந்தித்து ஆலோசனை நடத்துகின்றனர்.

வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் மற்றும் கனமழையால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகள் பாதிக்கப்பட்டன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Monday, December 11, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/12/12/large/1166892.jpgடிசம்பர் 16 முதல் டோக்கன்; வெள்ள நிவாரணம் யாருக்கு வழங்கலாம்? - அதிகாரிகள் தீவிர ஆலோசனை

சென்னை: புயல், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குடும்ப அட்டைதாரர்கள் தவிர யாருக்கு, எந்த ஆவணத்தின் அடிப்படையில் ரூ.6 ஆயிரம் நிவாரணம் வழங்கலாம் என்பது குறித்து நிதி மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழை மற்றும்வெள்ளத்தால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடும்ப அட்டை அடிப்படையில் ரூ.6 ஆயிரம், உயிரிழப்பு ஏற்பட்டிருந்தால் ரூ.5 லட்சம், கால்நடை இழப்பு, வீடு சேதம், பயிர் இழப்பு, படகு சேதம் உள்ளிட்டவற்றுக்கு இழப்பீடு என நிவாரணத்தை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்