Wednesday, November 30, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/12/01/large/908356.jpgஇன்று உலக எய்ட்ஸ் தினம் | பாதிக்கப்பட்டவர்களிடம் அன்பு செலுத்துவோம்: மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: எய்ட்ஸால் பாதிக்கப்பட்டவர்களை ஒதுக்காமல் தகுந்த மரியாதையுடனும், மதிப்புடனும் நடத்தி, அன்பையும், ஆதரவையும் அளிக்க வேண்டும் என உலக எய்ட்ஸ் நாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட உலக எய்ட்ஸ் நாள் 2022 செய்தி:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/12/01/large/908331.jpgகூடுதலாக ரூ.50 வசூலித்த ஓட்டலுக்கு ரூ.55,000 அபராதம்: மதுரை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை: கூடுதலாக ரூ.50 வசூலித்த அசைவ ஓட்டலுக்கு ரூ.55 ஆயிரம் அபராதம் விதித்து மதுரை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரையை சேர்ந்த வழக்கறிஞர்கள் ராதாகிருஷ்ணன், என்.ஸ்டாலின், மதுரை வழக்கறிஞர்கள் குமாஸ்தா சங்கச் செயலாளர் எஸ்.கதிரேசன். இம்மூவரும் மதுரை நுகர்வோர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு: மதுரை மாவட்ட நீதிமன்றம் அருகே உள்ள அசைவ ஓட்டலுக்கு 22.10.2016 பிற்பகல் நாங்கள் 3 பேரும் சாப்பிடச் சென்றோம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/12/01/large/908409.jpgசேலம் புத்தகத் திருவிழா: டிச. 4-ம் தேதி வரை நீட்டிப்பு

சேலம்: புத்தக ஆர்வலர்களின் கோரிக்கையை ஏற்று, சேலம் புத்தகத் திருவிழா வரும் 4-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சேலத்தில் கடந்த 20-ம் தேதி, 200-க்கும் மேற்பட்ட அரங்குகளுடன் புத்தகத் திருவிழா தொடங்கியது. தினமும் கருத்தரங்கம், கலைநிகழ்ச்சிகள் நடந்த நிலையில், நேற்றுடன் (30-ம் தேதி) புத்தகத் திருவிழா நிறைவடைய இருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/12/01/large/908454.jpgரயில்வே, அஞ்சல் துறை இணைந்து பார்சல் சேவை ஜனவரியில் அறிமுகம்: வீடு தேடி வந்து பொருட்களை பெற வசதி

கோவை: ரயில்வே மற்றும் அஞ்சல்துறை சார்பில் புதிய பார்சல் சேவை திட்டம் கோவையில் 2023 ஜனவரியில் அறிமுகப்படுத்தப்படுகிறது.

இது தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் கோவை அவிநாசி சாலை தொழில் வர்த்தக சபை அரங்கில் நேற்று முன்தினம் நடந்தது. ரயில்வே வாரியத்தின் செயல் இயக்குநர் சத்தியகுமார் தலைமை வகித்தார். தெற்கு ரயில்வே முதன்மை வணிகப் பிரிவு மேலாளர் முருகராஜ், மேற்கு மண்டல அஞ்சல்துறை தலைவர் சுமித்தா அயோத்யா, தெற்கு ரயில்வே சேலம் கோட்ட வணிக மேலாளர் ஹரிகிருஷ்ணா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/12/01/large/908428.jpgபள்ளி, கல்லூரியில் சைகை மொழிப் பாடம்: ஜானகி எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

சென்னை: பள்ளி, கல்லூரிகளில் சைகை மொழிப் பாடம் அறிமுகம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், எம்ஜிஆரின் மனைவியுமான ஜானகியின் நூற்றாண்டு தொடக்க விழா சென்னை அடையாறு எம்ஜிஆர் ஜானகி கல்லூரிவளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், கல்லூரி வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளூவர் சிலையைதிறந்து வைத்தார். மேலும், அன்னைஜானகி எம்ஜிஆர் நூற்றாண்டு சிறப்பு மலர், ஜானகியின் ஆவணப்பட குறுந்தகடு, எம்ஜிஆர் வாழ்க்கை நூல் ஆகியவற்றையும் வெளியிட்டார்.

தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: தமிழகத்தின் முதல் பெண் முதல்வர் ஜானகிதான். அவரது நூற்றாண்டு விழாவில் பங்கேற்பது பெருமையாக உள்ளது. வரலாறு அடிப்படையில் சிந்திப்பவர்களுக்கு இந்நிகழ்வு அதிர்ச்சி தராது. ஏனெனில், எம்ஜிஆர் 20 ஆண்டுகள் திமுகவில் இருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Tuesday, November 29, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/11/30/large/907967.jpgவடகிழக்கு மாநிலங்களில் 2-வது மொழியாக தமிழை இணைக்க வலியுறுத்தி வருகிறேன்: ஆளுநர் ஆர்.என்.ரவி தகவல்

தமிழ்மொழியை 2-வது மொழியாக சேர்க்குமாறு, வடகிழக்கு மாநில முதல்வர்களிடம் வலியுறுத்தி வருவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக வளாகத்தில், தமிழ்நாடு ஆசிரியர்கள் கல்வியியல் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில், கடந்த 3 கல்வி ஆண்டுகளில் பயின்ற 1.66 லட்சம் பேருக்கு பட்டங்களும், கல்வியில் சிறந்த 49 பேருக்கு தங்கப் பதக்கங்களும் வழங்கப்பட்டன. மாணவர்களுக்கு பட்டம் வழங்கி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/11/30/large/907832.jpgமீனாட்சி கல்லூரி, டவுட்டன், பட்டினப்பாக்கம் பகுதிகளில் - ரயில் நிலையங்கள் அமைப்பதில் சிக்கல்: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தகவல்

சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் மீனாட்சி கல்லூரி, டவுட்டன், பட்டினப்பாக்கம் ஆகியஇடங்களில் மெட்ரோ ரயில் நிலையங்களை அமைக்கும் முடிவைக் கைவிட மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் ரூ.63,246 கோடி செலவில், 118.9 கி.மீ. தொலைவுக்கு 3 வழித்தடங்களில் மேற்கொள்ளப்படுகின்றன. மாதவரம்-சிறுசேரி சிப்காட் வரை 3-வது வழித்தடம், கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி வரை 4-வது வழித்தடம், மாதவரம்-சோழிங்கநல்லூர் வரை 5-வது வழித்தடம் ஆகிய பணிகள் நடைபெற்று வருகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/11/30/large/907830.jpgசென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் இதுவரை 4 லட்சம் கை அறுவை சிகிச்சைகள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் இதுவரை 4.09 லட்சம் கை அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன என்று சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்தார். சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், இந்தியாவிலேயே முதன்முறையாக கை அறுவை சிகிச்சை உயர்சிறப்பு மேற்படிப்பை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து கை அறுவை சிகிச்சை துறையில், கை துண்டிக் கப்பட்டவர்களுக்கு, வெற்றிகரமாக அறுவைசிகிச்சை செய்யப்பட்டு, குணமடைந்து வீடு திரும்ப இருந்தவர்களைச் சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர், முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கு வெள்ளைஅங்கி அணிவிக்கும் நிகழ்வில் பங்கேற்றார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/11/29/large/907562.jpgமதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு ஜைக்கா நிறுவனம் இதுவரை நிதி விடுவிக்கவில்லை: ஆர்டிஐ பதிலில் தகவல்

மதுரை: இதுவரை ஜைக்கா நிறுவனம், மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு நிதி விடுவிக்கவில்லை என்று ஆர்டிஐ கேள்விக்கு மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை கட்டுமானப் பணியை தொடங்க வேண்டும் என தமிழகத்தை சேர்ந்த அனைத்து கட்சியினரும் குரல் எழுப்பி வருகின்றனர். மதுரை உயர்நீதிமன்றத்தில் சமீபத்தில் தொடரப்பட்ட வழக்கில், ‘எய்ம்ஸ்’ கட்டுமானப் பணி எப்போது முடியும் என விளக்கமிளக்க மத்திய அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. அதனால், மத்திய அரசு விரைவில் கட்டுமானப் பணியை தொடங்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/11/29/large/907558.jpgஐயப்ப பக்தர்களின் வாகனங்கள் அதிகரிப்பால் தற்காலிகமாக தேனி புறவழிச்சாலை திறப்பு

தேனி: ஐயப்ப பக்தர்களின் வாகனங்கள் அதிகரிப்பினால் தேனி புறவழிச்சாலை தற்காலிகமாக திறக்கப்பட்டுள்ளது. இதனால் தேனி மாவட்டத்தின் நுழைவுப் பகுதியில் இருந்து எல்லை வரை நகருக்குள் செல்லாமல் மாவட்டத்தை கடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழக கேரள எல்லையை இணைக்கும் முக்கிய மாவட்டமாக தேனி அமைந்துள்ளது. இருப்பினும் புறவழிச் சாலை வசதி இல்லாததால் வெளியூர் மற்றும் உள்ளூர் வாகனங்கள் அனைத்தும் நகருக்குள்ளே வந்து செல்லும் நிலை இருந்தது. இதனால் நெரிசல் அதிகரித்ததுடன் சிறு விபத்துக்களும் அதிகரித்தன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Monday, November 28, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/11/29/large/907233.jpgகோவை வழியாக இயக்கப்படும் 10 எக்ஸ்பிரஸ் ரயில்கள் டிச.3-ம் தேதி ரத்து

கோவை: சேலம் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், கோவை வழியாக இயக்கப்படும் 10 எக்ஸ்பிரஸ் ரயில்கள் வரும் 3ம் தேதி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சேலம் கோட்ட ரயில்வே அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: சேலம் ரயில்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், வரும் டிசம்பர் 3-ம் தேதி கோவையிலிருந்து காலை 6.15 மணிக்கு சென்னை சென்ட்ரல் புறப்பட்டுச் செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் (எண்:12680), சென்னையிலிருந்து மதியம் 2.30 மணிக்கு கோவை புறப்பட்டு வரும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் (எண்:12679) ஆகியவை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/11/29/large/907448.jpgராம்கோ சூப்பர்கிரீட் சிமென்ட், ‘இந்து தமிழ் திசை’ இணைந்து வழங்கும் கட்டிடக் கலை, கட்டமைப்பு நிபுணர்களுக்கு ‘சீர்மிகு பொறியாளர் விருது 2022’ - சென்னை மியூசிக் அகாடமியில் டிச.1-ம் தேதி விழா

சென்னை: கட்டிடக் கலை, கட்டமைப்பு கலையில் சிறந்து விளங்குவோருக்கு ராம்கோ சூப்பர்கிரீட் சிமென்ட், ‘இந்து தமிழ் திசை’ சார்பில் ‘சீர்மிகு பொறியாளர் விருது - 2022’ வழங்கப்படுகின்றன. சென்னை மியூசிக் அகாடமியில் வரும் டிச.1-ம் தேதி நடைபெறும் விருது விழாவில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் இத்துறை வல்லுநர்கள் பங்கேற்கின்றனர்.

கட்டுமானம் மற்றும் கட்டமைப்பு துறையில் சிறந்து விளங்கும் பொறியாளர்கள் பலர், தமிழ்ச் சமுதாயத்தின் பொதுவெளியில் இன்னமும் அறியப்படாமல் உள்ளனர். அத்தகைய சிறப்புமிக்க பொறியாளர்களை தேர்வுசெய்து, அவர்களுக்கு ‘சீர்மிகு பொறியாளர் விருது - 2022’ஐ வழங்கி, பாராட்டி கவுரவிக்கும் முயற்சியை ராம்கோ சூப்பர்கிரீட் சிமென்ட் உடன் இணைந்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் முன்னெடுத்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/11/29/large/907162.jpgசென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் பொறியாளருக்கு வெற்றிகரமாக இதய மாற்று சிகிச்சை

சென்னை: புதுக்கோட்டையைச் சேர்ந்த பொறியாளர் குமார் (50). துபாயில் பணியாற்றி வருகிறார். பல ஆண்டுகளாக கட்டுப்படுத்த முடியாத சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. அங்குள்ள மருத்துவமனையில் பரிசோதனை செய்ததில், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. அதற்காக, அவருக்கு ஸ்டெண்ட் பொருத்தப்பட்டது. அதன் பின்னரும் நெஞ்சு வலியால் அடிக்கடி அவதிப்பட்டு வந்தார்.

துபாயில் இருந்து தமிழகம் திரும்பிய அவர், சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், அவருக்கு இதய ரத்தக் குழாய்களில் அதிகப்படியான அடைப்புகள் இருந்ததும், இதயம் மிகவும்பலவீனமடைந்திருந்ததும் தெரியவந்தது. இதய மாற்று அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே உயிர்பிழைக்க முடியும் என்பதை மருத்துவர்கள் தெரிவித்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/11/29/large/907327.jpgவிமானங்கள் மூலம் தமிழகத்துக்கு வரும் சீன பயணிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படுமா? - அமைச்சர் விளக்கம்

சென்னை: சீனாவில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால், அங்கிருந்துவரும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக, மத்திய அரசிடம் அறிவுறுத்தல்கள் பெற்று, அதன்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

திமுக இளைஞரணிச் செயலாளரும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி எம்எல்ஏ-வுமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/11/28/large/905706.jpg8ம் தேதி கப்பலூர் டோல்கேட்டை முற்றுகையிடும் போராட்டம்: சுங்கச்சாவடி எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முடிவு

மதுரை: திருமங்கலத்தில் நடந்த சுங்கச்சாவடி எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் வரும் 8ம் தேதி கப்பலூர் டோல்கேட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதற்கு முடிவு செய்துள்ளனர். செங்கோட்டை முதல் திருமங்கலம் வரையிலான வாகன ஓட்டிகள், வாகன உரிமையாளர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் பங்கேற்கின்றனர்.

நான்கு வழிச் சாலைகளை பொறுத்தவரையில் 60 கி.மீ தொலைவிற்குள் ஒரு டோல்கேட் இருக்க வேண்டும் என்ற தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் விதிமுறை உள்ளது. இதை மீறி திருமங்கலம் அருகே கப்பலூர் டோல்கேட் அமைத்துள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது. இந்த டோல்கேட்டை அகற்ற வலியுறுத்தி உள்ளூர் மக்கள், வாகன ஒட்டிகள் கடந்த பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், அதற்கு தற்போது வரை விடிவு காலம் ஏற்படவில்லை. அதனால், அடிக்கடி கப்பலூர் டோல்கேட்டில் வாகன ஓட்டிகளுக்கும், டோல்கேட் ஊழியர்களுக்கும் தகராறு ஏற்பட்டு துப்பாக்கி சூடு சம்பவம் நடக்கும் அளவிற்கு சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Sunday, November 27, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/11/28/large/905659.jpgஇதுவரை 15 லட்சம் மின் இணைப்புதாரர்கள் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்: அமைச்சர் செந்தில்பாலாஜி 

சென்னை: "மின்சார வாரியத்தை மேம்படுத்த வேண்டும். அதேபோல், புதிய தொழில்நுட்பத்துக்கு ஏற்ப மின்சார வாரியத்தை நவீனப்படுத்துவதற்காக மின் இணைப்பு எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்கக்கூடிய பணிகள் தொடங்கப்பட்டிருக்கிறது" என்று தமிழக மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார்.

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் சிறப்பு முகாம் இன்று (நவ.28) தொடங்கியது. சென்னையில் இந்த முகாமை ஆய்வு இன்று செய்தபின், மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "இதுவரை 15 லட்சம் மின் இணைப்புதாரர்கள், ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைத்துள்ளனர். இதற்காக இன்னும் விரிவாக பணிகளை மேற்கொள்ள தமிழக முதல்வர் உத்தரவிட்டு தமிழ்நாடு மின்சார வாரியம் மூலம் செயல்பட்டு வருகின்ற 2811 பிரிவு அலுவலகங்களில் இன்று முதல் வருகின்ற டிசம்பர் 31-ம் தேதி வரை, மின் இணைப்பு எண்ணை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான சிறப்பு முகாம்கள் தொடங்கப்பட்டுள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/11/28/large/905377.jpgசாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி அதற்கேற்ப இடஒதுக்கீடு வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் பாமக நிர்வாகிகள் கூட்டத்தில் நேற்று பங்கேற்ற அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறியது:

டெல்டா மாவட்டங்களில் கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் புழக்கம் அதிகமாக இருப்பதைத் தடுக்க தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் தொடங்கப்படும் புதிய தொழில் நிறுவனங்களில், தமிழர்களுக்கு 80 சதவீதம் வேலை வழங்குவதற்கான தனிச் சட்டம் இயற்ற வேண்டும். நீர் மேலாண்மைக்கு ரூ.1 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்து ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் கோடி செலவு செய்தால்தான், அடுத்த 50 ஆண்டுகளுக்கு தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண முடியும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/11/28/large/905458.jpgமழையால் விளைச்சல் அதிகரிப்பு: மதுரை மார்க்கெட்டில் காய்கறிகள் விலை வீழ்ச்சி

மதுரை: வட கிழக்குப் பருவ மழையால் தமிழகத்தில் காய்கறிகள் விளைச்சல் அதிகரித்துள்ளது. சந்தைகளுக்கு வரத்து அதிகரித்துள்ளதால் காய்கறிகள் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

கடந்த மாதம் கிலோ ரூ.100 வரை விற்ற தக்காளி தற்போது ரூ.10-க்கு விற்பனையாகிறது. மதுரை மாட்டுத்தாவணி காய்கறிகள் மார்க்கெட்டில் தினமும் 100 டன் காய்கறிகள் மட்டுமே விற்பனைக்கு வரும். தற்போது 200 டன் வருகிறது. பறவை மொத்த கொள்முதல் மார்க்கெட்டுக்கு 1000 டன் காய்கறிகள் வருகின்றன. அங்கிருந்து தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு காய்கறிகள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/11/28/large/905508.jpgசெகந்திராபாத் - கொல்லம் இடையே கோவை வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கம்

கோவை: பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், செகந்திராபாத்-கொல்லம் இடையே கோவை வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சேலம் கோட்ட ரயில்வே அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: சபரிமலை சீசனை முன்னிட்டு செகந்திராபாத்-கொல்லம் இடையிலான சிறப்பு ரயில் (எண்:07117), வரும் டிசம்பர் 4,18, 2023 ஜனவரி 8 ஆகிய தேதிகளில், செகந்திராபாத்திலிருந்து மாலை 4 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் இரவு 11 மணிக்கு கொல்லம் சென்றடையும். இதேபோல, கொல்லம்-செகந்திராபாத்- இடையிலான சிறப்பு ரயில் (எண்:07118), வரும் டிசம்பர் 6,20, 2023 ஜனவரி 10 ஆகிய தேதிகளில், கொல்லத்திலிருந்து அதிகாலை 2.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 9.05 மணிக்கு செகந்திராபாத் சென்றடையும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/11/28/large/905461.jpgஇந்தியாவும், இந்து சமயமும் வளர்ச்சி அடைந்தால் உலகில் அமைதி ஏற்படும்: காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திரர் வலியுறுத்தல்

சென்னை: இந்தியாவும், இந்து சமயமும் வளர்ச்சி அடைந்தால் உலகில் அமைதி ஏற்படும் என  காஞ்சிகாமகோடி பீடாதிபதி  விஜயேந்திரர் கூறினார். விஷ்வ இந்து பரிஷத் அகில உலக முன்னாள் செயல் தலைவர் எஸ்.வேதாந்தம் எழுதிய ‘மனதோடு பேசுகிறேன் - ஓர் ஆன்மிக தேசியவாதியின் காலடிச்சுவடுகள்’ என்ற புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.

புத்தகத்தை வெளியிட்டஅல்லயன்ஸ் நிறுவனத்தின் நிவாசன் வரவேற்புரையாற்றினார். விழாவில்,  காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திரர் அருளுரை வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது: வேதாந்தம் எழுதியுள்ள மனதோடு பேசுகிறேன் என்ற புத்தகத்தில் தனது கருத்துகளை தெளிவாகவும், நாகரிகமாகவும், உறுதியாகவும் தெரிவித்துள்ளார். பொது வாழ்க்கையில் ஈடுபட விரும்பும் இளைஞர்களுக்கு இது உத்வேகத்தை அளிப்பதோடு, வழிகாட்டியாகவும் அமைந்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Saturday, November 26, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/11/27/large/904247.jpgமுன்னாள் காவல் அதிகாரி அனுசுயாவுக்கு மிரட்டல்

ராஜீவ் காந்தி படுகொலையின்போது சம்பவ இடத்தில் இருந்து, படுகாயமடைந்து உயிர் பிழைத்தவர் முன்னாள் காவல் துறை அதிகாரி அனுசுயா. தற்போது காங்கிரஸில் மாநிலச் செயலராக உள்ளார். இவர் ராஜீவ் கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேர் விடுதலைக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார்.

இந்நிலையில், இவருக்கு வெளிநாடுகளில் இருந்து கொலை மிரட்டல்கள் வருவதாக புகார் எழுந்துள்ளது. குறிப்பாக பிரபாகரன் குறித்து பேசுவதை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்படுவதாக கூறப்படுகிறது. அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மாநில பாஜகதுணைத் தலைவர் நாராயணன் திருப்பதியும் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அனுசுயாவிடம் கேட்டபோது, ‘‘அனாமதேய எண்ணில் இருந்து கொலை மிரட்டல் வருகிறது. அநாகரிகமாகவும் பேசுகின்றனர். பாதுகாப்பு கேட்டு காவல் துறையில் புகார் அளிக்க இருக்கிறேன்’’ என்றார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/11/27/large/904276.jpgபெரம்பலூர், அரியலூருக்கு நாளை பயணம்: கங்கை கொண்ட சோழபுரத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

சென்னை: பெரம்பலூர், அரியலூருக்கு இரண்டு நாள் பயணமாக நாளை செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின், கங்கை கொண்ட சோழபுரத்தில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு, நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். இதுதவிர, முடிவுற்ற பணிகளை தொடங்கி வைப்பதுடன், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வருகிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/11/27/large/904279.jpgவணிக பயன்பாட்டுக்காக நிலங்களை கையகப்படுத்தும்போது நில உரிமையாளர்களுக்கு லாபத்தில் பங்கு: உரிய சட்டம் இயற்ற அரசுக்கு மாநில தகவல் ஆணையம் பரிந்துரை

சென்னை: சிப்காட் போன்ற வணிக பயன்பாட்டுக்காக நிலங்களை கையகப்படுத்தும்போது நில உரிமையாளர்களுக்கு இழப்பீட்டுத் தொகையின் ஒரு பகுதியாக, நிறுவனத்தின் லாபத்தில் பங்கு கொடுக்கும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும் என தமிழக அரசின் திட்டக்குழுவுக்கு மாநில தகவல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், பெரும்புதூர் தாலுகா வல்லம்கிராமத்தில் சிப்காட் அமைக்க கடந்த 1997-ல் வசந்தா கங்காதரன் என்பவருக்கு சொந்தமான 19.08 ஏக்கர் நிலத்தை அரசு கையகப்படுத்தியது. அந்த நிலத்தில் 1.5 ஏக்கருக்கு மட்டுமே கடந்த 2016-ல் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/11/27/large/904283.jpgமத்திய அரசை கண்டித்து சென்னையில் விவசாயிகள் சங்கத்தினர் பேரணி: மனுவை பெற ஆளுநர் மாளிகை மறுத்ததால் மறியல்

சென்னை: மத்திய அரசை கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் சென்னையில் விவசாயிகள் சங்கத்தினர் பேரணி நடத்தினர்.

விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகளை மத்திய அரசு நிறைவேற்றாததை கண்டித்து ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் சென்னையில் ஆளுநர் மாளிகை நோக்கி நேற்று பேரணி அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு அனுமதி இல்லாததால், சென்னை எழும்பூர் ராஜரத்தினம் அரங்கில் இருந்து ராஜா முத்தையா மன்றம் வரை பேரணி நடந்தது. அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச்செயலாளருமான கே.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த விவசாயிகள் சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/11/27/large/904223.jpg‘‘எனக்கு அமைச்சர் பதவி வழங்குவது குறித்து முதல்வர் முடிவெடுப்பார்’’ - உதயநிதி ஸ்டாலின்

சென்னை: சென்னை மாநகர பேருந்துகளில் அடுத்து வரும் நிறுத்தம் குறித்து ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கும் திட்டத்தை அமைச்சர்கள் சேகர்பாபு, சிவசங்கர் முன்னிலையில் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சென்னை மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளில் ஒலிபெருக்கி மூலம் அடுத்து வரும் நிறுத்தம் தொடர்பான அறிவிப்பை வெளியிட முடிவு செய்யப்பட்டது. அதன்படி, அடுத்த நிறுத்தம் வருவதற்கு 100 மீட்டர் முன்பாக, தமிழ், ஆங்கிலத்தில் அறிவிப்பை வெளியிட பேருந்துகளில் உரிய வசதிகள் செய்யப்பட்டன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/11/27/large/904383.jpgமின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு | நாளை முதல் டிசம்பர் 31-ம் தேதி வரை சிறப்பு முகாம்கள் - முழு விவரம்

சென்னை: மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க நாளை முதல் டிச. 31-ம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்று மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் 2.30 கோடி வீட்டு மின் இணைப்புகளும், 22 லட்சம் விவசாய மின் இணைப்புகளும், 11 லட்சம் குடிசை வீடுகளுக்கான மின் இணைப்புகளும் உள்ளன. இந்நிலையில், மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்குமாறு தமிழ்நாடு மின் வாரியம் தெரிவித்து, அதற்கானப் பணிகளைத் தொடங்கியுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/11/26/large/903975.jpgடிஜிட்டல் ரீசர்வே மூலம் தமிழர்களின் வீடுகளை அகற்றும் நடவடிக்கையை தொடங்கிய கேரளா - தொழிலாளர்கள் கடும் அதிர்ச்சி

போடி: மூணாறில் ஏராளமான வணிக ஆக்கிரமிப்பு கட்டடங்கள் இருந்து வரும் நிலையில் டிஜிட்டல் ரீசர்வே என்ற பெயரில் தமிழர்களின் குடியிருப்புகளை அகற்றும் நடவடிக்கையை கேரள அரசு தொடங்கி உள்ளது. இது இரு மாநில தமிழர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கேரளாவில் கடந்த 1-ம் தேதி முதல் டிஜிட்டல் ரீ சர்வேயை அம்மாநில அரசு தொடங்கி உள்ளது. மொழிவாரி மாநிலம் பிரிக்கப்பட்ட போதே மாநில எல்லைகள் சரியாக பிரிக்கப்படவில்லை. இந்நிலையில் கேரளாவின் தன்னிச்சையான இப்போக்கினால் தமிழக எல்லையில் உள்ள ஏராளமான நிலங்கள் பறிபோகும் நிலை உள்ளது என்று விவசாயிகளும், சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Friday, November 25, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/11/26/large/903711.jpg7.5% உள் இடஒதுக்கீட்டில் அரசுப் பள்ளி மாணவர்கள்: 582 பேருக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு

சென்னை: மருத்துவப் படிப்புக்கான இரண்டு கட்ட கலந்தாய்வு முடிவில் அரசு ஒதுக்கீட்டுக்கான அனைத்து எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களும் நிரம்பியுள்ளன. 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டில் அரசுப் பள்ளி மாணவர்கள் 582 பேருக்கு மருத்துவம் படிக்க வாய்ப்புக் கிடைத்துள்ளது.

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான முதல்கட்ட கலந்தாய்வு கடந்த மாதம் 19-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை நடைபெற்றது. நேரடியாக நடந்த மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், விளையாட்டுப் பிரிவினருக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வில் 65 இடங்களும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டுக் கலந்தாய்வில் 565 இடங்களும் நிரப்பப்பட்டன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/11/26/large/903802.jpgமின்கட்டண உயர்வை கைவிட வலியுறுத்தி கோவையில் 25 ஆயிரம் நிறுவனங்கள் கதவடைப்பு

கோவை: தமிழகத்தில் மாற்றியமைக்கப்பட்டுள்ள மின்கட்டணத்தில் இரண்டு வகையான மின்கட்டண உயர்வை தமிழக அரசு கைவிட வலியுறுத்தி கோவையில் 20 ஆயிரம்நிறுவனங்கள் நேற்று அடைக்கப்பட்டன.

மின் கட்டண உயர்வை கண்டித்து தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு (போசியா) சார்பில் கோவையில் நேற்று கதவடைப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. கோவை டாடாபாத், மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகம் அருகே நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் தொழில் நிறுவனத்தினர் பங்கேற்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/11/26/large/903731.jpgகிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கலுக்கு ஆவின் சிறப்பு இனிப்புகள் விற்பனை: அமைச்சர் சா.மு.நாசர் அறிவிப்பு

சென்னை: கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆவின் சிறப்பு இனிப்புகள் விற்பனை செய்யப்படும் என பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்தார். இந்தியாவின் ‘வெண்மைப் புரட்சியின் தந்தை’ என்று அழைக்கப்படும் டாக்டர் வர்கீஸ் குரியன் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் நவம்பர் 26-ம் தேதி, தேசிய பால் தினமாக 2014-ம் ஆண்டு முதல் கொண்டாடப்படுகிறது.

தேசிய பால் தினத்தையொட்டி, நேற்று சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் இல்லம் வளாகத்தில் பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் தலைமையில் தேசிய பால் தின கொண்டாட்டம் மற்றும் விற்பனை குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://ift.tt/4x9arR8 மாவட்ட சிறைகளில் சோதனை அடையாள அணிவகுப்பு அறை கட்டிடம்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: தமிழகத்தில் 12 மாவட்ட சிறைகளில், ரூ.2.51 கோடியில் கட்டப்பட்டுள்ள சோதனை அடையாள அணிவகுப்பு அறை கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக நேற்று திறந்துவைத்தார்.

இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: குற்றம் செய்து, சிறையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறைவாசிகள் மீதான குற்றத்தை சாட்சிகள் வாயிலாக நிரூபிக்கும் வகையில், சோதனை அணிவகுப்பு நடத்தப்படும். சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை அடையாளம் காட்ட, மத்திய சிறைகளில், நீதித் துறை நடுவர் மற்றும் பாதிக்கப்பட்டோர் ஒரு பகுதியிலும், அவர்களை குற்றவாளிகள் அடையாளம் காணாத வகையில் மற்றொரு பகுதியிலும் இருக்கும் வகையில் ஒருவழிக் கண்ணாடி தடுப்புடன் கூடிய தனி அறைகள் அமைக்கப்பட்டிருக்கும். அனைத்து மத்திய சிறைகள் மற்றும் பெண்கள் தனிச் சிறைகளில் இதுபோன்ற கட்டிடங்கள் கட்டப் பட்டுள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/11/26/large/903909.jpgமாமல்லபுரத்தில் ரூ.30 கோடியில் கைத்தறி அருங்காட்சியகம் - பன்னாட்டுத் தொழில்நுட்ப ஜவுளி கருத்தரங்கில் முதல்வர் அறிவிப்பு

சென்னை: மாமல்லபுரத்தில் ரூ.30 கோடியில் கைத்தறி அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளதாகவும், தமிழகத்தில் உலகத் தரத்திலான மெகா ஜவுளி நகரம் அமைக்கப்படும் என்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழக அரசின் துணி நூல் துறை,மத்திய அரசின் ஜவுளித் துறை அமைச்சகம் மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு இணைந்து நடத்தும் பன்னாட்டுத் தொழில்நுட்ப ஜவுளி கருத்தரங்கு தொடக்க விழா, சென்னை மணப்பாக்கத்தில் நேற்று நடைபெற்றது. இதில், பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மேலும், தொழில் துறை தொடர்புடைய 12 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Thursday, November 24, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/11/25/large/903182.jpgசென்னை மாநகராட்சி கவுன்சிலர் நாஞ்சில் ஈஸ்வர பிரசாத் காலமானார்: முதல்வர் ஸ்டாலின், கே.எஸ்.அழகிரி இரங்கல்

சென்னை: சென்னை மாநகராட்சி காங்கிரஸ் கவுன்சிலர் நாஞ்சில் ஈஸ்வர பிரசாத், உடல்நலக் குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தென்சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரும், ஆலந்தூர் 165-வது வார்டு கவுன்சிலருமான நாஞ்சில் ஈஸ்வர பிரசாத் (56), உடல்நலக் குறைவால் நேற்று அதிகாலை காலமானார். அவருக்கு சுதா என்ற மனைவியும், காவியா, அனன்யா என்ற 2 மகள்களும் உள்ளனர். நாஞ்சில் ஈஸ்வர பிரசாத்தின் உடல் ஆதம்பாக்கம் நியூ காலனியில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/11/25/large/903181.jpgதிருவொற்றியூரில் ரூ.200 கோடி செலவில் புதிய சூரை மீன்பிடித் துறைமுகம்

சென்னை: திருவொற்றியூரில் ரூ.200 கோடிசெலவில் புதிதாக சூரை மீன்பிடிதுறைமுக கட்டுமானப் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னையை அடுத்த திருவொற்றியூர், எண்ணூர் மற்றும் காசிமேடு ஆகிய பகுதிகளில் உள்ளமீனவ கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் விசை,பைபர் படகு, கட்டுமரம் ஆகியவற்றின் மூலம் கடலுக்குச் சென்று மீன்களை பிடித்து வருகின்றனர். இவற்றை உள்ளூரில் விற்பனை செய்வதுடன், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகின்றனர்.

மீன்பிடி தொழிலில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகுகள் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து தினமும் கடலுக்கு சென்று வருகின்றன. படகுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இட நெருக்கடி ஏற்படுகிறது. இதையடுத்து, காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் நிலவிவரும் நெரிசலை குறைக்கும் வகையிலும், சூரை மீன், இறால் உள்ளிட்ட ஆழ்கடல் மீன்பிடி தொழிலை மேம்படுத்தவும் புதிய மீன்பிடி துறைமுகம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/11/25/large/903415.jpgமாற்றுத் திறனாளிகளுக்கு திறன் மேம்பாடு, சுய வேலைவாய்ப்பு பயிற்சியுடன் தொழிற்திறன் பயிற்சி- முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்

சென்னை: மாற்றுத் திறனாளிகளுக்கு திறன் மேம்பாடு மற்றும் சுய வேலைவாய்ப்புக்கான பயிற்சியும், அரசின் தற்போதுள்ள திட்டங்களுடன் ஒருங்கிணைத்து இதர அரசுத் துறைகள் மூலம் தொழிற்திறன் பயிற்சியும் அளிக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியக் கூட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. அதில்பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/11/24/large/902922.jpgமேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்க்கான நீர் திறப்பு 15,000 கனஅடியாக அதிகரிப்பு

சேலம்: மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக திறக்கப்பட்டு வரும் நீரின் அளவு விநாடிக்கு 15,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையின் நீர் மட்டம் கடந்த ஜூலை மாதத்தில் இருந்து ஓரிரு நாட்களை தவிர தற்போது வரை அதன் முழுக்கொள்ளளவான 120 அடியில் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதன் காரணமாக, அணைக்கு வந்து கொண்டிருக்கும் நீர் முழுவதும் டெல்டாவிற்கு வெளியேற்றப்பட்டு வந்தது. இந்நிலையில், அணைக்கு நேற்றுவரை விநாடிக்கு 10,400 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. அதில் 400 கனஅடி நீர், அணையின் கால்வாய் பாசனத்திற்கும் , 10 ஆயிரம் கனஅடி நீர் டெல்டாவிற்கும் திறக்கப்பட்டு வந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Wednesday, November 23, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/11/24/large/902755.jpgகோவை | குறு, சிறு தொழில் நிறுவனங்களின் கதவடைப்பு போராட்டத்துக்கு மேலும் ஒரு சங்கம் ஆதரவு

கோவை: மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி குறு, சிறு தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு சார்பில் கோவையில் நாளை நடைபெற உள்ள கதவடைப்பு போராட்டத்துக்கு மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு (ஆர்டிஎப்) ஆதரவு தெரிவித்துள்ளது.

18 தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பான ‘போசியா‘ சார்பில் உச்சபட்ச பயன்பாட்டு நேர மின் கட்டணத்தை அரசு முழுமையாக நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி குறு, சிறு நிறுவனங்கள் கதவடைப்பு மற்றும் கோவை டாடாபாத் பகுதியில் உண்ணாவிரத போராட்டம் நாளை (நவ.25) நடக்கிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/11/24/large/902793.jpgதிமுக ஆட்சிக்கு மக்களிடத்தில் கிடைத்துள்ள நல்ல பெயரை பொறுத்துக்கொள்ள முடியாமல் உள்ளார்: பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்

சென்னை: திமுக ஆட்சிக்கு மக்களிடத்தில் கிடைத்த நல்ல பெயரை எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. எனவே, ஆட்சியின் மீது சேற்றைவாரிப் பூசும் வகையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான பழனிசாமி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நேற்றுசந்தித்து 10 பக்க மனுவை அளித்தார். அதில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது. கோவை குண்டுவெடிப்பு தொடர்பாக மத்திய உளவு ஏஜென்சிகள் தகவல் அளித்தும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்திருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/11/24/large/902695.jpgஆவடி | மாணவிகளுக்கு பாலியல் தொல்லை புகார்; தாளாளர் மகனை கைது செய்ய வேண்டும்: மாணவர்கள், பெற்றோர் சாலை மறியல்

ஆவடி: திருநின்றவூரில் தனியார் பள்ளி தாளாளர் மகன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி, மாணவ- மாணவிகள், பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர்- லட்சுமிபுரம் பகுதியில் தனியார் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில், சுமார் 1,500-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பயின்று வருகின்றனர். சமீபத்தில் பள்ளியின் தாளாளர் மகன் வினோத் (38), கவுன்சிலிங் அளிப்பதாகக் கூறி பிளஸ் 2 மாணவிகள் இருவரை தனி அறைக்கு அழைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, மாணவிகள் மற்றும் பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்தும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/11/24/large/902837.jpgசுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகத்தை மறக்க கூடாது - லால்பகதூர் சாஸ்திரி சிலை திறப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம்

சென்னை: சென்னை சாஸ்திரி பவனில் முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியின் 9 அடி வெண்கல சிலையை ஆளுநர் ஆர்.என்.ரவி திறந்து வைத்தார். அப்போது, ‘நாட்டுக்காக இன்னுயிர் ஈந்த சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகத்தை நாம் ஒருபோதும் மறக்கக் கூடாது’ என்றார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் மத்திய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள சாஸ்திரி பவன் வளாகத்தில், மத்திய பொதுப்பணி துறைசார்பில், சுதந்திரப் போராட்ட வீரரும், நாட்டின் 2-வது பிரதமருமான லால்பகதூர் சாஸ்திரி சிலைஅமைக்கப்பட்டுள்ளது. 9.5 அடி உயரம், 850 கிலோ எடையில் ரூ.15 லட்சம் செலவில் உருவாக்கப்பட்ட வெண்கல சிலையை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று திறந்து வைத்தார். விழாவில் அவர் பேசியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/11/24/large/902829.jpgபருப்பு, எண்ணெய் விநியோக நிறுவனங்கள் தொடர்புடைய 40 இடங்களில் வருமான வரி சோதனை

சென்னை: தமிழக அரசின் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட ரேஷன் பொருட்களை விநியோகம் செய்யும் 5 நிறுவனங்களுக்குச் சொந்தமான 40 இடங்களில் நேற்று வருமான வரிச் சோதனை நடைபெற்றது.

பாமாயில், பருப்பு கொள்முதலில் 5 நிறுவனங்களும் வரி ஏய்ப்பு செய்திருப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் சோதனை நடைபெற்று வருவதாகவும், இதில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாகவும், தொடர்ந்து 2 நாட்களுக்கு சோதனை நடைபெறும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/11/23/large/902475.jpgமதுரை | நாக்கிற்கு அடியில் உள்ள நீர் கட்டியை அகற்ற அறுவை சிகிச்சை - குழந்தையின் உயிரை காப்பாற்றி அரசு மருத்துவர்கள் சாதனை

மதுரை: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவர்கள், பிறந்து 3 நாளே ஆன குழந்தையின் நாக்கிற்கு அடியில் உள்ள நீர் கட்டியை அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றி உயிரை காப்பாற்றியுள்ளனர்.

கடந்த ஒரு ஆண்டிற்கு முன் விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் குழந்தை கவினுக்கு பிறந்த முதல் நாளிலே நாக்கிற்கு அடியில் நீர் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. குழந்தை சுவாசிக்கவும், மூச்சிவிடவும் சிரமப்பட்டு உயிருக்குப் போராடியுள்ளது. மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்தனர். குழந்தைகள் அறுவை சிகிச்சைத்துறை தலைவர் பேராசிரியர் எஸ்.மீனாட்சி சுந்தரி மற்றும் அவரது மருத்துவக்குழுவினர் பரிசோதனை செய்தனர். உயிரை காப்பாற்ற உடனடியாக குழந்தையின் நாக்கின் அடியில் உள்ள நீர் கட்டிய அகற்ற வேண்டிய இருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Tuesday, November 22, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/11/23/large/902256.jpgபோக்குவரத்து விதிகளை அனைவரும் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்: காவல் ஆணையர் வேண்டுகோள்

சென்னை: சாலை விபத்தில் மரணம் அடைந்தவர்களுக்காக ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 3-வது வாரத்தில் உலக நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டு சிஏஜி, சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை மற்றும் டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் ஒருங்கிணைந்து, ‘உலக நினைவு தினம் 2022’ அனுசரிக்கப்பட்டது.

பெருங்குடியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக வளாகத்தில் போக்குவரத்து விதிகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/11/23/large/902402.jpgசென்னையில் குளிர் ஏன்? - வானிலை மையம் விளக்கம்

சென்னை: இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் நேற்று கூறியதாவது: தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிவந்த காற்றழுத்தத் தாழ்வுமண்டலம் வலுவிழந்து, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டியுள்ள மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதியாக நிலவுகிறது. தொடர்ந்து, இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதியாக வலுவிழக்கக்கூடும். இதன்காரணமாக, வடதமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் அடுத்த 2 நாட்களுக்கு லேசான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் வானம் மேகமூட்டமாக இருக்கும். நகரின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/11/23/large/902403.jpgகர்நாடக மாநிலத்தின் மைசூரு ஆய்வகத்தில் இருந்து சோழர் காலத்தைச் சார்ந்த தமிழ் கல்வெட்டுகள் அதிகம் மீட்பு

சென்னை: கர்நாடகாவில் இருந்து மீட்கப்பட்ட தமிழ் கல்வெட்டுகளில் சோழர் காலத்தைச் சார்ந்தவை அதிகம் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதுவரை வெளியிடப்படாத 15,000 கல்வெட்டு படிகளின் தகவல்களை உடனே வெளியிடவும் தொல்லியல் அறிஞர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பிரிட்டிஷ் தொல்லியல் அறிஞர் அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் என்பவரால் இந்திய தொல்லியல் ஆய்வகம் (Archaeological Surveyof India) 1861-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதன்மூலம் கோயில்கள், மலைகள், குகைகள் உள்ளிட்டஇடங்களில் இருக்கும் கல்வெட்டுகள் கண்டறியப்பட்டு ‘படி எடுத்தல்’ முறையில் காகிதத்தில் நகல் எடுக்கப்படுகின்றன. முதலில் பெங்களூருவில் இருந்த இந்திய தொல்லியல் ஆய்வகம் 1862-ல் சென்னைக்கு மாற்றப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/11/23/large/902404.jpgமகளிர் உதவி மையம் சார்பில் ‘பெண்ணியம் போற்றுவோம்’ விழிப்புணர்வு - நவ.25 முதல் டிச.10 வரை நடக்கிறது

சென்னை: தமிழக அரசின் ‘181’ மகளிர் உதவி மையம் சார்பில் நவ.25 முதல் டிச.10-ம் தேதி வரை ‘பெண்ணியம் போற்றுவோம்’ விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெறுகிறது. நிகழ்ச்சியில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழக அரசின் ‘181’ மகளிர் உதவி மையம், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய 24 மணி நேரமும் செயல்படும் ரகசிய சேவை மையம் ஆகும். இதன்மூலம், குடும்பப் பிரச்சினை உள்ளிட்ட வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு காவல் துறை, மருத்துவத் துறை, சட்ட உதவி, மனநல ஆலோசனை வழங்கப்படுகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/11/22/large/901974.jpgகரூர் | செங்கல் சூளையில் சத்தீஸ்கரில் மாயமான 3 சிறுமிகள் உட்பட கொத்தடிமை தொழிலாளர்கள் 14 பேர் மீட்பு

கரூர்: சத்தீஸ்கர் காப்பகத்தில் மாயமான 3 சிறுமிகள் உள்ளிட்ட 8 குழந்தைத் தொழிலாளர்கள், கொத்தடிமை தொழிலாளர்கள் 6 பேர் என மொத்தம் 14 பேர் கரூர் மாவட்டம் வளையல்காரன்புதூர் செங்கல் சூளையில் மீட்கப்பட்டனர்.

சத்தீஸ்கர் மாநிலம் நாராயணபுரி மாவட்டத்தில் உள்ள காப்பகத்தில் இருந்து 3 சிறுமிகளை அண்மையில் அங்கிருந்து காணவில்லை. இவர்களை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்ட நிலையில், அவர்கள் தமிழகத்தில் இருப்பதாக தனிப்படையினருக்கு தெரியவந்தது. இதையடுத்து சத்தீஸ்கரில் இருந்து குழந்தை நல அலுவலர், போலீஸார் அடங்கிய குழுவினர் கரூர் மாவட்டத்திற்கு இன்று (நவ. 22) வந்தனர்.

தமிழக சமூக பாதுகாப்புத்துறை தனித் துணை ஆட்சியர் சைபுதீன் தலைமையில் போலீஸார் சத்தீஸ்கர் குழுவினருடன் கரூர் மாவட்டம் வளையல்காரன்புதூரில் உள்ள தனியார் செங்கல் சூளையில் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் கடந்த 20ம் தேதி தேவா என்ற தரகர் சத் தீஸ்கரில் காணாமல் போன 3 சிறுமிகளை இங்கு கொண்டு வந்து விட்டது தெரியவந்தது. மேலும், 14 வயதுக்கு கீழ் உள்ள ஒரு சிறுவன் உள்ளிட்ட 5 பேர், கொத்தடிமைகளாக இருந்த 2 ஆண்கள் உள்ளிட்ட 6 பேர் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர்கள் இருப்பது தெரியவந்தது. இறுதியாக அந்த 14 பேரும் அங்கிருந்து மீட்கப்பட்டனர். இங்கு மீட்கப்பட்ட 3 சிறுமிகளில் ஒருவரின் சகோதரி நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் இருப்பது தெரியவந்ததை அடுத்து சத்தீஸ்கர் குழு சிறுமியை மீட்க திருச்செங்கோடு சென்றது. அவர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

செங்கல் சூளையில் மீட்கப்பட்ட 14 பேரும் கரூர் தனியார் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, செங்கல் சூளை பங்குதாரர்கள், சிறுமிகளை இங்கு கொண்டு வந்த விட்ட தரகர் தேவா ஆகியோர் மீது வழக்குகள் பதிவு செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Source : www.hindutamil.in



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/11/22/large/901975.jpgசிவகாசி அருகே ரயில் விபத்தை தடுத்த பணியாளர் - பாராட்டிய கோட்ட மேலாளர், அதிகாரிகள்

சிவகாசி: ஒவ்வொரு ரயில் நிலைய பகுதியிலும் ரயில் பாதைகள் சரியாக இருக்கிறதா என சோதனை செய்ய ரயில் பாதை பராமரிப்பு பணியாளர்கள் தினந்தோறும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் நடந்து சென்று ஆய்வு செய்வர்.

இதன்படி, சிவகாசி பகுதி ரயில் பாதை பராமரிப்பு பணியாளர் கருப்பசாமி நவ., 20 பணியில் இருந்தபோது, காலை 6.45 மணிக்கு ரயில் பாதைகளை இணைத்து இருந்த பற்றவைப்பு (வெல்டிங்) விடுபட்டு தண்டவாளங்களில் இடைவெளி இருப்பதை கண்டுபிடித்தார். அந்த நேரத்தில் சிவகாசியில் இருந்து 6 மணிக்கு புறப்பட வேண்டிய சிலம்பு விரைவு ரயில் காலை 6.37 மணிக்கு தாமதமாக புறப்பட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கி வந்து கொண்டிருந்தது.

சுதாரித்த கருப்பசாமி உடனே ரயில் வரும் திசை நோக்கி ஓடி, சிவப்பு கொடியை காண்பித்து ரயிலை நிறுத்தி விபத்தை தவிர்த்தார். இவரது பணியை பாராட்டி கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த், அவருக்கு ரூ. 3 ஆயிரம் ரொக்கப் பரிசும் சான்றிதழும் வழங்கினார். நிகழ்ச்சியில் முதுநிலை கோட்ட பொறியாளர்கள் நாராயணன், பிரவீனா, கோட்ட பாதுகாப்பு அதிகாரி முகைதீன் பிச்சை ஆகியோரும் கருப்பசாமியின் நற்செயலை பாராட்டினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Monday, November 21, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/11/22/large/901429.jpgஆண்களுக்கான நவீன குடும்ப நல கருத்தடை சிகிச்சை - திருச்சியில் இரு வார விழா தொடக்கம்

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் ஆண்களுக்கான நவீன குடும்ப நல கருத்தடை சிகிச்சையை ஊக்குவிக்கும் வகையில் வாசக்டமி இருவார விழா கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி, இந்த விழா நேற்று தொடங்கி டிச.4-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதையொட்டி, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அனைத்து அரசு மருத்துவமனைகள், தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருத்துவமனை (இஎஸ்ஐ), மேம்படுத்தப்பட்ட அரசு வட்டார சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில் பயிற்சி பெற்ற மருத்துவ நிபுணர்களால் வாசக்டமி சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/11/22/large/901683.jpgகேரளாவில் நரபலியான பெண் உடல் பென்னாகரம் அருகே கிராமத்தில் அடக்கம்

தருமபுரி: கேரள மாநிலத்தில் நரபலியாக் கப்பட்ட தருமபுரி மாவட்ட பெண்ணின் உடல் நேற்று முன் தினம் மாலை சொந்த கிராமத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் எர்ரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பத்மா (56). வறுமை காரணமாக வேலைக்காக இவர் கேரள மாநிலத்தில் தங்கியிருந்தார். இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் மாயமான பத்மா, பத்தனம்திட்டா பகுதியில் பிற்போக்கு சிந்தனை கொண்ட கும்பலால் நரபலியாக்கப்பட்டு தோட்டத்தில் புதைக்கப்பட்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்