Thursday, August 31, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/09/01/large/1115761.jpgஆட்சி மாறும்போது லஞ்ச ஒழிப்பு துறை நிறம் மாறுகிறது - நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பகிரங்க குற்றச்சாட்டு

சென்னை: சொத்து குவிப்பு வழக்கில் இருந்து ஓபிஎஸ்-ஐ விடுவித்து சிவகங்கை நீதிமன்றம் கடந்த 2012-ம் ஆண்டு பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி
என்.ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து நேற்று விசாரித்தார். இந்த வழக்கில், ஆட்சி மாறும் போதெல்லாம் பச்சோந்தி போல லஞ்ச ஒழிப்புத் துறை நிறம் மாறுவதாக பகிரங்கமாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

கடந்த 2001-06 அதிமுக ஆட்சி காலத்தில் வருவாய்த் துறை அமைச்சராகப் பதவி வகித்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.77 கோடி அளவுக்கு சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக கடந்த 2006-ம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவுசெய்தது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/09/01/large/1115748.jpgசெந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு குறித்து தலைமை நீதிபதியிடம் முறையிட அறிவுறுத்தல்

சென்னை: சிறையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை எந்த நீதிமன்றம் விசாரிப்பது என்பது குறித்து உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் முறையிட நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

சட்டவிரோதப் பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஜூன் 14-ம் தேதி கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை தற்போது சென்னை எம்.பி, எம்எல்ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ரவி முன்பாக நிலுவையில் உள்ளது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/09/01/large/1115745.jpgவிநாயகர் சதுர்த்திக்கு செப். 18 அரசு விடுமுறை: தலைமைச் செயலர் அறிவிப்பு

சென்னை: செப். 17-ம் தேதி ஏற்கெனவே விநாயகர் சதுர்த்தி அரசு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று செப். 18-ம் தேதியை (திங்கள்கிழமை) அரசு விடுமுறை நாளாக தலைமைச்செயலர் சிவ்தாஸ் மீனா அறிவித்துள்ளார்.

தமிழக அரசின் சார்பில் கடந்தாண்டு இறுதியில், இந்த ஆண்டுக்கான அரசு விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டது. அதில், செப். 17-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விநாயகர் சதுர்த்திக்கான அரசு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதே நேரம், சதுர்த்தி திதியானது செப். 18-ம் தேதி வருவதாக குறிப்பிட்டு, பல்வேறு தரப்பினரும் அன்று விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவதாக அறிவித்துள்ளனர். எனவே, அரசு விடுமுறை தினத்தை செப். 18-க்கு மாற்ற வேண்டும் என்று பல்வேறு அரசு ஊழியர் சங்கங்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், விநாயகர் சதுர்த்திக்கான அரசு விடுமுறை நாளை செப். 18-ம் தேதிக்கு மாற்றி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/09/01/large/1115744.jpgதமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்றும், நாளையும் (செப்.1, 2) சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/09/01/large/1115743.jpg‘இந்தியாவுக்காக பேசுகிறேன்’ - பல மொழிகளில் குரல் பதிவு வெளியிடும் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் ‘இந்தியாவுக்காக பேசுகிறேன்’ என்ற தலைப்பில் பல மொழிகளில் குரல் பதிவை வெளியிடுகிறார்.

‘இண்டியா’ கூட்டணியின் சார்பில் தற்போது மும்பையில் நடைபெற்று வரும் 3- வது கூட்டத்தில் திமுக சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பொருளாளர் டி.ஆர்.பாலு ஆகியோர் பங்கேற்கின்றனர். ஏற்கெனவே, மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடங்கிவிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், அடுத்தகட்டமாக நாடு முழுவதும் தனது குரலை ஒலிக்கச் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/08/31/large/1115736.jpg"வழக்கறிஞர் தொழிலில் நடத்தை மிகவும் முக்கியம்" - தலைமை நீதிபதி கங்கபுர்வாலா பேச்சு 

மதுரை: ‘வழக்கறிஞர் தொழிலில் நடத்தை மிகவும் முக்கியமானது’ என தலைமை நீதிபதி கங்கபுர்வாலா தெரிவித்துள்ளார்.

உயர் நீதிமன்ற மதுரை கிளை பார் அசோசியேசனில் (எம்பிஏ), ‘வழக்கறிஞர் தொழில் நெறிமுறை’ என்ற தலைப்பில் இன்று (ஆகஸ்ட் 31) கருத்தரங்கு நடைபெற்றது. நிர்வாக நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் தலைமை வகித்தார். எம்பிஏ தலைவர் ஸ்ரீனிவாசராகவன் வரவேற்றார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/08/31/large/1115735.jpgஅவமதிப்பு வழக்கில் ஆஜராகாத இரு ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பிடிவாரண்ட்: உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆஜராகாத பள்ளிக் கல்வி செயலாளர் காகர்லா உஷா, இயக்குனர் நந்தகுமார் ஆகியோருக்கு எதிராக ஜாமீனில் வெளிவரக்கூடிய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலைச் சேர்ந்தவர் சின்னத்தாய். கரிவலம்வந்தநல்லூர் அரசு மேனிலைப்பள்ளியில் தொகுப்பூதிய அடிப்படையில் தூய்மைப் பணியாளராக கடந்த 1988ல் நியமிக்கப்பட்டார். தன்னை பணி நிரந்தரம் செய்யக்கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Wednesday, August 30, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/08/31/large/1115637.jpgஉலகக் கோப்பை செஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் - பிரக்ஞானந்தாவுக்கு பிரம்மாண்ட வரவேற்பு

சென்னை: உலகக் கோப்பை செஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று தாயகம் திரும்பிய பிரக்ஞானந்தாவுக்கு, சென்னை விமான நிலையத்தில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

அஜர்பைஜானில் நடைபெற்ற ஃபிடே உலகக் கோப்பை செஸ் இறுதிப் போட்டியில், உலகின் முதல் நிலை வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனுடன் இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா மோதினார். இந்தப் போட்டியில் மேக்னஸ் கார்ல்சன் வெற்றிவாகை சூடினார். உலகக் கோப்பை செஸ் இறுதிப் போட்டியில் நுழைந்த இளம் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/08/31/large/1115635.jpgதமிழகத்தில் 25-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் கட்டணம் உயர்கிறது

சென்னை: தமிழகத்தில் உள்ள 25-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் ரூ.5-லிருந்து ரூ.65 வரை சுங்கக்கட்டணம் உயர்த்தப்படுகிறது.

நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 816 சுங்கச்சாவடிகளில் வாகனங்களுக்கான கட்டணம் ரூ.85 முதல் ரூ.470 வரை வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் ஏப்ரல், செப்டம்பர் மாதங்களில் சுங்கச்சாவடிக் கட்டணம் உயர்த்தப்படுகிறது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/08/31/large/1114279.jpgஒட்டன்சத்திரத்தில் ஒரு கிலோ முருங்கை ரூ.6 விற்பனை: கால்நடைகளுக்கு தீவனமாகும் அவலம்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியில் முருங்கைக்காய் ஒரு கிலோ ரூ.6-க்கு விற்பனையாவதால் வேறு வழியின்றி விவசாயிகள் தங்கள் கால்நடைகளுக்கு உணவாக பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ஒட்டன்சத்திரம், அத்திக்கோம்பை, இடையகோட்டை, கள்ளிமந்தையம், மார்க்கம்பட்டி, அம்பிளிகை உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கரும்பு முருங்கை, செடி முருங்கை, மர முருங்கை சாகுபடி செய்யப்படுகிறது. இங்கிருந்து வெளி மாவட்டம், கேரளாவுக்கு அதிகளவில் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வரத்து குறைவால் முருங்கைக்காய் விலை அதிகரித்து ஒரு கிலோ ரூ.100 முதல் ரூ.150 வரை விற்பனையானது. தற்போது முருங்கைக்காய் சீசன் என்பதால் ஒட்டன்த்திரம் காய்கறி மார்க்கெட்டுக்கு வரத்து அதிகமாக உள்ளது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Tuesday, August 29, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/08/30/large/1114162.jpgவடலூரில் பாமக சார்பில் இன்று பொதுக்கூட்டம் நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி மறுப்பு: விழுப்புரம் அல்லது கள்ளக்குறிச்சியில் நடத்த உத்தரவு

சென்னை: வடலூரில் இன்று (ஆக. 30) பாமக சார்பில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி மறுத்துள்ள உயர் நீதிமன்றம், விழுப்புரம் அல்லது கள்ளக்குறிச்சியில் பொதுக்கூட்டம் நடத்தலாம் என்று உத்தரவிட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் வடலூர் பேருந்து நிலையம் அருகே இன்று பாமக சார்பில் 35-ம் ஆண்டு விழா பொதுக் கூட்டம் நடத்த நெய்வேலி டிஎஸ்பி மற்றும் வடலூர் போலீஸார் அனுமதி மறுத்ததை எதிர்த்து, அக்கட்சியின் மாவட்டச் செயலர் முத்துகிருஷ்ணன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/08/30/large/1114195.jpgவீரமுத்துவேல் எப்போதும் முதல் பெஞ்ச் மாணவன்தான் - இயற்பியல் ஆசிரியை நெகிழ்ச்சி

சென்னை: இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேல் எப்போதும் முதல் ‘பெஞ்ச்’ மாணவன்தான் என்று அவரது பள்ளி இயற்பியல் ஆசிரியை நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) சந்திரயான்-3 திட்டம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் அனுப்பப்பட்ட லேண்டர், ரோவர் கலன்கள் நிலவில் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன. சந்திரயான்-3 திட்டத்தின் இயக்குநரான இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேலை ஒட்டுமொத்த தேசமும் கொண்டாடுகிறது. இவர் விழுப்புரத்தை சேர்ந்தவர் என்பதால் தமிழகம் கூடுதல் பெருமிதத்துடன் கொண்டாடி வருகிறது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/08/30/large/1114197.jpgதொழில், வணிக நிறுவன மின் இணைப்புகளில் செல்போன் செயலி மூலம் மின் பயன்பாட்டை கணக்கெடுக்க மின் வாரியம் உத்தரவு

சென்னை: தொழில் மற்றும் வணிக நிறுவனங்களின் மின் இணைப்புகளில் செல்போன் செயலி மூலம் மின் பயன்பாட்டைக் கணக்கெடுக்க மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக மின்வாரியம் தாழ்வழுத்தப் பிரிவில் இடம்பெறும் தொழில் மற்றும் வணிக இணைப்புகளில் மின் பயன்பாட்டைக் கணக்கெடுத்த உடனேயே தெரிவிக்கும் வகையில் செல்போன் செயலியை அறிமுகப்படுத்தி உள்ளது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/08/29/large/1113044.jpgகோவையில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் கோலாகலம்

கோவை: ஓணம் பண்டிகையையொட்டி, அத்தப் பூ கோலம் வரைந்தும், சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்தும் கோவையில் வசிக்கும் மலையாள மொழி பேசும் கேரள மக்கள், ஓணம் பண்டிகையை சிறப்பாக கொண்டாடினர்.

மலையாள மொழி பேசும் கேரள மாநில மக்களால், மகாபலி மன்னனை வரவேற்கும் விதமாக ஓணம் பண்டிகை, ஆண்டுதோறும் ஆவணி மாதம் திருவோண நட்சத்திரத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கேரளா எல்லையை ஒட்டி அமைந்துள்ள கோவையில் வாளையாறு, வேலந்தாவளம், நவக்கரை, மீனாட்சிபுரம், ஆனைக்கட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பல ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலையாள மொழி பேசும் கேரள மக்கள் வசிக்கின்றனர். நடப்பாண்டு ஓணம் பண்டிகை தினத்தையொட்டி, கோவையில் இன்று (ஆக.29) ஓணம் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. ஓணம் பண்டிகையையொட்டி கோவை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நேற்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Monday, August 28, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/08/29/large/1112962.jpgதனிநபர் ஆண்டு வருமானம் ரூ.1.66 லட்சமாக உயர்வு: தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

சென்னை: தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 2 ஆண்டுகளாக வேகமெடுத்துள்ளது. தனிநபர் ஆண்டு வருமானம் ரூ.1.66 லட்சமாக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் விலைவாசி, தேசிய அளவைவிட குறைவாக உள்ளது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

தமிழக உள்நாட்டு உற்பத்தி மதிப்பு குறித்த கணிப்பை தமிழக புள்ளியியல் துறை தயாரித்து வெளியிட்டுள்ளது. இதுகுறித்து சென்னையில் உள்ள மாநில திட்டக்குழு அலுவலகத்தில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, மாநில திட்டக்குழு துணை தலைவர் ஜெயரஞ்சன் ஆகியோர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/08/29/large/1112965.jpgதமிழகம் முழுவதும் ஸ்மார்ட் மீட்டர் பயன்படுத்த திட்டம்: டெண்டர் கோரியது மின்வாரியம்

சென்னை: மின்பயன்பாட்டைக் கணக்கெடுக்க உதவும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை தமிழகம் முழுவதும் செயல்படுத்த, மின்வாரியம் டெண்டர் கோரியுள்ளது.

வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சாரத்தைக் கணக்கெடுக்க ஸ்டேடிக் மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது. 2 மாதங்களுக்கு ஒருமுறை மின்வாரிய ஊழியர்கள் வீடுகளுக்கு நேரில் சென்று மின் பயன்பாட்டைக் கணக்கெடுத்து வருகின்றனர். இதில் சில சமயங்களில் தவறுகள் நடப்பதால் நுகர்வோர் பாதிக்கப்படுகின்றனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/08/28/large/1111652.jpgநீட் தேர்வு | மாணவர்களை தற்கொலைக்குத் தூண்டும் திமுக அமைச்சர்கள்: வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு

கோவை: நீட் தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்துவதை, பயிற்சி அளிப்பதை விட்டுவிட்டு, ஒவ்வொரு முறையும் அவர்களை திமுகவும், அக்கட்சியின் அமைச்சர்களும் தற்கொலைக்கு தூண்டுன்றனர் என எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள மீனவர் சமுதாய நல கூடத்தில், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ் ரூ.5 லட்சம் மதிப்பிலான தனி நபர் மருத்துவ காப்பீடு அட்டை வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் வானதி சீனிவாசன் கூறியதாவது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Sunday, August 27, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/08/28/large/1111516.jpgஉதகையில் சாக்லேட் தயாரித்த ராகுல் காந்தி: சிறு, குறு நிறுவனங்களின் பெரும் ஆற்றலுக்கு சான்று என பாராட்டு

உதகை: உதகையில் மகளிர் தயாரிக்கும் சாக்லேட்கள் இந்தியாவின் சிறு, குறு நிறுவனங்களின் பெரும் ஆற்றலுக்கு சான்றாகும் என ராகுல் காந்தி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடந்த 12-ம் தேதி நீலகிரி மாவட்டம் வந்தார். உதகை அருகே எல்லநள்ளி பகுதியில் உள்ள தனியார் விடுதியில் நடந்த நிகழ்வில் பங்கேற்றார். அங்கு, பெண்கள் சாக்லேட் தயாரிப்பதை பார்வையிட்டதுடன், அவர்களுடன் இணைந்து சாக்லேட் தயாரித்தார். இதுதொடர்பான வீடியோவை, ட்விட்டரில் ராகுல் நேற்று பகிர்ந்தார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/08/28/large/1111566.jpgபுதிய வாகனங்களை பதிவு பணிகளுக்காக ஆர்டிஓ அலுவலகங்களுக்கு எடுத்துச் செல்ல அவசியமில்லை: உரிய அறிவுறுத்தல் வழங்க ஆர்வலர்கள் கோரிக்கை

சென்னை: புதிய வாகனங்களை பதிவு செய்வதற்காக வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு நேரில் எடுத்துச் செல்ல அவசியம் இல்லை என்று அதிகாரிகள், விற்பனையாளர்களுக்கு அரசு உரிய அறிவுறுத்தல் வழங்க வேண்டும் என்று ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் 91 வட்டார போக்குவரத்து (ஆர்டிஓ) அலுவலகங்கள், 54 பகுதி அலுவலகங்கள் செயல்படுகின்றன. இங்கு புதிய வாகனங்களை பதிவு செய்யும்போது, வட்டார போக்குவரத்து அலுவலர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் வாகனங்களை ஆய்வு செய்வது வழக்கம். இதனால், வாகனங்களை ஆர்டிஓ அலுவலகத்துக்கு எடுத்துச் செல்வதற்காக, இதர செலவுஎன்று குறிப்பிட்ட தொகையை வாகனம் வாங்குவோரிடம் விற்பனையாளர்கள் வசூலிக்கின்றனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/08/28/large/1111559.jpgசிஏஜி அறிக்கையால் அம்பலம் மத்திய அரசின் 7 திட்டங்களில் முறைகேடு: முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

திருவாரூர்: மத்திய பாஜக அரசின் ஊழலை சிஏஜி அறிக்கை அம்பலப்படுத்தி உள்ளது. ஊழல் குறித்து பேச பாஜகவுக்கு தகுதி இல்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

திருவாரூர் அடுத்த பவித்திரமாணிக்கத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி.நாகை எம்.செல்வராஜ் இல்லத் திருமணத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று நடத்தி வைத்தார். விழாவில் முதல்வர் பேசியதாவது:

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/08/27/large/1109941.jpgஅரசின் திட்டங்களை தொய்வின்றி செயல்படுத்த வேண்டும்: ஆய்வு கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

நாகப்பட்டினம்: அரசின் திட்டங்களை எந்தவொரு தொய்வும் இல்லாமல் செயல்படுத்த வேண்டும் என நாகை, திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கள ஆய்வில் முதல்வர் திட்டத்தின் கீழ், நாகை,திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களின் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Saturday, August 26, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/08/27/large/1110083.jpgசிறந்த மருத்துவர்கள் 40 பேருக்கு விரைவில் விருது - ‘மருத்துவ நட்சத்திரம்’ விருது விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி

சென்னை: நான்கு ஆண்டுகளுக்கும் சேர்த்து தமிழக அரசு சார்பில் 40 மருத்துவர்களுக்கு சிறந்த மருத்துவர் விருது விரைவில் வழங்கப்படும் என்று ‘இந்து தமிழ் திசை'–மருத்துவ நட்சத்திரம் விருது வழங்கும் விழாவில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் சார்பில் மருத்துவப் பணியை சேவை மனப்பான்மையோடும் அர்ப்பணிப்போடும் ஆற்றிவரும் மருத்துவர்களைப் பாராட்டி கவுரவிக்கும் வகையில் ‘மருத்துவ நட்சத்திரம்’ எனும் சிறப்பு விருதுகள் கடந்த இரண்டாண்டுகளாக வழங்கப்பட்டு வருகின்றன.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/08/27/large/1110068.jpgமதுரையில் சுற்றுலா ரயில் பெட்டியில் பயங்கர தீ விபத்து: உத்தர பிரதேச பயணிகள் 9 பேர் பரிதாப உயிரிழப்பு

மதுரை: மதுரையில் நேற்று அதிகாலை ரயில் பெட்டியில் நேரிட்ட தீ விபத்தில் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் 9 பேர் உயிரிழந்தனர்.

இந்திய ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி) சார்பில் ரயில் பெட்டிகளை முன்பதிவு செய்து, ஆன்மிகத் தலங்களுக்குச் சுற்றுலா செல்வது நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்டோர், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு சுற்றுலா செல்லத் திட்டமிட்டு, ஐஆர்சிடிசி மூலம் ரயில் பெட்டியை முன்பதிவு செய்தனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Friday, August 25, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/08/26/large/1108651.jpgமதுரையில் அதிகாலையில் சோகம் | நின்றிருந்த சுற்றுலா ரயிலில் தீ விபத்து - இருவர் பலி

மதுரை: மதுரை ரயில் நிலையில் நின்றிருந்த ரயில் பெட்டியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் இரண்டு பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

லக்னோ - ராமேஸ்வரம் சுற்றுலா ரயிலில் மதுரையில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் ரயில் பெட்டி திடீரென தீப்பற்றி எரிந்தது. இதில் சிக்கி இருவர் உயிரிழந்தனர். இவர்கள் இருவரும் உத்தரபிரதேசத்தில் இருந்து ராமேஸ்வரத்துக்கு சுற்றுலா வந்தவர்கள் என கூறப்படுகிறது. விபத்தில் காயமடைந்தவர்கள் மற்றும் மேலும் உயிரிழந்தவர்கள் விவரங்கள் தெரியவில்லை. நள்ளிரவு நேரத்தில் ஏற்பட்ட இந்த பயங்கர தீ விபத்தால் தீ மளமளவென எரிந்தது. முதல்கட்ட தகவல்படி சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. தீ விபத்தின் போது பொருட்கள் வெடிப்பதால் சிலிண்டர் வெடித்து தீ பரவியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

ரயிலில் தீ பற்றியதற்கான காரணம் முழுமையான விசாரணைக்கு பிறகே தெரிய வரும். எனினும் பயங்கர தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த தீ விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/08/26/large/1108637.jpgதமிழகத்தில் 2 நாள் மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் வேக மாறுபாடு ஏற்பட்டுள்ளதால், தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங் களில் இன்று (ஆக. 26) ஓரிரு இடங்களிலும், நாளை சில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும், வரும் 28-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/08/26/large/1108630.jpgசெந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஆக.28 வரை நீட்டிப்பு

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை வரும் 28-ம் தேதி வரை நீட்டித்துள்ள சிறப்பு நீதிமன்றம், அன்று அவரை நேரில் ஆஜர்படுத்த உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோதப் பணப் பரிமாற்ற தடை சட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஜூன் 14-ம் தேதி கைது செய்தனர். பி்ன்னர், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அமலாக்கத் துறை அதிகாரிகள் அவரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர். அவருக்கு எதிராக 120 பக்க குற்றப்பத்திரிகை, 3 ஆயிரம் பக்க ஆவணங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/08/26/large/1108628.jpgகாலை உணவு திட்டம் தமிழகம் முழுவதும் விரிவாக்கம் - 17 லட்சம் மாணவர்கள் பயன்

நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் திருக்குவளையில், முன்னாள் முதல்வர் கருணாநிதி படித்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், காலை உணவு விரிவாக்க திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கல்வி கற்க எந்த காரணமும் தடையாக இருக்க கூடாது என்பதில் அரசு உறுதியாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

நாகை மாவட்டம் திருக்குவளையில், முன்னாள் முதல்வர் கருணாநிதி படித்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், காலை உணவு விரிவாக்க திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். மாணவ, மாணவிகளுக்கு உணவு பரிமாறி, அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார். அவர்களுடன் உரையாடினார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/08/25/large/1107675.jpg"குடும்ப நல வழக்குகளை ஓராண்டுக்குள் முடிக்க விதிகள்" - முன்னாள் தலைமை நீதிபதி சதாசிவம் வலியுறுத்தல்

மதுரை: விவாகரத்து உள்ளிட்ட குடும்ப நல வழக்குகளை சமரசமாகவோ அல்லது உரிய நிவாரணம் வழங்கியோ ஓராண்டுக்குள் முடிக்க, உரிய விதிமுறைகளை வகுக்க தலைமை நீதிபதியிடம் வலியுறுத்துவேன் என முன்னாள் தலைமை நீதிபதி பி.சதாசிவம் கூறினார்.

உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.சதாசிவத்திற்கு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் எம்எம்பிஏ (MMBA) வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் மகாத்மா காந்தி அரங்கில் பாராட்டு விழா நேற்று நடந்தது. உயர் நீதிமன்ற மதுரை கிளை நிர்வாக நீதிபதி எஸ்எஸ். சுந்தர் தலைமை வகித்தார். நீதிபதிகள் விஜயகுமார், ஸ்ரீமதி, கேகே. ராமகிருஷ்ணன் பங்கேற்றனர். நீதிபதி எஸ்எஸ்.சுந்தர் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் கிருஷ்ணவேணி, மீனாட்சி சுந்தரம், வெங்கட்ராமன் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி. சதாசிவம் குறித்து பாராட்டி பேசினர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Thursday, August 24, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/08/25/large/1107566.jpgமூன்று அமைச்சர்கள் மீதான வழக்கு | உச்ச நீதிமன்றத்தில் முறையிடுவோம் - திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தகவல்

சென்னை: மூன்று அமைச்சர்கள் மீதான வழக்கை தாமாக முன்வந்து விசாரிக்கும் அறிவிப்பு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் முறையிடுவோம் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.

சொத்து குவிப்பு வழக்கில் கீழமை நீதிமன்றங்கள் விடுவித்த நிலையில், அமைச்சர்கள் க.பொன்முடி, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் மீதான வழக்குகளை தாமே முன்வந்து விசாரணை நடத்திய உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், விளக்கம் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, நேற்று செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/08/25/large/1107571.jpgமாநில கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கை தயார் - அடுத்த மாதம் தமிழக அரசிடம் சமர்ப்பிக்க திட்டம்

சென்னை: மாநில கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கை தயாரிக்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மாநிலத்துக்கு என பிரத்யேக கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/08/25/large/1107597.jpgஅனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் இன்று முதல் காலை உணவு திட்டம் விரிவாக்கம் - திருக்குவளையில் முதல்வர் தொடங்கி வைக்கிறார்

சென்னை / நாகப்பட்டினம்: தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் விரிவாக்க திட்டத்தை, திருக்குவளையில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி படித்த பள்ளியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கவும், கற்றல் இடைநிற்றலை தவிர்க்கவும் அரசுப் பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் அமல்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் 110-வது விதியின்கீழ் முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆண்டு மே 7-ம் தேதி அறிவித்தார். முதலில் இத்திட்டம், சென்னை மாநகராட்சி பள்ளிகள், தொலைதூரகிராமங்களில் உள்ள பள்ளிகளில் தொடங்கப்படும். பின்னர், படிப்படியாக அனைத்து பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று அறிவித்தார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/08/25/large/1106429.jpgசந்திராயன்-3 திட்டத்தில் முக்கிய பங்காற்றிய தமிழகத்தைச் சேர்ந்த பெண் விஞ்ஞானி கவுரிமணி

நாமக்கல்: சந்திராயன்-3 திட்டத்தில் டெலி கமாண்ட் சாப்ட்வேர் வடிவமைப்பாளராக திண்டுக்கல் மாவட்டம் கணக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பெண் விஞ்ஞானி செயல்பட்டுள்ளார்.

இந்தியாவின் சந்திராயன்-3 விண்கலம், சந்திரனில் கால் பதித்து சரித்திர சாதனை படைத்துள்ளது. இது உலக நாடுகளை இந்தியாவின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. இந்த சந்திராயான்-3 திட்ட இயக்குனராக தமிழகத்தை சேர்ந்த வீரமுத்துவேல் செயல்பட்டுள்ளார். அதேபோல் திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த கணக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கவுரிமணி (50) என்ற விஞ்ஞானி டெலி கமாண்ட் சாப்ட்வேர் வடிவமைப்பாளராக செயல்பட்டுள்ளார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/08/24/large/1106428.jpgபாஜக நடைபயணம் நிறைவடையும்போது தமிழகத்தில் அரசியல் புரட்சி நடக்கும்: அண்ணாமலை கருத்து

கோவை: ஜனவரியில் பாஜக நடைபயணம் நிறைவடையும்போது தமிழகத்தில் அரசியல் புரட்சி நடக்கும் என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

இதுதொடர்பாக கோவை விமான நிலையத்தில் நேற்று (ஆக.24) அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஜனவரியில் பாஜக நடைபயணம் நிறைவடையும்போது தமிழகத்தில் அரசியல் புரட்சி நடக்கும். நடைபயணத்தில் பகவத் கீதையை விட பைபிளும், குர்ஆனும் அதிகமாக பரிசாக வந்துள்ளன. பாஜக மீதான பிம்பம் உடைந்து, அனைவருக்கும் உழைக்கும் கட்சியாக உள்ளது. இந்த நடைபயணத்தில் இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்களும் நடந்துள்ளார்கள்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Wednesday, August 23, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/08/24/large/1106298.jpg‘தீர்ப்பை பார்த்து 3 நாட்களாக தூங்கவில்லை’: அமைச்சர்கள் சொத்து குவிப்பு வழக்கில் நீதிபதி கருத்து

சென்னை: தமிழக நிதித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, கடந்த 2006-11 காலகட்ட திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வி துறை அமைச்சராக இருந்தார். அப்போது, வருமானத்துக்கு அதிகமாக ரூ.76.40 லட்சம் அளவுக்கு சொத்துக் குவிப்பில் ஈடுபட்டதாக தங்கம் தென்னரசு, அவரது மனைவி மணிமேகலை ஆகியோர் மீது விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்புதுறை போலீஸார் 2012-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் இருந்து இருவரையும் விடுவித்து ஸ்ரீவில்லிபுத்தூர் முதன்மை அமர்வுநீதிமன்றம் கடந்த 2022 டிசம்பரில் தீர்ப்பளித்தது.

இதேபோல, தற்போதைய வருவாய் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், கடந்த 2006-11 காலகட்ட திமுக ஆட்சியில் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சராக இருந்தார். அப்போது வருமானத்துக்கு அதிகமாக ரூ.44.56 லட்சம் அளவுக்கு சொத்துக் குவிப்பில் ஈடுபட்டதாக சாத்தூர் ராமச்சந்திரன், அவரது மனைவி ஆதிலட்சுமி பி.விசாலாட்சி, அமைச்சரின் நண்பர் கேஎஸ்பி சண்முகமூர்த்தி ஆகியோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் 2012-ம் ஆண்டு வழக்குபதிவு செய்தனர். இந்த வழக்கில்இருந்து சாத்தூர் ராமச்சந்திரன் உள்ளிட்ட 3 பேரையும் விடுவித்து ஸ்ரீவில்லிபுத்தூர் முதன்மை அமர்வு நீதிமன்றம் கடந்த ஜூலை மாதம் தீர்ப் பளித்தது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/08/24/large/1106336.jpgசந்திரயான்-3 திட்ட வெற்றி - ஆளுநர்கள், முதல்வர், கட்சி தலைவர்கள் வாழ்த்து

சென்னை: சந்திரயான்-3 திட்ட வெற்றிக்காக ஆளுநர்கள், தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து கூறியுள்ளனர்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி: சந்திரயான்-3 பயணத்தை வெற்றிகரமாக்கிய நமது விஞ்ஞானிகளால் ஒட்டுமொத்த தேசம்பெருமிதம் கொள்கிறது. தலைசிறந்த விண்வெளி நாடுகளின் போட்டிக்குள் இந்தியாவை சேர்த்த இஸ்ரோ குழுவுக்கு வாழ்த்துகள்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/08/24/large/1105330.jpgசந்திரயான்-3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேலுக்கு முதல்வர் ஸ்டாலின் தொலைபேசியில் வாழ்த்து

சென்னை: சந்திரயான்-3 திட்ட இயக்குனருமான தமிழகத்தைச் சேர்ந்த வீரமுத்துவேலை தமிழக முதல்வர் ஸ்டாலின் தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நிலவை ஆய்வு செய்ய இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. இதன் மூலம் அமெரிக்கா, ரஷ்யாவைத் தொடர்ந்து நிலவில் கால்பதித்துள்ள இந்தியா, தனது விண்வெளி பயணத்தில் புதிய மைல் கல்லை எட்டியுள்ளது. சந்திராயன் நிலவினை அடைந்ததைத் தொடர்ந்து இந்தியாவின் வெற்றியை தெரிவித்த இஸ்ரோ தலைவர் "இந்தியா நிலவில் உள்ளது" என்று அறிவித்தார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Tuesday, August 22, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/08/23/large/1105154.jpg‘தி இந்து’ குழுமம் மற்றும் சென்னை மாநகராட்சி சார்பில் சென்னையின் 384-வது தின புகைப்பட கண்காட்சி: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை தினத்தை ஒட்டி, ‘தி இந்து’ குழுமம் மற்றும் சென்னை மாநகராட்சி சார்பில், இந்து ஆவண காப்பகத்தில் தேர்வு செய்யப்பட்ட சென்னையின் பரிணாமத்தை விளக்கும் அரிய புகைப்படங்களின் கண்காட்சியை ரிப்பன் மாளிகை வளாகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தமிழகத்தின் தலைநகரான சென்னை தோற்றுவிக்கப்பட்டதாகக் கருதப்படும் கி.பி. 1639, ஆகஸ்ட் 22- ம் நாள் சென்னை தினமாக கடந்த 2004-ம் ஆண்டில் இருந்து கொண்டாடப்பட்டு வருகிறது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/08/23/large/1104618.jpgரிட் மனுக்களில் 8 வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் - உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை: ரிட் மனுக்களில் 8 வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்ற ரிட் விதிகளை அதிகாரிகள் பின்பற்ற வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் குடும்ப ஓய்வூதியத்துக்கு சம்பந்தப்பட்ட அரசு ஊழியரின் முந்தைய பணிக்காலத்தில் 50 சதவீதத்தை சேர்க்கக்கோரி 2016-ல் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஏழரை ஆண்டுகளாக பதில் மனு தாக்கல் செய்யப்படவில்லை. இதையடுத்து பதில் மனு தாக்கல் செய்ய அனுமதி கோரி வருவாய்த்துறை செயலாளர், மதுரை மாவட்ட ஆட்சியர், உசிலம்பட்டி கோட்டாட்சியர், திருமங்கலம் வட்டாட்சியர் தரப்பில் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/08/22/large/1104617.jpg"இன்னும் 10 நாட்கள் தான் உங்களுக்கு அவகாசம்" - தருமபுரி நகராட்சிக் கூட்டத்தில் திமுக கவுன்சிலர் வார்னிங்

தருமபுரி: நகராட்சி அதிகாரிகளின் செயல்பாட்டால் திமுக அரசுக்கு அவப்பெயர் ஏற்படுகிறது என தருமபுரி நகராட்சிக் கூட்டத்தில் திமுக கவுன்சிலர் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தருமபுரி நகராட்சி அலுவலகத்தில் இன்று(ஆகஸ்ட் 22) அவசரக் கூட்டம் நடந்தது. நகராட்சி அலுவலக அண்ணா கூட்டரங்கில் நடந்த இந்தக் கூட்டத்துக்கு நகராட்சி தலைவர் லட்சுமி(திமுக) தலைமை வகித்தார். துணைத் தலைவர் நித்யா முன்னிலை வகித்தார். ஆணையாளர் புவனேஸ்வரன் வரவேற்றார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/08/22/large/1104616.jpg"நன்றியால் நெகிழ்கிறேன்" - கிக் தொழிலாளர்கள் நல வாரியம் குறித்து முதல்வர் ஸ்டாலின்

சென்னை: அமைப்புசாராத கிக் (Gig) தொழிலாளர்களின் நலன் காக்கத் தனி நல வாரியம் அறிவித்தமைக்குப் பல தரப்பினரும் உளமாரப் பாராட்டி நவிலும் நன்றியால் நெகிழ்கிறேன்.

ஓலா, ஊபர், ஸொமேட்டோ, ஸ்விகி தொழிலாளர்களுக்குத் தனி நல வாரியம் அமைக்கப்படும் எனத் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பு மிகுந்த வரவேற்புக்குரியது. கிக் பொருளாதாரம் என்று அழைக்கப்படும் இதுபோன்ற பணிகளில் ஈடுபடும் ஊழியர்களுக்குப் பணிப் பாதுகாப்பு, விபத்துக் காப்புறுதி, சுகாதாரக் காப்புறுதி போன்றவை இல்லை. இந்த நிலையில் அமைப்புசாராத கிக் (Gig) தொழிலாளர்களின் நலன் காக்கத் தனி நல வாரியம் அமைக்கப்படும் என சுதந்திர தினத்தன்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Monday, August 21, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/08/22/large/1104494.jpgமதுரை மாநாடு வரலாறு படைத்தது - அதிமுக நிர்வாகிகள், தொண்டர்களுக்கு பழனிசாமி நன்றி

சென்னை: அதிமுக சார்பில் மதுரையில் நேற்று முன்தினம் நடைபெற்ற வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு வரலாறு படைப்பதற்குக் காரணமாக இருந்த கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அதிமுகவின் மதுரை மாநாடு,இந்தியாவே திரும்பிப் பார்க்கும்வகையில் வெற்றி அடைந்திருக்கிறது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/08/22/large/1104525.jpgகலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு 1.63 கோடி விண்ணப்பங்கள்

சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு 1.63 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், வரும் செப்.15-ம் தேதி தொடங்கப்பட உள்ளது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/08/22/large/1104523.jpgசென்னை அருகே ரூ.4,276 கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் - முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

சென்னை: சென்னை அருகே உள்ள பேரூரில் தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய அளவில் ரூ.4,276.44 கோடியில் 400 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்கும் பணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: செங்கல்பட்டு மாவட்டம் கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள பேரூரில் ரூ.4,276.44 கோடி மதிப்பீட்டில், நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட, கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்வர் ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/08/21/large/1103043.jpgஅம்பை பற்கள் உடைப்பு வழக்கில் உயர்மட்ட குழு அறிக்கை கேட்டு மனு - தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

மதுரை: விசாரணை கைதிகளின் பற்கள் உடைக்கப்பட்ட விவகாரத்தில் உயர்மட்ட விசாரணை குழுவின் அறிக்கையை கேட்டு தாக்கலான மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த அருண்குமார், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், "அம்பாசமுத்திரம் போலீஸார் என் மீது பொய் வழக்கு பதிவு செய்து சட்டவிரோத காவலில் வைத்து கடுமையாக தாக்கினர். அப்போது எனது நான்கு பற்கள் உடைக்கப்பட்டன. என்னைப் போல் வேறு சில விசாரணை கைதிகளின் பற்களையும் டிஎஸ்பி பல்வீர்சிங் பிடுங்கி சித்திரவதை செய்துள்ளார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Sunday, August 20, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/08/21/large/1102808.jpgநிலவின் தென் துருவத்தில் சந்திரயானின் ‘லேண்டர்’ கலன் நாளை மறுநாள் தரை இறங்குகிறது: இறுதிகட்டப் பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரம்

சென்னை: நிலவில் தரையிறங்கி ஆராய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) சுமார் ரூ.615 கோடியில் வடிவமைத்தது. இந்த விண்கலம் எல்விஎம்-3 ராக்கெட் மூலம் கடந்த ஜூலை 14-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. அதன்பிறகு, பூமியை சுற்றிவந்த விண்கலம் ஆக.1-ம் தேதி பூமியின் ஈர்ப்பு விசையில் இருந்து விலக்கப்

பட்டு நிலவை நோக்கி செல்லுமாறு அதன் பயணப் பாதை மாற்றப்பட்டது. 5 நாள் பயணத்துக்கு பிறகு, ஆக.5-ம் தேதி நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் சந்திரயான் நுழைந்தது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/08/21/large/1102946.jpgகச்சத்தீவை மீட்க தொடர்ந்து போராடுவோம்: மதுரை மாநாட்டில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி உறுதி

மதுரை: மதுரை வலையங்குளத்தில் அதிமுக எழுச்சி மாநாடு நேற்று நடந்தது. இதில் லட்சக்கணக்கான தொண்டர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர். மாநாட்டில் பேசிய பொதுச் செயலாளர் பழனிசாமி, நீட் விவகாரத்தில் திமுக மிகப்பெரிய நாடகத்தை நடத்துவதாக குற்றம்சாட்டினார். கச்சத்தீவை மீட்க ஜெயலலிதா வழியில் அதிமுக தொடர்ந்து போராடும் என்று தெரிவித்தார்.

அதிமுக பொதுச் செயலாளராக பழனிசாமி பொறுப்பேற்ற பிறகு, அக்கட்சியின் முதல் மாநில மாநாடு மதுரை அடுத்த வலையங்குளத்தில் நேற்று நடைபெற்றது. காலையில் நடந்த நிகழ்ச்சியில், மாநாட்டு நுழைவுவாயிலில் அமைக்கப்பட்டிருந்த 51 அடி உயரக் கம்பத்தில் கட்சிக் கொடியை ஏற்றிவைத்து, மாநாட்டை பழனிசாமி தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து, கலை, இலக்கிய நிகழ்ச்சிகள் நடந்தன. மாலை 4.30 மணி அளவில் பழனிசாமி தலைமையில் மாநாடு தொடங்கியது. மாநாட்டில் அவர் பேசியதாவது:

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Saturday, August 19, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/08/20/large/1101256.jpgடவர் ஃபேன் எரிந்ததில் கொசுவிரட்டி உருகி மூச்சுத் திணறல் - கரும்புகையில் சிக்கி பாட்டி, 3 பேத்தி உயிரிழப்பு

திருவள்ளூர்: சென்னை - மாத்தூரில் டவர் ஃபேன் எரிந்ததால் உருகிய கொசுவிரட்டியால் மூச்சுத் திணறி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சிறுமிகள், மூதாட்டி என, 4 பேர் உயிரிழந்த சம்பவம், தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மணலி அருகே உள்ள மாத்தூர் எம்.எம்.டி.ஏ., குடியிருப்பு 3-வது பிரதான சாலை, 79-வது குறுக்குத் தெருவில் வசித்து வருபவர் உடையார்(40). இவரது மனைவி செல்வி(32). இத்தம்பதிக்கு சந்தியா(10), பிரியா லட்சுமி(8) என 2 மகள்கள் உள்ளனர். இவர்கள், மாத்தூரில் உள்ள அரசு பள்ளியில் படித்து வந்தனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/08/20/large/1101311.jpgதமிழகத்தில் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் அதிகரிப்பு - முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

கோவை: தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 3 மடங்கு அதிகரித்துள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

தமிழக அரசு சார்பில் இரண்டு நாட்கள் நடைபெறும் ‘ஸ்டார்ட்-அப் திருவிழா’ கோவை கொடிசியா தொழில் மற்றும் வர்த்தகக் கண்காட்சி வளாகத்தில் நேற்று தொடங்கியது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://ift.tt/TX5qmhd அடி நீள டிஜிட்டல் மேடை, ஹெலிகாப்டரில் மலர் தூவல் - மதுரையில் மின்னொளியில் ஜொலிக்கும் அதிமுக மாநாடு

மதுரை: அதிமுக வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவிற்கு 500 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள மதுரை மாநாட்டு பந்தல், மேடை மற்றும் முகப்பு அலங்காரம் போன்றவை மின்னொளியில் ஜொலித்தது, மாநாட்டிற்கு வந்த தொண்டர்களை கவர்ந்தது.

அதிமுக பொதுச்செயலாளராக கே.பழனிசாமி பொறுப்பேற்றபோது மதுரையில் கட்சியின் மாநில மாநாடு ஆகஸ்ட் 20ம் தேதி நடத்தப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி, இன்று காலை அதிமுக மாநில மாநாடு பொன்விழா எழுச்சி மாநாடாக மதுரையில் நடக்கிறது. மாநாட்டின் நுழைவு வாயிலில் அண்ணாத்துரை, எம்ஜிஆர், ஜெயலலிதா, கே.பழனிசாமியின் ஆள் உயர பிரமாண்ட உருவ கட் அவுட்கள் வைக்கப்பட்டிருந்தன. மாநாட்டில் திரளும் தொண்டர்கள் அனைவரும் இந்த பிரமாண்ட கட் அவுட்களை பார்க்கும் வகையில் 50 அடி உயர ‘கட் அவுட்’ களாக அமைக்கப்பட்டிருந்தன.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்