Sunday, April 30, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/05/01/large/983704.jpgஅரசியல் களத்தில் அதிமுகவை பாதுகாக்க அண்ணாமலையே வாய்ப்பை உருவாக்கி கொடுத்தார்: திருமாவளவன்

திருவண்ணாமலை: அதிமுகவை பாதுகாக்க அரசியல் களத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையே வாய்ப்பை உருவாக்கி கொடுத்தார் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் நேற்று முன்தினம் நடைபெற்ற கட்சி பிரமுகரின் இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்றவர், செய்தியாளர்களிடம் கூறும்போது, “விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கர்நாடாகவில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக வாக்குகள் சேகரிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி தலைவர்களுடன் மே 2-ம் தேதி அறிவிக்கவுள்ளேன்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/05/01/large/984009.jpgகோவையில் ரசாயன பவுடர் பயன்படுத்தி பழுக்க வைக்கப்பட்ட 575 கிலோ மாம்பழங்கள் பறிமுதல் செய்து அழிப்பு

கோவை: கோவையில் ரசாயன பவுடர் பயன்படுத்தி பழுக்க வைக்கப்பட்ட 575 கிலோ மாம்பழங்களை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.

தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையின் ஆணையர் உத்தரவின் பேரில், கோவை மாவட்ட நியமன அலுவலர் தமிழ்ச் செல்வன் தலைமையிலான உணவு பாதுகாப்பு அலுவலர்கள் 8 குழுக்களாக பிரிந்து, கடந்த 24-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை பழக் கடைகள், குடோன்கள், அடைத்து வைக்கப்பட்ட குடிநீர் பாட்டில்கள் தயாரிப்பு நிறுவனங்கள், விநியோகஸ்தர்கள், விற்பனை நிறுவனங்களில் திடீர் ஆய்வு நடத்தினர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://ift.tt/7gVzvPJ முதல் 2022 வரை பெறப்பட்ட கட்டிட அனுமதிகளுக்கு 2 ஆண்டு அவகாசம் நீட்டிப்பு: நகர ஊரமைப்பு இயக்குநர் அறிவிப்பு

சென்னை: கரோனா ஊரடங்கை கருத்தில் கொண்டு தமிழகத்தில் கடந்த 2014 ஏப்ரல் முதல் 2022 மார்ச் மாதத்துக்குள் பெறப்பட்ட கட்டிட அனுமதிகளுக்கு 2 ஆண்டுகள் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கட்டிடங்களுக்கான அனுமதி என்பது குறிப்பிட்டகால அளவுக்கு வழங்கப்படுகிறது. சில வகையான கட்டிடங்களுக்கு 3 ஆண்டுகளும், மற்ற கட்டிடங்களுக்கு 5 ஆண்டுகள் செல்லுபடியாகும் வகையில் கட்டிட அனுமதிகள் வழங்கப்படு கின்றன.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/05/01/large/984122.jpgமுதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை நாளை கூடுகிறது

சென்னை: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை மாலை நடைபெறுகிறது.

சட்டப்பேரவை 5-வது கூட்டத்தொடரின் 2-ம் கூட்டம் கடந்த மார்ச் 20-ல் தொடங்கி ஏப்.21 வரை நடைபெற்றது. இதில் பல்வேறு துறைகளின் கீழ் ஏராளமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. தொழில் துறையின்கீழ், 2024 ஜனவரியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு முதலீடுகளை அதிக அளவில் ஈர்க்கும் விதமாக, தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ளார். இதுதொடர்பாக மே மாத இறுதியில் முதல்வர் ஸ்டாலினும் வெளிநாடு செல்கிறார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/04/30/large/983495.jpgவரும் காலங்களில் கட்சியின் இலக்கு... தமாகாவுக்கு எம்.பி, எம்எல்ஏ.க்கள், தனி சின்னம் - ஜி.கே.வாசன்

சென்னை: தமாகா இளைஞரணியின் 15-வது செயற்குழுக் கூட்டம் சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள கவிக்கோ மன்றத்தில் நேற்று நடைபெற்றது.

கட்சியின் இளைஞரணித் தலைவர் எம்.யுவராஜா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் பங்கேற்று பேசியதாவது: தமாகா கடந்த 9 ஆண்டுகளாக பதவிகளில் இல்லாவிட்டாலும் மக்கள் பணிகளைச் செய்து வருகிறது. பல இடங்களில் கட்சியினர் மத்தியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Saturday, April 29, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/04/30/large/983585.jpgபருவகால மாற்றத்தால் மாம்பழம் உற்பத்தி 50% கடும் பாதிப்பு: விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க அரசுக்கு வேண்டுகோள்

மதுரை: தமிழகத்தில் சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 1 லட்சம் ஹெக்டேரில் மா சாகுபடி நடைபெறுகிறது.

மாம்பழத்தில் 120-க்கும் மேற்பட்ட ரகங்கள் இருந்தாலும், தமிழகத்தில் மல்கோவா, பங்கனப்பள்ளி, இமாம்பசந்த், நீலம், செந்தூரம், பெங்களூரா (கிளிமூக்கு), அல்போன்சா ஆகிய ரகங்கள் அதிக அளவில் பயிரிடப்பட்டுள்ளன. மா மரங்களில் ஈக்கள், புழுக்களாலும், அசுவினி மற்றும் சிலந்தி போன்ற சாறு உறிஞ்சும் பூச்சிகளாலும் மகசூல் பாதிப்பு ஏற்படுகிறது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/04/30/large/983579.jpgமதிமுகவை திமுகவுடன் இணைக்க வேண்டும்: வைகோவுக்கு திருப்பூர் துரைசாமி எழுதிய கடிதத்தால் சலசலப்பு

திருப்பூர் / சென்னை: குடும்ப மறுமலர்ச்சிக்கு தான் மதிமுக என்பதை தங்களின் செயல்பாடு வெளிச்சம் போட்டு காட்டுகிறது என வைகோவுக்கு மதிமுக மாநில அவைத் தலைவர் திருப்பூர் சு.துரைசாமி கடிதம் எழுதியுள்ளார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு, திருப்பூர் சு.துரைசாமி 6-வது முறையாக கடந்த 3 நாட்களுக்கு முன்பு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பது: கட்சி தொடங்கிய காலத்தில் வாரிசு அரசியலுக்கு எதிரான தங்கள் உணர்ச்சிமிகு உரைகளை கேட்டே லட்சக்கணக்கானோர் உங்களை ஆதரித்தனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/04/30/large/983591.jpgபல்வீர் சிங் மீதான புகார் குறித்து அறிக்கை தர டிஜிபிக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் மேலும் ஒரு நோட்டீஸ்

சென்னை: திருநெல்வேலி மாவட்டம் அம்பா சமுத்திரத்தில் காவல் உதவி கண்காணிப்பாளராக பல்வீர் சிங் பொறுப்பு வகித்து வந்தார். இவர் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுவோரின் பற்களை பிடுங்கி தண்டனை அளித்து வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து 4 வாரத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு டிஜிபிக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு நோட்டீஸை அனுப்பியுள்ளது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/04/30/large/983617.jpgமெரினா கடலில் பேனா நினைவுச் சின்னம்: 15 நிபந்தனைகளுடன் மத்திய அரசு ஒப்புதல்

சென்னை: சென்னை மெரினா கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க 15 நிபந்தனைகளுடன் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்கு கடலோர ஒழுங்குமுறை மண்டலமும் விரைவில் ஒப்புதல் வழங்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அண்ணா நினைவிட வளாகத்தில், தமிழக அரசு சார்பில் 2.23 ஏக்கர் பரப்பில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Friday, April 28, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/04/29/large/983007.jpgசென்னை பல்கலைக்கழகத்தில் தற்காலிக ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்: ஒப்பந்த நிறுவனம் முன்பணம் கேட்பதாக புகார்

சென்னை: ஒப்பந்த நிறுவனம் முன்பணம்கேட்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை பல்கலைக்கழகத்தில் தற்காலிக ஊழியர்கள் நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் தற்காலிக ஊழியர்களுக்கான ஊதியம் தற்போது ஒப்பந்த நிறுவனங்கள் மூலமாகவே வழங்கப்பட்டு வருகிறது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/04/29/large/983072.jpgகர்நாடகாவில் நடந்த தேர்தல் கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தம்: கனிமொழி, வைகோ, ராமதாஸ் கண்டனம்

சென்னை: கர்நாடகாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தப்பட்டதற்கு கனிமொழி, ராமதாஸ், வைகோ கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கர்நாடக மாநிலம் சிவமோகா தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரை ஆதரித்து நடந்த கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட பாஜக மூத்த தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான ஈஸ்வரப்பா, தமிழ்த்தாய் வாழ்த்துபாடலை பாதியில் நிறுத்தச் செய்ததுடன், கன்னடமொழி வாழ்த்தை இசைக்கச் செய்திருக்கிறார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/04/29/large/983063.jpgகர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தல் | காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய ராகுல் அழைப்பு: கமல்ஹாசன் தகவல்

கோவை: கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்யுமாறு ராகுல் காந்தி அழைப்பு விடுத்ததாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறினார்.

வரும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பாக, கட்சியின் கோவை, சேலம் மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கோவையில் நேற்று நடைபெற்றது. இதில் கமல்ஹாசன் பேசியதாவது: ஜனநாயகத்தைப் பாதுகாக்க, கட்சியின் செயல்பாடுகளை வேகப்படுத்த வேண்டும். நிர்வாகிகளின் செயல்பாடுகள் அடிப்படையில் பொறுப்பும், அங்கீகாரமும் வழங்கப்படும்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/04/29/large/983104.jpgநூற்றாண்டை கடந்த ராமன் குடும்பத்தாரின் ‘லாயிட்ஸ் கார்னர் மாளிகை'!

சென்னை: டாக்டர் ராஜேந்திர பிரசாத், ராஜாஜி, காமராஜர், அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர் என வரலாற்றில் இடம்பிடித்த முக்கியத் தலைவர்கள் பலரின் காலடித் தடம் பதித்த வி.பி.ராமன் குடும்பத்தாரின் லாயிட்ஸ் கார்னர் மாளிகை, நூற்றாண்டைக் கடந்து வரலாற்றுப் பொக்கிஷமாக காட்சியளிக்கிறது.

உச்ச நீதிமன்ற முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாகப் பதவி வகித்த வி.பி.ராமனுக்கு பெருமை சேர்க்கும் வகையில், அவர் வசித்து வந்த ராயப்பேட்டை ‘லாயிட்ஸ் கார்னர்’ இல்லம் அமைந்துள்ள சாலைக்கு, வி.பி.ராமன் சாலை எனப் பெயரிட்டுக் கவுரவித்துள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/04/29/large/983100.jpgகடலூர் மீனவர் கொலை வழக்கில் 10 பேருக்கு ஆயுள் தண்டனை: கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு

விருத்தாசலம்: கடலூரில் மீனவர்கள் இடையே கடந்த 2018-ல் ஏற்பட்ட மோதலில், மீனவ பஞ்சாயத்து தலைவரும், அதிமுக பிரமுகருமான பஞ்சநாதன் கொலை செய்யப்பட்ட வழக்கில் 10 குற்றவாளிகளுக்கும் ஆயுள் தண்டனை விதித்து கடலூர் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த எஞ்சிய 10 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

கடலூரில் தேவனாம்பட்டினம், தாழங்குடா, அக்கரைகோரி, சிங்காரதோப்பு உள்ளிட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிப்பது தொடர்பாக தேவனாம்பட்டினம் - கடலூர் துறைமுகம் சோனாங்குப்பம் பகுதி மீனவர்கள் இடையே பிரச்சினை இருந்து வந்தது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/04/28/large/982709.jpgஅடிப்படை வசதிகள் செய்து தராததை கண்டித்து பள்ளப்பட்டி நகர்மன்ற 15வது வார்டு உறுப்பினர் ராஜினாமா

கரூர்: கரூர் மாவட்டம் பள்ளபட்டி நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. திமுக கூட்டணி வார்டு உறுப்பினர்கள் 22 பேர், சுயேட்சைகள் 5 பேர் உள்ளனர். திமுகவை சேர்ந்த முனவர்ஜான் நகர்மன்றத் தலைவராகவும், தோட்டம் பஷீர் துணைத்தலைவராகவும் உள்ளனர்.

பள்ளப்பட்டி நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்றத் தலைவர் முனவர்ஜான் தலைமையில் நகர்மன்ற கூட்டம் இன்று (ஏப். 28) நடைபெற்றது. கூட்டத்தில், வார்டு உறுப்பினர்கள் தங்கள் பகுதி கோரிக்கைகளை முன் வைத்தனர். அப்போது, திமுகவை சேர்ந்த 15-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் முகமது ஜமால் தனது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை எனக் கூறி வார்டு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக நகராட்சி ஆணையரிடம் கடிதம் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Thursday, April 27, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/04/28/large/982583.jpgநிலம் கையகப்படுத்தியதில் மோசடி: 5 அரசு அலுவலர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு சோதனை

திருவாரூர்: திருவாரூர் அருகே தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிக்கு தேர்வான இடத்தை வகை மாற்றம் செய்து, தனி நபர்களுக்கு இலவச வீட்டுமனை வழங்கி, மீண்டும் அவற்றை அரசிடமே விற்று மோசடி செய்தது தொடர்பாக 5 அரசு அலுவலர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு சோதனை நேற்று நடந்தது.

விழுப்புரம் சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநராக பணியாற்றி வருபவர் முத்து மீனாட்சி (47). இவர், 2014–18-ல் திருவாரூர் கோட்டாட்சியராக பணிபுரிந்தார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/04/28/large/982597.jpgமக்களவைத் தேர்தல் | விரைவில் பாஜகவுக்கான தொகுதிகளை முடிவு செய்யுங்கள் - பழனிசாமியிடம் அமித் ஷா வலியுறுத்தல்

சென்னை: தேர்தல் பணிகளைத் தொடங்க ஏதுவாக, பாஜகவுக்கான தொகுதிகளை விரைந்து முடிவு செய்யுமாறு அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியிடம், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்ற பின்னர் முதல்முறையாக டெல்லி சென்ற பழனிசாமி, அமித் ஷாவை நேற்று முன்தினம் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, தமிழக தலைவர் அண்ணாமலை உடனிருந்தனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/04/28/large/982628.jpgதமிழக அரசு ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதித்ததில் தவறு என்ன? - உயர் நீதிமன்ற நீதிபதிகள் சரமாரி கேள்வி

சென்னை: பொதுமக்களைக் காப்பாற்றும் வகையில், தமிழக அரசு ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதித்ததில் என்ன தவறு இருக்கிறது என்று சரமாரியாக கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்ற அமர்வு, தற்போதைய சூழலில் அரசின் சட்டத்துக்கு தடை விதிக்க முடியாது என்று மறுப்புத் தெரிவித்து, விசாரணையை வரும் ஜூலை 3-ம் தேதிக்கு தள்ளிவைத்தது.

தமிழக அரசு கொண்டு வந்துள்ள ஆன்லைன் சூதாட்ட தடைமற்றும் ஆன்லைன் விளையாட்டுகள் முறைப்படுத்தல் சட்டத்தை எதிர்த்து, 69 ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களை உறுப்பினர்களாகக் கொண்ட அகில இந்திய விளையாட்டுக் கூட்டமைப்பு மற்றும் தனியார் ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/04/28/large/982260.jpg“திட்டங்களை செயல்படுத்துவதில் தஞ்சாவூருக்கு தான் முதல் உரிமை” - அமைச்சர் கே.என்.நேரு

தஞ்சாவூர்: பாபநாசத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய, ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ், பாபநாசம், அம்மாப்பேட்டை ஒன்றியங்களிலுள்ள 252 கிராமங்களுக்கு ரூ. 288.02 கோடி மதிப்பில் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு, அடிக்கல் நாட்டி வைத்து கூறியது, "பாபநாசம் வட்டம், சருக்கை கிராமம், புதுக்குடி கொள்ளிடம் ஆற்றில் கிணறு அமைக்கப்பட்டு, அதிலிருந்து மின் மோட்டார் மூலம் 15.20 மில்லியன் லிட்டர் குடிநீர் எடுக்கப்பட்டு, பாபநாத்தில் 21 ஊராட்சிகளும், அம்மாப்பேட்டையிலுள்ள 46 ஊராட்சிகள் என 252 கிராமங்களில் அமைக்கப்படவுள்ள 68 தரைமட்ட நீர்தேக்கத்தொட்டிகளுக்கு, 204.32 கி.மீ. நீளமுள்ள நீர் உந்து குழாய்கள் பதிக்கப்பட்டு குடிநீர் ஏற்றப்படவுள்ளது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/04/27/large/982256.jpgநீச்சல் குளத்தில் ஆனந்த குளியல் போட்ட பழநி கோயில் யானை கஸ்தூரி

பழநி: பழநியில் கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்க நீச்சல் குளத்தில் யானை கஸ்தூரி ஆனந்த குளியல் போட்டது.

பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலுக்கு கடந்த 49 ஆண்டுகளுக்கு முன்பு 8 வயதில் கஸ்தூரி யானை வந்தது. யானை கஸ்தூரி பெரியநாயகியம்மன் கோயில் அருகேயுள்ள காரமடை தோட்டத்தில் வளர்க்கப்படுகிறது. தற்போது 57 வயதாகும் கஸ்தூரி, தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்களில் பங்கேற்கிறது. பழநியில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் நெருக்கமான யானையாக கஸ்தூரி திகழ்கிறது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Wednesday, April 26, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/04/27/large/982128.jpgவிஏஓ கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது - சொந்த ஊரில் உடல் அடக்கம்

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே கிராம நிர்வாக அலுவலர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த மற்றொரு நபரை தனிப்படை போலீஸார் நேற்று கைது செய்தனர். கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் உடல் நேற்று சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகேயுள்ள சூசைபாண்டியாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் லூர்து பிரான்சிஸ்(53). இவர், ஸ்ரீவைகுண்டம் வட்டம் முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் மதியம் 12.30 மணியளவில் முறப்பநாட்டில் உள்ள தனது அலுவலகத்தில் பணியில் இருந்தார். அப்போது அலுவலகத்துக்குள் புகுந்த 2 நபர்கள் லூர்து பிரான்சிஸை அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/04/27/large/982137.jpgபோக்குவரத்து கழகங்களில் ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர்களை நியமித்தால் குற்ற நடவடிக்கை - தொழிலாளர் நலத்துறை எச்சரிக்கை

சென்னை: அரசு பேருந்துகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர்களை நியமிக்கும் போக்குவரத்துக் கழக நிர்வாகங்கள் மீது குற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தொழிலாளர் நலத் துறை எச்சரித்துள்ளது.

விரைவு போக்குவரத்துக் கழகம், மாநகர போக்குவரத்துக் கழகம், கும்பகோணம் போக்குவரத்துக் கழகம் ஆகியவற்றில் ஒப்பந்த அடிப்படையில் பேருந்து ஓட்டுநர்களை நியமிக்கும் பணிகளை நிர்வாகம் மேற்கொண்டது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சிஐடியு தொழிற்சங்கத்தினர், வேலைநிறுத்த நோட்டீஸை வழங்கினர். இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த நிர்வாகங்கள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு தொழிலாளர் நலத் துறை அழைப்பு விடுத்திருந்தது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://ift.tt/D1joxYw வயதுக்கு மேற்பட்ட அரசு வாகன ஓட்டுநர்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனை - அரசாணை வெளியீடு

சென்னை: மருத்துவ நிபுணர் குழு அளித்த பரிந்துரையை ஏற்று, 50 வயதுக்கு மேற்பட்ட அரசு வாகன ஓட்டுநர்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனையை கட்டாயமாக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மனிதவள மேலாண்மைத் துறை செயலர் மைதிலி ராஜேந்திரன் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: கடந்த 1996-ம் ஆண்டு தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில், அரசு வாகனங்களின் ஓட்டுநர்கள்அனைவருக்கும் மருத்துவ பரிசோதனையை கட்டாயமாக்கியதுடன், 40 வயதுக்கு கீழ் பரிசோதனை வேண்டாம் என்றும், 40 முதல் 52 வயது வரை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறையும், 52 வயதுக்கு மேல் ஆண்டுக்கு ஒருமுறையும் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தியது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/04/27/large/982164.jpgபிளஸ் 2 தேர்வு முடிவு மே 8-ல் வெளியாகிறது - தேர்வுத் துறை அறிவிப்பு

சென்னை: பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் மே 8-ம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியிடப்படும் என்று தமிழக தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

தமிழக பள்ளிக்கல்வியில் பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் 13-ம் தேதி முதல் ஏப்.3-ம் தேதி வரை நடத்தப்பட்டது. இத்தேர்வை சுமார் 8.30 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். விடைத்தாள் திருத்தும் பணி மாநிலம் முழுவதும் 79 மையங்களில் ஏப்.10-ம் தேதி தொடங்கி 21-ம் தேதியுடன் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து, இணையதளத்தில் மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட இதர பணிகள் நடந்து வருகின்றன.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/04/26/large/981895.jpgபடம் நா. தங்கரத்தினம்

மதுரை: மதுரை மத்திய சிறையில் நவீன வசதிகளுடன் கூடிய கைதிகள் செய்பொருட்கள் விற்பனை அங்காடியை டிஜிபி அம்ரேஷ்பூசாரி திறந்து வைத்தார்.

தமிழக சிறைத்துறை டிஜிபியாக அம்ரேஷ் பூசாரி பொறுப்பேற்ற பின், சிறைத்துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக மதுரை மத்திய சிறையில் கைதிகள் தயாரிக்கும் பல்வேறு பொருட்களை விற்கும் நவீன வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த சிறை செய்பொருட்கள் விற்பனை அங்காடி, விவசாயிகளுக்கு உதவும் மண் பரிசோதனை கருவிகளை கைதிகள் தயாரிக்கும் பயிற்சிக்கூடம் அமைக்கப்பட்டது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Tuesday, April 25, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/04/26/large/981661.jpgரசாயனம் கலந்த 7 டன் மாம்பழம் கோயம்பேட்டில் பறிமுதல்

சென்னை: சென்னையில் சில இடங்களில் பழங்களை ரசாயனங்களின் மூலம் பழுக்கவைத்து விற்பனை செய்து வருவதாகப் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில், உணவு பாதுகாப்புத் துறையின் சென்னை மாவட்ட நியமன அதிகாரி சதீஷ்குமார் தலைமையிலான 5 பேர் அடங்கிய குழு நேற்று கோயம்பேடு மார்க்கெட்டில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/04/26/large/981672.jpgசென்னை | மாஞ்சா நூல் பட்டத்தால் இளைஞரின் கழுத்து அறுப்பு

சென்னை: மாஞ்சா நூல் பட்டத்தால் இளைஞர் காயமடைந்துள்ளார். தடையை மீறி மாஞ்சா நூல் பட்டம் பறக்க விடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார்.

சென்னை கே.கே.நகரை சேர்ந்தவர் நிக்கி சரண் (33). அவரது பெண் நண்பர் வந்தனா (33). சாலி கிராமத்தை சேர்ந்தவர். இருவரும் ஒரே தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு இருவரும் பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் தேனாம்பேட்டை விஜயராகவா தெருவில் சென்றனர். அப்போது மாஞ்சா நூல் பட்டம் ஒன்று பறந்து வந்து நிக்கி சரண் கழுத்தில் மாட்டியது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/04/26/large/981771.jpg‘டெட்டால் பநேகா ஸ்வஸ்த் இந்தியா’-வின் சுகாதார விழிப்புணர்வு பாடல்கள் வெளியீட்டு விழா

பள்ளி மாணவர்களிடம் விழிப்புணர்வைத் தூண்டும் வகையில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழும் ‘டெட்டால் பநேகா ஸ்வஸ்த் இந்தியாவும் இணைந்து ‘சுத்தம் சுகாதாரம்’ எனும் இணையவழி விழிப்புணர்வு நிகழ்வை நடத்தின. இதனால் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மத்தியில் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வைக் கொண்டு செல்ல முடிந்தது.

தற்போது இந்தியாவின் பல மாநிலங்களிலும், தமிழ்நாட்டிலும் கரோனா வைரஸ் தொற்று பரவிவரும் சூழலில், மக்களிடம் மீண்டும் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், தொடர்ந்து சுகாதாரத்தைக் கடைபிடிக்கத் தூண்டும் நோக்கிலும் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனின் இசையில் ஐந்து விழிப்புணர்வு பாடல்கள் உருவாக்கப்பட்டு, ‘டெட்டால் பநேகா ஸ்வஸ்த் இந்தியா’வினால் வெளியிடப்படுகிறது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/04/26/large/981796.jpgதூத்துக்குடி | மணல் கொள்ளை குறித்து புகார் கொடுத்ததால் அலுவலகத்தில் புகுந்து விஏஓ கொலை

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே மணல் கொள்ளை குறித்து காவல் துறையில் புகார் கொடுத்த கிராம நிர்வாக அலுவலரை, அவரது அலுவலகத்தில் புகுந்து 2 நபர்கள் அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார். தலைமறைவானவரை போலீஸார் தேடி வருகின்றனர். உயிரிழந்த கிராம நிர்வாக அலுவலரின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரண நிதி வழங்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அடுத்த சூசைபாண்டியாபுரத்தை சேர்ந்தவர் லூர்து பிரான்சிஸ் (53). இவர், ஸ்ரீவைகுண்டம் வட்டம் முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அதிகாரியாக (விஏஓ)பணியாற்றி வந்தார். இவர் நேற்று மதியம் 12.30 மணி அளவில் தனது அலுவலகத்தில் இருந்தார். அப்போது அங்கு வந்த 2 நபர்கள், மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து லூர்து பிரான்சிஸை சரமாரியாக வெட்டினர். ரத்த வெள்ளத்தில் அவர் சாய்ந்ததும் 2 பேரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/04/26/large/981799.jpgபிளஸ் 2 தேர்வு முடிவு தாமதம் ஆகிறது - அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்

சென்னை: நீட் தேர்வுக்கு பிறகு பிளஸ் 2 தேர்வு முடிவை வெளியிடுவது குறித்து முதல்வரிடம் ஆலோசித்து முடிவெடுக்கப்படும். தேர்வு முடிவு எப்போது என்று மே 7-ம் தேதி மாலை அறிவிக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.

தமிழக பள்ளிக்கல்வியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13-ம் தேதி தொடங்கி ஏப்.3-ம் தேதியுடன் முடிந்தது. இத்தேர்வை 8.30 லட்சம் மாணவர்கள் எழுதினர். விடைத்தாள் திருத்தும் பணிகள் மாநிலம் முழுவதும் 79 மையங்களில் ஏப்.10 முதல் 21-ம் தேதி வரை நடைபெற்றது. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதுநிலை ஆசிரியர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். விடைத்தாள் திருத்தும் பணி முடிவடைந்ததை தொடர்ந்து, இணையதளத்தில் மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட இதர பணிகள் நடந்து வருகின்றன.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/04/25/large/981436.jpg'தமிழகத்தில் பொதுமக்கள், அதிகாரிகளுக்கு பாதுகாப்பில்லாத சூழல்' - விஏஓ கொலை குறித்து அண்ணாமலை

சென்னை: தமிழகத்தில் பொதுமக்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் எந்தப் பாதுகாப்புமில்லாத சூழலே நிலவுகிறது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வட்டம் முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வந்தவர் லூர்து பிரான்சிஸ் (53). முறப்பநாடு பகுதியில் தாமிரபரணி ஆற்றில் மணல் கொள்ளை தடுப்பதில் தீவிரமாக பணியாற்றி வந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு கலியாவூரை சேர்ந்த ராமசுப்பு மற்றும் சிலர் தாமிரபரணி ஆற்றில் மணல் திருடிச் சென்றுள்ளனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Monday, April 24, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/04/25/large/981213.jpgஇயல்பு நிலைக்கு திரும்பிவிட்டது: சுற்றுலா பயணிகளுக்கு இலங்கை அமைச்சர் அழைப்பு

சென்னை: இலங்கை இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டதாகவும், சுற்றுலாப் பயணிகள் கவலையின்றி வரலாம் எனவும் இலங்கை சுற்றுலாத் துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ அழைப்பு விடுத்துள்ளார்.

இலங்கை நாட்டுக்கு சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்காக ‘இலங்கைக்கு வாருங்கள்’ என்ற திட்டத்தை தென் இந்தியாவில் ஊக்கப்படுத்தும் வகையில், சென்னையில் நேற்று வர்த்தகர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில், இலங்கையில் இருந்து வந்து பங்கேற்ற 50-க்கும் மேற்பட்ட முகவர்கள், அங்குள்ள சுற்றுலாத் திட்டங்கள், சிறப்புகள் குறித்து விளக்கம் அளித்தனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/04/25/large/981220.jpgகோடை வெயிலால் கண் அழற்சி நோய் அதிகரிப்பு: அகர்வால்ஸ் மருத்துவமனை தகவல்

சென்னை: கோடை வெயிலால் கண் அழற்சி நோய் அதிகரித்து வருகிறது என்று டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்தவமனையின் மருத்துவ சேவைகளுக்கான பிராந்திய தலைவர் மருத்துவர் னிவாச ராவ் தெரிவித்தார்.

இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கோடை காலத்தில், உலர்ந்தகண்கள், கண் அழற்சி, புறஊதா கதிர்வீச்சு பாதிப்பு, ஒவ்வாமையால் ஏற்படும் கண் அழற்சி மற்றும் கண் காயங்கள் அதிகளவில் ஏற்படுகின்றன.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/04/25/large/981314.jpgவெளிநாடுகளில் ரூ.110 கோடி முதலீடு - செட்டிநாடு குழுமத்துக்கு சொந்தமான 6 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

சென்னை: செட்டிநாடு குழுமத்துக்குச் சொந்தமாக சிமென்ட், ரியல் எஸ்டேட், சர்வதேச ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனம், பள்ளிகள், மருத்துவமனைகள், மின் உற்பத்தி நிறுவனங்கள் என இந்தியா முழுவதும் பல்வேறு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. செட்டிநாடு குழுமத்தின் தலைமை அலுவலகம் சென்னையில் உள்ளது. இந்நிலையில், செட்டிநாடு குழுமம் வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாகப் புகார் எழுந்தது.

இதையடுத்து, கடந்த 2015மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் செட்டிநாடு குழும நிறுவனங்களுக்குச் சொந்தமான சென்னை, ஐதராபாத், மும்பை உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடந்தது. இந்த சோதனையில் ரூ.23 கோடி பணம், தங்கம், வெள்ளி நகைகள், சொத்துகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், ரூ.700 கோடிவரி ஏய்ப்பு செய்ததும் இந்த சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/04/25/large/981341.jpgமுதல்வருடன் கூட்டணி கட்சியினர் சந்திப்பு - 12 மணி நேர வேலை மசோதா நிறுத்திவைப்பு

சென்னை: தொழிற்சங்க பிரதிநிதிகள், அரசியல் கட்சிகள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில், 12 மணிநேர வேலை தொடர்பான தொழிற்சாலைகள் சட்டத் திருத்த மசோதா மீதான மேல் நடவடிக்கை நிறுத்தி வைக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். திமுக எப்போதும் தொழிலாளர் சமுதாய தோழனாக, தொண்டனாக, காவல்அரணாக விளங்கும் என்பதற்கு, செயல்படுத்திய திட்டங்களே சான்று என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தொழிற்சாலைகள், நிறுவனங்களில் 12 மணி நேர வேலைக்கு வகை செய்யும் சட்டத் திருத்த மசோதாவை சட்டப்பேரவையில் தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் கடந்த ஏப்.12-ம் தேதி தாக்கல் செய்தார். பேரவைக் கூட்ட நிறைவு நாளான கடந்த 21-ம் தேதி, பல்வேறு கட்சி உறுப்பினர்களின்எதிர்ப்பையும் மீறி இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/04/25/large/980966.jpgபோலி மருத்துவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கிறோம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மதுரை: மதுரையில் இருந்து சென்னை சென்ற தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியது: சுற்றுலா தலங்கள் மற்றும் மதுரை சித்திரைத் திருவிழாவிற்கான வழக்கமான விதிமுறைகளை கடைபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது, பரவி வருவது வீரியமற்ற வைரஸ், பெரிய பாதிப்பு ஏற்படுத்தவில்லை.

இந்திய அளவில் 11 ஆயிரம் எண்ணிக்கை வந்தாலும் தமிழ்நாட்டில் 500 வரை சென்று தற்போது குறைய தொடங்கியுள்ளது. போலி மருத்துவர்கள் தற்போது முறையாக கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றனர். இது நீண்ட காலமாக இருந்தாலும், இந்த ஆட்சியில் தான் முறையாக கண்டுபிடித்து சம்பந்தப்பட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அந்த வகையில் தான் கடந்த வாரம் ஒரே நாளில் 73 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Sunday, April 23, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/04/24/large/980792.jpgநிதியமைச்சர் பேசியது போன்று வெளியான ஆடியோ; சுதந்திரமான தடயவியல் தணிக்கை அவசியம்: அண்ணாமலை வலியுறுத்தல்

சென்னை: தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியது போன்று வெளியான ஆடியோவை, சுதந்திரமான, நியாயமான தடயவியல் தணிக்கைக்கு உட்படுத்தவேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முதல்வரின் மருமகன் சபரீசன் ஆகியோரை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விமர்சித்துப்பேசியது போன்ற ஆடியோ அண்மையில் சமூக வலைதளங்களில் பரவியது. இது ஜோடிக்கப்பட்ட ஆடியோ என்று பழனிவேல் தியாகராஜன் மறுப்புத் தெரிவித்துள்ளார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/04/24/large/980785.jpgகுப்பை சேகரித்த பெண்ணை காலணியால் தாக்கிய திமுக மகளிரணி நிர்வாகியின் கணவர் கைது

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே குறிச்சி ஜோதிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தீபாலட்சுமி. பேராவூரணி ஒன்றிய திமுக மகளிரணி அமைப்பாளர். இவரது கணவர் சுவாமிநாதன்(56). குறிச்சி மாரியம்மன் கோயில் பகுதியில் பழங்குடியின பெண்கள் சிலர் நேற்று பிளாஸ்டிக் பொருட்கள், கண்ணாடி பாட்டில்கள் உள்ளிட்ட குப்பையை சேகரித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, சுவாமிநாதனுக்கு சொந்தமான இடத்தில் அந்தப் பெண்கள் குப்பை சேகரித்துள்ளனர். இதையடுத்து, அந்தப் பெண்கள் பொருட்களைத் திருடிச் செல்வதாகக் கூறி, தகாத வார்த்தைகளால் திட்டிய சுவாமிநாதன், அவர்கள் வைத்திருந்த பையில் உள்ள பொருட்களை கீழே கொட்டும்படி கூறி, ஒரு பெண்ணை காலணியால் அடித்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதால் பரபரப்பு ஏற்பட்டது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/04/24/large/980790.jpgபிடிஆர் ஆடியோ விவகாரம் | மத்திய அரசின் புலன் விசாரணைக்கு வலியுறுத்துவோம் - எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி

மதுரை: ‘சர்ச்சைக்குரிய ஆடியோவில் பேசியிருப்பது நிதி அமைச்சர்தான். இந்த விவகாரத்தை வெளிச்சத்துக்குக் கொண்டு வர மத்திய அரசின் புலன் விசாரணைக்கு வலியுறுத்த உள்ளோம்’ என்று அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான பழனிசாமி தெரிவித்தார்.

மதுரை விமானநிலையத்தில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. திமுகவின் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. திமுக தொழிலாளர்களுக்கு விரோதமாக இந்தச் சட்டத்தைக் கொண்டு வருகிறது. திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது ஸ்டாலினே இந்தச் சட்டத்தை எதிர்த்தார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/04/24/large/980879.jpgதமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்க்க முதல்வர் ஸ்டாலின் மே 23-ல் வெளிநாடு பயணம் - இங்கிலாந்து, ஜப்பான் செல்கிறார்

சென்னை: தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் முதல்வர் ஸ்டாலின் வரும் மே மாதத்தில் இங்கிலாந்து, சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார்.

வரும் 2024 ஜன.11, 12-ம் தேதிகளில் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கிடையே, தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்று, மே 7-ம் தேதி 3-ம் ஆண்டு தொடங்க உள்ளது. இந்த சூழலில், அதிக முதலீடுகளை ஈர்ப்பதுடன், வேலைவாய்ப்பை அதிகரிக்கும் பல திட்டங்களை செயல்படுத்த முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்துள்ளார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/04/23/large/980515.jpgமதுரை மக்களை குளிர்வித்த கோடை மழை

மதுரை: மதுரையில் கோடை வெயில் வாட்டி வதைக்கும் சூழலில், அடுத்தடுத்து பெய்த மழை மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது.

ஒவ்வொரு நாளும் கோடை வெயிலின் தாக்கம், மக்களை வெளியில் போகவிடாமல் அச்சம் ஏற்படுத்தும் விதமாக வாட்டுகிறது. அக்னி நட்த்திரம் தொடங்கும் முன்பே சுட்டெரிக்கும் இந்த வெயிலைக் கண்டு பகலில் எங்காவது ஒதுங்கவேண்டும் என தோன்றுகிறது. வயதானோர் உள்ளிட்ட சிலர் வெளியில் செல்வதையே தவிர்க்கின்றனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Saturday, April 22, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/04/23/large/980428.jpgதொழிலாளர் நல சட்டங்களை திருத்த அனுமதிக்க மாட்டோம்: ஏஐடியுசி தேசிய பொதுச் செயலாளர் அமர்ஜித் கவுர் தகவல்

கோவை: தொழிலாளர் நல சட்டங்களை திருத்த அனுமதிக்க மாட்டோம் என ஏ.ஐ.டி.யு.சி தேசிய பொதுச்செயலாளரும், இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளருமான அமர்ஜித் கவுர் தெரிவித்தார்.

கோவையில் அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கம் 1920-ல் தொடங்கப்பட்டது. இத்தொழிற்சங்கத்தின் தொடர் போராட்டத்தின் விளைவாக தொழிற்சங்க சட்டம், இழப்பீட்டு சட்டம், பணிக்கொடை சட்டம், பி.எப். சட்டம் என பல்வேறு சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. 8 மணி நேர வேலையும், ஏ.ஐ.டி.யு.சி-யின் போராட்டத்தால் கொண்டு வரப்பட்டதே.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/04/23/large/980427.jpgகொடி, சின்னத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக ஓபிஎஸ் மீது போலீஸில் அதிமுக புகார்

திருச்சி: அதிமுக பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை சட்டத்துக்கு புறம்பாக பயன்படுத்தும் ஓபிஎஸ் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யக்கோரி அதிமுக நிர்வாகிகள் திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று புகார் அளித்தனர்.

ஓபிஎஸ் அணி சார்பில் திருச்சி பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் ஏப்.24-ம் தேதி மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக மாநாட்டு திடல் பகுதி முழுவதும் அதிமுக கொடிகள் கட்டப்பட்டு வருகின்றன.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/04/23/large/980301.jpgவருமான வரித் துறை தொடர்ந்த வழக்கில் கவுதம் வாசுதேவ் மேனன் ஆஜராக விலக்கு

சென்னை: திரைப்பட இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன், ஃபோட்டான் கதாஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் இயக்குநராக பதவி வகித்த நிறுவனம் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யவில்லை எனக்கூறி, எழும்பூர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்தும் விலக்கு அளிக்க வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.சந்திரசேகரன், கவுதம் வாசுதேவ் மேனன் நேரில் ஆஜராக விலக்கு அளித்து உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் மாதத்துக்கு தள்ளி வைத்துள்ளார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/04/23/large/980476.jpgஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இளங்கோவன் வெற்றியை எதிர்த்து வழக்கு

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ்.இளங்கோவன் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் வேட்பாளராகப் போட்டியிட்ட பி.விஜயகுமாரி சார்பில் வழக்கறிஞர் எம்.எல்.ரவி தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/04/23/large/980468.jpgதமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 9 நகரங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி பதிவாகியுள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/04/23/large/980066.jpgஆடியோ விவகாரம் | ‘போலியானது’ - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்

சென்னை: தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், செய்தியாளர் ஒருவருடன் ஆங்கிலத்தில் உரையாடும் ஆடியோ ஒன்றை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். ஆங்கில உரையாடலுக்கான தமிழ் மொழிபெயர்ப்பும் அந்த வீடியோவில் இடம்பெற்றிருந்தது. இந்த சூழலில் அது ‘போலியானது’ என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் கொடுத்துள்ளார்.

"உதயநிதியும், சபரீசனும் ஒரே வருடத்தில், அவர்களது மூதாதயரை விட அதிகமாக பணம் சம்பாதித்துள்ளனர். இப்போது அது பிரச்சினையாகி வருகிறது. இதை எப்படி கையாள்வது? எப்படி மாட்டிக் கொள்ளாமல் இருப்பது? 10 கோடி, 20 கோடி என சிறுக சிறுக குவித்தது, அது தோராயமாக 30,000 கோடி ரூபாய் இருக்கும்" என்று அந்த ஆடியோவில் தெரிவிக்கப்படிருந்தது. இதற்கு பாஜக தரப்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இடம் விளக்கம் கேட்கப்பட்டது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Friday, April 21, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/04/22/large/979445.jpgஅம்மா உணவகத்தில் பிரியாணி சமையல்? - நகராட்சி அலுவலர்கள் மீது குற்றச்சாட்டு

விருத்தாசலம்: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பாலக்கரையில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தில் 10 பெண்கள் பணிபுரிகின்றனர்.

நகராட்சியின் மேற்பார்வையில் செயல்படும் இந்த உணவகத்தில், நகராட்சி அலுவலர்கள் மற்றும் ஆணையர் அவ்வப்போது சென்று உணவருந்துவது உண்டு.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/04/22/large/979456.jpgபுதிய ஓய்வூதிய திட்ட ஊழியர்களை தேசிய திட்டத்தில் சேர்க்காததால் தமிழக அரசுக்கு ரூ.670 கோடி வட்டி சுமை

சென்னை: புதிய ஓய்வூதியத் திட்டத்தில் உள்ளஅரசு ஊழியர்களை, தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்காததால் கடந்த நிதியாண்டில் தமிழக அரசுக்கு ரூ.670.36 கோடி வட்டிச்சுமை ஏற்பட்டதாக இந்திய தணிக்கைத் துறை தலைவர் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

2022 மார்ச் மாதத்துடன் முடிந்த மாநில நிதிநிலை மீதான இந்திய தணிக்கைத் துறை தலைவரின் அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் 1.4.2003 அன்று மற்றும் அதற்குப் பின்னர் மாநில அரசுப் பணியில் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு (உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் அரசு உதவி பெறும்கல்வி நிறுவனங்களின் பணியாளர்கள் உள்பட) பங்களிப்புடன் கூடியஓய்வூதியத் திட்டம் (புதிய ஓய்வூதிய திட்டம்) நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/04/22/large/979499.jpgதமிழகத்தில் 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில்ஒருசில இடங்களில் இன்று அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகமாக இருக்கக் கூடும்.

தென் இந்தியப் பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசைக் காற்றும், மேற்கு திசைக் காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் 4 நாட்கள் லேசான மழை பெய்யக் கூடும்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்