Sunday, October 31, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/01/large/732780.jpgதமிழகத்தின் கல்வி தரத்தை மேம்படுத்தாவிட்டால் மாணவர்களுக்கு வழங்கப்படும் பட்டங்கள் வீணாகும்: முன்னாள் துணை வேந்தர் பாலகுருசாமி கருத்து

தேசிய கல்வியாளர்கள் பேரவை சார்பில் தமிழகத்தில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்திடவும், தமிழகம் முழுவதும் நவோதயா பள்ளிகளை தொடங்கிடவும், மும்மொழி திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி வேலூரில் நேற்று கருத்தரங்கம் நடைபெற்றது.

கருத்தரங்குக்கு அமைப்பின் தலைவரும், அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தருமான பாலகுருசாமி தலைமை வகித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, "பிற மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ள தேசிய கல்விக்கொள்கை, நவோதயா பள்ளிகள், நீட் தேர்வு ஆகிய வற்றுக்கு தமிழகத்தில் மட்டும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதனால், அகில இந்திய அளவில் தமிழக மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுகிறது. தேசிய அளவிலான தேர்வுகளிலும் தமிழக மாணவர்களால் தேர்ச்சி பெற முடியவில்லை.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/01/large/732876.jpgஅணையில் கேரள அதிகாரிகள் முகாம்; அமைச்சர் துரைமுருகன் உண்மையை மூடி மறைக்கிறார்: ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

முல்லை பெரியாறு அணையைத் திறந்த விவகாரத்தில் தமிழக நீர்ப்பாசனத் துறை அமைச்சர் துரைமுருகன் உண்மையை மூடி மறைப்பதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட் டினார்.

மதுரையில் அவர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: முல்லை பெரியாறு அணையில் 142 அடியாக தண்ணீரைத் தேக்கலாம் என்ற தீர்ப்பை, உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதா பெற்று தந்தார். தற்போது மழையால் அணையின் நீர்மட்டம் 138.85 அடியாக உயர்ந்துள்ளது. ஆனால், கேரள நீர்ப்பாசனத் துறை அமைச்சர் அணையைப் பார்வையிட்டு 142 அடி நிரம்பும் முன்பே கேரள பகுதிக்கு தண்ணீரைத் திறந்து விட்டுள்ளார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/01/large/732879.jpgமுல்லை பெரியாறில் 142 அடி நீர் தேக்க வலியுறுத்தி அதிமுக சார்பில் மதுரையில் விரைவில் போராட்டம்: செல்லூர் கே.ராஜூ அறிவிப்பு

முல்லை பெரியாறு அணையில் 142 அடி நீர் தேக்க வலியுறுத்தி அதிமுக சார்பில் மதுரையில் விரைவில் போராட்டம் நடத்தப்படும் என முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.

மதுரையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி 139 அடிக்கு மேல் தண்ணீரை வைக்க வேண்டாம் என தமிழக நீர்பாசனத் துறை அமைச்சர் துரைமுருகன் கூறியதன் அடிப்படையில் நாங்கள் திறந்தோம் என கேரள அரசு தெரிவிக்கிறது. இதை அதிமுக உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/01/large/732916.jpgவிட்டு விட்டு மழை பொழிந்தாலும் தீபாவளிக்காக பொருட்கள் வாங்க கடைவீதிகளில் மக்கள் குவிந்தனர்

விட்டு விட்டு பொழிந்த மழையி லும் தீபாவளியையொட்டி கடைவீதிகளில் பொருட்கள் வாங்க மக்கள் குவிந்தனர். போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

நாடு முழுவதும் நவம்பர் 4-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. நேற்று ஞாயிற்றுகிழமை என்பதால் தீபாவளிக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்க புதுச்சேரியில் முக்கிய வீதிகளான நேரு வீதி,காந்தி வீதி, அண்ணா சாலை, மிஷன் வீதிகளில் உள்ள கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதி யது. மேலும், சண்டே மார்க்கெட்டி லும், சாலையோர கடைகள் தொடங்கி அனைத்து கடைகளிலும் பெண்கள், குழந்தைகள் மற்றும் ஆண்களுக்கு தேவையான அனைத்து உடைகள் மற்றும் பொருட்களை வாங்க பொதுமக்கள் குவிந்தனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/01/large/732921.jpgகாய்ச்சலுக்கு சிறுமி உயிரிழப்பு: மேலும் 10 பேர் மருத்துவமனையில் அனுமதி

பொன்னேரி அருகே அ.ரெட்டிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட சோமஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த வினோத் மகள் வினோதினி(8), கடந்த சில நாட்களாக வைரஸ் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்ததால் தனியார், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றார்.

பிறகு, கடந்த 29-ம் தேதி மேல் சிகிச்சைக்காக சென்னை, எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த வினோதினி, சிகிச்சை பலனின்றி இறந்தார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/01/large/732924.jpgசங்கீத கலாநிதி என்.ரமணியின் 87-வது பிறந்தநாள் விழாவில் குருவாயூர் துரைக்கு ‘ரமணீய மணி’ விருது

மறைந்த புல்லாங்குழல் கலைஞர் என்.ரமணியின் 87-வது பிறந்தநாள் விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.

பிரபல புல்லாங்குழல் கலைஞரும், சங்கீத கலாநிதி உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்ற மறைந்த டாக்டர். என்.ரமணியின் 87-வது பிறந்தநாள் விழா சென்னை மயிலாப்பூர் லஸ் அவென்யூவில் உள்ள ராகசுதா அரங்கத்தில் நேற்று நடைபெற்றது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/01/large/732926.jpgபெண்கள் அனைவரும் கட்டாயமாக மார்பக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்: கனிமொழி எம்.பி. அறிவுறுத்தல்

உலக மார்பகப் புற்றுநோய் மாதத்தை (பிங்க் அக்டோபர்) முன்னிட்டு, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் அக்டோபர் 1-ம் தேதி தொடங்கிய மாபெரும் மார்பக பரிசோதனை முகாம் நேற்று நிறைவடைந்தது.

நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற திமுக மகளிர் அணிச் செயலாளரும், அக்கட்சியின் நாடாளுமன்ற குழு துணைத் தலைவருமான கனிமொழி எம்.பி. பரிசோதனை முகாமில் பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். மருத்துவமனை டீன் ஆர்.சாந்திமலர், கதிரியக்கத் துறை தலைவர் தேவி மீனாள், மருத்துவர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/01/large/732927.jpgதீபாவளி நெரிசலில் குற்றவாளிகளை அடையாளம் காண காவல் நிலையம்தோறும் வாட்ஸ்அப் குழுக்கள்

தீபாவளி பண்டிகைக்காக புத்தாடைகள் உள்ளிட்ட பொருட்களை வாங்க, நகரின் முக்கிய பகுதிகளில் பொது மக்கள் குவிந்து வருகின்றனர். இந்நிலையில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டு சம்பவங்களில் குற்றவாளிகள் ஈடுபட்டு விடக் கூடாது என்பதற்காக சென்னை காவல் துறை, கண்காணிப்பு பணியை தீவிரப்படத்தியுள்ளது.

நெரிசல் அதிகமுள்ள பகுதிகளில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து போலீஸார் கண்காணித்து வருகின்றனர். இதேபோல் குற்றவாளிகளின் முகத்தை அடையாளம் காணும் கேமரா செயலி (Face Recognition Camera) பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/01/large/732955.jpgஅணைகள் நிரம்பியும் தண்ணீர் தட்டுப்பாடு: உதகை நகராட்சி மீது மக்கள் குற்றச்சாட்டு

நீலகிரி மாவட்டத்தில் 6 மாதங்களுக்கு மேல் மழை பெய்ததால், உதகை நகராட்சிக்குட்பட்ட அனைத்து அணைகளும் நிரம்பியுள்ளன. முறையாக தண்ணீர் விநியோகம் இல்லாததால் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் தொடர்ந்து 6 மாதங்களாக மழை பெய்ததால், உதகை நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளை சேர்ந்த பகுதி மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ள பார்சன்ஸ் வேலி, டைகர்ஹில்ஸ், கோரி சோலா, கிளன்ராக், ஓல்டுஊட்டி, தொட்டபெட்டா அப்பர் மற்றும் லோயர், கோடப்பமந்து அப்பர் மற்றும் லோயர், மார்லிமந்து அணை என அனைத்துஅணைகளும் நிரம்பியுள்ளன. ஆனால், உதகை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பல இடங்களில் தண்ணீர் விநியோகம் முறையாக இல்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/01/large/732957.jpgஉயர்மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் முதல்வரை சந்திக்க முடிவு

காங்கயம் தாலுகாவில் மட்டும்40 உயர் மின்கோபுரங்கள் நிறுவப் படஉள்ளன.இத்திட்டப் பணிகளுக்காக ஏற்கெனவே விவசாயிகளிடம்இருந்து பெறப்பட்ட நிலங்களுக்கான வாடகை அளிப்பது, இனிவரும் திட்டப்பணிகளை சாலையோரம் புதைவடமாக செயல்படுத்துவது, நிலத்துக்கான இழப்பீட்டுத் தொகையை அதிகரித்து வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

கோரிக்கைகளை நிறைவேற்றாமல், காங்கயம் அடுத்த காடையூர் பகுதியில் உயர்மின் கோபுர திட்டப் பணிகளுக்காக தோண்டப்பட்ட குழியை விவசாயிகள் மூடினர். இந்நிலையில், உயர்மின் கோபுர திட்டங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்கத்தினர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம், தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில்காங்கயத்தை அடுத்த கவுண்டம்பாளையத்தில் நடைபெற்றது. சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி தலைமை வகித்தார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/01/large/732972.jpgகடையம் ஒன்றியக்குழு தலைவர் பதவி விவகாரம்; முதல்வர் தலையிட்டு தீர்வு காண கோரிக்கை: ராஜினாமா செய்தவரின் மகன் வீடியோ வெளியீடு

கடையம் ஒன்றியக்குழு தலைவர் பதவியை ராஜினாமா செய்த பெண்ணின் மகன், மாவட்ட திமுக பொறுப்பாளர் பணம் கேட்டதாக குற்றம்சாட்டி வீடியோ வெளியிட்டுள்ளார். தமிழக முதல்வர் தீர்வு அளிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கு திமுக சார்பில் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஜெயக்குமார், மறைமுகத் தேர்தலில் தோல்வியடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதே கட்சியைச் சேர்ந்த செல்லம்மாள் என்பவர் வெற்றிபெற்றார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/01/large/732976.jpgகரோனா பாதிப்புக்கு மத்தியிலும் ஒன்றரை ஆண்டில் 19 லட்சம் மனுக்களுக்கு மக்கள் நீதிமன்றம் மூலம் தீர்வு: உச்ச நீதிமன்ற நீதிபதி உதித் உமேஷ் லலித் பெருமிதம்

“இந்தியாவில் கரோனா பாதிப்புக்கு மத்தியிலும் ஒன்றரை ஆண்டில் 19 லட்சம் மனுக்களுக்கு மக்கள் நீதிமன்றம் மூலம் தீர்வு காணப்பட்டுஉள்ளது” என, உச்ச நீதிமன்ற நீதிபதி உதித் உமேஷ் லலித் தெரிவித்தார்.

இந்தியாவின் 75-வது ஆண்டு சுதந்திர தினம், தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் 25-வது ஆண்டு விழா ஆகியவற்றை முன்னிட்டு காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அனைத்து கிராம மக்களுக்கும் சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தி, பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வு காண்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு அங்கமாக கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகை வளாகத்தில் புதிய மெகா சட்டசேவை முகாம் தொடக்க நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/01/large/732974.jpgமுல்லைப்பெரியாறு அணை உரிமையை பாதுகாக்க கோரி உண்ணாவிரதம்: விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு அறிவிப்பு

முல்லைப் பெரியாறு அணையின் உரிமையைப் பாதுகாக்க வலியுறுத்தி தேனி மாவட்டம் கூடலூரில் நவ.12-ல் உண்ணாவிரதம் நடைபெறும் என்று அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு மாநிலத் தலைவர் பிஆர். பாண்டியன் தெரிவித்தார்.

அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழுவின் மதுரை மண்டல நிர்வாகிகள் அவசரக் கூட்டம் அதன் கவுரவத் தலைவர் ஆதிமூலம் தலைமையில் மதுரையில் நடந்தது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/01/large/732980.jpgநியூ ஜெர்சி தமிழ்ச் சங்கம் சார்பில் அமெரிக்காவில் தீபாவளி கொண்டாட்டம்: தமிழ்ப் புத்தகக் கண்காட்சி

அமெரிக்காவில் உள்ள நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கம் சார்பில் தீபாவளி கொண்டாட்டம் மற்றும் தமிழ்ப் புத்தகக் கண்காட்சி அண்மையில் நடைபெற்றது.

அமெரிக்காவில் கரோனா தொற்று குறைந்துள்ள நிலையில், நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கம் சார்பில் தீபாவளி கொண்டாட்டம் அண்மையில் நியூ ஜெர்சியில் நடைபெற்றது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/01/large/732985.jpgமகாவீரர் நினைவு தினத்தில் இறைச்சி கடைகளை அனுமதிப்பதா?- பாஜக நாராயணன் திருப்பதி கண்டனம்

பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி நேற்று வெளியிட்ட அறிக்கை:

இந்த ஆண்டு மகாவீரர் நினைவு தினத்தில் தீபாவளி வருவதால், இறைச்சி கடைகளை அடைக்க வேண்டாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/01/large/732986.jpgஅடுத்த 2 மாதங்கள் சவாலாக இருக்கும் நோய் தடுப்பு பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத் துறை செயலாளர் அறிவுறுத்தல்

தமிழகத்தில் அடுத்த 2 மாதங்கள் சவாலாக இருக்கும் என்பதால் நோய் தடுப்பு பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத் துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: கரோனா தடுப்பூசி முகாம்களை தவிர மற்ற நாட்களிலும் தடுப்பூசி அதிகளவில் செலுத்தவதை உறுதிப்படுத்த வேண்டும். வடகிழக்கு பருவமழை காரணமாக ஏற்படும் டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட நோய்களை கட்டுபடுத்த, நோய் தடுப்பு பணிகளை தொடர்ந்து கண்காணித்து செயல்படுத்த வேண்டும். 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்துவதற்கான கால அவகாசம் முடிந்தும் செலுத்தாதவர்களை கண்டறிந்து தடுப்பூசி போட வேண்டும். பண்டிகை நாட்களில் கரோனாபரவதலை தடுக்கும் வகையில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/01/large/732987.jpgதனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ரஜினியின் உடல்நிலையை விசாரித்தார் முதல்வர் ஸ்டாலின்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காவேரி மருத்துவமனைக்கு சென்று, நடிகர் ரஜினியின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் விசாரித்தார்.

டெல்லியில் கடந்த 25-ம் தேதி நடைபெற்ற தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில், நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/01/large/732983.jpg‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் நடத்திய ‘கலாமை கொண்டாடுவோம்’ இணையவழி சிறப்பு கலந்துரையாடல்: அப்துல் கலாம் குறித்து விஞ்ஞானிகள் பெருமிதம்

இந்தியா போர் விமானத்துறையில் சுயசார்பை அடைய வேண்டும் என்று கனவு கண்டவர் அப்துல் கலாம் என்று ‘கலாமை கொண்டாடுவோம்’ இணையவழி கலந்துரையாடல் நிகழ்வில், கலாமுடன் இணைந்து பணியாற்றிய விஞ்ஞானிகள் பெருமிதத்துடன் குறிப்பிட்டனர்.

இந்திய குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாமின் 6-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் சார்பில் ‘கலாமை கொண்டாடுவோம்’ எனும்இணையவழி சிறப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/01/large/732994.jpgகேரளாவுக்கு நீர்திறப்பு அதிகரிப்பு; முல்லை பெரியாறு அணை பகுதியில் தமிழக தலைமை பொறியாளர் ஆய்வு: கேரள அமைச்சர்கள் தொடர்ந்து முகாம்

கேரளாவுக்கு முல்லை பெரியாறு அணை நீர் திறப்பை அதிகரித்த நிலையில், அணையில் சிறப்புக் கோட்ட மண்டலத் தலைமைப் பொறியாளர் ம.கிருஷ்ணன் நேற்று ஆய்வு மேற்கொண்டு தண்ணீர் திறப்பை பார்வையிட்டார்.

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடிக்கு உயர்த்த உச்ச நீதிமன்றம் 2014-ம் ஆண்டில் உத்தரவிட்டது. இருப்பினும் அணையின் பலம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளை கேரள அரசு எழுப்பி, நீர்மட்டத்தை உயர்த்துவதில் தொடர்ந்து தடை ஏற்படுத்தி வருகிறது. நீதிமன்றத் தீர்ப்புக்கு பிறகு 2014, 2015 மற்றும் 2018-ம் ஆண்டுகளில் மட்டுமே 142 அடிக்கு தண்ணீர் தேக்கப்பட்டது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/01/large/733002.jpgஜூலை 18-க்கு மாற்றியது கண்டனத்துக்குரியது, பொருத்தமற்றது; நவ.1-ம் தேதியே ‘தமிழ்நாடு நாள்’ கொண்டாடப்பட வேண்டும்: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தல்

‘தமிழ்நாடு நாள்’ நவ.1-ம் தேதிதான் கொண்டாடப்பட வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர். அந்த நாளை ஜூலை 18-ம் தேதிக்கு மாற்றியதற்கு அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் நேற்றுவெளியிட்ட அறிக்கைகளில் கூறியிருப்பதாவது:

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/01/large/733003.jpgகுழந்தைகளிடம் இருந்து கற்கவேண்டிய பாடங்கள்

பள்ளிகள் திறந்தாகிவிட்டது. பள்ளித் திறப்பை பெரும் திருவிழாவாக கொண்டாட வேண்டும் என்று கல்வியாளர்கள், கல்வி நேசர்கள், ஆசிரியர்கள் திட்டமிட்டனர். தமிழக முதல்வரின் அறிவிப்பும்,அழைப்பும் இந்த கொண்டாட்டத்தை வெகுவீச்சோடு கொண்டு சென்றுவிடும். கொண்டாட்டத்தின் பல்வேறு வடிவங்களை பல்வேறு ஊடகங்களில் கண்டு மகிழலாம். துவண்டு கிடந்த குழந்தைகள் மனதில் புதிய உற்சாக விதையை இந்த கொண்டாட்டம் ஊன்றும். தமிழக அரசின் ‘இல்லம் தேடி கல்வி’ திட்டம், குழந்தைகளின் கற்றல் மனத்தை மீட்டெடுக்கவும், கற்றல் இணை செயல்பாடுகள் வழியாக கற்கும் வேகத்தை தூண்டவும் பயனுள்ளதாக இருக்கும். இவ்வளவுதான் என்று அளவிடமுடியாத இழப்புகளை சரிக்கட்ட இதெல்லாம் அவசர அவசியம்.

கற்றல் இழப்பு, கற்றல் இடைவெளி, அதை ஈடுசெய்தல் அல்லது குறைத்தல் என்று எடுக்கப்படும் நடவடிக்கைகள் மத்தியில், குழந்தைகள் மனதில் இருந்து வெளிக்கொண்டு வரவேண்டிய ஓர் உன்னதப் பகுதி உள்ளது. அது, கல்வியாளர்களுக்கே கல்வி கற்றுத்தர வல்லது. வருங்கால பாடத் திட்டம், கலை திட்டம், ஆகியவற்றில் புதிய வெளிச்சம் பாய்ச்சவல்லது. குழந்தைகள் மனதில் கொட்டிக் கிடக்கும் கரோனா காலம் கற்றுத் தந்த பாடங்களை வெளிக் கொண்டுவர வேண்டும். அவர்கள் பெற்றுள்ளபடிப்பினைகளை யாரோடும் பகிர்ந்து கொண்டிருக்க வாய்ப்பு இல்லை. காது கொடுத்து கேட்கப்படாமல் இருக்கிறது. ஒருவேளை, குழந்தைகள் அதை பகிரத் துடித்தாலும், கண்டுகொள்ளாத மனங்களாக நம் மனங்கள் கெட்டிதட்டிப் போயிருக்கலாம்‌. ஆனால், இந்த கரோனா காலத்தில் குழந்தைகள் கற்ற பாடங்களை, சமூகம் குழந்தைகளிடம் இருந்து கற்க வேண்டும்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Saturday, October 30, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/31/large/732576.jpgமதுரை கோரிப்பாளையத்தில் அரசு பேருந்து, கார்களின் கண்ணாடி உடைப்பு

மதுரை கோரிப்பாளையத்தில் தேவர் சிலைக்கு மரியாதை செலுத்த வந்த இளைஞர்கள் சிலர் அரசுப் பேருந்தின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினர்.

மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://ift.tt/315PTCX மணி நேரத்துக்குள் வந்தால் பக்கவாதத்தை குணப்படுத்தலாம்: வேலம்மாள் மருத்துவ கல்லூரி மருத்துவர்கள் நம்பிக்கை

பக்கவாதத்தால் பாதிப்பட்ட 6 மணி நேரத்துக்குள் சிகிச்சை எடுத்தால் குணப்படுத்தலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

உலக பக்கவாத நாளையொட்டி மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரியில் கோட் ஸ்ட்ரோக் என்னும் புதிய மருத்துவ சேவை மையம் நேற்று தொடங்கப்பட்டது. மருத்துவமனை தலைவர் எம்.வி.முத்துராமலிங்கம் தொடங்கி வைத்தார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/31/large/732592.jpgவிக்கிரவாண்டி அருகே கண்டெடுத்த பச்சிளங் குழந்தையை ஒப்படைக்க திருநங்கை மறுப்பு: அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு பிறகு குழந்தை மீட்பு

விக்கிரவாண்டி அருகே திருநங்கை கண்டெ டுத்த பச்சிளங் குழந்தையை அதிகாரிகளிடம் ஒப்படைக்க மறுப்பு தெரிவித்தார். பேச்சு வார்த்தைக்கு பிறகு குழந்தை மீட்கப்பட்டது.

விக்கிரவாண்டி அடுத்த தொரவி கிராமத்தைச் சேர்ந்தவர் மது (29). திருநங்கையான இவர் கடந்த 27-ம் தேதி 11 மணியளவில் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் தனியார் பெட்ரோல் பங்க் எதிரில் செல்லும் போது அருகிலிருந்த தைலம் தோப்பிலிருந்து குழந்தைஅழும் சத்தம் கேட்டது. அங்கு சென்று லைட்அடித்து பார்த்த போது பிறந்த சில மணிநேரமேஆன பச்சிளம் ஆண் குழந்தை ரத்தக்கறையுடன் கிடந்தது. குழந்தையை கண்டெடுத்த மது, தன் வீட்டிற்கு கொண்டு வந்து பராமரித்து வந்தார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/31/large/732594.jpgஅனைத்து மாநில நிதி அமைச்சர்களும் ஏற்றால் மட்டுமே பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர முடியும்: பாஜக தேசிய பொதுச் செயலாளர் புரந்தேஸ்வரி தகவல்

அனைத்து மாநில நிதி அமைச் சர்களும் ஏற்றுக்கொண்டால் மட்டுமே பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர முடியும் என பாஜக தேசிய பொதுச் செயலாளர் புரந் தேஸ்வரி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி பாஜக கேந்திர நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மரப்பாலம் பகுதியில் உள்ள தனியார் கன்வென்ஷன் சென்டரில் நேற்று நடைபெற்றது. தேசிய பொதுச்செயலாளர் புரந்தேஸ்வரி தலைமை தாங்கினார். மாநிலதலைவர் சாமிநாதன், அமைச்சர் கள் நமச்சிவாயம், சாய் ஜெ சரவணன்குமார், செல்வகணபதி எம்பி, பாஜக எம்எல்ஏக்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/31/large/732606.jpgஓய்வுபெறும் நாளில் அரசு ஊழியர்களை ‘சஸ்பெண்ட்’ செய்வதை தவிர்க்க அரசாணை

அரசு ஊழியர்களை ஓய்வுபெறும் நாளில் ‘சஸ்பெண்ட்’ செய்யும் நடைமுறையை தவிர்ப்பதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

மனிதவள மேலாண்மைத் துறைவெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: அரசு ஊழியர்கள்தவறு செய்து அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில்,துறைரீதியான விசாரணை நடத்தப்பட்டு, தண்டனை வழங்கப்படுகிறது. சில வழக்குகளில் தவறு செய்பவர் மீதான விசாரணை நீண்டகாலம் செல்லும்போது, துறைரீதியான ஒழுங்கு நடவடிககைக்காக அவர் தற்காலிக இடைநீக்கத்தில் (சஸ்பெண்ட்) வைக்கப்படுகிறார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/31/large/732608.jpgஅணுமின் நிலையத்தில் சக ஊழியர்களை சுட்டுக் கொன்ற சிஐஎஸ்எப் வீரருக்கு விதிக்கப்பட்ட 3 ஆயுள் தண்டனை ரத்து

சென்னை கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் கடந்த 2014-ம் ஆண்டு அக்.8-ம் தேதி அதிகாலை 4 மணியளவில் பணியில் இருந்த சிஐஎஸ்எப் தலைமைக் காவலரான விஜய் பிரதாப் சிங் என்பவர் திடீரென தனது துப்பாக்கியால் சக ஊழியர்கள் மீது கண்மூடித்தனமாக சுட்டார்.

இதில் சிஐஎஸ்எப் தலைமைக் காவலர்களான மோகன் சிங், சுப்புராஜ், உதவி எஸ்ஐ கணேசன் ஆகியோர் உயிரிழந்தனர். அதையடுத்து விஜய் பிரதாப் சிங் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த செங்கல்பட்டு நீதிமன்றம், விஜய் பிரதாப் சிங்குக்கு 3 ஆயுள் தண்டனைகளை விதித்து தீர்ப்பளித்தது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/31/large/732676.jpgகட்டுமான பொருட்கள் தர ஆய்வுக்கு பரிசோதனை கூடம்: அதிகாரிகளுக்கு நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தல்

நெடுஞ்சாலைத் துறை பணிகள் முன்னேற்றம் குறித்து அமைச்சர் எ.வ.வேலு சென்னை தலைமைச் செயலகத்தில் ஆய்வு செய்தார். இதில் அவர் பேசியதாவது:

கேளம்பாக்கம், திருப்போரூர் புற வழிச்சாலைப் பணி, ராஜீவ் காந்தி சாலையில் உள்ள சுங்கச்சாவடி கட்டு மானங்களை நீக்கும் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். பழைய மகாபலிபுரம் சாலையில் 5 பாலங்களை விரைவாக அமைக்க வேண்டும்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/31/large/732677.jpgபொது சொத்தை சேதப்படுத்தியதாக வழக்கு: 2 அமைச்சர்கள் மீதான வழக்கை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவு

சென்னை மாநகராட்சி 131-வது வார்டுக்கு 2005 ஏப்ரல் 19-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. அப்போது, கே.கே.நகரில் உள்ள வாக்குச்சாவடிக்குள் அத்துமீறி நுழைந்து, தேர்தல் அலுவலரிடம் இருந்து முத்திரையைப் பறித்துச் சென்றதாகவும், அதை தட்டிக்கேட்ட தன்னை துரத்தி, தனது காரை சேதப்படுத்தி, பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாகவும் அதிமுகவைச் சேர்ந்த சந்தோஷ் கே.கே.நகர் போலீஸில் புகார் அளித்திருந்தார்.

அதன்பேரில், தற்போது அமைச் சர்களாக உள்ள மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன் உள்ளிட்டோருக்கு எதிராக, பொது சொத்துகளை சேதப்படுத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/31/large/732678.jpgபேருந்துகள் வாங்குவதற்கு ரூ.694 கோடி ஒதுக்கீடு: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

தமிழகத்தில் புதிய பேருந்துகளை கொள்முதல் செய்ய ரூ.694 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அரசு மற்றும் கல்வி நிறுவனங்கள், அலுவலகக் கட்டிடங்கள், ரயில், பேருந்துகளில் மாற்றுத் திறனாளிகள் எளிதில் செல்லும் வகையில், உரிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக 2016-ல் மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டம் இயற்றப்பட்டது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/31/large/732679.jpgகைலாசநாதர், கரிவரதர் கோயில்களில் புதிய குளம்: இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை மாதவரத்தில் உள்ள கைலாசநாதர் கோயில், கரிவரதராஜப் பெருமாள் கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று ஆய்வு செய்தார். கோயில்களின் வளர்ச்சிப் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

மாதவரம் கைலாசநாதர், கரிவரதராஜப் பெருமாள் கோயில்களில் பக்தர்கள், இறையன்பர்களுக்கு வசதியாக என்னஅடிப்படை தேவைகளை நிறைவேற்றலாம் என்பது பற்றி ஆலோசித்தோம்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/31/large/732680.jpgசென்னையில் வானிலை ஆய்வு மையத்தின் புதிய ரேடார் செயல்படத் தொடங்கியது

சென்னையில் வானிலை ஆய்வு மையத்தின் புதிய ரேடார் பள்ளிக்கரணையில் நேற்று செயல்படத் தொடங்கியது.

மழை மேகங்களின் தன்மை,நகர்வு, மழை அளவு போன்றவற்றை ரேடார் மூலம் கிடைக்கும் தரவுகள் மூலம் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்து வருகிறது. ரேடார்களில் இருந்து செலுத்தப்படும் மின் காந்த அலைகள் மூலமாகக் கிடைக்கும் தரவுகளைக் கொண்டு, குறுகியகால வானிலை முன்னறிவிப்பு, நிகழ்நேர மழை நிலவரம் போன்றவற்றை ஆய்வு மையத்தால் வழங்க முடியும்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/31/large/732616.jpgகோயம்பேடு, வேளச்சேரி மேம்பாலங்களை முதல்வர் ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்

சென்னையில் வேளச்சேரி மற்றும் கோயம்பேடு மேம்பாலங்களைக் கட்டும் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை அவற்றை திறந்து வைக்கவுள்ளார்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் பல்வேறு இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. ரூ.146 கோடி செலவில் மேடவாக்கம் - சோழிங்கநல்லூர் சாலை சந்திப்பில் மேம்பாலம், ரூ.108 கோடி செலவில் வேளச்சேரி விஜயநகர் மேம்பாலம், ரூ.93 கோடியில் கோயம்பேடு காளியம்மன் கோயில் மேம்பாலப் பணிகள் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்தன.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/31/large/732681.jpgதமிழக அரசுக்கு தெரிந்துதான் பெரியாறு அணை திறக்கப்பட்டதா?- முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளிக்க அண்ணாமலை வலியுறுத்தல்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பசும்பொன்னில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பெரியாறு அணை முதல் முறையாக தமிழக அரசின் அனுமதி பெறாமல் கேரள அரசால் திறந்துவிடப்பட்டுள்ளது. இது கண்டிக்கத்தக்கது. மாநில அரசுக்கு தெரிந்துதான் இது நடந்ததா? அனுமதி பெற்றுத்தான் செய்தனரா என்று தெரியவில்லை. அணையில் நீர்மட்டம் 136 அடியை எட்டும்போது அவசரமாக திறந்து விடப்பட்டுள்ளது. தமிழக அமைச்சர்கள் எங்களுக்குத் தெரியும் என்று கூறியுள்ளனர். இது விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். தமிழக அரசு தனது நிலைப்பாட்டை தெளிவாகக் கூற வேண்டும்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/31/large/732685.jpgநெருக்கடி காரணமாக பதவியை ராஜினாமா செய்த கடையம் ஒன்றிய குழு தலைவரிடம் ரூ.1 கோடி கேட்டதாக சர்ச்சை: எஸ்பி.யிடம் மாவட்ட திமுக பொறுப்பாளர் புகார்

நெருக்கடி காரணமாக பதவியை ராஜினாமா செய்த கடையம் ஒன்றியக் குழு தலைவர் செல்லம்மாள், தன்னிடம் திமுக மாவட்டப் பொறுப்பாளர் ரூ.1.10 கோடி கேட்டதாக கூறும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாவட்ட திமுக பொறுப்பாளர் போலீஸில் புகார் அளித்தார்.

தென்காசி மாவட்டம், கடையம் ஊராட்சி ஒன்றியத்தில் 17 வார்டுகள் உள்ளன. இதில், திமுக சார்பில் 11 பேர், அதிமுக சார்பில் 5 பேர்,காங்கிரஸ் சார்பில் ஒருவர் வெற்றிபெற்றனர். திமுக பெரும்பான்மை பெற்ற நிலையில், ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவராக, ஜெயக்குமார் என்பவரை தேர்ந்தெடுக்குமாறு, திமுக தலைமை உத்தரவிட்டிருந்தது. கடந்த 22-ம் தேதி நடந்த மறைமுக தேர்தலில் திமுகவைச் சேர்ந்த செல்லம்மாள் 13 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுகவைச் சேர்ந்த ஜெயக்குமார் 4 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/31/large/732688.jpgபேருந்து நிலையங்களில் முன்னேற்பாடுகள் தீவிரம்; தீபாவளி சிறப்பு பேருந்துகள் நாளை முதல் இயக்கம்: போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவிப்பு

தீபாவளியை முன்னிட்டு தமிழகம்முழுவதும் நாளை (நவ. 1) முதல்சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறைஅமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/31/large/732691.jpgதமிழகம் முழுவதும் நடைபெற்ற 7-ம் கட்ட மெகா முகாமில் 17 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி

தமிழகம் முழுவதும் நடந்த 7-வது கட்ட மெகா முகாமில் 17.14 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

கரோனா 3-வது அலை எச்சரிக்கை இருப்பதால் தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, தமிழகத்தில் மெகா கரோனா தடுப்பூசி முகாமை வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்த அரசு முடிவு செய்தது. அதன்படி, 5 கட்டங்களாக முகாம்கள் நடத்திதடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/31/large/732618.jpgநவம்பர் மாத இறுதிக்குள் தமிழகத்தில் 100% முதல் தவணை தடுப்பூசி போட நடவடிக்கை: சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

தமிழகத்தில் நவம்பர் மாத இறுதிக்குள் 100 சதவீதம் முதல் தவணை தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் நேற்று 50 ஆயிரம் இடங்களில் 7-வது கட்ட மெகா கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. சென்னை அடையாறு கஸ்தூரிபாய் நகர் குடியிருப்பு பகுதியில் நடைபெற்ற முகாமை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். சுகாதாரத் துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் தாயகம் கவி, அசன் மௌலானா ஆகியோர் உடனிருந்தனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/31/large/732684.jpgமுல்லை பெரியாறு அணையில் இருந்து கேரளாவுக்கு கூடுதல் தண்ணீர் திறப்பு: தமிழக விவசாயிகள் அதிர்ச்சி

முல்லை பெரியாறு அணையில் மேலும் ஒரு மதகு திறக்கப்பட்டு கூடுதல் நீர் கேரளாவுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. ஏற்கெனவே 2 மதகுகள் மூலம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதற்கு தமிழக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மேலும் 1 மதகு திறக்கப்பட்டுள்ளது.

முல்லை பெரியாறு அணையில் இருந்து நேற்று முன்தினம் கேரளப் பகுதிக்கு நீர் திறக்கப்பட்டது. அணையில் உள்ள 13 மதகுகளில் 3 மற்றும் 4-வது மதகுகள் திறக்கப்பட்டு விநாடிக்கு 514 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. அன்று இரவு வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு 825 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/31/large/732708.jpgமாரடைப்புக்கு வழிவகுக்கும் கடும் உடற்பயிற்சி: 2 இளம் நடிகர்களின் உயிரை பறித்த ‘ஃபிட்னஸ் விருப்பம்’

கன்னட திரையுலகில் ‘ஃபிட்னஸ் ப்ரிக்' ஆக இருந்த நடிகர்கள் சிரஞ்சீவி சர்ஜா, புனித் ராஜ்குமார் ஆகிய இருவரும் உடற்பயிற்சியின்போது ஏற்பட்ட நெஞ்சுவலியின் காரணமாக உயிரிழந்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

நடிகர் அர்ஜூனின் அக்கா மகன்சிரஞ்சீவி சர்ஜா (36), கடந்த ஆண்டு ஜூன் 7-ம் தேதி தனது வீட்டில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்த போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரைபரிசோதித்த மருத்துவர்கள் மருத்துவமனைக்கு வரும் வழியிலே சிரஞ்சீவி சர்ஜா மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/31/large/732709.jpgபல்கலை.யில் தேசிய கல்விக் கொள்கை அம்சங்களை படிப்படியாக அமல்படுத்த வேண்டும்: துணைவேந்தர்களுக்கு ஆளுநர் அறிவுறுத்தல்

தேசிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ள அம்சங்களை படிப்படியாக அமல்படுத்த வேண்டும் என்று பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி, கடந்த செப்.18-ம்தேதி பதவியேற்றார். பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பும் ஆளுநர் வசமுள்ளது. அதன்படி அனைத்து பல்கலை.களின் துணைவேந்தர்களுடன் கலந்துரையாடல்கூட்டம் சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் நேற்று நடைபெற்றது. ஆளுநர் ஆர்.என்.ரவிதலைமையில் நடந்த இக் கூட்டத்தில் உயர்கல்வித் துறையின்கீழ்உள்ள பல்கலை.களின் துணைவேந்தர்கள், பதிவாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Friday, October 29, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/30/large/732113.jpgகடந்தாண்டு சம்பா பருவத்தில் பயிர்க் காப்பீடு செய்த தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகளுக்கு இழப்பீடாக ரூ.427 கோடி: தீபாவளிக்குள் அனைவருக்கும் வழங்கப்பட்டுவிடும்

தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்தாண்டு சம்பா பருவத்தில் பயிர்க் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீடாக வழங்க ரூ.427 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், இதுவரை ரூ.190 கோடி வங்கிகள் மூலமாக விவசாயிகளின் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

டெல்டா மாவட்டங்களில் கடந்த சம்பா பருவத்தின்போது, 10 லட்சம் ஏக்கரில் நெல் நடவு செய்தனர். இயற்கை இடர்பாடுகளால் நெற்பயிர் பாதிக்கப்பட்டாலோ, மகசூலில் பாதிப்பு ஏற்பட்டாலோ விவசாயிகளுக்கு உதவும் வகையில் பிரதமரின் திருத்தியமைக்கப்பட்ட பயிர்க் காப்பீடு திட்டத்தின் கீழ் விவசாயிகள் கடந்த ஆண்டு பயிர்க் காப்பீடு பிரீமியம் செலுத்தி இருந்தனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/30/large/732146.jpgதிமுக மேலிடத்தின் நெருக்கடியால் கடையம் ஒன்றியக்குழு தலைவர் ராஜினாமா

கட்சி மேலிடத்தின் நெருக்கடி காரணமாக கடையம் ஒன்றியக் குழு தலைவர் செல்லம்மாள் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

தென்காசி மாவட்டம், கடையம் ஊராட்சி ஒன்றியத்தில் 17 வார்டுகள் உள்ளன. இதில், திமுக சார்பில் 11 பேர், அதிமுக சார்பில் 5 பேர், காங்கிரஸ் சார்பில் ஒருவர் வெற்றிபெற்றனர். ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கு நடந்த மறைமுகத் தேர்தலில் 10-வது வார்டு உறுப்பினர் திமுகவைச் சேர்ந்த செல்லம்மாள் 13 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட 13-வது வார்டு உறுப்பினர் திமுகவைச் சேர்ந்த ஜெயக்குமார் 4 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/30/large/732198.jpgசிவகாசியில் 1,500 பட்டாசு கடைகள் திறப்பு: எதிர்பார்த்த விற்பனை இல்லாததால் உற்பத்தியாளர்கள் வருத்தம்

தீபாவளி பண்டிகையையொட்டி சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரத்தில் எதிர்பார்த்த அளவு விற்பனை இல்லாததால் விற்பனையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிவகாசி, விருதுநகர், சாத்தூர், வில்லிபுத்தூர், ராஜபாளையம் நகரப் பகுதி களிலும், பை-பாஸ் சாலைகளையொட்டியும் 1,500-க்கும் மேற்பட்ட பட்டாசு விற்பனைக் கடைகள் திறக்கப்பட் டுள்ளன. பெரும் பாலான நிறுவனங்கள் தள்ளுபடி விற்பனையை அறிவித்துள்ளன.இந்நிலையில் இந்த ஆண்டு எதிர்பார்த்த அளவு பட்டாசு விற்பனையா காததால் வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர். இது குறித்து பட்டாசு விற்பனை யாளர் சாந்தி மாரியப்பன் கூறிய தாவது: கரோனா ஊரடங்கு மற்றும் உச்ச நீதிமன்ற வழக்கு காரணமாகவும், வட மாநிலங்களில் பட்டாசுக்கு தடை விதிக்கப்பட்டதாலும் இந்த ஆண்டு பட்டாசுக்கான ஆர்டர் குறைவாகவே வந்தது. இதனால் பட்டாசு உற்பத்தியும் குறைந்த அளவிலேயே இருந்தது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/30/large/732202.jpgமுல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்த விடாமல் தடுக்கும் கேரளா: இடுக்கிக்கு தண்ணீர் திறக்கப்படுவதால் பாதிப்புக்குள்ளாகும் மதுரை

பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த விடாமல் தடுக்கும் கேரளாவின் இடையூறுகள் தொடர்வதால் மதுரை உள்ளிட்ட 5 மாவட்டங்களின் குடிநீர் மற்றும் விவசாய தேவைகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் பாசனத்துக்கும், குடிநீருக்கும் பெரியாறு அணை முக்கிய ஜீவாதாரமாக திகழ்கிறது. கேரளாவை நோக்கிப் பாயும் பெரியாற்றின் குறுக்கே கட்டப்பட்ட இந்த அணையின் நீர்மட்டம் 152 அடியாகும். கடந்த 1924, 1933, 1940, 1943, 1961 மற்றும் 1977 ஆகிய ஆண்டுகளில் 152 அடி வரை தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளது. அப்போதெல்லாம், அணைக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/30/large/732250.jpgமுல்லை பெரியாறு அணை விவகாரம்; தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட ஓபிஎஸ் வேண்டுகோள்: அணை பாதுகாப்பாக உள்ளதாக அமைச்சர் துரைமுருகன் தகவல்

முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என முதல்வர் ஸ்டாலினுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்நிலையில் தமிழகத்துக்கு சொந்தமான முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளதாகவும், முறையாக இயக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/30/large/732251.jpgசென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் எதிர்கட்சித் தலைவர் பழனிசாமிக்கு பரிசோதனை

எதிர்கட்சித் தலைவர் பழனிசாமிக்கு, சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் நேற்று மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான பழனிசாமி. குடலிறக்கம் பிரச்சினையால் அவதிப்பட்டார். இதைத்தொடர்ந்து, கடந்த ஏப்ரல்மாதம் சென்னை அமைந்தகரையில் உள்ள எம்ஜிஎம் ஹெல்த் கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் அவருக்கு லேப்ராஸ்கோப்பி முறையில் குடலிறக்கம் பிரச்சினையை சரிசெய்தனர். மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பி, சில தினங்கள் ஓய்வில் இருந்தார். பின்னர், தேர்தல் மற்றும் கட்சிப் பணிகளில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், எம்ஜிஎம் ஹெல்த் கேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக நேற்று காலை மீண்டும் அனுமதிக்கப்பட்டார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://ift.tt/3Ev5nPy லட்சம் பேர் 2-ம் தவணை தடுப்பூசி போடவில்லை: நேரில் சென்று நினைவூட்டும் மாநகராட்சி அலுவலர்கள்

சென்னையில் சுமார் 6 லட்சம் பேர் 2-ம் தவணை கரோனா தடுப்பூசி போடவில்லை. அவர்கள் இன்று நடைபெறும் கரோனா தடுப்பூசி முகாம்களில் பங்கேற்று, தடுப்பூசி போட்டுக்கொள்ள மாநகராட்சி அலுவலர்கள் நேரில் சென்று நினைவூட்டினர்.

இது தொடர்பாக மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்றைக்கட்டுப்படுத்த வார இறுதி நாட்களில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/30/large/732255.jpg‘இல்லம் தேடி கல்வி’ திட்டம் குறித்து விளக்கம்; முதல்வரின் பொறுப்புணர்வு மெச்சத்தக்கது: இந்திய கம்யூ. கட்சி மாநிலச் செயலர் இரா.முத்தரசன் பாராட்டு

தமிழக அரசின் ‘இல்லம் தேடி கல்வி’ திட்டம் குறித்து உரிய விளக்கம் அளித்துள்ள முதல்வர் ஸ்டாலினின் பொறுப்புணர்வு மெச்சத்தக்கதாகும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்றுவெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/30/large/732256.jpgகல்லூரி மாணவியை கொன்ற இளைஞருக்கு அதிக தண்டனை கிடைக்க நடவடிக்கை: டிஜிபி அலுவலகத்தில் பெற்றோர் வலியுறுத்தல்

தாம்பரம் ரயில் நிலையம் அருகே மகளைக் கொன்ற இளைஞருக்கு, அதிகபட்ச தண்டனை கிடைக்கும் வகையில் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவியின் பெற்றோர் டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

சென்னை குரோம்பேட்டை பாரதிபுரத்தைச் சேர்ந்த மதியழகன் மகள் சுவேதா(20). தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் டிப்ளமோ லேப் டெக்னீஷியன் இரண்டாமாண்டு படித்து வந்தார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...