Saturday, September 30, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/10/01/large/1131444.jpgகுன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து 8 பேர் உயிரிழப்பு: 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம்

குன்னூர்/கோவை: குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப்பாதை பள்ளத்தில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

தென்காசி மாவட்டம் கடையத்தில் இருந்து 54 பேர் பேருந்து மூலமாக நேற்று முன்தினம் உதகைக்கு சுற்றுலா வந்துள்ளனர். பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்துவிட்டு, உதகையில் இருந்து நேற்று மாலை கோவைக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் மரப்பாலம் அருகே 9-வது கொண்டை ஊசி வளைவில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, 50 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/10/01/large/1131489.jpgடெங்குவுக்கு தேவையான மருந்துகளை இருப்புவைக்க அறிவுறுத்தல் - 1,000 இடங்களில் இன்று காய்ச்சல் கண்டறியும் முகாம்

சென்னை: தமிழகத்தில் இன்று 1,000 இடங்களில் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இதுதொடர்பாக சென்னை அண்ணாசாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் அவர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் மற்றும் மழைக்கால தொற்று நோய்களான வயிற்றுப்போக்கு, டைபாய்டு போன்ற நோய்கள் பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் தமிழகத்தில் தொற்று நோய்கள் கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றன.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/10/01/large/1131493.jpgவேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் உடல் தகனம்: ஆளுநர் ஆர்.என்.ரவி, இபிஎஸ் உள்ளிட்டோர் அஞ்சலி

சென்னை: வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் உடல், காவல் துறை மரியாதையுடன் சென்னையில் நேற்று தகனம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, முன்னாள் முதல்வர் பழனிசாமி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

பசுமைப் புரட்சியின் தந்தை என்று போற்றப்படும் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் (98), கும்பகோணத்தில் 1925-ல் பிறந்தவர். 1960-களில் இந்தியாவில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டபோது, பசுமைப் புரட்சியை முன்னின்று நடத்தினார். கோதுமை உற்பத்தி அதிகரிப்பிலும், புதிய நெல் வகைகளை அறிமுகப்படுத்தி, நெல் விளைச்சலில் இந்தியா தன்னிறைவு அடைந்ததிலும் இவரது பங்கு மகத்தானது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/09/30/large/1131102.jpgஉதயநிதிக்கு எதிரான வழக்குகள்: ஓய்வுபெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன் கருத்து

மதுரை: அமைச்சர் உதயநிதிக்கு எதிரான வழக்குகளை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ய வேண்டும் என ஓய்வு பெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன் கேட்டுக்கொண்டுள்ளார்.

மதுரையில் உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அரங்கக் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி பேசிய பேச்சை அரசியலுக்காக இந்தியா முழுவதும் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர். சனாதனத்தை ஆதரிக்க சிலருக்கு உரிமை இருப்பது போல், அதை எதிர்ப்பதற்கும் உரிமை உண்டு.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Friday, September 29, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/09/30/large/1131011.jpgவாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி: 200-க்கும் மேற்பட்டோரின் சிறை தண்டனை உறுதி

சென்னை: வாச்சாத்தி பாலியல் வன்கொடுமை வழக்கில், பாதிக்கப்பட்ட 18 பழங்குடியின பெண்களுக்கும் அரசு வேலையுடன் தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்குமாறு தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வனத் துறை, காவல் துறை, வருவாய் துறையை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையையும் நீதிமன்றம் உறுதிசெய்து உத்தரவிட்டுள்ளது.

தருமபுரி மாவட்டம் அரூர் - பாப்பிரெட்டிபட்டி இடையே கல்வராயன் மலைத்தொடரின் அடிவாரப் பகுதியில் உள்ள வாச்சாத்தி மலை கிராமத்தினர் சந்தனமரக் கடத்தலில் ஈடுபட்டதாக கடந்த 1992 ஜூன் 20-ம் தேதி 155 வனத் துறையினர், 108 காவல் துறையினர், 6 வருவாய் துறையினர் கூட்டாக சோதனை நடத்தினர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/09/30/large/1130627.jpgமேட்டூர் காவலர் பயிற்சி பள்ளியில் 54 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு: மருத்துவமனையில் 14 பேர் அனுமதி

மேட்டூர்: மேட்டூர் காவலர் பயிற்சி பள்ளியில் 54 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 14 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சேலம் மாவட்டம் மேட்டூரில் காவலர் பயிற்சி பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் காவலர் தேர்வில் வெற்றி பெற்ற 492 ஆண் காவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த வாரம் விநாயகர் சதுர்த்தி பண்டிகை பாதுகாப்பு பணிக்காக திருப்பூர், காங்கேயம், கோவை உள்ளிட்ட பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பாதுகாப்பு பணிகள் முடிந்து மீண்டும் காவலர் பயிற்சி பள்ளிக்கு திரும்பிய 54 பயிற்சி காவலர்களுக்கு சளி, காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Thursday, September 28, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/09/29/large/1130509.jpgநன்னடத்தை விதிகள்படி கைதிகள் விடுதலை: அமைச்சர் விளக்கம்

புதுக்கோட்டை: சிறைக் கைதிகளில் மிகப்பெரிய சதி செயல்களில் ஈடுபட்டவர்கள் தவிர, மற்றவர்கள் நன்னடத்தை விதிகளின் அடிப்படையில் விடுதலை செய்யப்படுவார்கள் என மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: தமிழகத்துக்கு காவிரியில் நீர் திறந்து விட கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், தமிழகத்துக்கு தண்ணீர் தர மறுத்து அந்த மாநிலத்தில் போராட்டம் நடத்துகிறார்கள். எனினும், நம்முடைய கோரிக்கை வெற்றி அடைந்துள்ளது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/09/29/large/1130516.jpgஅதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு: உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் மேல்முறையீடு

சென்னை: அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு தடை விதிக்க முடியாது என மறுப்பு தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மாதம் கழித்து மேல்முறையீடு செய்துள்ளார்.

கடந்த 2022 ஜூலை 11 அன்று நடந்த அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்தும், அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்தும்,பழனிசாமி பொதுச்செயலாளராக பதவி வகிக்க தடை கோரியும், அதிமுகவில் இருந்து தங்களை நீக்கியதை எதிர்த்தும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களான பி.எச்.மனோஜ்பாண்டியன், ஆர்.வைத்திலிங்கம், ஜேசிடி.பிரபாகர் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்குகளைத் தொடர்ந்திருந்தனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/09/28/large/1130146.jpgபுதுச்சேரி மாநில பாஜக தலைவராக செல்வகணபதி எம்பி பொறுப்பேற்பு

புதுச்சேரி: வருகின்ற 2024-ல் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் 375 இடங்களை பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்து, மீண்டும் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் நல்ல காலக்கட்டத்தை நோக்கி நாம் இருக்கின்றோம் என்று புதுச்சேரி மாநில பாஜக புதிய தலைவராக பொறுப்பேற்றுக்கொண்ட செல்வகணபதி எம்பி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி மாநில பாஜக தலைவராக 8 ஆண்டுகள் இருந்த சாமிநாதன் அப்பதவியில் இருந்து மாற்றப்பட்டு புதிய தலைவராக செல்வகணபதி எம்பி நியமிக்கப்பட்டார். அவரை புதுச்சேரி மாநில பாஜக தலைவராக அறிவித்து கட்சியின் தேசியத் தலைவர் நட்டா கடந்த 25-ம் தேதி அறிவிப்பு வெளியிட்டார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/09/28/large/1130144.jpgசிவகாசி அருகே பட்டாசு கடையில் வெடி விபத்து - ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்

சிவகாசி: சிவகாசி புதுத்தெருவை சேர்ந்த வைரவன் என்பவரது மகன் ஜோதீஸ்வரன்(33). இவர் சிவகாசி அருகே பாறைப்பட்டியில் ஆர்டிஓ உரிமம் பெற்று விகேஆர் டிரேடர்ஸ் என்ற பெயரில் பட்டாசு விற்பனை கடை நடத்தி வருகிறார். இந்த கடை பின்புறம் உள்ள தகர செட்டில் மாலை 5:30 மணி அளவில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.

சிறிது நேரத்தில் தீயானது கடைக்கும் பரவி பட்டாசுகள் வெடிக்க தொடங்கியது. தகவலறிந்து வந்த சிவகாசி தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து பட்டாசு வெடித்து கொண்டே இருந்ததாலும், கடைக்குள் செல்ல முடியாததாலும் தீயை அணைக்கும் பணியில் சிரமம் ஏற்பட்டது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Wednesday, September 27, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/09/28/large/1130001.jpgஇலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 17 பேர் விடுதலை

ராமேசுவரம்: இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட 17 மீனவர்கள் நேற்று விடுவிக்கப்பட்டனர்.

கடந்த செப் 12-ம் தேதி ராமேசுவரத்தில் இருந்து சென்ற அந்தோணி என்பவரின் விசைப்படகை நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினர் கைப்பற்றி 8 மீனவர்களை கைது செய்தனர். மேலும் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 5 பேர், கோட்டைப்பட்டினம் மீனவர்கள் 4 பேர் என 17 மீனவர்களை கைது செய்து படகுகளை பறிமுதல் செய்தனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/09/28/large/1129558.jpgவருமான வரித்துறை அலுவலர்களை தாக்கிய வழக்கு - கரூர் திமுகவினர் 15 பேருக்கு ஜாமீன்

கரூர்: கரூரில் வருமான வரித்துறை அலுவலர்களை தாக்கிய வழக்கில் திமுகவினர் 15 பேருக்கு கரூர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

கரூர் செங்குந்தபுரத்தில் உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜியின் தம்பி அசோக்குமார் வீட்டில் கடந்த மே 26ம் தேதி சோதனைக்கு வந்த வருமான வரித்துறை அதிகாரிகளை திமுகவினர் தடுத்து, தாக்கி, அவர்களது கார் கண்ணாடியை உடைத்து, ஆவணங்களை பறித்தனர். இவ்வழக்கில் கரூர் மாநகராட்சி உறுப்பினர்கள் பூபதி, லாரன்ஸ் உள்ளிட்ட திமுகவினர் 15 பேர் கைது செய்யப்பட்டனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/09/27/large/1129550.jpgகோவை கார் வெடிப்பு வழக்கில் கைதான இருவரிடம் என்ஐஏ விசாரணை

கோவை: கோவை கார் வெடிப்பு வழக்கில் சமீபத்தில் கைது செய்யப்பட்ட இருவரை, காவலில் எடுத்த என்.ஐ.ஏ அதிகாரிகள் கோவைக்கு இன்று (செப்.27) அழைத்து வந்து விசாரித்தனர்.

கோவை உக்கடத்தை அடுத்த கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோயில் அருகே, கடந்தாண்டு அக்டோபர் மாதம் 23-ம் தேதி கார் வெடிப்புச் சம்பவம் நடந்தது. இதில் காரை ஓட்டி வந்த ஜமேஷா முபின் உயிரிழந்தார். போலீஸாரின் விசாரணையில் ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் ஆதரவாளரான முபின், மக்கள் கூடும் இடத்தில் தாக்குதல் நடத்த திட்டமிட்டது தெரியவந்தது. பின்னர், இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ) மாற்றம் செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக முகமது தல்கா(25), முகமது அசாருதீன்(23), முகமது ரியாஸ்(27), பெரோஸ் இஸ்மாயில்(27), நவாஸ் இஸ்மாயில்(26), அப்சர்கான், முகமது தவுபீக்(25), உமர் பாரூக்(28), பெரோஸ்கான்(28), ஷேக் இதாயத்துல்லா, சனோபர் அலி ஆகிய 11 பேர் முதலில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது குற்றப்பத்திரிக்கை, துணைக் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Tuesday, September 26, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/09/27/large/1129444.jpgஇபிஎஸ் உதவியாளர் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிய அமலாக்கத் துறைக்கு உத்தரவு

சென்னை: தருமபுரியைச் சேர்ந்த டி.சி.இளங்கோவன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருந்தாவது: விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் கிராமத்தில் உள்ள நிலத்தை நவீன் பாலாஜி, மாணிக்கவேல் ஆகியோரிடமிருந்து வாங்கி வானூர் சார்- பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்ய விண்ணப்பித்தோம்.

ஆனால், புதுச்சேரியை சேர்ந்த டி.ராமராஜ், கடலூரைச் சேர்ந்த சி.கே.எஸ்.கார்த்திகேயன், சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த வேலு, தடபெரும்பாக்கம் பொன்.ராஜா, நாமக்கல் எம்.சேகர் உள்ளிட்ட பலர் இந்த நிலத்துக்கு கடன் கொடுத்துள்ளதாகவும், எனவே இந்த நிலத்தை பதிவு செய்து கொடுக்க முடியாது என்றும் பத்திரப்பதிவு அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தனர். பின்னர் எனது பெயருக்கு பத்திரப்பதிவு செய்து கொடுக்க ரூ. பல லட்சத்தை லஞ்சமாக தர வேண்டுமெனக் கோருகின்றனர். எனவே எனது பெயருக்கு பத்திரப்பதிவு செய்து கொடுக்க வானூர் சார்-பதிவாளருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் கோரியிருந்தார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/09/27/large/1129439.jpgசென்னையில் அக்.14-ம் தேதி மகளிர் உரிமை மாநாடு: சோனியா காந்தி, பிரியங்கா பங்கேற்பு என கனிமொழி எம்.பி. தகவல்

சென்னை: கருணாநிதி நூற்றாண்டை முன்னிட்டு, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக மகளிர் அணி சார்பில் சென்னையில் அக்.14-ம் தேதி மகளிர் உரிமை மாநாடு நடக்க உள்ளது. இதில், சோனியா காந்தி, பிரியங்கா உள்ளிட்ட இண்டியா கூட்டணியின் முக்கிய தலைவர்கள் பங்கேற்பதாக கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: முன்னாள் முதல்வர் கருணாநிதி அனைத்து துறைகளிலும் பெண்கள் முன்னேற்றத்துக்காகவும், பெண் உரிமைக்காகவும் பல சிறப்பான திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். அரசு வேலைவாய்ப்பு, உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு இடஒதுக்கீடு, பெண்களுக்கு சொத்துரிமை தொடர்பான சட்டங்கள், அவரது ஆட்சியில்தான் கொண்டு வரப்பட்டன.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/09/27/large/1128933.jpgநெல்லை, குமரி மாவட்டத்திலிருந்து கேரளாவுக்கு தினமும் 750 லாரிகளில் கனிமம் எடுத்து செல்லலாம் - உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை: தினமும் 750 வாகனங்களில் கனிமம் எடுத்துச் செல்ல அனுமதி வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குமரி மாவட்டம் இளஞ்சிறையைச் சேர்ந்த பினோய், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழ்நாடு மற்றும் கேரளாவில் நடக்கும் அரசு மற்றும் தனியார் பணிகளுக்கு கிராவல், ஜல்லிகற்கள், எம்.சாண்ட் குவாரி தூசி மற்றும் மணல் சப்ளை செய்யும் ஒப்பந்தம் பெற்றுள்ளோம். கேரளாவில் கனிமங்கள் எடுக்க அனுமதி இல்லை. இதனால் ஜிஎஸ்டி நடைசீட்டு உள்ளிட்ட உரிய அனுமதியுடன் நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து கேரளாவிற்கு கனிமங்கள் கொண்டு செல்கிறோம்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/09/27/large/1128931.jpgஅதிமுகவும் பாஜகவும் குழப்பத்தில் உள்ளன: தருமபுரி கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி பேச்சு

தருமபுரி: அதிமுக-வும், பாஜக-வும் குழப்பத்தில் இருப்பதாக தருமபுரியில் நடந்த திமுக இளைஞரணி செயல்வீரர் கூட்டத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

தருமபுரி மேற்கு மற்றும் கிழக்கு மாவட்டங்களின் திமுக இளைஞரணி சார்பில் நேற்று (செப்-26) தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பழனியப்பன் வரவேற்றார். கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி முன்னிலை வகித்தார். வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வாழ்த்துரை வழங்கினார். தொடர்ந்து, திமுக இளைஞரணி மாநிலச் செயலாளரும், இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாடு மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நிகழ்ச்சியின் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/09/26/large/1128928.jpg‘கிங் மேக்கர் இபிஎஸ்’, ‘புலிகேசி ஆதரவு எதற்கு?’ - மதுரையில் அதிமுக - பாஜகவினர் போஸ்டர் யுத்தம்!

மதுரை: மதுரையில் ‘கிங் மேக்கர் இபிஎஸ்’ என்று அதிமுகவினரும், ‘புலிகேசி ஆதரவு எதற்கு?’ என்று பாஜகவினரும் என நகர் முழுவதும் விதவிதமான வாசகங்கள் கொண்ட போஸ்டர்கள் ஒட்டி மோதி கொள்கின்றனர்.

மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் திமுக, அதிமுக-பாஜக கூட்டணியில் எந்த கட்சி எந்த பக்கம் தாவும் என்ற பரபரப்பு ஏற்படுவதற்கு முன்பே, பாஜகவுடன் ஏற்பட்ட கருத்து மோதலால் கூட்டணிக்கு தலைமை வகித்த அதிமுக வெளியேறியது. அதிமுக பொதுச்செயலாளர் கே.பழனிசாமி, முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, அண்ணா போன்றோரை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்தார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Monday, September 25, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/09/26/large/1128680.jpgபள்ளிக்கல்வி செயலருடனான பேச்சுவார்த்தை தோல்வி: செப்.28-ம் தேதி முதல் உண்ணாவிரத போராட்டம்

சென்னை: பள்ளிக்கல்வித் துறை செயலருடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் வரும் 28-ம் தேதிமுதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கம் அறிவித்துள்ளது.

சம வேலைக்கு சம ஊதியம் என்ற அடிப்படையில், இடைநிலை ஆசிரியர்கள் அடிப்படை ஊதிய நிர்ணயம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/09/26/large/1128827.jpgமாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்: பாஜக கூட்டணியில் இருந்து விலகியது அதிமுக

சென்னை: பாஜக கூட்டணி மற்றும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது. இதையடுத்து, அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து கடந்த 2019 மக்களவை தேர்தலை அதிமுக சந்தித்தது. 2021 சட்டப்பேரவை தேர்தலிலும் இந்த கூட்டணி தொடர்ந்தது. வரும் 2024 மக்களவை தேர்தலிலும் இந்த கூட்டணி நீடிக்கும் என்றே இருதரப்பு தலைவர்களும் கூறிவந்தனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/09/26/large/1128327.jpg“அதிமுக - பாஜக கூட்டணி முறிவு நீண்ட நாள் நீடிக்காது” - ஜவாஹிருல்லா கருத்து

சென்னை: அதிமுக மற்றும் பாஜக இடையிலான கூட்டணி முறிவு நீண்ட நாள் நீடிக்காது என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். திங்கட்கிழமை அன்று தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் 2019 மக்களவைத் தேர்தல் மற்றும் 2021 சட்டப்பேரவைத் தேர்தல் ஆகியவற்றை அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்து சந்தித்தது. 2024 மக்களவைத் தேர்தலிலும் கூட்டணி தொடரும் என்று இரு கட்சிகளும் அறிவித்திருந்தன. மக்களவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், நாடு முழுவதும் அனைத்துக் கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. இந்த சூழலில் 2 கோடி தொண்டர்களின் எண்ணத்துக்கும், விருப்பத்துக்கும் மதிப்பளித்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி கொள்வதாக அதிமுக அறிவித்தது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Sunday, September 24, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/09/25/large/1128246.jpgதமிழகத்தில் சில இடங்களில் இடி, மின்னலுடன் இன்று மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் சில இடங்களில் இன்று (செப். 25) இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதையொட்டிய லட்சத்தீவு பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் வேகமாறுபாடு ஏற்பட்டுள்ளது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/09/25/large/1127801.jpgதினசரி பயன்படுத்தும் சோப்பு, ஷாம்பு விலை மூன்று ஆண்டுகளில் 50% வரை ஏற்றம்: மளிகை கடை உரிமையாளர்கள் தகவல்

சேலம்: பொதுமக்கள் தினசரி பயன்படுத்தும் சோப்பு, ஷாம்பு, டூத் பேஸ்ட் உள்ளிட்டவைகளின் விலை கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இருந்த விலையை விட தற்போது 40 முதல் 50 சதவீதம் வரை விலை ஏற்றம் கண்டுள்ளது. இந்த விலை ஏற்றத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சேலம் செவ்வாய்ப்பேட்டை மளிகை மற்றும் ஷாப் வர்த்தக நலச்சங்க பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சேலம் செவ்வாய்ப்பேட்டை மளிகை மற்றும் ஷாப் வர்த்தக நலச்சங்க பொதுக்குழு கூட்டம் நேற்று தலைவர் நடராஜன் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: பல ஆண்டாக அன்றாடம் உபயோகிக்கும் உணவுப் பொருட்களின் விலை ஒரே சீராக இருந்தது. கடந்த இரண்டு மாதத்தில் பருப்புகளின் விலை உயர்ந்துள்ளது. இந்த விலை ஏற்றத்துக்கு மத்திய, மாநில அரசுகள் பொறுப்பல்ல.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Saturday, September 23, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/09/24/large/1127711.jpgதிமுக ஆட்சியில் 40 அணைகள் கட்டப்பட்டுள்ளன: அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு அமைச்சர் துரைமுருகன் மறுப்பு

சென்னை: திமுக ஆட்சியில் 40 அணைகள் கட்டப்பட்டுள்ளன என்று திமுக பொதுச்செயலாளரும், தமிழக நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, திமுக ஆட்சியின் மீது ஒரு குற்றச்சாட்டு வைத்திருப்பதை இன்று (23.9.2023) வெளிவந்த ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் ஒரு செய்தியாக வெளியிட்டிருக்கிறது. ‘‘தமிழகத்தை 9 ஆண்டுகள் ஆட்சி செய்த காமராஜர் விவசாயத்தை பாதுகாக்க 12 அணைகளைக் கட்டினார். ஆனால், 6-வது முறையாக ஆட்சி செய்யும் திமுக 5 அணைகளை மட்டுமே கட்டியுள்ளது’’ என்று ஒரு தவறான குற்றச்சாட்டை அண்ணாமலை கூறியிருக்கிறார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://ift.tt/SK2vDyW ரயில் சேவைகளை காணொலி மூலம் இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி: நெல்லை-சென்னை வந்தே பாரத் ரயில் கட்டணம் அறிவிப்பு

திருநெல்வேலி/சென்னை: திருநெல்வேலி - சென்னை இடையிலான வந்தே பாரத் ரயில் உட்பட 11 மாநிலங்களில் 9 வந்தே பாரத் ரயில் சேவைகளை காணொலி மூலம் இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி. இதற்கிடையே, திருநெல்வேலி - சென்னை ரயிலுக்கான கட்டணம் அறிவிக்கப்பட்ட நிலையில், டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே தீபாவளிக்கு முந்தைய 3 நாட்களின் முன்பதிவு முடிந்தது.

பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்தபடி காணொலி மூலம் இன்று உதய்பூர்-ஜெய்ப்பூர், திருநெல்வேலி-சென்னை (மதுரை வழி), ஹைதராபாத்-பெங்களூரு, விஜயவாடா-சென்னை (ரேணிகுண்டா வழி), பாட்னா-ஹவுரா, காசர்கோடு - திருவனந்தபுரம், ரூர்கேலா-புரி (புவனேஸ்வர் வழி), ராஞ்சி-ஹவுரா மற்றும் ஜாம்நகர்-அகமதாபாத் ஆகிய 9 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/09/24/large/1127745.jpgஉறுப்பு தானம் செய்வோருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: உறுப்பு தானம் செய்வோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: உடல் உறுப்பு தானம் மூலம் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு வாழ்வளிக்கும் அரும்பணியில் நாட்டின் முன்னணி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/09/23/large/1127319.jpgநிதி இருக்கும் என்ற நம்பிக்கை இருந்தால் தான் திட்டத்தை கொண்டு வருவோம் - புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பேச்சு

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம் கதிர்காமம் தொகுதிக்குட்பட்ட வருமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ1000 நிதியுதவி வழங்கும் திட்டம் தொடக்க விழா இன்று வழுதாவூர் சாலையில் உள்ள தனியார் திருமண நிலையத்தில் நடைபெற்றது.

முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு அடையாள அட்டையை வழங்கினார். விழாவில் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார், தொகுதி எம்எல்ஏ ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Friday, September 22, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/09/23/large/1127220.jpgசட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரம் - பேரவைத் தலைவர் அப்பாவுவிடம் அதிமுக எம்எல்ஏக்கள் மீண்டும் மனு

சென்னை: சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவருக்கு இருக்கை ஒதுக்குவது தொடர்பாக, பேரவைத் தலைவர் மு.அப்பாவுவிடம், அதிமுக எம்எல்ஏக்கள் நேற்று மீண்டும் மனு அளித்துள்ளனர்.

சட்டப்பேரவை, அக். 9-ம் தேதி மீண்டும் கூட உள்ளது. இந்நிலையில், முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் கே.ராஜூ, கடம்பூர் ராஜூ, ஓ.எஸ்.மணியன், பேரவை முன்னாள் துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்கள் நேற்று பேரவைத் தலைவர் அப்பாவுவை சந்தித்து, எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை தொடர்பாக மீண்டும் ஒரு மனு அளித்தனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/09/23/large/1127221.jpgதமிழகம் முழுவதும் 100 முகாம்கள் மூலம் 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க இலக்கு: அமைச்சர் சி.வி.கணேசன் உறுதி

சென்னை: கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் 100 வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி, ஆண்டு இறுதிக்குள் 2 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற இலக்கை அடைய சிறப்பு நடவடிக்கைகள் எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் சி.வி.கணேசன் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் நேற்று நடைபெற்றது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/09/23/large/1127256.jpgசென்னை - நெல்லை இடையே ‘வந்தே பாரத்’ ரயில் சேவை - பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்

சென்னை: சென்னை - நெல்லை இடையே தென் தமிழகத்தின் முதல் ‘வந்தே பாரத்’ ரயில் சேவையை பிரதமர் மோடி காணொலி வாயிலாக நாளை தொடங்கி வைக்கிறார். ரயிலை 110 கி.மீ. வேகத்தில் இயக்கி நேற்று சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

இந்திய ரயில்வே, வந்தே பாரத் என்ற பெயரில் நவீன வசதிகளுடன் கூடிய அதிவிரைவு சொகுசு ரயிலை அறிமுகப்படுத்தி இயக்கி வருகிறது. இதில் ஜிபிஎஸ் டிராக்கர், கேமரா, ஒவ்வொரு இருக்கைக்கும் செல்போன் சார்ஜர், தானியங்கி கதவுகள், குளிர்சாதன வசதி என பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/09/23/large/1126849.jpgநெல்லை - சென்னை ‘வந்தே பாரத்’ ரயில்: கோவில்பட்டியில் நிற்க வைகோ வலியுறுத்தல்

கோவில்பட்டி: நெல்லை - சென்னைக்கு இயக்கப்படும் ‘வந்தே பாரத்’ ரயில் கோவில்பட்டியில் நின்று செல்ல வேண்டும் என மதிமுக பொதுச்செயலர் வைகோ மத்திய ரயில்வே மந்திரியிடம் கடிதம் கொடுத்து வலியுறுத்தியுள்ளார்.

நெல்லை-சென்னை இடையே ‘வந்தே பாரத்’ என்ற துரித ரயில் நாளை (செப்.,24) முதல் இயக்கப்படுகிறது. இந்த ரயிலானது விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி ஆகிய இடங்களில் நின்று சென்னையை சென்றடைகிறது. இந்த ரயில் கோவில்பட்டியில் நின்று செல்ல ஆவணம் செய்யுமாறு மதிமுக பொதுச்செயலர் வைகோ எம்பி மத்திய ரயில்வே மந்திரியை நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/09/23/large/1126848.jpgதேவேந்திர குல வேளாளர் பெயர் மாற்றம்: ஐஏஎஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய மனு தள்ளுபடி

மதுரை: ஐஏஎஸ் அதிகாரி ஹன்ஸ்ராஜ் வர்மா மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை நிறுவனத் தலைவர் கார்வேந்தன் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் பட்டியலினத்தில் உள்ள பள்ளர் , பண்ணாடி, வாதிரியான், காலடி, குடும்பன், கடையன் மற்றும் தேவேந்திரகுலத்தான் ஆகிய ஜாதியினரை தேவேந்திர குல வேளாளர் என்ற ஒரே பெயரில் அழைப்பது தொடர்பாக ஆய்வு செய்ய ஐஏஎஸ் அதிகாரி ஹன்ஸ்ராஜ் வர்மா தலைமையில் 2019-ல் தமிழக அரசு குழு அமைத்தது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Thursday, September 21, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/09/22/large/1126774.jpgவாடகை கார் ஓட்டுநர் வங்கி கணக்கில் ரூ.9,000 கோடி: தனியார் வங்கி அனுப்பியதால் அதிர்ச்சி

சென்னை: தனியார் வங்கியிலிருந்து வாடகை கார் ஓட்டுநர் வங்கிக் கணக்குக்கு ரூ.9 ஆயிரம் கோடி அனுப்பப்பட்ட நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகேயுள்ள நெய்க்காரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (28). வாடகை கார் ஓட்டுநரான இவர், தனது நண்பர்களுடன் சென்னை கோடம்பாக்கத்தில் தனியாக அறை எடுத்து தங்கி, பணிபுரிந்து வருகிறார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/09/22/large/1126769.jpgகலைஞர் மகளிர் உரிமை திட்டம் - மேல்முறையீடு செய்ய மண்டல அளவில் முகாம்கள்

சென்னை: குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கடந்த 15-ம்தேதி தொடங்கிவைத்தார். இத்திட்டத்தில் 1.06 கோடி பயனாளிகளின் வங்கிக் கணக்கில் ரூ.1,000 உரிமை தொகை சேர்க்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தேர்வு செய்யப்படாத 56.50 லட்சம் பெண்களுக்கு,விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களுடன் கடந்த18-ம் தேதி முதல் குறுஞ்செய்திஅனுப்பப்பட்டு வருகிறது. குறிப்பாக, குடும்ப உறுப்பினர் வருமான வரி செலுத்துவதால் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும், விண்ணப்பம் கள ஆய்வில் இருப்பதாகவும் பலருக்கு குறுஞ்செய்திகள் வந்துள்ளன.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/09/22/large/1126763.jpgஅனல் மின் நிலைய மின்சாதனப் பொருட்களில் முறைகேடு: 2-வது நாளாக வருமான வரி சோதனை

சென்னை: எண்ணூர், வடசென்னை, தூத்துக்குடி, மேட்டூர் உள்ளிட்ட அனல் மின் நிலையங்களில், மின்சாதனப் பொருட்கள் வாங்கியதில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக வருமான வரித் துறை அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன.

இதையடுத்து, அனல் மின் நிலையங்களுக்கு பெரிய கன்வேயர் பெல்ட்கள், கேபிள்கள் மற்றும் மின்சாதனப் பொருட்களை விநியோகிக்கும் 4 தனியார் நிறுவனங்களை கண்காணித்த வருமான வரித் துறை அதிகாரிகள், போலி ரசீது மூலம் அந்த நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்திருப்பதைக் கண்டறிந்தனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/09/22/large/1126762.jpgஇயற்கை இடர்பாடுகளால் 7 லட்சம் ஏக்கரில் மகசூல் இழப்பு - சம்பா பயிர் பாதிப்புக்கு ரூ.560 கோடி இழப்பீடு

சென்னை: அரசின் பயிர் காப்பீட்டு திட்டத்தின்கீழ் 2022-23-ம் ஆண்டு சம்பா பருவ நெற்பயிரில் இயற்கை இடர்பாடுகளால் ஏற்பட்ட மகசூல் இழப்புக்கு, தகுதி வாய்ந்த 6 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.560 கோடி இழப்பீட்டு தொகை வழங்கப்படும். இத்தொகை அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பயிர் இழப்பில் இருந்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்காக, தமிழகத்தில் பயிர் காப்பீட்டு திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/09/21/large/1126398.jpg“நீட் தேர்வை ரத்து செய்ய மக்கள் இயக்கம்” - அமைச்சர் உதயநிதி உறுதி

மதுரை: திமுக இளைஞரணி மாநில மாநாட்டிற்குப் பின் நீட் தேர்வுக்கு எதிராக மக்கள் இயக்கமாக செயல்படுவோம் என அமைச்சர் உதயநிதி பேசினார்.

மதுரை தெற்கு மாவட்ட திமுகவினருக்கு பொற்கிழி வழங்குதல், முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையாவின் முதலாண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி அவரது சொந்த ஊரான முத்தப்பன்பட்டியில் நடந்தது. மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் எம்.மணிமாறன் தலைமை வகித்தார். அமைச்சர்கள் உதயநிதி, ரகுபதி, பெரியகருப்பன், பி.மூர்த்தி உள்ளிட்ட பலரும் முத்தையாவின் மணிமண்டபத்தில் அஞ்சலி செலுத்தினர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/09/21/large/1126397.jpgகொடைக்கானல் வனத்துறை சுற்றுலா இடங்களுக்கு செல்ல நாளை முதல் அனுமதி: பேரிஜம் ஏரி செல்ல தடை நீட்டிப்பு

கொடைக்கானல்: கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா இடங்களுக்கு செல்ல நாளை (செப்.22) முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி எனவும், பேரிஜம் ஏரி செல்ல தடை நீட்டிப்பு எனவும் வனத்துறை அறிவித்துள்ளது.

கொடைக்கானலில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் பேரிஜம் ஏரி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் உள்ளது. இதனால் வனத்துறையினரிடம் அனுமதி பெற்றே சுற்றுலா பயணிகள் ஏரிக்கு செல்ல முடியும். கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பேரிஜம் ஏரிப் பகுதிகளில் யானைகள் சுற்றித் திரிந்தன. அதனால் பாதுகாப்பு கருதி சுற்றுலாப் பயணிகள் அங்கு செல்வதற்கு வனத்துறை தடை விதித்தது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Wednesday, September 20, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/09/21/large/1126259.jpgபாஜக குறித்து பொதுவெளியில் கருத்து தெரிவிக்க கூடாது: அதிமுக நிர்வாகிகளுக்கு கட்சி தலைமை அறிவுறுத்தல்

சென்னை: மக்களவை தேர்தல் கூட்டணி மற்றும் பாஜக குறித்து பொதுவெளியில் அதிமுக நிர்வாகிகள் யாரும் கருத்து தெரிவிக்க வேண்டாம் என்று கட்சித் தலைமை அறிவுறுத்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சில தினங்களுக்கு முன்பு, அறிஞர் அண்ணா குறித்து கருத்து தெரிவித்திருந்தார். அதற்குஅதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்திருந்தார். சில தினங்களுக்கு முன் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தபோது, “முன்னாள்முதல்வர் ஜெயலலிதாவை விமர்சனம் செய்த அண்ணாமலைக்கு எதிராக அதிமுகவினர் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தனர். அதன்பிறகு அண்ணா குறித்து பேசுகிறார். கடுமையான கண்டனத்தை தெரிவித்த நிலையில் அதற்கும் திருந்தாமல், திரும்பவும் பெரியார் குறித்தும், மற்ற விஷயங்கள் குறித்தும் கூட்டணியில் இருந்துகொண்டு கூட்டணி தர்மத்தை மீறி பேசுகின்ற செயலை கட்சித் தொண்டர்கள் எந்த நிலையிலும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதிமுக கூட்டணியில் தற்போது பாஜக இல்லை. கூட்டணி குறித்து தேர்தல் வரும்போதுதான் முடிவு செய்ய முடியும். இதுதான் கட்சியின் முடிவு என்று தெரிவித்திருந்தார். இதனால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/09/21/large/1126301.jpgபுத்தொழில், புத்தாக்க கொள்கையை வெளியிட்டார் முதல்வர்: 8 நிறுவனங்களுக்கு ரூ.10.85 கோடி பங்கு நிதி ஆணை

சென்னை: தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க கொள்கையை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், பட்டியலினத்தவர், பழங்குடியினர் புத்தொழில் நிதித்திட்டத்தின் கீழ், 8 நிறுவனங்களுக்கு ரூ.10.85 கோடி பங்கு நிதிக்கான ஒப்புதல் ஆணைகளையும் வழங்கினார்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: ‘தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க கொள்கை – 2023’ உருவாக்கப்பட்டுள்ளது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/09/20/large/1125816.jpgசிவகிரி பெரியபிராட்டி அம்மன் கோயிலை அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் எடுக்க உத்தரவு

மதுரை: சிவகிரி பெரியபிராட்டி அம்மன் கோயிலை அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் சிவகிரி இந்து தேவேந்திர குல வேளாளர் சமுதாய தலைவர் சின்னசாமி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், "சிவகிரி பேரூராட்சியில் பெரியார் கடை பஜார் பகுதியில் உள்ள புறம்போக்கு நிலத்தில் பெரியபிராட்டி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோயிலில் சாதி வேறுபாடின்றி அனைத்து மக்களும் வழிபாடு நடத்தி வருகின்றனர். கோயிலின் அருகே உள்ள காலியிடத்தில் தான் திருவிழா நடைபெறும். அந்த இடத்தில் பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்துவார்கள். அந்த காலியிடத்தை சிலர் கட்டிடம் கட்டி வருகின்றனர். இதற்கு தடை விதிக்க வேண்டும்" இவ்வாறு கூறப்பட்டிருந்தது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/09/20/large/1125814.jpgமேட்டூர் அனல்மின் நிலையத்தில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை

மேட்டூர்: மேட்டூர் அனல்மின் நிலையத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு சொந்தமான மேட்டூர் அனல் மின் நிலையத்தில் 2 பிரிவுகள் உள்ளன. முதல் பிரிவில் தலா 210 மெகாவாட் திறன் கொண்ட அலகுகள் 4 உள்ளன. இவற்றின் மூலம் 840 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. 2-வது பிரிவில் 600 மெகாவாட் திறன் கொண்ட ஒரு அலகு மூலம் 600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Tuesday, September 19, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/09/20/large/1125580.jpgஎடைக்கற்களில் விதிமீறல் காணப்பட்டால் சட்ட நடவடிக்கை: தொழிலாளர் நல ஆணையர் அறிவிப்பு

சென்னை: சட்டமுறை எடையளவு விதிகளின்கீழ் ஆய்வு செய்யும் போது எடைக்கற்களில் விதிமீறல்கள் காணப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழிலாளர் நல ஆணையர் அதுல் ஆனந்த் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சந்தைகள், சாலையோரம், நடைபாதைகளில் உள்ள காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்யும் கடைகள், மீன் மார்க்கெட்கள், இறைச்சிக் கடைகள் ஆகியவற்றில் எடை குறைவாக விநியோகம் செய்தல், முத்திரை மற்றும் மறுமுத்திரையிடாமல் எடையளவுகளை வைத்திருத்தல், தரப்படுத்தப்படாத எடையளவுகளை பயன்படுத்துதல் போன்ற புகார்கள் வந்தன.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/09/20/large/1125720.jpgதமிழகத்தில் 6 நாட்கள் மிதமான மழை பெய்யும்

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ளது.

மேலும், மேற்கு திசை காற்றில் வேகமாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் செப்.20(இன்று) முதல் 23-ம் தேதி வரை இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செப்.24, 25 தேதிகளில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/09/19/large/1125310.jpg"இடஒதுக்கீடு வழங்கும் அதிகாரம் மாநிலங்களிடம் இருக்க வேண்டும்" - முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: அகில இந்திய சமூக நீதி கூட்டமைப்பின் இரண்டாவது தேசிய மாநாடு காணொலி வாயிலாக நடந்தது. இதில், தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது, "சமூகநீதி பேசும் இடத்தில் நிச்சயமாக நான் இருப்பேன் என்ற அடிப்படையில் நான் பங்கெடுத்து உரையாற்றுகிறேன். சமூக நீதி, மதசார்பற்ற அரசியல், சமதர்மம், சமத்துவம், மாநில சுயாட்சி, கூட்டாட்சிக் கருத்தியல் இவை உயிர்வாழும் இந்தியாவே, இணையற்ற இந்தியா என்பதால், இத்தகைய கருத்தியல்களை முன்னெடுக்க திராவிட முன்னேற்றக் கழகம் அகில இந்திய அளவில் சில கூட்டமைப்புகளை உருவாக்கி வருகிறது. அதில் மிகமிக முக்கியமானது இந்த சமூகநீதி கூட்டமைப்பு!

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/09/19/large/1125269.jpgகொடநாடு விவகாரத்தில் கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு எதிராக வழக்கு: பழனிசாமிக்கு ஐகோர்ட் அனுமதி

சென்னை: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேச, கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு தடை விதிக்க கோரி வழக்கு தொடர முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, சாலை விபத்தில் உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபால், சமீப காலமாக, அந்த வழக்கு தொடர்பாக பேட்டியளித்து, அதன் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/09/19/large/1125261.jpgகொடைக்கானலில் 10-க்கும் மேற்பட்ட கடைகளை சேதப்படுத்திய யானைகள்: மோயர் சதுக்கம் செல்ல தடை

கொடைக்கானல்: கொடைக்கானல் அருகே மோயர் சதுக்கம் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட கடைகளை காட்டு யானைகள் சேதப்படுத்தியுள்ளது. பாதுகாப்பு கருதி அப்பகுதிக்கு செல்ல சுற்றுலா பயணிகள், வியாபாரிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் பேரிஜம் ஏரி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் உள்ளது. இதனால் வனத்துறையினரிடம் அனுமதி பெற்ற பிறகே சுற்றுலா பயணிகள் ஏரிக்கு செல்ல முடியும். பேரிஜம் ஏரிக்குச் செல்லும் வழியில் தொப்பி தூக்கிப் பாறை, மதிகெட்டான் சோலை, வியூ பாய்ண்ட், அமைதி பள்ளத்தாக்கு உள்ளிட்ட இடங்களை பார்வையிட சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருவர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Monday, September 18, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/09/19/large/1125255.jpgநிறைவேற்றப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் குறித்து திமுக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட முடியுமா?- இபிஎஸ் கேள்வி

சென்னை: தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட 520-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளில், எந்தெந்த தேதிகளில், எந்தெந்த அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டன என்ற விபரத்தை திமுக அரசு வெள்ளை அறிக்கை வெளியிடுவாரா? என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "மக்களை எளிதில் மறக்கடித்துவிடலாம்' – என்ற நம்பிக்கையுடன் திமுக, 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் இருந்தே, நிறைவேற்ற முடியாத பல்வேறு பொய்யான வாக்குறுதிகளை அளித்து தமிழக மக்களின் வாக்குகளைப் பெற்று, 2019 நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் வெற்றியைப் பெற்றது. அத்தேர்தலின் போது, பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசிய திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் 38 தொகுதிகளில் வெற்றி பெற்று தமிழகத்திற்கு சாதித்தது என்ன?

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/09/19/large/1125253.jpgயூடியூபர் டிடிஎஃப் வாசன் கைது: காஞ்சிபுரம் போலீஸார் நடவடிக்கை

காஞ்சிபுரம்: பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசனை காஞ்சிபுரம் போலீஸார் கைது செய்தனர். ஜாமீனில் வெளிவர முடியாத அளவுக்கு வாசன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

டிடிஎஃப் வாசன் காஞ்சிபுரம் அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பாலுசெட்டி சாத்திரம் அருகே பைக்கில் சென்றபோது சாகசம் செய்ய முயன்றபோது நிலை தடுமாறி கீழே விழுந்தார். பைக் சாகசத்தில் ஈடுபட முயன்ற அவரது கை எலும்பு முறிந்துள்ளது. அது தவிர உடலில் பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பான ஒரு வீடியோவும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மருத்துவமனையில் அளிக்கப்பட்டு பின்னர், அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக மாற்றி உள்ளதாக கூறப்படுகிறது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/09/19/large/1125250.jpgநடிகர் விஜய் ஆண்டனியின் மகள் மரணம் - தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்பு

சென்னை: நடிகர் மற்றும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

நடிகர் விஜய் ஆண்டனி குடும்பத்துடன் சென்னை ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் வசித்து வருகிறார். விஜய் ஆண்டனியின் 16 வயது மகள் மீரா, சர்ச் பார்க் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த நிலையில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவர், சற்று மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. நேற்று சம்பவ நேரத்தில் உறங்கச் சென்றவர் விடியற்காலை 3 மணி அளவில் அவரது தந்தை படுக்கை அறையில் பார்க்கையில் துப்பட்டாவால் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதை வீட்டின் பணியாளர் பார்த்து அலறியுள்ளார். இதன்பின் காவேரி மருத்துவமனைக்கு அவர் கொண்டு சொல்லப்பட்டாலும் சிறுமி லாரா ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...