Saturday, April 30, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/05/01/large/794267.jpgமொழி கொள்கையில் உறுதி வேண்டும்: மாணவர்களுக்கு உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி அறிவுரை

திமுக மாணவரணி சார்பில், கல்வி, சமூக நீதி, கூட்டாட்சித் தத்துவம் தொடர்பான தேசிய மாநாடு சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று தொடங்கியது. மாணவரணிச் செயலர் சி.வி.எம்.பி.எழிலரசன் வரவேற்றார். திக தலைவர் கி.வீரமணி மாநாட்டைத் தொடங்கிவைத்தார்.

இதில், அமைச்சர் க.பொன்முடி பேசியதாவது: இந்தியாவில் பல்வேறு மொழிகள், இனங்கள், மதங்கள், கலாச்சாரங்கள் உள்ளன.இவற்றைக் கருத்தில் கொள்ளாது, ஒற்றை ஆட்சி நோக்கத்தில் பாஜக செயல்பட்டு வருகிறது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/05/01/large/794269.jpgவிசாரணையின்போது விக்னேஷ் உயிரிழந்த விவகாரத்தில் போலீஸார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தல்

சென்னை பட்டினப்பாக்கத்தை சேர்ந்த விக்னேஷ் (22) விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், மர்மமான முறையில் உயிரிழந்தார்.

இந்நிலையில், காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டு இயக்கம் சார்பில் மக்கள் கண்காணிப்பக இயக்குநர் ஹென்றி திபேன், மனித உரிமைகள் ஆர்வலர்கள் சுதாராமலிங்கம், பி.எஸ்.அஜிதா, ஜிம்ராஜ் மில்டன் ஆகியோர் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/05/01/large/794325.jpgஇன்று மே தின கொண்டாட்டம்: ஆளுநர், முதல்வர், அரசியல் தலைவர்கள் வாழ்த்து

சென்னை: மே தினம் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி: இந்தியா அடுத்த 25 ஆண்டுகளில் விரைவான சமூகப் பொருளாதார வளர்ச்சியை அடைவதை உறுதிசெய்வதற்காக, புதிய சாத்தியமான யோசனைகள், புதுமையானதொழில்நுட்பங்கள், தொலைநோக்குப் பார்வையுடன் அர்ப்பணிப்போடு கடின உழைப்பை நல்கஉறுதி ஏற்போம். இந்தியா தனதுவிடுதலையின் 100-வது ஆண்டைகொண்டாடும் 2047-ம் ஆண்டுக்குள், உலகத் தலைமையாக இந்திய தேசம் வெளிப்படட்டும்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/05/01/large/794323.jpgஇலங்கையில் இன்று தமிழர்களை சந்தித்து குறைகளை கேட்கிறார் பாஜக தலைவர் அண்ணாமலை

சென்னை: இலங்கை தமிழரின் அழைப்பை ஏற்று, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இலங்கை சென்றுள்ளார். அங்கு தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் இன்று நடைபெறும் மே தின விழாவில் பங்கேற்கிறார்.

அண்டை நாடான இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. அந்நாட்டுக்கு இந்தியா பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. இதுமட்டுமின்றி, இலங்கையில் உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக வீடு வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/05/01/large/794353.jpgமெகா தடுப்பூசி முகாம் மீண்டும் தொடக்கம் - 28-ம் கட்ட முகாமில் 12.25 லட்சம் பேருக்கு தடுப்பூசி

சென்னை: தமிழகத்தில் மெகா கரோனா தடுப்பூசி முகாம் நேற்று மீண்டும் தொடங்கியது. தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் நடைபெற்ற 28-வது முகாமில் 12.25 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தமிழகத்தில் அனைவருக்கும் விரைவாக தடுப்பூசி செலுத்தும் வகையில், வாரம்தோறும் சனிக்கிழமையில் 50 ஆயிரம் இடங்களில் மெகா முகாம்கள் நடத்தப்பட்டு வந்தன. இதுவரை 27 மெகா கரோனாதடுப்பூசி முகாம்கள் நடைபெற்றுள்ளன. 93 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு முதல் தவணை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Friday, April 29, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/04/30/large/793886.jpgமகா தமனி பாதிப்பால் இதயத்தில் ரத்தக் கசிவு: அரசு பன்னோக்கு மருத்துவமனையில் ஏழை விவசாயிக்கு சவாலான சிகிச்சை

சென்னை: மகா தமனி பாதிப்பால் இதயத்தில் ரத்தக் கசிவு ஏற்பட்டிருந்த ஏழை விவசாயிக்கு, மிகவும் சாவாலான சிகிச்சை அளித்து சென்னை அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை மருத்துவர்கள் உயிரைக் காப்பாற்றியுள்ளனர்.

வேலூரைச் சேர்ந்த ஏழை விவசாயி கஜேந்திரன் (73). கடும் நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்ட இவர், அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில், அவரது இதயத்தின் மகா தமனியின் கீழ்ப்பகுதியில் கிழிசல் ஏற்பட்டிருந்ததும், அதனால், இதயத்துக்குள்ளே ரத்தக் கசிவு ஏற்பட்டிருந்ததும் தெரியவந்தது. மேலும், தட்டணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/04/30/large/793991.jpgமுரசொலி இடம் தொடர்பான அவதூறு வழக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் நேரில் ஆஜராக விலக்கு: விசாரணைக்கு தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: முரசொலி அலுவலக இடம் தொடர்பான அவதூறு வழக்கு விசாரணைக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக விலக்கு அளித்தும், விசாரணைக்கு தடை விதித்தும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வேலூரில் நடத்த கூட்டம் ஒன்றில் அப்போது தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன், ‘முரசொலி’ அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் என்றும், அதற்கான மூலப்பத்திரத்தை காட்ட முடியுமா என்றும் பேசியிருந்தார். அவரது பேச்சு அவதூறு பரப்பும் வகையில் உள்ளதாகக் கூறி முரசொலி அறக்கட்டளை நிர்வாகியான ஆர்.எஸ்.பாரதி, சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/04/30/large/793992.jpgநடிகை சித்ரா தற்கொலைக்கு காரணமான கும்பலால் ஆபத்து: பாதுகாப்பு கேட்டு கணவர் ஹேம்நாத் மனு

சென்னை: சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணத்தில், அரசியல் பின்னணி கொண்ட கும்பலுக்கு தொடர்பு உள்ளது. அந்த கும்பலால் ஆபத்து இருப்பதால், தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அவரது கணவர் ஹேம்நாத், காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார்.

பிரபல சின்னத்திரை நடிகையான சித்ரா கடந்த 2020 டிச.9-ம்தேதி சென்னை பூந்தமல்லி அடுத்தநசரத்பேட்டையில் உள்ள ஓட்டலில்தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து நசரத்பேட்டை போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினர். மகள் மரணத்தில் மர்மம் இருப்பதாக சித்ராவின் தந்தை, காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். சித்ரா தற்கொலைக்கு அவரது கணவர் ஹேம்நாத் தான் காரணம் என்று கூறப்பட்ட நிலையில், அவர் 2020 டிச.15-ம் தேதி கைது செய்யப்பட்டார். 2021 மார்ச் 2-ம் தேதி ஜாமீனில் வெளியே வந்தார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://ift.tt/nQNEJi8 முதல் 9-ம் வகுப்பு வரை இறுதி தேர்வு கட்டாயம்: பள்ளிக்கல்வி அதிகாரிகள் விளக்கம்

சென்னை: ஒன்று முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வு கட்டாயம் நடைபெறும். சமூக வலைதளங்களில் பரவும் தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என்று பள்ளிக்கல்வி துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கரோனா பரவலால் பள்ளிகள் திறப்பில் தாமதம் ஏற்பட்டதால், இந்த கல்வி ஆண்டில் (2021-22) ஒன்று முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 40 முதல்50 சதவீதம் வரை பாடத் திட்டம் குறைக்கப்பட்டது. மேலும், இதன்அடிப்படையிலேயே ஆண்டு இறுதிதேர்வு மே மாதம் நடத்தப்படும் என்றும் பள்ளிக்கல்வி துறை ஏற்கெனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதற்கான கால அட்டவணை வெளியிடப்பட்டு, தேர்வுக்கான முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றன.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/04/30/large/793982.jpgடிஎன்பிஎஸ்சி குருப்- 4 தேர்வு - 7,138 காலிப் பணியிடங்களுக்கு 22 லட்சம் பேர் விண்ணப்பம்

சென்னை: பல்வேறு பதவிகளில் 7,138 காலிப் பணியிடங்களுக்காக அறிவிக்கப்பட்டிருந்த டிஎன்பிஎஸ்சி குருப்-4 தேர்வுக்கு சுமார் 22 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் மற்றும் பில் கலெக்டர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பதவிகளில் 7,138 காலியிடங்களை நிரப்புவதற்காக குருப்-4 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) கடந்த மார்ச் 30-ம் தேதி வெளியிட்டது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/04/30/large/793983.jpgஇலங்கை மக்களுக்கு உதவ தமிழக அரசு ஏற்பாடு: மத்திய அரசு அனுமதி அளிக்கக் கோரி பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்

சென்னை: பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு ரூ.123 கோடிக்கு அரிசி, மருந்துகள், பால்பவுடர் அனுப்ப தயாராக உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இவற்றை உடனடியாக அனுப்பி வைக்க தேவையான அனுமதிகளை வழங்க மத்தியஅரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்த அரசினர் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

சட்டப்பேரவையில் நேற்று நேரமில்லா நேரத்தில், இலங்கை யில் நிலவும் பொருளாதார நெருக் கடியால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு உதவி செய்வது தொடர்பான அரசினர் தனித் தீர்மானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார். அப்போது அவர் பேசியதாவது:

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Thursday, April 28, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/04/29/large/793441.jpgதனி பட்டுப்புழு வளர்ப்பு மனை அமைக்க 500 பட்டு ரூ.6 கோடி விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை: அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவிப்பு

சென்னை: சட்டப்பேரவையில் நேற்று பட்டுவளர்ச்சி மற்றும் கைவினைப்பொருட்கள் தொடர்பான அறிவிப்புகளை குறு,சிறு, நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் வெளியிட்டார். முக்கிய அறிவிப்புகள் வருமாறு:

அதிக மகசூல் தரும் மல்பெரி ரகங்கள் நடவு செய்யும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையாக ஏக்கருக்கு ரூ.10,500 வீதம் 5 ஆயிரம் ஏக்கருக்கு ரூ.5 கோடியே 25 லட்சம் நிதியதவி வழங்கப்படும்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/04/29/large/793422.jpgநீட் விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளாவிட்டால் ஆளுநருக்கு எதிரான போராட்டம் தீவிரப்படுத்தப்படும்: தமிழக காங். தலைவர் கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை

சென்னை: நீட் விவகாரத்தில் ஆளுநர் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளாவிட்டால் ஆளுநருக்கு எதிரான போராட்டத்தை காங்கிரஸ் தீவிரப்படுத்தும் என்று கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றிய நீட் உள்ளிட்ட 13 மசோதாக்களை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பாமல் ஆளுநர் ஆர்.என்.ரவி முடக்கிவைத்திருப்பதைக் கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில், ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் சென்னை சின்னமலையில் நேற்று நடைபெற்றது. கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் அவர் பேசியதாவது:

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/04/29/large/793423.jpgஅரசு மருத்துவர்களுக்கு தகுதிக்கேற்ற ஊதியம்: மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநிலச் செயலாளர் முரளி அப்பாஸ் வெளியிட்ட அறிக்கை:

கடந்த ஆட்சியில் தகுதிக்கு ஏற்ப ஊதியம் கேட்டு அரசு மருத்துவர்கள் போராடியபோது அவர்களுக்கு துணை நிற்பதாக திமுக கூறியது. ஆனால், ஆட்சி மாறினாலும் காட்சி மாறாது என்பதுபோல் தொடர்ச்சியாக மருத்துவர்கள் வீதிக்கு வந்து போராட வேண்டிய நிலையே உள்ளது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/04/29/large/793435.jpgதியாகராய நகரை சுற்றுலா தலமாக்க வேண்டும்: எஸ்.ஆர்.ராஜா எம்எல்ஏ கோரிக்கை

சென்னை: சென்னை தியாகராய நகரை சுற்றுலாத் தலமாக மாற்ற வேண்டும் என்று தாம்பரம் தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா சட்டப்பேரவையில் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று கைத்தறி மற்றும் துணி நூல் துறை, வணிக வரித் துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில், தாம்பரம் தொகுதி திமுகஎம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா பேசிய தாவது:

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/04/29/large/793537.jpgசிறுபான்மையினரின் பாதுகாவலனாக அதிமுக திகழும்: இஃப்தார் நிகழ்ச்சியில் இபிஎஸ் உறுதி

சென்னை: மறைந்த முதல்வர்கள் எம்ஜிஆர்,ஜெயலலிதா ஆகியோர் வழியில் சிறுபான்மையினரின் பாதுகாவலனாக அதிமுக தொடர்ந்து திகழும் என அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தெரிவித்தார்.

அதிமுக சார்பில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி, சென்னைமயிலாப்பூர் நியூ உட்லண்ட்ஸ்ஓட்டலில் நேற்று மாலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அதிமுகஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் கே.பழனிசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். அதன்பின் முஸ்லிம் பிரதிநிதிகளுடன் அமர்ந்து நோன்பு கஞ்சி அருந்தினர். தொடர்ந்து நிகழ்ச்சியில் கே.பழனிசாமி பேசியதாவது: "இந்திய அரசியல் இயக்கங்களில் அதிமுகதான் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியை முதன்முதலில் சொந்தச் செலவில் தொடங்கி அதை தொடர்ந்து செய்து வருகிறது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/04/29/large/793538.jpgசென்னை கோ-ஆப்டெக்ஸ் வளாகத்தில் சர்வதேச தரத்தில் வடிவமைப்பு மையம்: கைத்தறித் துறை அமைச்சர் ஆர்.காந்தி அறிவிப்பு

சென்னை: ரூ.10 கோடி செலவில், சர்வதேசதரத்தில் சென்னையில் வடிவமைப்பு மையம் உருவாக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் ஆர்.காந்தி அறிவித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று, கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. உறுப்பினர்களின் கேள்விகள் மற்றும் கோரிக்கைகளுக்கு அத் துறையின் அமைச்சர் ஆர்.காந்தி பதிலளித்துப் பேசும்போது வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் வருமாறு:

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/04/29/large/793540.jpgஉதயநிதிக்கு எதிரான தேர்தல் வழக்கு: நீதிமன்றம் நிராகரிப்பு

சென்னை: கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றார். இந்த வெற்றியை எதிர்த்து, தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் போட்டியிட்ட வழக்கறிஞர் எம்.எல்.ரவி தொடர்ந்த தேர்தல் வழக்கை, உயர் நீதிமன்றம் ஏற்கெனவே நிராகரித்து உத்தரவிட்டிருந்தது.

இதற்கிடையே உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றதை எதிர்த்து ஆர்.பிரேமலதா என்ற வாக்காளர், உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், ‘‘உதயநிதி தனது வேட்புமனுவில் தவறானதகவல்களை அளித்துள்ளதாகவும், இதுதொடர்பான ஆட்சேபங்களை தேர்தல் அதிகாரிகள் ஏற்றுக் கொள்ளவில்லை’’ எனக் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் இந்த வழக்கை நிராகரிக்கக் கோரி உதயநிதி ஸ்டாலினும் மனு தாக்கல் செய்திருந்தார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/04/29/large/793532.jpgபெட்ரோல், டீசல் மீதான வரியை அதிகம் உயர்த்தியது மத்திய அரசு: பிரதமரின் புகாருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில்

சென்னை: பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மாநில அரசுகளுடன் பகிர வேண்டும் என்பதால் அதை குறைத்து, மாநில அரசுகளுக்கான வருவாயில் மத்திய அரசு கைவைத்தது. ஆனால், மத்திய தல வரி, தல மேல் வரியை மாநில அரசுகளுடன் பகிர வேண்டியது இல்லை என்பதால், அவற்றை மிக கடுமையாக உயர்த்தி பல லட்சம் கோடி வருவாயையும் மத்திய அரசு தனதாக்கிக் கொண்டது என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.

கரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் மோடி 27-ம் தேதி காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது, ‘‘எரிபொருட்களுக்கான வாட் வரியை மத்திய அரசு கடந்த நவம்பரில் குறைத்தும், சில மாநிலங்கள் வாட் வரியை குறைக்கவில்லை. தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநில அரசுகள் வாட் வரியை குறைக்க முன்வர வேண்டும்’ என்று கூறினார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Wednesday, April 27, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/04/28/large/793117.jpgபோலீஸ் காவலில் இளைஞர் மரணம்: சிபிசிஐடி விசாரணை தொடக்கம்

சென்னை: போலீஸ் காவலில் இளைஞர் மரணமடைந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி பிரிவு போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

சென்னை தலைமைச் செயலக குடியிருப்பு காவல்நிலையத்தில் திருவல்லிக்கேணி சுரேஷ் (28), பட்டினப்பாக்கம் விக்னேஷ் (25) ஆகியோரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அடுத்த நாள் காலையில் விக்னேஷ் உயிரிழந்தார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/04/28/large/793112.jpgஅடுத்தடுத்து சிலிண்டர்கள் வெடித்ததால் பரபரப்பு; சென்னை அரசு பொது மருத்துவமனையில் தீ விபத்து: சிகிச்சையில் இருந்த 128 நோயாளிகள் பத்திரமாக மீட்பு

சென்னை: சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் பழைய கட்டிடத்தில் மின்கசிவால் நேற்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து அங்கு சிகிச்சையில் இருந்த 128 நோயாளிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

சென்னை சென்ட்ரலில் உள்ள ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்நோயாளிகளாக 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும், புறநோயாளிகளாக தினமும் தினமும் சுமார் 10 ஆயிரம் பேரும் சிகிச்சை பெறுகின்றனர். 680 மருத்துவர்கள், 1,050 செவிலியர்கள் பணியாற்றி வருகின்றனர். மருத்துவமனையின் டவர்-1, டவர்-2 கட்டிடங்களுக்கு பின்புறம் பிராட்பீல்ட் சர்ஜிக்கல் பிளாக் என்ற பெயரிலான 100 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான கட்டிடம் உள்ளது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/04/28/large/793187.jpgஎழும்பூர் - மதுரை தேஜஸ் ரயிலில் கழிப்பறை பராமரிப்பில்லை: ஒரு மாதத்துக்கும் மேலாக பயணிகள் அவதி

சென்னை: எழும்பூரில் இருந்து மதுரைக்கு இயக்கப்படும் தேஜஸ் விரைவு ரயிலில், கழிப்பறை முறையாக பராமரிக்கப்படாததால், அதைப் பயன்படுத்த முடியாமல் பயணிகள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு தேஜஸ் விரைவு ரயில் இயக்கப்படுகிறது. முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ள இந்த ரயிலில், ஏசி இருக்கை மற்றும் ஏசி எக்சிகியூடிவ் இருக்கைகளுக்கு முறையே ரூ.1,060, ரூ.2,135 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/04/28/large/793185.jpgஅயோத்தியா மண்டபத்தை மீண்டும் ஸ்ரீராம் சமாஜ் அமைப்பிடம் ஒப்படைக்க உத்தரவு: அறநிலையத் துறை, தனி நீதிபதி உத்தரவுகள் ரத்து

சென்னை: அயோத்தியா மண்டபத்தை மீண்டும் ‘ஸ்ரீராம் சமாஜ்’ அமைப்பிடம் ஒப்படைக்க உத்தரவிட்டுள்ள உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, அந்த மண்டபத்தை கையகப்படுத்தி அறநிலையத் துறை பிறப்பித்த உத்தரவு மற்றும் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுகளை ரத்து செய்துள்ளது.

சென்னை மேற்கு மாம்பலத்தில் ‘ஸ்ரீராம் சமாஜ்’ என்ற அமைப்பின் சார்பில் அயோத்தியா மண்டபம் கட்டப்பட்டு, நிர்வகிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இங்கு சுவாமி சிலைகள் வைத்து பூஜிக்கப்படுவதாகவும், பக்தர்களிடம் காணிக்கை பெறுவதாகவும், நிதி வசூலில் முறைகேடுகள் செய்வதாகவும் கூறி, இம்மண்டபத்தை அறநிலையத் துறை கடந்த 2013-ம் ஆண்டு தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்து தக்காரை நியமித்தது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/04/28/large/793184.jpgதலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ஆதீன குருமார்கள் சந்திப்பு

சென்னை: பல்வேறு மடங்களைச் சேர்ந்த ஆதீனங்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, தெய்வீகப் பேரவையை மீண்டும் நடத்த வேண்டும், மடத்து நிலங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை, குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், திருக்கயிலாய பரம்பரை தருமையாதீனம் ஆகிய ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள், ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள், சாந்தலிங்க மருதாச்சல அடிகளார், குமரகுருபர சுவாமிகள், ஆதீனகர்த்தர் ஸ்ரீலஸ்ரீ சிவஞான பாலய குருமகா சந்நிதானம், ஸ்ரீலஸ்ரீ சத்தியஞான தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள், ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க பண்டார சந்நிதி 28-வது குருமகா சந்நிதானம், அழகிய மணவாள சம்பத்குமார் ராமானுஜஜீயர் கைலாய பரம்பரை செங்கோல் ஆதீனம் 103-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக சத்தியஞான பரமாச்சாரிய சுவாமிகள், ஸ்ரீலஸ்ரீ நிரம்ப அழகிய தேசிகர் ஆகிய ஞானபிரகாச தேசிக சுவாமிகள் 29-வது குருமகா சந்நிதானம், ஸ்ரீகாமாட்சிதாஸ் சுவாமிகள் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/04/28/large/793186.jpgஅமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர்தான்: பேரறிவாளனை விடுவிப்பதே ஒரே தீர்வு என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து

புதுடெல்லி: அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர்தான் என்றும், அமைச்சரவையின் முடிவுக்கு எதிராக அவர் தனித்த கண்ணோட்டத்துடன் செயல்பட முடியாது என்றும், பேரறிவாளனை விடுவிப்பதே ஒரே தீர்வு என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில், 29 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன், தனது தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/04/27/large/792893.jpg'காலத்தால் செய்த நன்றி' - மருத்துவமனை தீ விபத்தில் மக்களை காப்பாற்றிய ஊடகத் துறையினரை பாராட்டிய முதல்வர்

சென்னை: சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் இன்று ஏற்பட்ட தீ விபத்து குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற இடத்தில் அங்கு மக்களைக் காப்பாற்றும் பணியில் ஈடுபட்ட ஊடகத்துறையினருக்கு தமிழக முதல்வர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஏற்பட்ட சிறிய தீவிபத்து குறித்து செய்தி சேகரிக்க வந்த இடத்தில், மனிதத்தால் உந்தப்பட்டு, நேரத்தின் அருமை உணர்ந்து பல உயிர்களைச் சேகரித்துத் தந்துள்ளனர் நம் ஊடகத்துறை நண்பர்கள். காலத்தினால் செய்த நன்றிக்கு என் பாராட்டுகள்" என்று தெரிவித்துள்ளார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/04/27/large/792892.jpgஅனைத்து கிராம ஊராட்சிகளிலும் மே 1ம் தேதி கிராம சபைக் கூட்டங்கள் - தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழகத்தின் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் தொழிலாளர் தினமான மே 1-ம் தேதி கிராமசபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன. கூட்டம் நடைபெறும் இடம், நேரம் ஆகியன கிராம ஊராட்சி அலுவலகங்களின் தகவல் பலகையில் வெளியிடப்பட்டுன.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பட்டிருப்பதாவது: மே 1- ம் தொழிலாளர் தினம் அன்று நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் கீழ்க்காணும் பொருள்கள் குறித்து விவாதிக்கப்படும் கிராம சபைக் கூட்டங்களில் வரவு செலவு கணக்குகள், பல்வேறு திட்டங்களுக்கான பயனாளிகள் தேர்வு மற்றும் அரசு திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகிய கூட்டப் பொருட்கள் உள்ளன.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Tuesday, April 26, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/04/27/large/792703.jpgஇஸ்லாமியர்களை வாக்கு வங்கியாக மற்ற கட்சிகள் பயன்படுத்துகின்றன: அண்ணாமலை குற்றச்சாட்டு

சென்னை: பாஜகவை தவிர மற்ற கட்சிகள் இஸ்லாமியர்களை வாக்கு வங்கியாக பயன்படுத்துகின்றன என்று தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னையில் பாஜக சார்பில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், கே.அண்ணாமலை இஸ்லாமியர்களுடன் அமர்ந்து நோன்பு கஞ்சி அருந்தினார். பின்னர் அவர் பேசியதாவது: பாஜகவின் சித்தாந்தத்தை புரிந்து கொண்டவர்களுக்கு இஸ்லாமியர்கள் இந்த கட்சியின் அங்கமாக வாழ்ந்து கொண்டிருப்பது புரியும். பாஜகவில் உள்ள இஸ்லாமியர்களுக்கு தேசியம், நாம் கூறும் இந்துத்துவாவை பற்றி முழுமையாக தெரியும். இந்த கட்சியில் இஸ்லாமியர்களுக்கு இடம் உண்டு. முழுமையான பங்கு உண்டு.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/04/27/large/792812.jpgவீண் வதந்திகளை நம்ப வேண்டாம், ஊரடங்குக்கு வாய்ப்பு இல்லை: தமிழக சுகாதாரத் துறை செயலர் தகவல்

சென்னை: தமிழகத்தில் மீண்டும் ஊரடங்குக்கு வாய்ப்பு இல்லை. தேவையற்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்று சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள அரசு கரோனா மருத்துவமனையில் நேற்று ஆய்வு செய்தபின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/04/27/large/792707.jpgபுரசை கங்காதீஸ்வரர் கோயில் குளம் சீரமைப்பு பணி: அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

சென்னை: புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோயில் குளத்தை சீரமைக்கும் பணியை அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.கே.சேகர்பாபு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

சென்னை புரசைவாக்கத்தில் உள்ள கங்காதீஸ்வரர் கோயில் குளத்தை சீரமைக்க, சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின்கீழ் ரூ.1.58 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், குளத்தை சீரமைக்கும் பணி நேற்று தொடங்கியது. நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் சீரமைப்புப் பணியை தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/04/27/large/792818.jpgதஞ்சாவூர் களிமேடு அருகே சோகம்: மின்கம்பியில் தேர் உரசியதால் 10 பேர் உயிரிழப்பு

தஞ்சாவூர்: தஞ்சாவூரை அடுத்த களிமேடு பகுதியில் நடந்த திருவிழாவின் போது மின்சாரணம் தாக்கி 9 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூரை அடுத்த களிமேடு அப்பர் கோவிலில் திருவிழா ஆண்டு தோறும் நடைபெறுவது வழக்கம். இந்த விழாவின் போது தேர் இழுக்கப்படும். நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கும் தேர் திருவிழா அதிகாலை நடைபெறும். அதன்படி, நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கியது தேர் திருவிழா. தஞ்சை பூதலூர் சாலையை அடுத்து களிமேடு பகுதியில் தேர் வரும் போது மின்கம்பத்தில் தேர் உரசியதால் 10 பேர் உயிரிழந்தனர் என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/04/27/large/792813.jpg‘இந்து தமிழ் திசை’, சங்கர் ஐஏஎஸ் அகாடமி சார்பில் ‘ஆளப் பிறந்தோம்’ வழிகாட்டு நிகழ்ச்சி: திருச்சியில் மே 1-ம் தேதி நடைபெறுகிறது

சென்னை: ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், ‘சங்கர் ஐஏஎஸ் அகாடமி’யுடன் இணைந்து வழங்கும் ‘ஆளப் பிறந்தோம்’ எனும் வழிகாட்டு நிகழ்ச்சி, திருச்சியில் உள்ள ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை (மே 1) நடை பெற உள்ளது.

யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் வெற்றிபெற வேண்டும் என்ற ஆசை பலருக்கும் உண்டு. ஆனால், அதற்கான அடிப்படை கல்வித் தகுதி, எத்தனை ஆண்டுகள் படிக்க வேண்டும், அதற்கான செலவு என ஏராளமான கேள்விகளுடன் தயங்கி நிற்பவர்களே அதிகம்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/04/27/large/792809.jpgபுதிய பணியிடங்கள் உருவாக்க தடை: மின்வாரியம் உத்தரவு

சென்னை: புதிய பணியிடங்களை உருவாக்க தடைவிதித்து மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.

நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் தமிழ்நாடு மின்வாரியம், செலவைக் குறைக்க பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/04/27/large/792802.jpgதமிழகத்தில் இந்த ஆண்டில் புதிதாக 50 ஆயிரம் விவசாய மின் இணைப்பு - சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் இந்த ஆண்டு புதிதாக 50 ஆயிரம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி அறிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது நேற்று விவாதம் நடந்தது. விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சர் வி.செந்தில்பாலாஜி பேசியதாவது:

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Monday, April 25, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/04/26/large/792401.jpgதொழில் துறையில் தமிழகம் சிறந்து விளங்குகிறது: குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு பாராட்டு

தாம்பரம்: தொழில் துறையில் தமிழகம் சிறந்த மாநிலமாக விளங்குகிறது. தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல முதல்வர் ஸ்டாலின் தீவிரமாக செயல்பட்டு வருகிறார் என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு பாராட்டு தெரிவித்துள்ளார்.

சென்னை தாம்பரத்தில் உள்ள மெப்ஸ் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் சிறந்த ஏற்றுமதியாளர்களுக்கு விருது வழங்கும் விழா நேற்று நடந்தது. இதில், குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு விருதுகளை வழங்கி கவுரவித்தார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/04/26/large/792404.jpgகரோனா அதிகரிப்பு: எந்த சூழலையும் எதிர்கொள்ள தயாராக இருப்போம் - மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தல்

சென்னை: நாம் அனைவரும் எந்த ஒரு சூழலையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதுடன், தகுதியான அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/04/26/large/792395.jpgதமிழக பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்க அதிகாரம் - சட்டப்பேரவையில் நிறைவேறிய மசோதா முழுவிவரம்

சென்னை: தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்க வகைசெய்யும் மசோதா, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட மசோதாவை அறிமுக நிலையிலேயே அதிமுக எதிர்த்தது. பாஜக எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தது.

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் நியமனம் மாநில அரசின் பரிந்துரையின் அடிப்படையில் ஆளுநரால் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக பல்கலைக்கழகங்களின் வேந்தராக உள்ள ஆளுநரே துணைவேந்தர்களை தேர்வு செய்து நியமித்ததால், பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/04/26/large/792396.jpgஇலங்கையில் அதிகரிக்கும் நெருக்கடி: 4 கைக்குழந்தைகளுடன் 11 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வருகை

ராமேசுவரம்: இலங்கையில் பொருளாதார நெருக்கடி அதிகரித்துள்ள நிலையில், பட்டினிச்சாவு ஏற்படும் அச்சத்தால் 4 கைக்குழந்தைகளுடன் 11 பேர் அகதிகளாக நேற்று தனுஷ்கோடிக்கு வந்தனர்.

இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, அவற்றின் விலையும் பலமடங்கு உயர்ந்துள்ளது. இதனால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். உணவுகூட கிடைக்காமல் ஏராளமானோர் திண்டாடுகின்றனர். அரசுக்கு எதிராக மக்கள் தெருவில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/04/26/large/792102.jpg'வாக்களித்த மக்களுக்கு மின்தடையை பரிசாக வழங்கிய திமுக' - ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

மதுரை: ‘‘வாக்களித்த மக்களுக்கு மின்தடைய திமுக அரசு பரிசாக வழங்கியிருக்கிறது, ’’ என்று முன்னாள் வருவாய்துறை அமைச்சர் ஆர்பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Sunday, April 24, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/04/25/large/792008.jpgசென்னை உள்ளிட்ட இடங்களில் நிழல் இல்லாத காட்சி

சென்னை: சூரியன் நேர் உச்சிக்கு வருவதால் உருவாகும் ‘நிழல் இல்லாத காட்சி’என்ற வானியல் நிகழ்வு சென்னையில் நேற்று தென்பட்டது.

குறிப்பிட்ட சில நாட்களில் சூரியன் நமது தலைக்கு நேராக மேலே இருக்கும் போது நிழல் எந்த பக்கமும் சாயாமல் காலுக்கு கீழே இருக்கும். இதை நிழல் இல்லாத நாள் என்று குறிப்பிடுகின்றனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/04/25/large/792010.jpgதமிழகத்தில் இருமொழி கொள்கையே தொடரும்: பள்ளிக் கல்வித்துறை விளக்கம்

சென்னை: பாடத்திட்டத்தில் 3-வது மொழி சேர்க்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் தவறானது. தமிழகத்தில் இரு மொழிக் கொள்கை மட்டுமே தொடரும் என்று பள்ளிக்கல்வித் துறை விளக்கம் அளித்துள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வி ஆணையர் க.நந்தகுமார் வெளியிட்டுள்ள அறிவிப்பு: பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் நீண்ட காலமாக இருமொழிக் கொள்கை அமலில் இருக்கிறது. இதை மாற்றி மும்மொழிக் கொள்கையை புகுத்தும் நடவடிக்கையை தமிழக அரசு மறைமுகமாக தொடங்கியுள்ளதாக வலைதளங்களில் செய்தி வெளியாகி உள்ளது. தமிழகத்தில் தாய்மொழியாகிய தமிழ், உலக இணைப்பு மொழியான ஆங்கிலம் என இரு மொழிக் கொள்கை மட்டுமே தற்போது வழக்கத்தில் இருக்கிறது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/04/25/large/792009.jpgநீடித்த வளர்ச்சி இலக்குகளை அடைய நடவடிக்கை; தமிழக கிராம ஊராட்சிகள் முன்மாதிரியாக விளங்கும்: முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை

காஞ்சிபுரம்: நீடித்த, நிலையான வளர்ச்சியை எட்டுவதன் மூலம் தமிழக கிராம ஊராட்சிகள் தேசிய அளவில் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக விளங்கும் என்று காஞ்சிபுரம் மாவட்டம் செங்காடு கிராமத்தில் நடந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

தேசிய ஊராட்சிகள் (பஞ்சாயத்து ராஜ்) தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ‘ஊரக வளர்ச்சிமற்றும் நீடித்த வளர்ச்சி இலக்கு’ என்ற தலைப்பில் சிறப்பு கிராமசபைக் கூட்டம் நேற்று நடந்தது. காஞ்சிபுரம் மாவட்டம் பெரும்புதூர் ஒன்றியத்தில் உள்ள செங்காடு கிராமத்தில் நடந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். அவர் பேசியதாவது: "நீடித்த வளர்ச்சி இலக்குகளை அடைய, கிராம ஊராட்சிகள் தகுந்தநடவடிக்கைகளை மேற்கொண்டு, திராவிட மாடல் ஆட்சி இதுதான் என்பதை உலகுக்கு உணர்த்தப் போகிறோம். நீடித்த, நிலையான வளர்ச்சியை எட்டுவதன் மூலம் இந்த கிராம ஊராட்சிகள் தேசிய அளவில் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக விளங்கும்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/04/25/large/792003.jpgகரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: கரோனா தொற்று பாதிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள், சுகாதார அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை ஐஐடியில் கரோனா தொற்று பாதிக்கப்பட்ட 60 மாணவர்களில் 40 பேர் குணமடைந்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

சென்னை கிண்டி ஐஐடி வளாகத்தில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கு ஏற்பட்ட கரோனா தொற்று பாதிப்பு குறித்து,சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். மாநகராட்சி துணை ஆணையர் மனிஷ், மண்டல தலைவர் துரைராஜ், நகர நல அலுவலர் ஜெகதீசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/04/25/large/791763.jpg"சாதி மதத்தால் தமிழினத்தை பிளவுபடுத்தி வளர்ச்சியை தடுக்க பார்க்கிறார்கள்...நாம் பலியாகிவிடக் கூடாது" -  முதல்வர் ஸ்டாலின் பேச்சு

சென்னை: நம்மைப் பிளவுபடுத்துவதன் மூலமாக, நமது வளர்ச்சியைத் தடுக்கப் பார்க்கிறார்கள். தமிழினம் அதற்குத் பலியாகிவிடக் கூடாது, அதற்குப் பின்னால் இருக்கும் சதியை உணர்ந்து தெளிந்து புரிந்து கொள்ள வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுகவின் சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு சார்பில் சென்னை திருவான்மியூரில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட ரமலான் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது: "அஸ்ஸலாமு அலைக்கும். இப்தார் நோன்பு திறக்கும் இந்த நிகழ்ச்சியில் பங்கெடுத்துக் கொண்டுள்ள சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த பெருமக்களுக்கும், மற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன். இசுலாமியச் சமுதாயப் பெருமக்கள் இந்த ரமலான் மாதத்தை மிகமிகப் புனிதமான மாதமாகக் கடைபிடித்துக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். பசி, தாகம் ஆகியவற்றை மறந்து நோன்பு இருக்கிறார்கள். இதனைத் தங்கள் கடமையாக நினைத்துச் செய்கிறார்கள். சிறுபான்மை இயக்கத்திற்கும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் கருணாநிதிக்குமான நட்பு என்பது காலம் காலமாகத் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது, தொடரத் தான் போகிறது. அதில் யாரும் களங்கத்தையோ பிரிவையோ ஏற்படுத்த முடியாது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Saturday, April 23, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/04/24/large/791644.jpgஉலகப் பாரம்பரிய நீர்ப்பாசன கட்டமைப்பின் 3 விருதுகளுக்கு தமிழக அரசு தேர்வு: நீர்வளத் துறைச் செயலர் சந்தீப் சக்சேனா தகவல்

நீர்வளத் துறைச் செயலர் சந்தீப் சக்சேனா நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சர்வதேச நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் ஆணையம் (ஐசிஐடி) ஒவ்வோர் ஆண்டும் உலகப் பாரம்பரிய நீர்ப்பாசனக் கட்டமைப்புகள் மற்றும் நீர் சேமிப்பு விருதுகளை அறிவிக்கிறது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/04/24/large/791646.jpgகோயம்பேட்டில் தக்காளி விலை ரூ.35 ஆக உயர்வு

சென்னை கோயம்பேடு சந்தையில் கடந்த சில மாதங்களாக தக்காளி விலை கிலோ ரூ.12-க்கும் குறைவாக விற்கப்பட்டு வந்தது. கோடை காலம் தொடங்கியது முதல், அதன் விலை வேகமாக உயர்ந்து வருகிறது.

அதன்படி, ஒரு கிலோ தக்காளி விலை கடந்த வாரம்ரூ.25 ஆக இருந்த நிலையில், நேற்று ரூ.35 ஆக உயர்ந்துள்ளது. வெளி சந்தைகளில் முதல் தர தக்காளி கிலோ ரூ.50, நடுத்தர தக்காளி ரூ.30, பொடி தக்காளி ரூ.20 என விற்கப்படுகிறது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/04/24/large/791695.jpgகோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சசிகலா உட்பட 220 சாட்சிகளிடம் விசாரணை: நீதிமன்றத்தில் அரசு தரப்பு வழக்கறிஞர் தகவல்

உதகை: கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக சசிகலா உள்ளிட்ட 220 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.

நீலகிரி மாவட்டம், கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளை குறித்த விசாரணை, உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் பொறுப்பு நீதிபதி ஸ்ரீதரன் முன்னிலையில் நேற்று நடைபெற்றது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/04/24/large/791696.jpgஇணை போக்குவரத்து ஆணையரின் காரில் இருந்து ரூ.28.35 லட்சம் பறிமுதல் - கோவையில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடவடிக்கை

கோவை: கோவை பாலசுந்தரம் சாலையில் மண்டல இணை போக்குவரத்து ஆணையரின் அலுவலகம் இயங்கி வருகிறது.

இங்கு, கோவை மண்டல இணை போக்குவரத்து ஆணையராக, சவுரிபாளையத்தைச் சேர்ந்த கே.உமாசக்தி என்பவர் கடந்த 2 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இவர் உதவியாளர் ஒருவர் மூலம் அலுவலகத்துக்கு வருபவர்களிடம் லஞ்சம் பெறுவதாக கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், கடந்த சில நாட்களாக லஞ்ச ஒழிப்பு போலீஸார் இவரை ரகசியமாக கண்காணித்து வந்தனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://ift.tt/QbO8vrl வயதுக்கு மேற்பட்டவர்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தல் - 22 லட்சம் கோவாக்சின் மருந்து சென்னை வந்தது

சென்னை: சென்னை ஐஐடியில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 55 ஆக உயர்ந்தது. இதன்தொடர்ச்சியாக 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பூஸ்டர் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டுமென்று சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும் மத்திய தொகுப்பில் இருந்து நேற்று 22 லட்சம் கோவாக்சின் தடுப்பூசி சென்னை வந்தது.

தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்றின் 4-வது அலை ஜூன் மாதம் வருவதற்கு வாய்ப்புள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்திருந்தனர். அதனை உறுதிப்படுத்தும் விதமாக சிங்கப்பூர், மலேசியா, இங்கிலாந்து, அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் டெல்லி, ஹரியாணா, உத்தரப் பிரதேசம், கேரளா ஆகிய மாநிலங்களிலும் கரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/04/23/large/791482.jpgகல்வி, தொழில், உற்பத்தி இணைந்து செயல்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது - முதல்வர் ஸ்டாலின்

சென்னை: கல்வியும் தொழிலும் உற்பத்தியும் இணைந்து செயல்படுவது என்பது மகிழ்ச்சி அளிப்பதாக அமைந்திருக்கிறது என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“TechKnow-2022” கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நிறைவு விழாவில் கலந்து கொண்டு முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, "எந்தத் துறையாக இருந்தாலும் அந்த துறை தனித்துச் செயல்பட முடியாது. ஒன்றோடு ஒன்று ஒற்றுமை கலந்திருக்கக் கூடிய உணர்வோடு அதிலே நாம் ஈடுபட்டால் தான் அதில் வெற்றி காண முடியும், அதனை நிறைவேற்ற முடியும். தனித்தனியாக தங்களது சக்தியைச் செலவிடுவதைவிட தேவையான நேரத்தில் ஒருங்கிணைந்து செயல்பட்டால் அந்த செயல் விரைவாகவும் முடியும், சிறப்பாக முடிய வாய்ப்பு ஏற்படும்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...