
காஞ்சிபுரம்: நீடித்த, நிலையான வளர்ச்சியை எட்டுவதன் மூலம் தமிழக கிராம ஊராட்சிகள் தேசிய அளவில் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக விளங்கும் என்று காஞ்சிபுரம் மாவட்டம் செங்காடு கிராமத்தில் நடந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
தேசிய ஊராட்சிகள் (பஞ்சாயத்து ராஜ்) தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ‘ஊரக வளர்ச்சிமற்றும் நீடித்த வளர்ச்சி இலக்கு’ என்ற தலைப்பில் சிறப்பு கிராமசபைக் கூட்டம் நேற்று நடந்தது. காஞ்சிபுரம் மாவட்டம் பெரும்புதூர் ஒன்றியத்தில் உள்ள செங்காடு கிராமத்தில் நடந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். அவர் பேசியதாவது: "நீடித்த வளர்ச்சி இலக்குகளை அடைய, கிராம ஊராட்சிகள் தகுந்தநடவடிக்கைகளை மேற்கொண்டு, திராவிட மாடல் ஆட்சி இதுதான் என்பதை உலகுக்கு உணர்த்தப் போகிறோம். நீடித்த, நிலையான வளர்ச்சியை எட்டுவதன் மூலம் இந்த கிராம ஊராட்சிகள் தேசிய அளவில் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக விளங்கும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்