Tuesday, February 28, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/03/01/large/953695.jpg‘இந்து தமிழ் திசை’ - ‘வாக்கரூ’ இணைந்து நடத்திய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள்: செங்கை, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்கள் வழங்கினர்

சென்னை: செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டத்தில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் மற்றும் ‘வாக்கரூ’ இணைந்து பள்ளிமாணவர்களுக்காக நடத்திய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர்கள் சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கி பாராட்டினர்.

நடைப்பயிற்சி செய்ய வேண்டியதன் அவசியத்தைக் குழந்தைகளிடம் விளக்கி அவர்களை தினமும் நடக்கப் பழக்கப்படுத்தும் வகையில், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் மற்றும் வாக்கரூ இணைந்து ‘நடந்தால் நன்மையே நடக்கும்’ எனும் விழிப்புணர்வைத் தூண்டும் போட்டிகளை நடத்துகின்றன.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/02/28/large/953427.jpgதமிழ் பெயர் பலகை விவகாரம் | நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீதான நீதிமன்ற அவமதிப்பு - அறிக்கை அளிக்க உத்தரவு

மதுரை: தமிழில் பெயர் பலகை வைக்க நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி, வழக்கறிஞர் தீரன் திருமுருகன் தொடர்ந்த வழக்கின் விசாரணை மீண்டும் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் ஜெயச்சந்திரன், சுவாமிநாதன் வழக்கை விசாரித்தனர்.

அப்போது, அரசுத் தரப்பில், அரசாணைப்படி பெயர் பலகை வைக்காததற்காக ரூ.50 அபராதமாக வசூலிக்கப்படுகிறது. அபராத தொகையை உயர்த்தி வசூலிக்கும் திட்டம் அரசின் ஒப்புதலுக்கென உள்ளது. 2018-2022 வரை 6,074 கடைகளில் ரூ.4.58 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. உணவக சட்டப்படி 349 உணவகங்களிடம் இருந்து ரூ.32,800 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. சட்டத்தை முறையாக பின்பற்ற அவ்வப்போது ஆய்வு கூட்டங்கள் நடத்தப்படுகிறது என கூறப்பட்டது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/02/28/large/953428.jpgதமிழை பாதுகாக்க இன்னொரு மொழிப்போருக்கு தயாராக வேண்டும் - மதுரையில் ராமதாஸ் பேச்சு

மதுரை: ‘தமிழைத் தேடி’ எனும் தலைப்பில் விழிப்புணர்வு பரப்புரை பயணத்தை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பிப்., 21-ல் தொடங்கினார். திண்டுக்கல் வழியாக மதுரை வந்த அவரது 8ம் நாள் பயண நிறைவு நிகழ்ச்சி மதுரை உலகத்தமிழ்ச் சங்கத்தில் நடந்தது.

இதில் அவர் பங்கேற்று பேசியதாவது: தமிழைத்தேடி மதுரை மாநகருக்கு வந்த எனக்கு ஆதரவளித்து வாழ்த்திய பாலபிரஜாபதி உள்ளிட்டோருக்கு நன்றி. சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரைக்கு வந்தேன். இங்கு தமிழன்னை இல்லை. எங்கும் தமிழன்னையும், தமிழையும் காணவில்லை. தமிழைத் தேடி என, சொல்வே வெட்கமாக உள்ளது. இந்நகரத்தில், தமிழ் புலவர்கள் வீட்டிலும் இல்லை. தொன்மை வரலாறு கொண்ட மதுரை தமிழ் மொழியுடன் நெருங்கிய தொடர்புடையது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/03/01/large/953429.jpgமுதல்வர் ஸ்டாலினின் மிகப்பெரிய எதிரி யார் தெரியுமா? - பிறந்தநாள் விழாவில் அமைச்சர் ரோஜா ருசிகரம்

சென்னை: தமிழக மக்கள் நினைத்ததுபோல் ஸ்டாலின் முதல்வர் ஆகிவிட்டார். ஆனால், அவர் முன்னால் இப்போதுதான் மிகப்பெரிய சவால் உள்ளது என்று ஆந்திர அமைச்சர் ரோஜா பேசியுள்ளார்.

தமிழக முதல்வர் ஸ்டாலினின் 70வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து திமுகவினர் பிறந்த நாள் நடத்திவருகின்றனர். சென்னை கிழக்கு மாவட்ட கழகம் சார்பாக துறைமுகம் சட்டமன்ற தொகுதி - இராஜா அண்ணாமலை மன்றத்தில் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. இதில், ஆந்திர பிரதேச மாநில சுற்றுலா, கலாச்சாரத்துறை அமைச்சரும் நடிகையுமான ரோஜா, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/02/28/large/953425.jpgபோட்டி நிறைந்த உலகில் வாழ புதிய கல்விக் கொள்கையை கற்க வேண்டியது அவசியம் - புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம்

புதுச்சேரி: காலாப்பட்டில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தின் 29-வது பட்டமளிப்பு விழா அம்பேத்கர் நிர்வாக கட்டிடத்தில் உள்ள ஜவஹர்லால் நேரு அரங்கில் இன்று நடைபெற்றது.

பல்கலைக்கழக துணை வேந்தர் குர்மீத் சிங் தலைமை தாங்கினார். புதுச்சேரி அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய் ஜெ. சவரணன்குமார், எம்எல்ஏ கல்யாணசுந்தரம், எம்பிக்கள் வைத்திலிங்கம், செல்வகணபதி, ஜிப்மர் இயக்குநர் ராகேஷ் அகர்வால் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கினர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/02/28/large/953422.jpgகும்மிருட்டில் மூழ்கிக் கிடக்கும் மதுரை சாலைகள்: வெளிச்சம் கொடுக்குமா மாநகராட்சி?

மதுரை: மதுரை மாநகரின் முக்கிய சாலைகள், குடியிருப்பு பகுதிகள் அமைந்துள்ள சாலைகளில் இன்னும் தெருவிளக்குகள் எரியாததால் நகரப்பகுதிகள் மக்கள் நடமாட முடியாமலும், வாகனங்களில் செல்ல முடியாமலும் இருட்டில் மூழ்கிக் கிடக்கிறது.

தமிழ்நாட்டின் மிகப் பழமையான நகரங்களில் ஒன்றான மதுரை தற்போது போதுமான உள்கட்டமைப்பு வசதிகள் இன்றியும் சிக்கித் தவிக்கிறது. 2011ல் மாநகராட்சியின் எல்லை விரிவாக்கம் செய்யப்பட்டு, 3 நகராட்சிகள், 3 பேரூராட்சிகள், 11 கிராமப் பஞ்சாயத்துகள் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு, வார்டுகளின் எண்ணிக்கை 100ஆக உயர்த்தப்பட்டது. இதனால் 55 சதுர கி.மீட்டராக இருந்த மாநகராட்சியின் பரப்பளவு, இப்போது 142 ச.கி.மீராக விரிந்துள்ளது. மாநகராட்சியில் மொத்தம் 265 கி.மீ., பஸ் வழித்தடம் சாலைகள் உள்பட மொத்தம் 1,545 கி.மீ., தொலைவிற்குள் சாலைகள் உள்ளன.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Monday, February 27, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/02/28/large/952506.jpgமெட்ரோ ரயில் திட்டம் - சேலம், திருச்சி, நெல்லையில் சாத்தியக்கூறு ஆய்வு தீவிரம்

சென்னை: சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மெட்ரோ ரயில் திட்டம் உருவாக்கப்பட்டது. சென்னை மெட்ரோ ரயில் முதல் கட்டம், முதல்கட்டம் நீட்டிப்பு திட்டத்துக்கு பிறகு, சென்னை விமான நிலையம் - விம்கோ நகர் வரையும், பரங்கிமலை-சென்ட்ரல் வரையும் 54 கி.மீ. தொலைவுக்கு மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இதையடுத்து, இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 118.9 கி.மீ. தொலைவுக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. தமிழக அரசு அறிவிப்பின்படி, சென்னையைபோல கோவை, மதுரை, சேலம், திருச்சி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்துவதற்கான ஆய்வுகளை மெட்ரோ ரயில் நிர்வாகம் ஒவ்வோரு கட்டமாக செய்து வருகிறது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/02/27/large/952189.jpgசேலத்தில் அண்ணாமலை கொடும்பாவியை எரிக்க முயன்ற விசிகவினர்

சேலம்: சேலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை அவதூறாக பேசியதாக, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் தடா பெரியசாமியை கைது செய்ய வலியுறத்தி சாலைமறியல் போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஈடுபட்டனர். மேலும், பாஜக தலைவர் அண்ணாமலை கொடும்பாவியை விசிக-வினர் எரிக்க முயன்றதை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

விசிக தலைவர் திருமாவளவனை அவதூறாக பேசிய, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் தடா பெரியசாமியை கைது செய்ய வலியுறத்தி சேலம் ஒருங்கிணைந்த விசிக சார்பில் பேரணி மற்றும் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று காலை விசிக -வினர் சேலம் அண்ணா பூங்கா அருகில் திரண்டனர். அவர்களை மாநகர காவல் துணை ஆணையர் மாடசாமி தலைமையிலான போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Sunday, February 26, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/02/27/large/952045.jpgதமிழகத்தில் பால் தட்டுப்பாடு இல்லை: ஆவின் நிர்வாகம் விளக்கம்

சென்னை: தமிழகத்தில் ஆவின் பால் தட்டுப்பாடு இல்லை என்று ஆவின் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. ஆவின் நிறுவனம் வாயிலாக தினமும் 40 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போது பால் கொள்முதல் 29.50 லட்சம் லிட்டர் முதல் 30 லட்சம் லிட்டராகக் குறைந்துள்ளது. இது சில்லறை விற்பனைக்கே போதுமானதாக இல்லாததால், வெண்ணெய், பால் பவுடர், நெய் உள்ளிட்ட பால் உப பொருட்கள் தயாரிப்பு குறைந்துள்ளது.

வெளி மாநிலங்களிலும் பால் பற்றாக்குறை நிலவுவதால், அங்கும் வெண்ணெய் தயாரிப்பு குறைந்துள்ளது. இதையடுத்து, தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தின் விற்பனை இணையதளம் வாயிலாக, வெளி மாநிலங்களில் இருந்து வெண்ணெய் கொள்முதல் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/02/27/large/952049.jpgமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி அனைத்து மாவட்டங்களிலும் மார்ச் 5 முதல் அதிமுக பொதுக்கூட்டங்கள்

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்த நாளை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களிலும் மார்ச் 5-ம் தேதி முதல் அதிமுக பொதுக் கூட்டங்கள் நடைபெற உள்ளன.

இது தொடர்பாக கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அதிமுக அமைப்பு ரீதியாகச்செயல்பட்டு வரும் மாவட்டங்களுக்கு உட்பட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளிலும், கட்சி அமைப்புகள் செயல்படும் பிற மாநிலங்களிலும் மார்ச் 5, 6, 7, 10, 11, 12-ம் தேதிகளில் பொதுக் கூட்டங்கள் நடைபெற உள்ளன.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/02/27/large/952037.jpg‘ஆர்.கே.நகர் ஃபார்முலா’வில் ‘டோக்கன்’ விநியோகம்: ஈரோடு கிழக்கில் இறுதிகட்டமாக நடந்தது என்ன?

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், இறுதிகட்டத்தில் ‘ஆர்.கே. நகர் பார்முலா’வை திமுக மற்றும் அதிமுகவினர் கையில் எடுத்துள்ளனர்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் இன்று நடக்கிறது. இத்தேர்தலில் வாக்காளர்களைக் கவரும் வகையில் திமுக மற்றும் அதிமுக கட்சி நிர்வாகிகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். வாக்காளர்களை எதிர்க்கட்சியினர் சந்திக்க முடியாதபடி கூடாரம் அமைத்து அமர வைத்ததில் தொடங்கி, கறி விருந்து, வாக்குக்கு பணம், பலவகையான பரிசுப்பொருட்கள் என திமுக அமைச்சர்கள் பல்வேறு யுக்திகளை கையாண்டனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/02/27/large/952084.jpgதமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்களில் 3 நாட்களுக்கு மழை வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் டெல்டா மாவட்டங் கள் மற்றும் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் 27, 28, மார்ச் 1 ஆகிய தேதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/02/27/large/952076.jpgமின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க நாளை கடைசி

சென்னை: மத்திய அரசு அறிவுறுத்தலின்பேரில், இலவசம் மற்றும் மானியம் பெறும் மின்நுகர்வோரின் மின்இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை தமிழக மின்வாரியம் கடந்த ஆண்டு நவ. 15-ம் தேதி தொடங்கியது.

இதற்காக, தமிழகம் முழுவதும் 2,811 மின்வாரிய பிரிவு அலுவலகங்களில் சிறப்பு கவுன்ட்டர்கள் அமைக்கப்பட்டன. முதலில், டிச.31 கடைசி நாள் என அறிவிக்கப்பட்டது. பலரும் ஆதாரை இணைக்காததால், ஜன.31, பிப்.15 என அவகாசம் அளிக்கப்பட்டு, பின்னர்பிப்.28-ம் தேதி (நாளை) வரை நீட்டிக்கப்பட்டது. இதுவரை 99 சதவீதம் பேர் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Saturday, February 25, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/02/26/large/951515.jpgஅதிமுக திட்டங்களை நிறுத்தியது திமுக அரசு - ஈரோட்டில் பழனிசாமி குற்றச்சாட்டு

ஈரோடு: அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பல மக்கள் நலத் திட்டங்களை திமுக அரசு நிறுத்திவிட்டதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான பழனிசாமி குற்றம்சாட்டினார்.

ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட பிராமண பெரிய அக்ரஹாரம், கருங்கல்பாளையம் உள்ளிட்ட இடங்களில், அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசை ஆதரித்து அவர் பேசியதாவது:

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/02/26/large/951527.jpgஓபிஎஸ் தாயார் உடல் பெரியகுளத்தில் தகனம் - ஆளுநர் தமிழிசை, முதல்வர் ஸ்டாலின், அரசியல் தலைவர்கள் இரங்கல்

பெரியகுளம் / சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் நாச்சியார்(95). வயது மூப்பால் உடல் நலிவடைந்திருந்த நிலையில்,பெரியகுளத்தில் உள்ள வீட்டில் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.

தகவலறிந்த ஓ.பன்னீர்செல்வம் அன்றிரவே சென்னையில் இருந்து காரில் பெரியகுளம் விரைந்தார். தாயாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு, அவரது கால்களை பற்றிக் கொண்டு கதறி அழுத பன்னீர்செல்வத்தை உறவினர்கள் தேற்றினர். ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர்கள் ராஜா, சண்முகசுந்தரம், ஓ.பன்னீர்செல்வத்தின் மகன்கள் ப.ரவீந்திரநாத் எம்.பி., ஜெய்பிரதீப் மற்றும் உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/02/26/large/951556.jpgதென் கடலோர மாவட்டங்கள், டெல்டாவில் 2 நாட்கள் மழை

சென்னை: தமிழகத்தில் டெல்டா, தென் கடலோர மாவட்டங்களில் வரும் 27, 28-ம் தேதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/02/26/large/951557.jpgவினாத்தாள் பதிவெண் மாற்றத்தால் குரூப் 2 முதன்மைத் தேர்வில் குழப்பம் - தேர்வர்கள் கடும் அவதி

சென்னை: வினாத்தாள் பதிவெண் மாற்றக் குளறுபடியால் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் நேற்று குரூப் 2 தேர்வு முதல் ஒரு மணி நேரம் வரை தாமதமாக தொடங்கி நடைபெற்றது. இதனால் தேர்வர்கள் பெரிதும் சிரமம் அடைந்தனர்.

தமிழக அரசுத் துறைகளில் இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சார்பதிவாளர் உட்பட பல்வேறு பதவிகளில் உள்ள 5,446 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2 மற்றும் 2ஏ முதல்நிலைத் தேர்வு கடந்த மே 21-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை மொத்தம் 9 லட்சத்து 94,890 பட்டதாரிகள் எழுதினர். இவர்களுக்கான தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நவம்பர் 8-ம் தேதி வெளியிட்டது. அதன்படி முதல்நிலைத் தேர்வு எழுதியதில் மொத்தம் 57,641 பட்டதாரிகள் தேர்ச்சி பெற்றனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://ift.tt/Lo8JNDG ஆண்டுகளில் நாடு முழுவதும் 9 கோடி வழக்குகளுக்கு தீர்வு - நீதித் துறை அகாடமி இயக்குநர் ஏ.பி.சாஹி பெருமிதம்

சென்னை: தேசிய நீதித் துறை அகாடமி, தமிழ்நாடு மாநில நீதித் துறை அகாடமிசார்பில் சமகால நீதித் துறையின் வளர்ச்சிகள், சட்டம் மற்றும் தொழில்நுட்பம் மூலம் நீதியை வலுப்படுத்துதல் குறித்த 2 நாள் கருத்தரங்கம் சென்னை பசுமைவழி சாலையில் உள்ள தமிழ்நாடு மாநில நீதித் துறை பயிற்சி மையத்தில் நேற்று தொடங்கியது.

இக்கருத்தரங்கை உச்ச நீதிமன்ற நீதிபதி அபய் ஸ்ரீனிவாஸ் ஓகா, சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா தொடங்கி வைத்தனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/02/26/large/951560.jpgகுளறுபடி நடந்துள்ளதால் குரூப்-2 தேர்வை ரத்து செய்ய கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்

சென்னை: பாமக தலைவர் அன்புமணி, தேமுதிக தலைவர் விஜயகாந்த், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கை:

பாமக தலைவர் அன்புமணி: தமிழகத்தில் குரூப்-2 முதன்மைத்தேர்வு ஏராளமான குளறுபடிகளுடன் மிகவும் தாமதமாகத் தொடங்கியுள்ளது. பல தேர்வு மையங்களில் வினாத்தாள்களின் பதிவு எண்கள் மாறியிருந்ததுதான் இக்குழப்பத்துக்கும், தாமதத்துக்கும் காரணம். பல இடங்களில் தேர்வர்களுக்கு வினாத்தாள்கள் வழங்கப்பட்டு, அவற்றின் பதிவு எண்கள் தவறாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, பின்னர் திரும்பபெறப்பட்டுள்ளது. எனவே இன்றைய தேர்வை உடனடியாக ரத்து செய்துவிட்டு, அனைத்து குளறுபடிகளையும் களைந்து, வேறு ஒருநாளில், இத்தேர்வை டிஎன்பிஎஸ்சி மீண்டும் நடத்தவேண்டும்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/02/26/large/951550.jpgஈரோடு கிழக்கில் நாளை வாக்குப்பதிவு - தீவிரமாக நடந்த பிரச்சாரம் ஓய்ந்தது

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்த நிலையில், நாளை (27-ம் தேதி) வாக்குப்பதிவு நடக்க உள்ளது. ஈரோட்டில் நேற்று பிரச்சாரம் செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின், மகளிர் உரிமைத் தொகை குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டார். இது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது என, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அதிமுக சார்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா காலமானதை அடுத்து, இத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, நாளை (27-ம்தேதி) வாக்குப்பதிவு நடக்க உள்ளது. இத்தேர்தலில் காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் மற்றும் சுயேச்சைகள் உட்பட 77 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/02/26/large/951153.jpgகிருஷ்ணகிரி - குப்பம் பேருந்துகள் மகாராஜாகடை வழியாக இயக்க கோரிக்கை: போக்குவரத்து கழகம் பதிலளிக்க உத்தரவு

சென்னை: கிருஷ்ணகிரியிலிருந்து ஆந்திர மாநிலம் குப்பம் செல்லக்கூடிய அரசு மற்றும் தனியார் பேருந்துகளை மகாராஜாகடை வழியாக இயக்க கோரிய வழக்கில் தமிழக மற்றும் ஆந்திர அரசு போக்குவரத்து கழகங்கள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் மகாராஜாகடையை சேர்ந்த ஜெகநாதன் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், கிருஷ்ணகிரியில் இருந்து ஆந்திர மாநில எல்லையில் உள்ள குப்பம் வரை மகாராஜாகடை வழியாக தமிழ்நாடு மற்றும் ஆந்திரா மாநிலங்களின் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்க உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Friday, February 24, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/02/25/large/950697.jpgஅண்ணன் ஓபிஎஸ்ஸின் தாயார் மறைவால் வேதனை: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் காலமானார். அவருக்கு வயது 95. வயது முதிர்வின் காரணமாக அவரின் உடல்நிலை மோசமாகி வந்தது. இதற்காக தேனி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/02/24/large/950692.jpgமுன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் காலமானார்

பெரியகுளம்: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் காலமானார். அவருக்கு வயது 95.

தேனி மாவட்டத்தில் பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான பெரியகுளத்தில் வசித்துவந்தார் பழனியம்மாள். கடந்த சில நாட்களாக வயது முதிர்வின் காரணமாக அவரின் உடல்நிலை மோசமாகி வந்தது. இதற்காக சிகிச்சை பெற்றுவந்தார். நேற்றுமுன்தினம் தனது தாயாரை பார்க்க பன்னீர்செல்வம் பெரியகுளம் சென்றார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Thursday, February 23, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/02/24/large/949079.jpgபழனிசாமிக்கு தற்காலிக வெற்றிதான்: தினகரன் கருத்து

திருச்சி: அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பு, பழனிசாமிக்கு கிடைத்த தற்காலிக வெற்றிதான் என அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: அதிமுக பொதுக்குழு செல்லும் என உச்ச நீதிமன்றம் கூறியிருந்தாலும், அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எடுத்துக் கொள்ளவில்லை. எனவே இந்தத் தீர்ப்பு, பழனிசாமிக்கு கிடைத்த தற்காலிக வெற்றி தான். இதனால், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேண்டுமானால் 5 ஆயிரம் வாக்குகள் கூடுதலாக பெற வழி வகுக்கும்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/02/24/large/950458.jpgதிருப்பூரில் குடியிருப்புகளுக்கு அருகே இயங்கும் கல்குவாரிகளின் உரிமத்தை ரத்து செய்ய வலியுறுத்தல்

திருப்பூர்: குடியிருப்புகளுக்கு அருகே இயங்கும் கல் குவாரிகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டுமென, திருப்பூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம், ஆட்சியர் சு.வினீத் தலைமையில் நேற்று நடைபெற்றது. பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் பங்கேற்றனர். ஊத்துக்குளி மொரட்டுப்பாளையத்தில் குடியிருப்புகளுக்கு அருகே இயங்கும் 3 கல் குவாரிகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்,

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/02/24/large/950499.jpgஒரு சிலரை தவிர யார் வந்தாலும் சேர்த்துக் கொள்வோம்: பழனிசாமி அறிவிப்பு

மதுரை: ஒரு சிலரைத் தவிர யார் வந்தாலும் அதிமுகவில் சேர்த்துக் கொள்வோம் என்று அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி மதுரையில் தெரிவித்தார்.

மதுரையில் நேற்று செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் அளித்த பதில்:

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/02/24/large/950063.jpgபழனிசாமி தரப்பினரால் நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழு செல்லும் - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு முழு விவரம்

புதுடெல்லி: ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் என முக்கிய தீர்ப்பளித்துள்ள உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லுமா, செல்லாதா என்பதை சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள பிரதான சிவில் வழக்குகள்தான் முடிவு செய்யும் என உத்தரவிட்டுள்ளனர்.

கடந்த 2022 ஜூலை 11-ம் தேதிநடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், இடைக்கால பொதுச் செயலாளராக பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வமும், அவரது ஆதரவாளர்களும் கட்சியில் இருந்துநீக்கப்பட்டனர். இதை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரம் தொடர்பாக மீண்டும் சென்னை உயர் நீதிமன்றமே விசாரிக்க உத்தரவிட்டது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/02/23/large/949005.jpgசிவிங்கி புலிகளை போல ஆப்பிரிக்காவில் இருந்து குள்ளநரிகளையும் கொண்டுவர வேண்டும் - வேதனையை பகிர்ந்த விவசாயிகள்

சேலம்: ஆப்பிரிக்காவில் இருந்து, சிவிங்கி புலிகளை இந்தியாவுக்கு கொண்டு வந்தது போல, விளை பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றி, மயில்களைக் கட்டுப்படுத்த, குள்ள நரிகளை கொண்டு வர வேண்டும் என்று வேடிக்கையாக தங்கள் வேதனையை விவசாயிகள் தெரிவித்தனர்.

சேலம் மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா தலைமை வகித்தார். கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது: மலைப்பகுதிகள், வனப்பகுதிகள் ஆகியவற்றை ஒட்டிய விளை நிலங்களில், காட்டுப்பன்றிகள் புகுந்து, விளைபயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/02/23/large/949002.jpgமீனவர் பிரச்சினை: தூதரக வழிமுறைகள் மூலம் உறுதியான நடவடிக்கை எடுத்திட மத்திய அமைச்சருக்கு ஸ்டாலின் கடிதம்

சென்னை: தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய தாக்குதலைக் கண்டித்தும், இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தியும் ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் இன்று (23.02.2023) நடத்திய தாக்குதல் சம்பவத்தை மிகுந்த வேதனையுடன் சுட்டிக்காட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். இத்தாக்குதல் நமது மீனவர்கள் மீது இலங்கை நாட்டினர் 15.02.2023 அன்று நடத்திய சில நாட்களுக்குள் நிகழ்ந்துள்ளதையும் குறிப்பிட்டுள்ளார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Wednesday, February 22, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/02/23/large/948006.jpgஉலக தாய்மொழி நாள் விழாவுக்கு உரிமை கொண்டாட வேண்டியது தமிழகம்: புலவர் செந்தலை ந.கவுதமன் கருத்து

மயிலாடுதுறை: மயிலாடுதுறைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் உலகத் தாய்மொழி நாள் விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. சங்க நிறுவனர் தலைவர் ஜெனிபர் ச.பவுல்ராஜ் தலைமை வகித்தார். சங்கத்தின் சிறப்புத் தலைவர் சு.சிவலிங்கம், மயிலாடுதுறை உலகத் தமிழ்க் கழகத் தலைவர் சிவ.கோ, தமிழ்த் தேசிய முன்னணி நிர்வாகி கு.பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மயிலாடுதுறை திருக்குறள் பேரவைத் தலைவர் சி.சிவசங்கரன், தமிழ் ஆராய்ச்சியாளர் பேரவைத் தலைவர் துரை.குணசேகரன் ஆகியோர், தமிழக அரசின் தமிழ்ச்செம்மல் விருது பெற்ற ஜெனிபர் ச.பவுல் ராஜின் தமிழ்ப் பணிகள் குறித்து பாராட்டிப் பேசினர். பாவலர் கு.ரா எழுதிய ‘சூரியனைத் துயிலெழுப்பு’ என்ற நூலை, மதுரை கவிஞர் ரேவதி அழகர்சாமி வெளியிட, மன்னம்பந்தல் அ.வ.அ.கல்லூரி தமிழாய்வுத் துறை தலைவர் சு.தமிழ்வேலு பெற்றுக் கொண்டு, நூலை பாராட்டிப் பேசினார். பாவலர் கு.ரா ஏற்புரையாற்றினார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/02/23/large/947997.jpgஓபிஎஸ் அணி நிர்வாகிகள் திடீர் விலகல்: பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் ஐக்கியம்

ஈரோடு: ஓபிஎஸ் அணியின் ஈரோடு மாவட்ட செயலாளர் முருகானந்தம் உள்ளிட்ட நிர்வாகிகள் பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், அதிமுக சார்பில் கே.எஸ்.தென்னரசு போட்டியிடுவதாக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவித்தார்.

இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் தொடங்கியபோது, செந்தில் முருகன் என்பவரை வேட்பாளராக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். ஆனால், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கே.எஸ்.தென்னரசு அதிமுக வேட்பாளராக தேர்வு பெற்று அவருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/02/23/large/947988.jpgமருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்த ரூ.1,942 கோடியில் 58 மருத்துவ கட்டிடங்கள்: அடுத்த வாரம் முதல்வர் தொடங்கி வைப்பதாக அமைச்சர் தகவல்

சென்னை: தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்த ரூ.1,942 கோடியிலான பணிகளை முதல்வர் ஸ்டாலின் அடுத்த வாரம் தொடங்கி வைக்க உள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இந்த ஆண்டில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டில் அரசுப் பள்ளி மாணவர்கள் 465 பேர் எம்பிபிஎஸ், 117 பேர் பிடிஎஸ் என மொத்தம் 582 பேர் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர். சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், அவர்களுக்கு கையடக்க கணினிகளை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/02/23/large/947955.jpgசீமான் பிரச்சாரத்தில் கல் வீச்சு தாக்குதல் - சூழலை கட்டுக்குள் கொண்டு வந்ததாக போலீஸ் தகவல்

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரத்தின்போது மாடியிலிருந்து கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகாவை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சூரம்பட்டி நால்ரோடு பணிமனையில் இருந்து நேற்று பிரச்சாரம் செய்தார். காவேரி சாலை பகுதியில் பொதுக்கூட்டம் நடக்கவிருந்தது. அதற்காக பேரணி சென்றநிலையில் வாகனத்தில் நின்றபடி சீமான், வேட்பாளர் மேனகா உள்ளிட்டோர் பிரச்சாரம் செய்தனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/02/22/large/947953.jpgஆதிதிராவிடர் துணைத்திட்ட நிதியில் ரூ.5,318 கோடி பயன்படுத்தப்படவில்லை: ஆர்டிஐ-யில் அதிர்ச்சி தகவல்

மதுரை: ஆதிதிராவிடர் துணைத் திட்டத்திற்கு (SCSP) கடந்த 6 ஆண்டுகளாக ஒதுக்கிய நிதியில் ரூ.5,318 கோடி நிதி பயன்படுத்தவில்லை என்பதாக ஆர்டிஐ அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

ஆதிதிராவிடர் மக்களை சமூக, பொருளாதாரம் மற்றும் கல்வி நிலைகளில் இதர பிரிவினருக்கு இணையாக உயர்த்திட வழிவகுக்கும் ஆதிதிராவிடர் துணைத் திட்டம் தமிழ்நாட்டில் கடந்த 1980-1981-ஆம் நிதியாண்டிலிருந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்படி கடந்த 2016-17 முதல் 2021-22 நிதியாண்டுகள் வரையிலான 6 நிதியாண்டுகளில் ஒதுக்கப்பட்ட நிதி, அதிலிருந்து திட்டங்களுக்கு செலவிடப்பட்ட தொகை மற்றும் பயன்படுத்தாமல் மீதம் இருக்கும் நிதியின் விபரங்களை மதுரை கே.கே.நகரை சமூக ஆர்வலர் கார்த்திக் என்பவர் தகவல் பெறும் உரிமைச் சட்டம் மூலம் பெற்றுள்ளார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/02/22/large/947952.jpgஅக்கப்போர் செய்வதை விடுத்து தனக்கான வேலையை ஆளுநர் எப்போது செய்வார்? - திமுக காட்டம்

சென்னை: "ஆளுநர் மாளிகையை 'காபி ஷாப்' போல மாற்றிக் கொண்டு, வேலைவெட்டி இல்லாமல் இருப்பவர்களை அழைத்து, சந்திப்புகளை நடத்துவதும் அதனை ராஜ்பவன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடுவதுமே ஆளுநரின் செயல்பாடாக இருக்க முடியாது; இருக்கவும் கூடாது" என்று தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என்.ரவி மாநிலத்திற்குப் பொதுவானவராக செயல்படாமல், ஓர் அரசியல் கட்சிப் பிரமுகர் போலவே தொடர்ந்து செயல்பட்டு வருவதை தமிழ்நாட்டு மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அரசியல் சட்டத்தின்படி பதவிப் பொறுப்பு ஏற்றுக்கொண்ட ஆளுநர், இந்திய அரசியல் சட்டம் வலியுறுத்தும் மதச்சார்பின்மைக் கொள்கைக்கு மாறாக, சனாதன தர்மம் என்றெல்லாம் பேசி, ஒரு கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் போலவே செயல்பட்டு வருகிறார். கல்வி நிலையங்களில் நடைபெறும் விழாக்களில் மதரீதியாகப் பேசுவது அவரது வழக்கமாக உள்ளது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Tuesday, February 21, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/02/22/large/947596.jpgதர்மம் வெற்றிபெற அதிமுகவை ஆதரிக்க வேண்டும்: ஈரோட்டில் ஜி.கே.வாசன் பிரச்சாரம்

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் தர்மம் வெற்றி பெற அதிமுகவை ஆதரிக்க வேண்டும், என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசை ஆதரித்து, பிராமண பெரிய அக்ரஹாரம் பகுதியில், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் பேசியதாவது: அதிமுக ஆட்சியில் இருந்த போது செயல்படுத்தப்பட்ட தாலிக்குத் தங்கம், மடிக்கணினி, அம்மா கிளினிக் போன்ற திட்டங்ளை முடக்கி, ஏழையின் வயிற்றில் திமுக அடிக்கிறது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/02/22/large/947755.jpgஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - 2 அறைகளில் வாக்கு எண்ணிக்கை நடத்த முடிவு

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் 77 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 238 வாக்குச்சாவடி மையங்களில், 5 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், 1 கட்டுப்பாட்டு கருவி, 1 வி.வி.பேட் ஆகியவை பயன்படுத்தப்படவுள்ளன. வாக்குப்பதிவானது வரும் 27-ம் தேதி காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடக்கவுள்ளது.

இந்நிலையில், அதிக வேட்பாளர்கள் போட்டியிடுவதால், வாக்காளர்கள் தாங்கள் விரும்பும் வேட்பாளரைத் தேர்வு செய்யும் வகையில் வாக்குப்பதிவு நேரத்தை கூடுதலாக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிக்க வாய்ப்பில்லை; மாலை 6 மணிக்கு வாக்குச்சாவடியில் இருப்பவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, அவர்கள் காத்திருந்து வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/02/22/large/947711.jpgதிருவள்ளூர் | கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 136 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்: விழிப்புணர்வு கருத்தரங்கில் ஆட்சியர் தகவல்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் சுமார் 136 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, ஐ.ஆர்.சி.டி.எஸ். தொண்டு நிறுவனம் மற்றும் சில்ட்ரன் பிலிவ் ஆகியவை சார்பில் குழந்தை திருமணத்தை தடுப்பது குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நேற்று திருவள்ளூரில் நடைபெற்றது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/02/22/large/947854.jpgஈரோடு கிழக்கு | வாக்காளர்களுக்கு வீடு வீடாக கொலுசு, குக்கர் விநியோகம் - வீடுகளில் குறியீடு இடப்பட்டது குறித்து விசாரணை

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் பரவலாக வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருள் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கிடையே, ஒவ்வொரு வீட்டிலும் எத்தனை வாக்குகள் இருக்கின்றன என்ற எண்ணிக்கை குறித்து, வீடுகளின் முகப்பு சுவரில், குறியீடு இடப்பட்டிருப்பது குறித்து தேர்தல் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஈரோடு கிழக்கில் வாக்காளர்களை கொட்டகையில் அடைத்து வைத்து பணம் விநியோகம் செய்வது, சுற்றுலா அழைத்துச் செல்வது, தலைவர்களின் பிரச்சாரத்தில் பங்கேற்கச் செய்து, அதற்கு பணம் வழங்குவது, அசைவ விருந்து வழங்குவது என பல முறைகேடுகள் நடப்பதாக தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/02/21/large/947464.jpg“குளத்தின் அலைகளில் என் சிறு வயது நினைவுகள்” - சொந்த ஊரில் நெகிழ்ந்த முதல்வர் ஸ்டாலின்

திருவாரூர்: இரண்டு நாள் பயணமாக தனது சொந்த ஊரான திருவாரூர் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோ வைரலாகி வருகின்றன.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக திருவாரூர் சென்றுள்ளார். சென்னையில் இருந்து இன்று பகல் 11.15 மணிக்கு விமானத்தில் திருச்சிக்குச் சென்றவர் முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கிருந்து கார் மூலம் தஞ்சாவூர் வழியாக திருவாரூர் சென்றுள்ளார். நாளை மன்னார்குடி மாவட்ட ஊராட்சித் தலைவர் தலையாமங்கலம் பாலு இல்லத் திருமணத்தை தலைமை வகித்து நடத்தி வைக்கிறார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Monday, February 20, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/02/21/large/947172.jpgபட்டா வழங்கிய திண்டுக்கல் ஆட்சியருக்கு பாசி மாலை அணிவித்த நரிக்குறவர் இன மக்கள்

திண்டுக்கல்: வீட்டுமனைப் பட்டா வழங்கிய திண்டுக்கல் மாவட்ட ஆட்சியருக்கு பாசிமாலை அணிவித்து நரிக்குறவர் இன மக்கள் நன்றி தெரிவித்தனர்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் ச.விசாகன் தலைமையில் நேற்று நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் வே.லதா முன்னிலை வகித்தார். அனைத்துத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். பொதுமக்கள் தங்கள் குறை களை மனுக்களாக வழங்கினர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/02/21/large/947325.jpg‘தி இந்து' முன்னாள் ஆசிரியர் ஜி.கஸ்தூரியின் மனைவி கமலா காலமானார்

சென்னை: ‘தி இந்து' நாளிதழின் முன்னாள் ஆசிரியர் ஜி.கஸ்தூரியின் மனைவியும், சுற்றுச்சூழல் சங்க நிறுவனருமான கமலா கஸ்தூரி (89) சென்னையில் நேற்று காலமானார்.

‘தி இந்து' நாளிதழுக்கு நீண்டகால ஆசிரியராக இருந்தவர் ஜி.கஸ்தூரி. இவர் 2012-ம் ஆண்டு காலமானார். இவரது மனைவி கமலா கஸ்தூரி. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அதிக ஆர்வம் கொண்டவர். இவர் வயது முதிர்வால் சென்னையில் நேற்று காலமானார்.கமலா குறித்து,கஸ்தூரி அண்டு சன்ஸ் தலைவர் என்.ரவியின் மனைவி சுதா ரவி கூறியதாவது:

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/02/21/large/947218.jpgமகா சிவராத்திரி விழாவின்போது அபிஷேகத்துக்காக பக்தர்கள் கொடுத்த பால் பாக்கெட்களை குப்பையில் வீசிய கோயில் நிர்வாகம்

சென்னை: வில்லிவாக்கம் அகத்தீஸ்வரர் கோயிலில் மகா சிவராத்தி நாளன்று அபிஷேகத்துக்காக பக்தர்கள் கொடுத்த பால் பாக்கெட்களை கோயில் நிர்வாகம் குப்பைத்தொட்டியில் வீசியது பக்தர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வில்லிவாக்கம் அகத்தீஸ்வரர் கோயில், 500 ஆண்டுகள் பழமையானது. அங்கு கடந்த18-ம் தேதி நடந்த மகா சிவராத்திரி விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். அன்றிரவு தொடங்கி விடிய விடிய 4 காலபூஜை நடந்தது. 4 கால பூஜையிலும் சுவாமிக்கு அனைத்துவித அபிஷேகங்களும் செய்யப்படும்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/02/20/large/946926.jpgஆர்பி.உதயகுமார் மகள் உள்பட 51 ஜோடிகளுக்கு சமத்துவ சமுதாய திருமண விழா - பிப்., 23-ல் பழனிசாமி நடத்தி வைக்கிறார்

மதுரை: மதுரை அருகே டி.குன்னத்தூரில் ஒரே மேடையில் முன்னாள் அமைச்சர் ஆர்பி.உதயகுமார் மகள் உள்பட 51 ஜோடிகளுக்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் கே.பழனிசாமி சமத்துவ சமுதாய திருமணம் நடத்தி வைக்கிறார். இந்த விழா ஏற்பாடுகளை நேற்று முன்னாள் அமைச்சர் ஆர்பி.உதயகுமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

எம்ஜிஆரின் 106-வது பிறந்த நாள், ஜெயலலிதாவின் 75 வது பிறந்த நாள் மற்றும் 51வது ஆண்டு அதிமுக பொன்விழாவை முன்னிட்டு ஜெ., பேரவையின் சார்பில், மதுரை மாவட்டம் டி.குன்னத்தூரில் உள்ள ஜெயலலிதா கோவிலில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஏற்பாட்டில் வரும் பிப்ரவரி 23-ம் தேதி சமத்துவ சமுதாய திருமண விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மகள் பிரியதர்ஷினி-முரளி மணமக்கள் உட்பட 51 ஏழை, எளிய மணமக்களுக்கு சமத்துவ சமுதாய திருமணத்தை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் நடத்தி வைக்கிறார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Sunday, February 19, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/02/20/large/946633.jpgதமிழகத்தில் அதிமுக தலைமையில் தேஜகூ செயல்படுகிறது: ஈரோட்டில் ஏ.சி.சண்முகம் விளக்கம்

தமிழகத்தில் அதிமுக தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி செயல்படுகிறது, என புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் கூறினார்.

ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள வந்த அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/02/20/large/946855.jpgவேங்கைவயல் விசாரணை அறிக்கை: தேசிய பட்டியலின ஆணையம் உத்தரவு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர்த் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்டது கடந்த டிச. 26-ம் தேதி தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். எனினும், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

இந்த சம்பவத்தில் தலையிட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தேசியப் பட்டியலின ஆணையத்தின் துணைத் தலைவர் அருண் ஹல்தாரிடம், அம்பேத்கர் மக்கள் இயக்க செயல் தலைவர் இளமுருகு முத்து பிப். 7-ம் தேதி கோரிக்கை மனு அளித்தார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/02/20/large/946850.jpgகிருஷ்ணகிரியில் ராணுவ வீரர் கொலை: திமுகவை கண்டித்து நாளை பாஜக உண்ணாவிரத போராட்டம்

கிருஷ்ணகிரி: ராணுவ வீரரை கொலை செய்த திமுக நிர்வாகியை கண்டித்து நாளை தமிழக பாஜக சார்பில் சென்னையில் உண்ணாவிரத போராட்டத்தை மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கை: திமுகவினரின் அராஜகங்களும், அத்துமீறல்களும், குற்றச் செயல்களும், மக்கள்விரோதப் போக்கும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. பட்டப் பகலில், நாட்டைக் காக்கும் பிரபு என்கிற ராணுவ வீரர், திமுகவின் நிர்வாகியால் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். பாஜக பட்டியலினப் பிரிவின் தலைவர் தடா பெரியசாமி இல்லத்தின் மீதும், கார் மீதும் கொலை வெறி தாக்குதல் நடைபெற்றிருக்கிறது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/02/20/large/946834.jpgவிற்பனை அதிகரிப்பால் தினமும் 60 லட்சம் லிட்டர் பால் பதப்படுத்தும் வசதி: உட்கட்டமைப்புகளை மேம்படுத்த ஆவின் திட்டம்

சென்னை: பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை அதிகரிக்கும் நிலையில், அடுத்த 3 ஆண்டுகளில் தினமும் 60 லட்சம் லிட்டர் பாலை பதப்படுத்தும் வகையில், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ஆவின் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் பால் மற்றும் பால் பொருட்களை விற்பனை செய்யும் பணியில் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் (ஆவின்) ஈடுபட்டு வருகிறது. ஆவின் நிறுவனம் வாயிலாக தினமும் 30 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இது கொழுப்புச் சத்து அடிப்படையில் பிரிக்கப்பட்டு, சிவப்பு, ஆரஞ்சு, பச்சை, நீல நிற பாக்கெட்டுகளில் அடைத்து, விற்பனை செய்யப்படுகிறது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/02/20/large/946827.jpgபிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி காலமானார்: திரையுலகினர், ரசிகர்கள், பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

சென்னை: பிரபல நடிகர் மயில்சாமி மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 57. மயில்சாமியின் உடலுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நடிகர் சங்கத் தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி உள்ளிட்ட திரையுலகினர், ஏராளமான ரசிகர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

சென்னை சாலிகிராமத்தில் குடும்பத்துடன் வசித்துவந்த நடிகர் மயில்சாமி, சிவராத்திரியை முன்னிட்டு சென்னை கேளம்பாக்கம் அருகே உள்ள மேகநாதேஸ்வரர் கோயிலுக்கு நேற்று முன்தினம் இரவு சென்றார். டிரம்ஸ் சிவமணியின் இசை நிகழ்ச்சி அங்கு நடந்தது. இதில் பங்கேற்ற மயில்சாமி, கோயிலில் இருந்து நேற்று அதிகாலை 3 மணி அளவில்வீடு திரும்பினார். 3.30 மணி அளவில் அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கெனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/02/19/large/946346.jpgஅரசியலுக்கு வரும் பெண்களுக்கு அன்னை சத்தியவாணி முத்து ஒரு பாடம் - முதல்வர் ஸ்டாலின்

சென்னை: ஞாயிறு (பிப்.19) அன்று மாலை திராவிட முன்னேற்ற கழக மகளிரணியின் சார்பில் சென்னை அடையாற்றில் அமைந்துள்ள முத்தமிழ்ப் பேரவையில் நடத்தப்பட்ட அன்னை சத்தியவாணி முத்து அவர்களின் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டு திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் சிறப்புரை ஆற்றினார்.

அதில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...