Thursday, November 30, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/12/01/large/1161723.jpgசென்னை, புறநகர் மாவட்டங்களில் கனமழையால் சாலைகளில் வெள்ளம்: வங்கக்கடலில் டிச.3-ல் புயல் உருவாகிறது

சென்னை: வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி டிச.3-ம் தேதி புயலாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின், கண்காணிப்பு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு விரைந்து செல்ல உத்தரவிட்டுள்ளார்.

அந்தமான் அருகே உருவாகி, வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், 3-ம் தேதி வாக்கில் புயலாகவும் வலுப்பெறும். 4-ம் தேதி அதிகாலை வடதமிழகம் - தெற்கு ஆந்திர கடலோரபகுதிகளில் நிலவக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/11/30/large/1161328.jpgஈரோட்டில் பேருந்துகள் மோதி விபத்து: 30-க்கும் மேற்பட்டோர் காயம்

ஈரோடு: ஈரோடு அருகே தனியார் பனியன் நிறுவன ஊழியர்களுடன் சென்ற பேருந்து மீது, அரசு பேருந்து மோதியதில் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் செயல்பட்டு வரும் தனியார் பனியன் நிறுவனத்தை சேர்ந்த பேருந்து, பணியாளர்களை ஏற்றிக் கொண்டு, வியாழக்கிழமை இரவு 9 மணியளவில், ஈரோடு நோக்கி சென்று கொண்டு இருந்தது. அந்த பேருந்தை தொடர்ந்து அதே நிறுவனத்தை சேர்ந்த மற்றொரு பேருந்தும், திருப்பூரில் இருந்து ஈரோடு நோக்கி வந்த அரசு பேருந்தும் வந்து கொண்டு இருந்தன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Wednesday, November 29, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/11/30/large/1161238.jpgதேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலையில் பின்னடைவு: மருத்துவர்கள் தீவிர சிகிச்சை

சென்னை: மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்தின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக் குறைவால் சில ஆண்டுகளாக கட்சி மற்றும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் வீட்டிலேயே ஓய்வில் இருந்து வருகிறார். கடந்த சட்டப்பேரவை தேர்தலிலும் அவர் போட்டியிடவில்லை. அவர் தனது குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைதளத்தில் பதிவிடப்படுகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/11/30/large/1161239.jpgவங்கக் கடலில் உருவாகும் புயல் காரணமாக டிச.2, 3-ல் சென்னை உள்ளிட்ட 5 மாவட்டத்தில் மிக கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

வங்கக் கடலில் உருவாகும் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் வரும் 2, 3-ம் தேதிகளில் மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப் பெற்றுள்ளது. இது தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் டிச. 2-ம் தேதி புயலாக வலுப்பெறும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/11/30/large/1160850.jpgமழை தொடர்பான புகார்களுக்கு உதவி எண்களை அறிவித்துள்ள பெருநகர சென்னை மாநகராட்சி

சென்னை: மழை தொடர்பான புகார்களை தெரிவிக்க பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கட்டணமில்லா டோல் ஃப்ரி எண் 1913, எண்கள் 04425619204, 04425619206 மற்றும் வாட்ஸ்அப் +91 94454 7720 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் புதன்கிழமை (நவ.29) அன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில், சென்னை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் கனமழை பதிவானது. தலைநகர் சென்னையின் முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கிய காரணத்தால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர். மழை காரணமாக போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/11/29/large/1160849.jpg“விஜயகாந்த் விரைவில் பூரண உடல் நலம் பெற வேண்டும்” - இயக்குநர் அமீர்

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை கடந்த 24 மணி நேரத்தில் சீராக இல்லை என்றும். அவருக்கு அடுத்த சில நாட்களுக்கு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது என அவர் சிகிச்சை பெற்று வரும் சென்னை - மியாட் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், விரைவில் பூரண உடல் நலம் பெற வேண்டும் என இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது. “திரையுலகின் நான் கண்ட நல்ல மனிதர்களில் முக்கியமானவரான கேப்டன் விஜயகாந்த் அவர்களின் உடல்நிலை சீராக இல்லை என்ற தகவலைக் கேள்விப்பட்டு அதிர்ச்சியுற்றேன்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Tuesday, November 28, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/11/29/large/1160721.jpg‘நம்மை காக்கும் 48’ பயனாளிகள் எண்ணிக்கை 2 லட்சம் ஆனது: சுகாதாரத் துறை அமைச்சர் தகவல்

சென்னை: தமிழகத்தில் ‘இன்னுயிர் காப்போம் - நம்மை காக்கும் 48’ திட்டத்தில் பயனாளிகள் எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்துள்ளது. அவர்களது சிகிச்சைக்காக தமிழக அரசு ரூ.173.77 கோடி வழங்கியுள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

தமிழகத்தில் விபத்து உயிரிழப்புகளை தடுக்கும் நோக்கில் ‘இன்னுயிர் காப்போம் - நம்மை காக்கும் 48’ என்ற திட்டம் கடந்த 2021 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி, தமிழக எல்லைக்குள் நிகழும் சாலை விபத்துகளில் சிக்கி மருத்துவமனையில் சேர்க்கப்படுபவர்களுக்கு முதல் 48 மணி நேரம் வரை கட்டணமின்றி மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும். இதற்கு தமிழக அரசு சார்பில் ரூ.1 லட்சம் வரை வழங்கப்படும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/11/29/large/1160726.jpgபிரபாகரன் குறித்த சர்ச்சை கருத்து: தமிழச்சி தங்கபாண்டியனுக்கு காங்கிரஸ், பாஜக கண்டனம்

சென்னை: விடுதலை புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனை தேசிய தலைவர் என திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரது கருத்துக்கு காங்கிரஸ், பாஜக சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்சென்னை திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன், ஆங்கில இணையதள நிறுவனம் நடத்திய நேர்காணலில் பங்கேற்றார். அப்போது, ஆளுமைமிக்க தலைவர் ஒருவரை சந்திப்பது குறித்த கேள்விக்கு, அவர் தேசிய தலைவர் பிரபாகரன் என தெரிவித்ததுடன், அவரை சந்தித்தால் முள்ளிவாய்க்கால் சம்பவத்துக்கு மன்னிப்பு கோருவேன் என்றும் தெரிவித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://ift.tt/2fRVvXu டன் நிலக்கரியை முழுவதுமாக வழங்க மின்வாரியம் கோரிக்கை

சென்னை: தமிழ்நாடு மின்வாரியத்துக்குச் சொந்தமான அனல்மின் நிலையங்களில் மின்னுற்பத்திக்குத் தேவைப்படும் நிலக்கரி மத்திய அரசின் நிலக்கரி சுரங்கங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து கொள் முதல் செய்யப்படுகிறது.

குறிப்பாக, ஒடிசா மாநிலத்தில் உள்ள தால்சர், ஐ.பி.வேலி ஆகிய சுரங்கங்களிலிருந்து கொண்டு வரப்படுகிறது. தினசரி இந்த சுரங்கங்களிலிருந்து நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டு கப்பல் மூலம் தமிழகத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/11/28/large/1160331.jpgஉத்தராகண்ட் தொழிலாளர்கள் மீட்பு: மீட்புக்குழுவினருக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி

சென்னை: உத்தராகண்ட் மாநிலத்தின் சில்க்யாரா சுரங்கத்தில் கடந்த 17 நாட்களாக சிக்கியிருந்த 41 தொழிலாளர்களையும் மீட்ட மீட்புக்குழுவினருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில். “உத்தரகாசி சுரங்கப்பாதை சரிவில் சிக்கிய 41 தொழிலாளர்களும் 17 சவாலான நாட்களுக்குப் பிறகு வெற்றிகரமாக மீட்கப்பட்டது நிம்மதியளிக்கிறது. மீட்புப் பணியில் அயராத முயற்சிகளை மேற்கொண்ட துணிச்சலான மீட்புக் குழுக்கள் மற்றும் எலிவளை சுரங்கத் தொழிலாளர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். துணிச்சலான 41 தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு வலிமையும் உறுதியும் கிடைக்க வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Monday, November 27, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/11/28/large/1160246.jpgசென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் சிலை திறப்பு: நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்பு

சென்னை: சட்டப்பேரவையில் அறிவித்தபடி, சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் முழுஉருவ சிலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். உத்தர பிரதேசமுன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ்,வி.பி.சிங்கின் மனைவி சீதா குமாரி,மகன் அஜயா சிங் உள்ளிட்ட குடும்பத்தினர் பங்கேற்றனர்.

உத்தர பிரதேச முதல்வராகவும், மத்திய நிதி, வர்த்தகம், பாதுகாப்பு, வெளியுறவுத் துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர் வி.பி.சிங். தேசிய முன்னணி என்ற கூட்டணியை உருவாக்கி கடந்த 1989-ம் ஆண்டு நாட்டின் பிரதமரானார். 11 மாத அவரது ஆட்சியில் பல்வேறு சாதனைகள் புரிந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/11/27/large/1159829.jpgமதுரை | நகைக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

மதுரை: மதுரை மாநகரில் இயங்கி வரும் நகைக்கடை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். திங்கட்கிழமை அன்று மாலை 7 மணி அளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

மதுரை - தெற்கு மாசி வீதியில் இயங்கி வரும் ஜானகி ஜூவல்லர்ஸ் கடையில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கடையில் தீ பரவிய நிலையில் அனைவரும் அங்கிருந்து வெளியேறி உள்ளனர். இருந்தும் இந்தக் கடையில் பணியாற்றி வந்த 49 வயதான மோதிலால், மூன்றாவது மாடியில் சிக்கிக் கொண்டுள்ளார். தகவல் கிடைத்து சம்பவ இடத்துக்கு தீயணைப்பு படையினர் விரைந்து வந்துள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Sunday, November 26, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/11/27/large/1159744.jpgதுப்புரவு பணியால் ஏழைகளுக்கு உதவி - கோவை தொழிலாளிக்கு பிரதமர் மோடி பாராட்டு

கோவை: ஏழை குழந்தைகளுக்கு உதவிவரும் கோவை தொழிலாளிக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

வானொலியில் நேற்று ஒலிபரப்பான ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: தமிழகத்தின் கோவையில் வசிப்பவர் லோகநாதன். ஏழை குழந்தைகள் கிழிந்த ஆடைகளை அணிந்திருப்பது சிறு வயதிலேயே இவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி இருக்கிறது. அதன்பிறகு, இதுபோன்ற குழந்தைகளுக்கு உதவுவதாக சபதம் எடுத்த லோகநாதன், தன்வருமானத்தில் ஒரு பகுதியை அவர்களுக்கு தானமாக அளிக்கத் தொடங்கினார். பணப் பற்றாக்குறை ஏற்பட்டபோது, கழிப்பறைகளைகூட சுத்தம் செய்துள்ளார். இதுவரை 1,500-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு உதவி செய்துள்ளார். இத்தகைய முயற்சிக்காக அவரை பாராட்டுகிறேன். நாடு முழுவதும் இதுபோன்ற பல முயற்சிகள் நமக்கு ஊக்கம் அளிப்பதுடன், புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தையும் தூண்டுகிறது” என்றார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/11/27/large/1159747.jpgஅந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகிறது

சென்னை: அந்தமான் அருகே இன்று உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 29-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைகண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். இது வரும் 29-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/11/27/large/1159320.jpgதிருடுபோன 26 பவுன் நகை ஊர் வழக்கப்படி தண்டோரா மூலம் மீட்பு: மதுரையில் போலீஸை வியப்படைய வைத்த கிராமம்

மதுரை: மதுரை திருமங்கலம் அருகே கிராம வழக்கப்படி, திருடுபோன 26 பவுன் நகை மற்றும் ரூ. 20 ஆயிரம் தண்டோரோ மூலம் மீட்டு, உரியவரிடம் ஒப்படைக்கப்பட்ட நிகழ்வை கண்டு காவல்துறையினர் வியந்தனர்.

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகிலுள்ளது பெரிய பொக்கம்பட்டி. இவ்வூரைச் சேர்ந்தவர் ராகவன் (51). இவரது மனைவி பாண்டியம்மாள் (45). இருவரும் 2 நாளுக்கு முன்பு வழக்கம்போல் வேலைக்குச் சென்றனர். மதியம் வீடு திரும்பிய போது, வீட்டுக் கதவு திறக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பீரோவில் இருந்த சுமார் 26 பவுன் நகை மற்றும் ரூ. 21,000 திருடு போனது தெரிந்தது. இதுபற்றி தகவல் அறிந்த சிந்துப்பட்டி போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். பட்டப்பகலில் வெளியூர் நபர்கள் யாரும் வந்து திருட வாய்ப்பில்லை என்பதால் உள்ளூர் நபருக்கே தொடர்பு இருக்கலாம் என சந்தேகித்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/11/26/large/1159319.jpgதென் மாவட்ட அமமுக கூடாரத்தை அசைத்துப் பார்க்கும் அதிமுக - என்ன செய்யப்போகிறார் டிடிவி.தினகரன்?

மதுரை: மதுரை, தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்களை சேர்ந்த அமமுக முக்கிய நிர்வாகிகள் ஒருவர் பின் ஒருவராக அதிமுகவில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். அமுமுக கூடாரத்தை அதிமுக அசைத்துப்பார்த்து வருவதால் டிடிவி.தினகரன், இதற்கு என்ன எதிர்வினை ஆற்றப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு அதிமுகவில் சசிகலா, டிடிவி.தினகரன் இருவரும் கட்சியையும், ஆட்சியையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் உடனடியாக கொண்டு வந்தனர். அதன்பிறகு அவர்கள் முதலமைச்சராக நியமித்த கே.பழனிசாமிக்கும், அவர்களுக்கும் இடையே மோதல் ஏற்படவே அதிமுகவை கே.பழனிசாமி தன்னுடைய முழு கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார். அதிமுகவின் பொதுச்செயலாளரான கே.பழனிசாமி ஆனபிறகு சசிகலா, டிடிவி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம் போன்றோரை கட்சியை விட்டே நீக்கினார். டிடிவி.தினகரன், மதுரை மாவட்டம் மேலூரில் அமமுக என்ற தனிக்கட்சி தொடங்கி ஒரளவு சிறப்பாகவே செயல்பட்டார். தென் மாவட்டங்களில் கடந்த சட்டமன்ற தேர்தலில் அமமுக பெற்ற வாக்கு வங்கி, அதிமுக ஆட்சியை பிடிக்காமல் போனதிற்கு முக்கிய காரணமாக பேசப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Saturday, November 25, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/11/26/large/1159145.jpg”தவறான அர்த்தத்தில் பேசவில்லை; வருத்தம் தெரிவிக்க முடியாது” - குஷ்பு திட்டவட்டம்

சென்னை: தவறான அர்த்தத்தில் ‘சேரி’ என்ற வார்த்தையை பயன்படுத்தாத போது ஏன் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.

நடிகை த்ரிஷா விவகாரத்தில் மன்சூர் அலிகானுக்கு தேசிய மகளிர்ஆணைய உறுப்பினர் குஷ்பு கண்டனம் தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து மணிப்பூர் விவகாரத்தில் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என குறிப்பிட்டு, குஷ்புவை அவதூறாக ஒருவர் எக்ஸ் தளத்தில் கூறியிருந்தார். அவருக்கு பதிலளித்தபோது, உங்களைப் போன்று சேரி மொழியில் என்னால் பேச முடியாது என குஷ்பு தெரிவித்திருந்தார். இதில் சேரி என்ற வார்த்தையை குஷ்பு பயன்படுத்தியது சர்ச்சையானது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/11/26/large/1159221.jpgஅரசியலமைப்பு சட்டம் முழுமை பெறாத ஆவணம்: சட்ட பல்கலைக்கழக விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து

சென்னை: இந்திய அரசியலமைப்புச் சட்டம் முழுமை பெறாத ஆவணமாக உள்ளது என்று சட்டப் பல்கலை விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் சார்பில் இந்திய அரசியலமைப்பு சட்டதின விழா சென்னை பெருங்குடியில் உள்ள அதன் வளாகத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அதன்பின்னர் ஆளுநரின் முன்னிலையில் சட்ட பல்கலைக்கழக மாணவர்கள் அரசியலமைப்பு தின உறுதி மொழியை ஏற்றுக் கொண்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/11/26/large/1159263.jpgஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகளை மாநில மொழிகளில் நடத்தக் கோரி வழக்கு

சென்னை: ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற குடிமைப் பணிக்கான தேர்வுகளை அரசியல் சாசனத்தின் 8-வது பட்டியலில் உள்ள 22 மாநில மொழிகளிலும் நடத்த உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

போட்டித் தேர்வுகளில் பங்கேற்போருக்கு பயிற்சி அளிக்கும் மதுரையைச் சேர்ந்த எஸ்.பாலமுருகன் என்பவர், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/11/26/large/1159257.jpgஅந்தமான் அருகே நாளை புதிய காற்றழுத்ததாழ்வுப் பகுதி உருவாகிறது: டிச.1 வரை மழை நீடிக்கும்

சென்னை: அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை உருவாகிறது. தமிழகத்தில் வரும் டிச.1-ம் தேதி வரை மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதையொட்டியுள்ள தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது வரும் 29-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். கிழக்கு திசைக் காற்றில் வேக மாறுபாடு நிலவுவதால், தமிழகத்தில் சில இடங்களிலும், புதுச்சேரி மாநிலத்திலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை முதல் டிச.1-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Friday, November 24, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/11/25/large/1158752.jpgமுதல்வர் குறித்து அவதூறு பரப்பியதாக ஓய்வுபெற்ற டிஜிபி ஆர்.நடராஜ் மீது வழக்கு

திருச்சி: தமிழக முதல்வர் குறித்து சமூகவலைதளத்தில் அவதூறு பரப்பியதாக ஓய்வுபெற்ற டிஜிபி ஆர்.நடராஜ் மீது சைபர் க்ரைம் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

திருச்சி எஸ்.பி. வருண்குமாரிடம், திருச்சி மத்திய மாவட்டதிமுக வழக்கறிஞரணி துணை அமைப்பாளர் ஷீலா அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/11/25/large/1158800.jpgபரந்தூர் விமான நிலையத்துக்கு நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியீடு - காஞ்சியில் தர்ணாவில் ஈடுபட்டவர்கள் கைது

காஞ்சிபுரம்: பரந்தூர் புதிய விமான நிலையத்துக்காக 3,774 ஏக்கர் நிலம் கையகப்படுத்த அரசு அனுமதி அளித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட போராட்டக் குழுவினர் கைது செய்யப்பட்டனர். இதை கண்டித்து பெண்கள் கருப்புக் கொடியுடன் ஆர்ப்பாட்டம் செய்ததால், அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் மற்றும் சுற்றியுள்ள 20 கிராமங்களை உள்ளடக்கி 5,476 ஏக்கர் பரப்பில் சென்னையின் 2-வது பசுமை விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டுள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/11/25/large/1158797.jpgமணல் விற்பனை குறித்த விசாரணைக்கு ஆஜராகுமாறு 10 ஆட்சியருக்கு சம்மன் - அமலாக்க துறைக்கு எதிராக அரசு வழக்கு

சென்னை: சட்டவிரோத மணல் குவாரிகள் மற்றும் விற்பனை தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத் துறை அனுப்பிய சம்மனை எதிர்த்து தமிழக அரசு மற்றும் 5 மாவட்ட ஆட்சியர்கள் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நவ.27-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

தமிழகத்தில் உள்ள முக்கியமான மணல் குவாரிகளில் அரசு நிர்ணயம் செய்த அளவைவிட கூடுதலாக மணல் அள்ளி சட்டவிரோதமாக விற்பனை செய்ததாகவும், மணல் ஒப்பந்த குவாரிகளில் கிடைத்த வருமானம் மூலம் சட்டவிரோத பணப் பரிமாற்றங்கள் நடந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/11/24/large/1158443.jpg"முதலில் தமிழன், அடுத்துதான் இந்தியன்" - அன்புமணி ராமதாஸ் பேச்சு

சென்னை: "உலகில் எங்கு சென்றாலும் முதல் பெருமை நான் தமிழன். பெருமை மட்டுமல்ல, ஆணவம் இருக்க வேண்டும். அடுத்துதான் இந்தியன்." என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும், சென்னை உயர் நீதிமன்றத்தை தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் ஆகிய இரு கோரிக்கைகளை முன்வைத்து உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டு பேசினார். "உலகின் மிக பழமையான மொழி, தமிழ். நம் தாய் மொழியை தமிழ்நாட்டிலேயே பாதுகாக்க வேண்டும் என 40 ஆண்டுகளாக போராடுகிறோம். இந்த நிலைக்கு தான் இன்று தமிழ்நாட்டில் தமிழ் இருக்கிறது. தமிழ்நாட்டிலேயே தமிழ் மெல்ல மறைந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் தமிழை காப்பாற்ற வேண்டும் என்ற நிலைக்கு வந்துவிட்டோம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Thursday, November 23, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/11/24/large/1158357.jpgஅடுக்குமாடி குடியிருப்பு பத்திரப்பதிவுக்கு புதிய நடைமுறை: முத்திரைத் தீர்வையும் 3 சதவீதம் வரை குறைப்பு

சென்னை: அடுக்குமாடி குடியிருப்பு பதிவில் கட்டிடம், பிரிக்கப்படாத பாகம் சேர்த்து மொத்த மதிப்புக்கு பதிவு செய்யும் புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் முத்திரைத் தீர்வையை கட்டிடத்தின் மதிப்பை பொறுத்து அதிகபட்சமாக 3 சதவீதம் வரை தமிழக அரசு குறைத்துள்ளது.

இதுகுறித்து பதிவுத்துறை செயலர் ஜோதி நிர்மலாசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் தற்போது அடுக்குமாடி குடியிருப்புகள் குறித்த ஆவணங்கள் பதிவில் 2 ஆவணங்களாக பதிவு செய்யும் நடைமுறை பின்பற்றப்படுகிறது. அடிநிலம் பொறுத்து பிரிக்கப்படாத பாகத்துக்கு கிரையமாக ஓர் ஆவணமாகவும் கட்டிடப் பகுதியை பொறுத்து கட்டுமான உடன்படிக்கையாக ஓர் ஆவணமாகவும் பதியப்படுகிறது. குடியிருப்புகள் விற்பனையின்போது அடிநிலம், கட்டிடம் சார்ந்த பகுதிக்கு ஒரே விலையே நிர்ணயிக்கப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/11/23/large/1157930.jpgஅமிர்த பாரத் ஸ்டேஷன் திட்டம்: ரூ.14 கோடியில் தரம் உயர்த்தப்படும் சிதம்பரம், விருத்தாசலம் ரயில் நிலையங்கள்

புதுச்சேரி: அமிர்த பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ் சிதம்பரம் மற்றும் விருத்தாசலம் ரயில் நிலையங்களை ரூ.14.9 கோடியில் தரம் உயர்த்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. முதல் கட்ட பணிகளை மார்ச்சுக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

திருச்சிராப்பள்ளி ரயில்வே கோட்டத்தில் உள்ள ரயில் நிலையங்களில் சிதம்பரமும், விருத்தாசலமும் குறிப்பிடத்தக்க முக்கிய நிலையங்களாகும். இந்த நகரங்களில் இருந்து ரயில் சேவை சென்னை, திருச்சி, மதுரை போன்ற முக்கிய நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் மற்றும் விருத்தாசலம் ஆகியவை திருச்சிராப்பள்ளி கோட்டத்தில் உள்ள அமிர்த் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ் உள்ள நிலையங்களாகும். தற்போது இந்த ரயில் நிலையங்கள் தரம் உயர்த்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Wednesday, November 22, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/11/23/large/1157833.jpgஅமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய 2 இடங்களில் வருமான வரி சோதனை

திருவண்ணாமலை/ கல்பாக்கம்: திருவண்ணாமலை அடுத்த தென்மாத்தூரில் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான அருணை மருத்துவக் கல்லூரி, கல்பாக்கம் அருகே ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் தொழிலதிபர் ராஜபிரகாஷ் வீடு ஆகிய 2 இடங்களில் வருமான வரி துறையினர் சோதனை நடத்தினர்.

திருவண்ணாமலை மாவட்டம் தென்மாத்தூர் கிராமத்தில் அருணை கல்வி நிறுவன வளாகத்தில் உள்ள பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலுவின் வீடு, அவருக்கு தொடர்புடைய இடங்கள், அவரது மகன் கம்பன் வீடு, ஒப்பந்ததாரர் வெங்கட் வீடு மற்றும் அலுவலகம் உள்ளிட்ட 20 இடங்களில் வருமான வரி துறையினர் கடந்த 3-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை சோதனை மேற்கொண்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Tuesday, November 21, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/11/22/large/1157328.jpgதமிழக காவல் துறையில் புதிதாக தீவிரவாத தடுப்பு பிரிவு தொடக்கம்: ரூ.60 கோடி நிதி ஒதுக்கீடு

சென்னை: தமிழக காவல் துறையில் புதிதாக தீவிரவாத தடுப்பு பிரிவு தொடங்க அரசு அனுமதி அளித்துள்ளது. முதல் கட்டமாக சென்னை, கோவை, மதுரை, நெல்லை ஆகிய 4 மாவட்டங்களில் அலுவலகம் அமைக்கப்பட உள்ளது.

கோவையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கார் சிலிண்டர் வெடிப்பு ஏற்பட்டது. ஜமேஷா முபீன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுதொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) நடத்திய விசாரணையில், அவர் தற்கொலைப் படை தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. அவரது கூட்டாளிகள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/11/21/large/1156856.jpg“நாடாளுமன்ற தேர்தலில் ஒட்டுமொத்த இந்தியாவும் பாஜகவுக்கு ரெய்டு விடும்” - அமைச்சர் உதயநிதி @ நாமக்கல்

நாமக்கல்: “பிரதமர் அவர்களே எவ்வளவு ரெய்டுகள் வேண்டுமானாலும் விடுங்க. ஆனால் வரும் பாராளுமன்ற தேர்தலில் ஒட்டுமொத்த இந்தியாவும் பாஜகவுக்கு ரெய்டு விட போவது நிச்சயம்” என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். நாமக்கல் கிழக்கு, மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் நாமக்கல் பொம்மைக்குட்டை மேட்டில் நடைபெற்றது.

திமுக மாநில இளைஞரணி செயலாளரும், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது. சேலத்தில் டிசம்பர் 17-ம் தேதி திமுக இளைஞரணி இரண்டாவது மாநில மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டில் பங்கேற்க வருமாறு இளைஞர் அணியினருக்கு அழைப்பு விடுக்கும் வகையில், மாவட்ட வாரியாக சென்று வருகிறேன். தற்போதைய முதல்வர், மாநில திமுக இளைஞரணி மாநாட்டை முதன்முறையாக நெல்லையில் நடத்தினார். அவர் சாதாரண கிளை பதவியில் இருந்து உயர்பதவிக்கு வந்தவர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Monday, November 20, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/11/21/large/1156779.jpgதரமான ஓட்டுநர்களை உருவாக்க உதவி ரயில் ஓட்டுநரின் பணிகளை தினமும் கண்காணிக்க உத்தரவு

சென்னை: ரயில் ஓட்டுநர்கள் ஒவ்வொரு பயணத்துக்கு பிறகும் உதவி ஓட்டுநர்களின் செயல்திறனை மதிப்பிட வேண்டும் என்று ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

சமீபகாலமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரயில் தடம்புரள்வது, சிக்னல் பிரச்னை, ரயில்கள் நேருக்கு நேர் மோதல், தீ விபத்து போன்ற விபத்துகள் தொடர்ந்து நேரிட்டன. குறிப்பாக, ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பாஹாநகர் பஜார் பகுதியில் கடந்த ஜூன் 2-ம் தேதி நடந்த விபத்தில் 280 பேர் உயிரிழந்தனர். 1,100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Sunday, November 19, 2023

https://ift.tt/NaMoXct இடங்களில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு பேரணி: தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

சென்னை: தமிழகம் முழுவதும் 55 இடங்களில்நடைபெற்ற ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

விஜயதசமியை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் 55 இடங்களில் அணிவகுப்பு பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த ஆர்எஸ்எஸ் இயக்கம் சார்பில் அனுமதி கோரப்பட்டது. ஆனால், இதற்கு தமிழக காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது. எனவே, ஆர்எஸ்எஸ் இயக்கம் உயர் நீதிமன்றத்தை நாடியது. இதையடுத்து, உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/11/20/large/1155725.jpgஇளைஞர்களுக்கு உயர்கல்வி கிடைக்கச் செய்தவர் தியாகராசர் கல்லூரி நிறுவனர்: நிர்மலா சீதாராமன் @ மதுரை

மதுரை: தனக்கு கிடைக்காத போதிலும், இளைஞர்களுக்கு உயர்கல்வி கிடைக்கச் செய்தவர் தியாகராசர் கல்லூரியின் நிறுவனர் தியாகராசர் என இக்கல்லூரியின் பவளவிழா குறித்த நூல் வெளியீட்டு விழாவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

மதுரை தியாகராசர் கல்லூரியின் பவள விழாவை முன்னிட்டு (75-ஆண்டு) கல்வியின் திறந்த கதவுகள் (தி டோர்ஸ் டு எஜூகேஷன்) என்ற நூல் வெளியீட்டு விழா கல்லூரி வளாகத்தில் நேற்று நடந்தது. இக்கல்லூரியின் செயலர் க.ஹரி.தியாகராசன் வரவேற்று பேசினார். விழாவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்று, நூலை வெளியிட்டு பேசியதாவது:

இக்கல்லூரியை உருவாக்கிய கருமுத்து தியாகராசர் சாந்தி நிகேதன், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் போன்ற இடங்களுக்கு நேரில் சென்றவர். நதிக்கரை அமைந்துள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் போன்று, நாமும் நதிக்கரையில் கல்லூரி ஒன்று தொடங்க வேண்டும் என திட்டமிட்டார். இதன்படி, வைகை நதிக்கரை மற்றும் தெப்பக்குளம் கரையையொட்டி இக்கல்லூரியை தோற்றுவித்தார். அவருக்கு உயர்கல்வி படிக்க, வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், மதுரையிலுள்ள இளைஞர்களுக்கு இக்கல்லூரி மூலம் உயர் கல்வி வாய்ப்பு கிடைக்கச் செய்தவர். இக்கல்லூரிக்கு காமராசர் உட்பட சிறந்த தலைவர்கள் வருகை புரிந்துள்ளனர். இவர்களின் கையெழுத்தை பார்க்கும்போது, அதுவே இக்கல்லூரியின் பெருமையை காட்டுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Saturday, November 18, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/11/19/large/1155657.jpgவிசைப் படகுகளுக்கு வழங்கப்படும் அதிவேக டீசல் எரிஎண்ணெய் அளவை உயர்த்தி வழங்க அரசாணை வெளியீடு

சென்னை: மீனவளத்துறை செயலர் வெளியிட்ட அறிக்கை. தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்ட மீன்பிடி விசைப் படகுகளுக்கு வழங்கப்படும் வரிவிலக்களிக்கப்பட்ட அதிவேக டீசல் எரிஎண்ணெய் அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே டீசல் எரிஎண்ணெய் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் மீன்பிடி தொழில் லாபகரமானதாக இல்லை என்பதால், தற்போது வழங்கப்பட்டு வரும் மானிய டீசல் எரிஎண்ணெய் அளவை உயர்த்தி வழங்க தமிழக அரசுக்கு பல்வேறு மீனவ சங்கங்கள் கோரிக்கை விடுத்திருந்தன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/11/19/large/1155654.jpgதமிழக சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்தில் ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 மசோதா மீண்டும் நிறைவேற்றம்

சென்னை: ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட, பல்கலைக்கழகங்கள் திருத்தச் சட்டங்கள் தொடர்பான 10 மசோதாக்களும் நேற்று நடைபெற்ற சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் மீண்டும் நிறைவேற்றப்பட்டன.

தமிழக சட்டப்பேரவையில் கடந்த 2020-ம் ஆண்டு முதல், பல்கலைக்கழகங்கள் தொடர்பான சட்டத்திருத்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டன. இந்த மசோதாக்கள் ஒப்புதல் அளிக்கப்படாமல் நிலுவையில் இருந்தன. எனவே, மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலநிர்ணயம் செய்யக் கோரி, உச்ச நீதிமன்றத்தை தமிழக அரசு நாடியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/11/19/large/1155312.jpgசாலை வசதி இல்லாததால் பாம்பு கடித்த முதியவரை தூளி கட்டி சிகிச்சைக்கு அழைத்துச் சென்ற அவலம் @ தருமபுரி

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் சாலை வசதி இல்லாத மலை கிராமத்தில், பாம்பு கடித்த முதியவரை தூளி கட்டி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

பென்னாகரம் வட்டம் வட்டுவன அள்ளி ஊராட்சியில் அலகட்டு, ஏரிமலை, கோட்டூர் மலை ஆகிய மலை கிராமங்கள் உள்ளன. இந்த மலை கிராமங்களுக்கு இதுவரை போதிய சாலை வசதி ஏற்படுத்தப்படவில்லை. தனித்தனி மலை முகடுகளில் உள்ள இந்த கிராமங்களில் தலா 100 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்த மலை கிராமங்களில் தொடக்கப் பள்ளி, மின்சாரம் ஆகிய இரு வசதிகளைத் தவிர மருத்துவம் போன்ற வசதிகள் எதுவும் கிடையாது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Friday, November 17, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/11/18/large/1155239.jpgதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு | 21 அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கைப்படி, ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 21 பேருக்கு எதிராக துறை ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் பணி தொடங்கியுள்ளது என உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கடந்த 2018-ம் ஆண்டு மே 22-ம் தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் நடத்திய போராட்டத்தின்போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. பின்னர், அந்த ஆணையத்தின் புலன் விசாரணை பிரிவு அளித்த அறிக்கை மற்றும் தமிழக அரசு அளித்த அறிக்கையின் அடிப்படையில் இந்த வழக்கை தேசிய மனித உரிமை ஆணையம் முடித்து வைத்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/11/18/large/1155240.jpgசொகுசு வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்தலாம்: போக்குவரத்து ஆணையர் உத்தரவு

சென்னை: சொகுசு வாகனங்களை வாடகைக்குப் பயன்படுத்த அனுமதித்தும், மேக்ஸி கேப் வாகனங்களுக்கு ஆயுள் வரி செலுத்த 4 ஆண்டுகள் அவகாசம் வழங்கியும்போக்குவரத்து ஆணையர் ஏ.சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் கூறியதாவது: சொந்த பயன்பாட்டுக்கான வாகனங்களின் ஆயுள் வரியை 15, 20 ஆண்டுகளுக்கும் சேர்த்து ஒருமுறை செலுத்தினால் போதுமானது. அதுவே வணிகரீதியாக பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு காலாண்டு அல்லதுஆண்டுதோறும் வரி செலுத்த வேண்டும். இந்நிலையில், அண்மையில் மோட்டார் வாகன வரிகளை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/11/18/large/1155229.jpgசெய்யாறு பகுதியை சேர்ந்த 6 விவசாயிகள் மீதான குண்டர் தடுப்பு சட்டம் ரத்து: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

சென்னை: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகாவில் 6 விவசாயிகள் மீது போடப்பட்ட குண்டர் தடுப்பு சட்டம், முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் ரத்து செய்யப்பட்டது.

இதுதொடர்பாக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டத்தில் 645 ஹெக்டேர், 2,300 ஹெக்டேர் பரப்பில் உள்ள 2 சிப்காட் தொழிற்பூங்காக்களில் 68 நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. நேரடியாக 59 ஆயிரம் பேர், மறைமுகமாக 1.75 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். சிப்காட்டை விரிவாக்க மக்கள் கோரிக்கை விடுத்ததால், மேல்மா உள்ளிட்ட 8 கிராமங்களில் 3,174 ஏக்கர் நிலஎடுப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் 7 ஏக்கர் மட்டுமே நஞ்சை நிலம் ஆகும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/11/18/large/1155231.jpgஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்களை மீண்டும் நிறைவேற்ற சட்டப்பேரவை இன்று கூடுகிறது

சென்னை: தமிழக ஆளுநர் திருப்பியனுப்பிய மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்புவதற்காக, தமிழக சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் இன்று நடைபெறுகிறது.

தமிழக சட்டப்பேரவையில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக பல்வேறு சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டன. ஆனால், 10-க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Thursday, November 16, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/11/17/large/1154765.jpgபல்கலைக்கழக சட்டத் திருத்தம் உள்ளிட்ட 10 மசோதாவை திருப்பி அனுப்பினார் ஆளுநர்

சென்னை: சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய பல்கலைக்கழகங்கள் திருத்த மசோதாக்கள் உள்ளிட்ட10 மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பி உள்ளார். அவற்றை மீண்டும் நிறைவேற்றுவதற்காக சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் நாளை நடைபெறுகிறது.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் சமீபத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில்,‘‘சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் மற்றும் அரசாணைகள், அரசின் கொள்கை முடிவுகளுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் வழங்காமல் நீண்ட காலமாக கிடப்பில் போட்டிருக்கிறார். அவற்றுக்கு ஆளுநர் விரைவில் ஒப்புதல் வழங்க உத்தரவிட வேண்டும். இதற்கு கால வரம்பு நிர்ணயிக்க வேண்டும்’’ என்று கோரப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/11/16/large/1154444.jpgகரோனா காலத்தில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றிய பயிற்சி மருத்துவர்களுக்கு கோவிட் பணிச்சான்று: சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: கரோனா காலத்தில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றியவர்களுக்கு, அரசு மருத்துவர்கள் தேர்வில் வழங்கப்படும் கூடுதல் மதிப்பெண்களைப் பெற பயிற்சி மருத்துவர்களுக்கும் உரிமை உள்ளது என உத்தரவிட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றம், அவர்களுக்கு "கோவிட் பணி" சான்று வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் 1,021 மருத்துவர்கள் காலிப் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்களை வரவேற்று, தமிழ்நாடு மருத்துவ பணிகள் தேர்வு வாரியம் 2022, அக்டோபர் 11-ல் அறிவிப்பாணை வெளியிட்டது. கடந்த ஏப்ரல் மாதம் தேர்வு நடத்தப்பட்ட நிலையில், அரசு மருத்துவமனைகளில் கரோனா பணியாற்றிய மருத்துவர்கள் தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி கரோனா காலத்தில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றிய மருத்துவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்படும். அதற்கு கோவிட் பணிச் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும் என அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/11/16/large/1154441.jpgதமிழகத்தில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

சென்னை: தமிழகத்தில் பல்வேறு அரசு துறைகளின் ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா வெளியிட்டுள்ள அறிவிப்பு:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Wednesday, November 15, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/11/16/large/1154348.jpgமார்க்சிஸ்ட் தலைவர் சங்கரய்யா காலமானார்: முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள், பல்வேறு கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலி

சென்னை: சுதந்திரப் போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவருமான என்.சங்கரய்யா உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். அவருக்கு வயது 102. அவரது உடலுக்கு முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள், கம்யூனிஸ்ட் கட்சிகள் உட்பட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரான என்.சங்கரய்யா, சென்னை குரோம்பேட்டை நியூகாலனி 5-வது பிரதான சாலையில் வசித்து வந்தார். சளி, காய்ச்சல் காரணமாக ஆக்சிஜன் குறைவு ஏற்பட்டதை அடுத்து, கடந்த 13-ம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில் நேற்று காலை 9.30 மணிக்கு அவர் காலமானார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Tuesday, November 14, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/11/15/large/1153744.jpgகாற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறுவதால் வானிலை மையம் எச்சரிக்கை: தமிழகம் முழுவதும் கனமழை நீடிக்கும்

சென்னை: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் எஸ்.பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று (நவ.14) காலை ஒருகாற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள், ஆந்திர கடலோர பகுதிகளில் இன்று நிலவக்கூடும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/11/14/large/1153258.jpgசாத்தூர் | அரசுப் பேருந்து கவிழ்ந்ததில் பெண் பயணி ஒருவர் உயிரிழப்பு: 10க்கும் மேற்பட்டோர் காயம்

சாத்தூர்: விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே சாலையோரத்தில் அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் பெண் பயணி ஒருவர் உயிரிழந்தார். 10க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர்.

திருநெல்வேலி மாவட்டம் திருவேங்கடபுரத்திலிருந்து சிவகாசி நோக்கி அரசுப் பேருந்து ஒன்று இன்று (நவம்பர் 14ம் தேதி) பிற்பகல் புறப்பட்டது. பேருந்தை, ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பண்டிதநாதன்பட்டியைச் சேர்ந்த தங்கமணி என்பவர் ஓட்டிவந்தார். வெம்பக்கோட்டை அலமேலுமங்கைபுரம் அருகே வந்தபோது, மழையால் சாலையோரத்தில் சேறும் சகதியுமாக இருந்துள்ளது. அப்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சேற்றில் சிக்கி சக்கரம் வழுக்கிச்சென்றதால் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Monday, November 13, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/11/14/large/1153170.jpgவங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்தம்: 10 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை

சென்னை: சென்னை மற்றும் புறநகர், டெல்டா உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மைய உயர் அதிகாரி பா.கீதா வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் தாக்கத்தால், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாகக்கூடும். இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நவ.16-ம் தேதி நிலவக்கூடும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/11/13/large/1152688.jpgகடலூர், புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம்

சென்னை: வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் புதுச்சேரியில் மழை பொழிந்து வருகிறது. இந்நிலையில், நாளை (நவ.14, செவ்வாய்க்கிழமை) கடலூர் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், வேலூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/11/13/large/1152651.jpgகுன்னூரில் வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை: ஒரு நாள் முழுவதும் பதுங்கியிருந்து நள்ளிரவில் வெளியேறியது

குன்னூர்: குன்னூரில் வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை, ஒரு நாள் முழுவதும் வீட்டினுள் பதுங்கியிருந்தால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். நள்ளிரவில் வீட்டிலிருந்து சிறுத்தை வெளியேறியதாக வனத்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள புரூக்லாண்ட் பகுதியில் உள்ள வீட்டில் வளர்க்கும் நாயை துரத்திக்கொண்டு வந்த சிறுத்தை அப்பகுதியில் உள்ள வீட்டினுள் புகுந்தது.உடனடியாக குன்னூர் வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு மீட்பு குழுவினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Sunday, November 12, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/11/13/large/1152645.jpg‘இதைச் செய்தால் அதிமுகவுக்கு நீங்கதான் பிரசாந்த் கிஷோர்’ - பூத் கமிட்டிக்கு ‘ஐடியா’ கொடுக்கும் ஐடி விங்

திருச்சி: மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும் அதிமுக வாக்குச்சாவடி (பூத் கமிட்டி) முகவர்களுக்கு பொதுவெளியில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என அதிமுக ஐ.டி விங் அறிவுரைகளை வழங்கியுள்ளது.

மக்களவைத் தேர்தல் அடுத்த மே மாதம் நடைபெற உள்ளது. பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகளும், தமிழகத்தில் திமுக, அதிமுக போன்ற மாநிலக் கட்சிகளும் தற்போதே தேர்தல் பணிகளை தொடங்கி உள்ளன. இந்நிலையில், அதிமுக ஐ.டி விங் சார்பில் வாக்குச்சாவடி முகவர்களுக்கு ‘ரத்தத்தின் ரத்தங்களே’ என்ற தலைப்பில் அனுப்பப்பட்டுள்ள வாட்ஸ் - அப் செய்தி வருமாறு:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/11/13/large/1152636.jpgசென்னையில் காற்று மாசுபாடு மேலும் அதிகரிப்பு - பல இடங்களில் 100ஐ தாண்டியது காற்றின் தரக்குறியீடு

சென்னை: தீபாவளி பண்டிகையை அடுத்து சென்னையின் பல இடங்களில் காற்று மாசு அதிகரித்தது. பல இடங்களில் காற்றின் தரக்குறியீடு 100ஐ தாண்டியது.

தீபாவளி பண்டிகையன்று பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடிக்க பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் அறிவுரைகளை சென்னை காவல் துறை அறிவுறுத்தியிருந்தது. தீபாவளி பண்டிகை தினமான இன்று, உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்படி அனுமதிக்கப்பட்ட சுற்றுச்சூழலுக்கு உகந்த ரசாயனப் பொருட்களால் தயாரிக்கப்பட்ட பசுமை பட்டாசுகள் மட்டும் விற்கப்படவும், வெடிக்கப்படவும் வேண்டும் என்று காவல் துறை அறிவுறுத்தியிருந்தது. மேலும், காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரையிலும் என்று 2 மணி நேரங்கள் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...