Thursday, November 23, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/11/24/large/1158357.jpgஅடுக்குமாடி குடியிருப்பு பத்திரப்பதிவுக்கு புதிய நடைமுறை: முத்திரைத் தீர்வையும் 3 சதவீதம் வரை குறைப்பு

சென்னை: அடுக்குமாடி குடியிருப்பு பதிவில் கட்டிடம், பிரிக்கப்படாத பாகம் சேர்த்து மொத்த மதிப்புக்கு பதிவு செய்யும் புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் முத்திரைத் தீர்வையை கட்டிடத்தின் மதிப்பை பொறுத்து அதிகபட்சமாக 3 சதவீதம் வரை தமிழக அரசு குறைத்துள்ளது.

இதுகுறித்து பதிவுத்துறை செயலர் ஜோதி நிர்மலாசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் தற்போது அடுக்குமாடி குடியிருப்புகள் குறித்த ஆவணங்கள் பதிவில் 2 ஆவணங்களாக பதிவு செய்யும் நடைமுறை பின்பற்றப்படுகிறது. அடிநிலம் பொறுத்து பிரிக்கப்படாத பாகத்துக்கு கிரையமாக ஓர் ஆவணமாகவும் கட்டிடப் பகுதியை பொறுத்து கட்டுமான உடன்படிக்கையாக ஓர் ஆவணமாகவும் பதியப்படுகிறது. குடியிருப்புகள் விற்பனையின்போது அடிநிலம், கட்டிடம் சார்ந்த பகுதிக்கு ஒரே விலையே நிர்ணயிக்கப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...