
புதுடெல்லி: அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர்தான் என்றும், அமைச்சரவையின் முடிவுக்கு எதிராக அவர் தனித்த கண்ணோட்டத்துடன் செயல்பட முடியாது என்றும், பேரறிவாளனை விடுவிப்பதே ஒரே தீர்வு என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில், 29 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன், தனது தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்