
திருவொற்றியூரில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு பகுதியில் இடிந்த வீடுகளை அகற்றும் பணி நேற்று தொடங்கியது. அனைத்து குடியிருப்புகளையும் இடித்துவிட்டு, அனைவருக்கும் புதிய வீடுகள் ஒதுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவொற்றியூர் கிராமத் தெரு பகுதியில் 336 வீடுகள் இடம்பெற்ற நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு வளாகம் உள்ளது. இதில் ஒரு குடியிருப்பில் இருந்த 28 வீடுகள் கடந்த 27-ம் தேதி திடீரென இடிந்தன. முன்கூட்டியே பொதுமக்கள் வெளியேற்றப்பட்டதால் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்