Monday, December 27, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/12/28/large/751670.jpgஎம்பிசி வகுப்பினருக்கு பழைய இடஒதுக்கீட்டு முறை; எம்இ, எம்டெக்., மருத்துவ படிப்புகளுக்கு விரைவில் கலந்தாய்வு: உச்ச நீதிமன்ற உத்தரவைப் பின்பற்ற தமிழக அரசு முடிவு

சென்னை: எம்பிசி வகுப்பினருக்கு பழைய இடஒதுக்கீட்டு முறையில் எம்இ, எம்டெக், எம்ஆர்க் மற்றும் மருத்துவம், கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வை விரைவில் நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதன்படி, நடப்பு கல்வி ஆண்டில் பொறியியல் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது. இதனிடையே, வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள்ஒதுக்கீட்டை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள்தொடரப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், 10.5 சதவீத இடஒதுக்கீட்டுக்கான அரசாணையை ரத்து செய்தது. உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்துதமிழக அரசும் பாமகவும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளன. அவற்றை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், இதுதொடர்பாக உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. தற்போது இவ்வழக்கு நிலுவையில் உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...