
தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையில் வடக்கு மண்டல அளவில் வேலூர் மாவட்ட பிரிவு சிறப்பாக செயல்பட்டு தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக அதிக வழக்குகளை பதிவு செய்து முன்னணியில் உள்ளனர்.
அரசு நிர்வாகத்தில் ‘ஊழல் ஒழிப்பு’ என்பது சவால் நிறைந்த பணியாக இருந்து வருகிறது. அரசின் திட்டங்களை நிறைவேற்றவும், நிர்வாகத்தை வெளிப்படைத்தன்மை யுடன் செயல்படுத்த வேண்டிய அதிகாரிகள் பலர் தங்களுக்கான பணியை செய்யவே லஞ்சம் பெறுவது வாடிக்கையாகி வருகிறது. இதனால், அரசு நிர்வாகத்தில் கோப்புகள் தேங்குவது அரசின் மீதான மக்களின் நம்பிக்கையை குலைக்கும் செயலை ஒடுக்க லஞ்ச ஒழிப்புத்துறை மாநில அளவில் இயங்கி வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்