Tuesday, September 27, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/09/28/large/875044.jpgசுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை தயாரிக்கும் சிறு நிறுவனங்களை ஊக்குவிக்க வேண்டும்: மாநில அரசுகளுக்கு மத்திய இணையமைச்சர் வலியுறுத்தல்

சென்னை: சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை தயாரிக்கும் சிறு நிறுவனங்களை மாநில அரசுகள் ஊக்குவிக்க வேண்டும் என மத்தியசுற்றுச்சூழல் துறை இணையமைச்சர் அஸ்வினி குமார் சவ்பே வலியுறுத்தியுள்ளார். ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்குக்குமாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் கண்காட்சி மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான மாநாட்டை சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் மத்திய சுற்றுச்சூழல் துறை இணையமைச்சர் அஸ்வினி குமார் சவ்பே நேற்று தொடங்கி வைத்தார்.மாநாட்டில் அவர் பேசியதாவது:

ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கை ஒழிக்க மத்தியஅரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. பிளாஸ்டிக் மாசுவை கட்டுப்படுத்துவதில் சர்வதேச அளவில் இந்தியா முன்னணியில் உள்ளது. ஒவ்வோர் ஆண்டும் 8 மில்லியன் டன் பிளாஸ்டிக் கடலில் கலக்கப்படுவது வேதனை அளிக்கிறது. இதைத் தவிர்க்க பொதுமக்களின் பங்களிப்பு அவசியம். பிளாஸ்டிக்கை தடை செய்வதன் மூலம் புதிய தொழில்கள் உருவாகின்றன. பிளாஸ்டிக்குக்கு மாற்றான சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை தயாரிக்கும் சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சுயசார்பு இந்தியாவை அடைய உதவுகின்றன. இத்தகையநிறுவனங்களை மாநில அரசுகள் ஊக்குவிக்க வேண்டும். பிளாஸ்டிக் மாற்றுப் பொருட்கள் குறித்த விழிப்புணர்வு கண்காட்சியை மாநில அரசுகள் தொடர்ந்து நடத்த வேண்டும். மீண்டும் மஞ்சப்பை, துணிப் பை பயன்படுத்துவோம், பூமியை ரசிப்போம் என்று அவர் கூறினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...