Thursday, October 27, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/10/28/large/888341.jpgகோவை கார் வெடிப்பு வழக்கை விசாரிக்கும் என்.ஐ.ஏ அதிகாரிகளின் பின்னணி

கோவை: கோவையில் பரபரப்பை ஏற்படுத்திய கார் வெடிப்பு வழக்கை விசாரிக்கும் என்.ஐ.ஏ அதிகாரிகளான டிஐஜி வந்தனா, எஸ்.பி ஸ்ரீஜித் ஆகியோர், அடிப்படைவாத வழக்குகளை சிறப்பாக கையாண்ட அனுபவம் உள்ளவர்கள் ஆவார்.

கோவை கோட்டைமேட்டில் கடந்த 23-ம் தேதி கார் வெடிப்பு சம்பவம் நடந்தது. இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு தேசிய புலனாய்வுப் பிரிவு எனப்படும் என்.ஐ.ஏ-க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ அதிகாரிகள் புதியதாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக, என்.ஐ.ஏ தென் மாநிலங்களுக்கான பிரிவு டிஐஜி வந்தனா, எஸ்.பி ஸ்ரீஜித் தலைமையிலான குழுவினர் கடந்த 23-ம் தேதி இரவே கோவைக்கு வந்தனர். மேற்கண்ட கார் வெடிப்பு சம்பவம் நடந்த இடங்கள் உள்ளிட்டவற்றை பார்வையிட்டு விசாரித்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...