Sunday, October 23, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/10/24/large/887059.jpgதீபாவளி பண்டிகை கடைசி நாள் விற்பனை: துணி, பட்டாசு, நகை, இனிப்பு வாங்க அலைமோதிய கூட்டம்

சென்னை: தீபாவளி பண்டிகையொட்டி கடைசி நாளான நேற்று துணி எடுக்கவும், பட்டாசு வாங்கவும் கடைகளில் கூட்டம் அலைமோதியது. தீபாவளி பண்டிகைக்காக தமிழகம் முழுவதும் கடைகளில் விற்பனை நேற்று களை கட்டியது.ஞாயிற்றுக்கிழமையான நேற்றுசென்னையில் தீபாவளிக்கு பட்டாசு, புத்தாடைகள், நகைகள், வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவதற்காக பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினருடன் கடைகளுக்குப் படையெடுத்தனர்.

தியாகராய நகரில் நேற்று காலை முதலே பொருட்கள் வாங்குவதற்கும், துணிகள் வாங்குவதற்கு மக்கள் குவிந்தனர். இதனால் உஸ்மான் சாலை, பாண்டிபஜார், பனகல்பூங்கா, பர்கிட் சாலை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணிகளில் காவல் துறையினர் மும்முரமாக ஈடுபட்டனர். அதேபோல், நகைகளையும் மக்கள் அதிகளவில் வாங்கிச் சென்றதால், நகைக்கடைகளில் கூட்டம்அலைமோதியது. பெரிய கடைகளுக்குச் சற்றும் சளைக்காமல் சிறிய கடைகளிலும் கூட்டம் அதிகம் இருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...