Tuesday, October 25, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/10/26/large/887698.jpgகோவை கார் சிலிண்டர் வெடிப்பு | முபினின் கூட்டாளிகள் 5 பேர் கைது - ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர்களுடன் தொடர்பு

கோவை: கோவையில் கார் வெடித்து உயிரிழந்த ஜமேஷா முபினின் கூட்டாளிகள் 5 பேரை கைது செய்துள்ள போலீஸார், அவர்கள் மீது சட்டவிரோத செயல்கள் தடுப்பு (‘உபா’) சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இலங்கை குண்டுவெடிப்பில் தொடர்பு உடைய ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர்களுடன், உயிரிழந்த முபினுக்கு தொடர்பு இருந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீஸார் தீவிர விசாரணைநடத்தி வருகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் கோயில்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கோவை உக்கடம் அருகே உள்ள கோட்டைமேடு வழியாக கடந்த 23-ம் தேதி அதிகாலை 4.10 மணி அளவில் சென்ற மாருதி கார், சங்கமேஸ்வரர் கோயில் முன்புள்ள வேகத் தடையை கடந்தபோது திடீரென வெடித்து தீப்பிடித்தது. காரில் 2 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இருந்ததும், அதில் ஒரு சிலிண்டர் வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டதும், காரை ஓட்டிவந்த உக்கடம் ஜி.எம்.நகரை சேர்ந்த ஜமேஷா முபின் (25) என்பவர் உயிரிழந்ததும் விசாரணையில் தெரியவந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...