
சென்னை: தமிழகத்தில் நடப்பாண்டில் இதுவரை 4,806 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதியாகியுள்ளது. அதேபோல், 140 பேர் சிக்குன் குனியா,279 பேர் மலேரியா, 1,470 பேர்லெப்டோஸ்பிரோசிஸ் எனப்படும் எலிக் காய்ச்சல், 2,455 பேர் ஸ்கரப்டைபஸ் எனப்படும் பாக்டீரியாதொற்று காய்ச்சலால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது.
எலிக்காய்ச்சல் மற்றும் ஸ்கரப்டைபஸ் நோய் பாதிப்பு விகிதம், கடந்த ஆண்டைவிட நடப்பாண்டில் அதிகரித்துள்ளது. ஜப்பானிய மூளைக் காய்ச்சலுக்கு 25-க்கும் குறைவானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அக்காய்ச்சலால் யாரும் உயிரிழக்கவில்லை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்