
சென்னை: “அரியலூர் விவசாயி செம்புலிங்கத்தின் மரணத்திற்கு காரணமான 8 காவலர்கள் மீதும் கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். 8 காவலர்களையும் உடனடியாக கைது செய்ய வேண்டும்” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''அரியலூர் மாவட்டம் காசாங்கோட்டையில் காவல் துறையினர் வீடு புகுந்து நடத்திய தாக்குதலில் அப்பாவி விவசாயி ஒருவர் உயிரிழந்திருக்கிறார். அவரது மனைவியும், மகனும் காயமடைந்துள்ளனர். உழவரின் உயிரிழப்புக்கு காவலர்கள் நடத்திய தாக்குதல் தான் காரணம் என்பது உறுதி செய்யப்பட்ட பிறகும் கூட, அதற்கு காரணமானவர்களை காவல்துறை இதுவரை கைது செய்யாதது கண்டித்தக்கது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்