Sunday, May 7, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/05/08/large/987103.jpgதிருவாரூர் | தொடர் கனமழையால் 10 ஆயிரம் ஏக்கரில் பருத்தி சாகுபடி கடும் பாதிப்பு: வயலில் தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணி மும்முரம்

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக, பருத்தி பயிரிடப்பட்டிருந்த 10,000 ஏக்கர் வயலில் மழைநீர் சூழ்ந்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, மழைநீரை வயலில் இருந்து வெளியேற்றும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்தில் பருத்தி சாகுபடியில் நல்ல லாபம் கிடைத்து வருவதால், விவசாயிகள் பருத்தி சாகுபடியில் அதிக ஆர்வம் காட்டத் தொடங்கி உள்ளனர். இதனால், கடந்த ஆண்டு 35,000 ஏக்கர் பரப்பளவில் மேற்கொள்ளப்பட்டிருந்த பருத்தி சாகுபடி, நிகழாண்டு 40,000 ஏக்கராக அதிகரித்து உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...