
சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையஇயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் இன்று முதல் 4 நாட்களுக்கு இடியுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் மே 24-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம், கிருஷ்ணகிரி மாவட்டம் கெலவரப்பள்ளி அணை, ஈரோடு மாவட்டம் நம்பியூரில் தலா 3 செ.மீ., கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், கோவை மாவட்டம் வால்பாறை, திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி அணை, நீலகிரி மாவட்டம் உதகையில் தலா 2 செ.மீ. மழை பதிவாகியது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்